Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


வறுமையினை குறைப்பதற்கான புதிய திட்டம் ஒன்ராறியோவில் அறிமுகம்

Posted: 25 Apr 2017 08:25 AM PDT

சமூகத்தில் வறுமையினை குறைப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் ஒன்றை கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பரீட்சித்துப்பார்க்க உள்ளது. இதற்காக அது மேற்கொண்டுள்ள இந்தப் பரீட்சாத்த திட்டமானது, குறைந்த வருமானம் பெறுவோர் தமக்கான அடிப்படைத் தேவைகளுக்கு போதுமான வருமனத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வருமானம் அற்றோருக்காக தற்போதும் சமூக நலத் திட்டங்கள் நடப்பில் உள்ள நிலையில், அவற்றை விடவும் அடிப்படை வருமானத்தினை உறுதிப்படுத்தும் இந்த புதிய திட்டம் பலன்மிக்கதாக அமைந்துள்ளதா என்பதனைக் கண்டறிவது இந்த பரீட்சார்த்த […]

The post வறுமையினை குறைப்பதற்கான புதிய திட்டம் ஒன்ராறியோவில் அறிமுகம் appeared first on TamilStar.com.

ஸ்காபரோவின் L’Amoreaux இல் துப்பாக்கிச் சூடு

Posted: 25 Apr 2017 08:21 AM PDT

ஸ்காபரோவின் L'Amoreaux குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Finch avenue மற்றும் Victoria Park avenue பகுதியில் அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் காவல்த்துறையினர் அங்கு விரைந்திருந்தனர் என்றும், அங்கு காயமடைந்த நிலையில் எவரும் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அந்த பகுதியில் வெற்றுத் தோட்டாக்களும் காணப்பட்டதாக […]

The post ஸ்காபரோவின் L'Amoreaux இல் துப்பாக்கிச் சூடு appeared first on TamilStar.com.

கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்

Posted: 25 Apr 2017 08:18 AM PDT

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமலன் தண்டபாணிதேசிகர் என்ற இலங்கையர் நேற்று கனடா நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. தனது பக்கத்து வீட்டவரான ஜெயராசன் மாணிக்கராஜாவுடன் முரண்பாடு காணப்பட்டது. தனது மனைவியை அவர் தொடர்ந்து அவமதிப்பதாக உணர்ந்தேன். மாணிக்கராஜா அடிக்கடி தனது மனைவிக்கு விசிலடித்து […]

The post கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர் appeared first on TamilStar.com.

கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர்! நாடு கடத்த நடவடிக்கை

Posted: 25 Apr 2017 08:16 AM PDT

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முனியப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், நாளையதினம் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும், அவர் சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சூதாட்டக்காரரான பாஸ்கர் முனியப்பா என்பவர் சக்தி வாய்ந்த ஆன்மீகவாதி, மற்றும் மாய மந்திரத்தை வைத்து காதல் பிரச்சினைகளை […]

The post கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர்! நாடு கடத்த நடவடிக்கை appeared first on TamilStar.com.

மே தினத்தன்று அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்குதல் : மஹிந்த அணி எச்சரிக்கை

Posted: 25 Apr 2017 08:12 AM PDT

எதிர்வரும் மே தினத்தின்போது ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்கதலொன்றை நடத்த தயாராக உள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார். ஆனால், அரசாங்கத்தில் உள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் தாம் வகிக்கும் பதவிகளைத் துறந்து எதிர்வரும் […]

The post மே தினத்தன்று அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்குதல் : மஹிந்த அணி எச்சரிக்கை appeared first on TamilStar.com.

அரசாங்கத்தின் முதல் தேர்தல் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு: அமைச்சர் ராஜித தகவல்

Posted: 25 Apr 2017 08:07 AM PDT

அரசாங்கம் 2017ஆம் ஆண்டு சந்திக்கப் போகும் முதல் தேர்தல் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு என அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக இந்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், துரிதமாக […]

The post அரசாங்கத்தின் முதல் தேர்தல் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு: அமைச்சர் ராஜித தகவல் appeared first on TamilStar.com.

பசில் மற்றும் நடேசனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

Posted: 25 Apr 2017 08:05 AM PDT

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிரான வழக்கை பூகொடை நீதவான் நிலுபுலி லங்காபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளார். மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணி சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர் இவர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

The post பசில் மற்றும் நடேசனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு appeared first on TamilStar.com.

நாளை மறுநாள் வடக்கு, கிழக்கு முற்றாக ஸ்தம்பிக்கும்! – தமிழ், முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு

Posted: 25 Apr 2017 07:58 AM PDT

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, நாளை மறுதினம் வடக்கு கிழக்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, முக்கிய தமிழ் , முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாளைமறுதினம் வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் […]

The post நாளை மறுநாள் வடக்கு, கிழக்கு முற்றாக ஸ்தம்பிக்கும்! – தமிழ், முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு appeared first on TamilStar.com.

மீதொட்டமுல்லயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவு ஒரே தடவையில்! ஜனாதிபதி

Posted: 25 Apr 2017 07:56 AM PDT

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மூன்று மாதங்களுக்காக வழங்கப்படவிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரும் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை ஒரே தடவையில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் குப்பை அகற்றப்படுவது தொடர்பான சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் 98 வீடுகளை சேதமடைந்தன. அந்த வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 50 ஆயிரம் […]

The post மீதொட்டமுல்லயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவு ஒரே தடவையில்! ஜனாதிபதி appeared first on TamilStar.com.

வடக்கில் 10 இலட்சம் மக்களுக்கு 2 இலட்சம் படையினர் ஏன்? – சுரேஸ் கேள்வி

Posted: 25 Apr 2017 07:47 AM PDT

வட மாகாணத்தில் சுமார் இரண்டு இலட்சம் படையினர் இருப்பதாகவும், சுமார் 10 இலட்சம் மக்கள் வாழும் பகுதிக்கு ஏன் இரண்டு இலட்சம் படையினர் தேவை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, காணிகள் விடுவிப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் இன்னும் முன்னேற்றம் […]

The post வடக்கில் 10 இலட்சம் மக்களுக்கு 2 இலட்சம் படையினர் ஏன்? – சுரேஸ் கேள்வி appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™