Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


அமெரிக்காவின் முக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இரண்டு கனேடியர்கள்

Posted: 24 Apr 2017 02:46 PM PDT

கனேடியர்கள் இருவரின் பெயர் விபரங்கள் அமெரிக்காவினால் மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமெரிக்கா கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளின் பட்டியலில் 24 வயதான ஃபாரா மொஹமட் ஷிர்டொன் மற்றும் 30 வயதான தரேக் சாக்கீர் ஆகிய இரண்டு கனேடியர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு கனேடியர்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும், பொருளாதார நலன்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதில் […]

The post அமெரிக்காவின் முக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இரண்டு கனேடியர்கள் appeared first on TamilStar.com.

Ajax பகுதியில் விபத்து : 10வயது சிறுமி படுகாயம்

Posted: 24 Apr 2017 02:43 PM PDT

Ajax பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில் 10 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாகனம் ஒன்றினால் மோதப்பட்டே அவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் காணப்பட்டார் என்றும், சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர் அவரை உடனடியகாவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Williamson Drive மற்றும் Audley வீதிப் பகுதியில் காலை 8.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறுமியை மோதியதாக கூறப்படும் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே […]

The post Ajax பகுதியில் விபத்து : 10வயது சிறுமி படுகாயம் appeared first on TamilStar.com.

பலரது கைதுகளை தடுத்த நிறுத்திய விமல்! பிரிந்து சென்றாரா மஹிந்த?

Posted: 24 Apr 2017 06:32 AM PDT

தனது உண்ணாவிரதம் மூலமாக பல கைதுகள் தடுக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். களுத்துறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், முன்னதாக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களில் இருவரை மாதத்திற்கு சிறையில் அடைத்தார்கள். ஆனால் இப்போது அப்படி செய்யப்படுவது இல்லை. அதற்கு காரணம் நான் மேற்கொண்ட உண்ணாவிரதமே. அரசின் பலிவாங்கும் நடவடிக்கையை மக்களுக்கு தெரியப்படுத்துவது […]

The post பலரது கைதுகளை தடுத்த நிறுத்திய விமல்! பிரிந்து சென்றாரா மஹிந்த? appeared first on TamilStar.com.

தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் விக்னேஸ்வரனின் உரை

Posted: 24 Apr 2017 06:27 AM PDT

எம்மை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் நாம் அடிபணிய வேண்டும் அல்லது போராட வேண்டும். எமது பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம்மக்கள் விரும்ப மாட்டார்கள் என தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(23) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை நிர்வாகசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இதன் போது தொடர்ந்து அவர் கருத்து […]

The post தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் விக்னேஸ்வரனின் உரை appeared first on TamilStar.com.

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரப் போகிறதாம் அரசாங்கம்!

Posted: 24 Apr 2017 06:23 AM PDT

போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய எம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காணாமல்போனோர் தொடர்பிலான காரியாலயம் உருவாக்கப்பட்டமையும் எமக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் […]

The post போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரப் போகிறதாம் அரசாங்கம்! appeared first on TamilStar.com.

விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

Posted: 24 Apr 2017 06:20 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, ஹெவ்லொக் வீதி மற்றும் பௌத்தாலோக்க மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்துக்கு தடையேற்படுத்தியதால், பொதுமக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக […]

The post விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு appeared first on TamilStar.com.

சம்பந்தனின் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு செல்வோம்! – சித்தார்த்தன்

Posted: 24 Apr 2017 06:18 AM PDT

அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம். அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். "தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?" என்ற தலைப்பிலான கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், […]

The post சம்பந்தனின் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு செல்வோம்! – சித்தார்த்தன் appeared first on TamilStar.com.

பொட்டம்மானை அனுப்பி வைத்த பிரபாகரன்! மருத்துவரால் காப்பாற்றப்பட்ட போராளிகள்

Posted: 24 Apr 2017 06:15 AM PDT

சிறப்பான முறையில் மருத்துவம் பார்த்த மருத்துவரை காண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை அனுப்பி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மருத்துவராக பணியாற்றியிருந்த ரத்னம் வேலுப்பிள்ளை என்பவரே இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். தலைவர் பிரபாகரனிடம் சிறந்த வைத்தியர் என்ற பெயரை தாம் பெற்றுக் கொண்டதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஓமந்தை, மாங்குளம், விசுவமடு முகாம்களில் சேவை செய்த ரத்னம், முகாமில் […]

The post பொட்டம்மானை அனுப்பி வைத்த பிரபாகரன்! மருத்துவரால் காப்பாற்றப்பட்ட போராளிகள் appeared first on TamilStar.com.

இன்றைய கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்ற அழுத்தம் கொடுப்போம்! – யோகேஸ்வரன் எம்.பி

Posted: 24 Apr 2017 06:12 AM PDT

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்றையதினம் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு, மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்குச் சொந்தமான 57.331 […]

The post இன்றைய கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்ற அழுத்தம் கொடுப்போம்! – யோகேஸ்வரன் எம்.பி appeared first on TamilStar.com.

பிரதமர் ரணிலின் அதிரடி உத்தரவு

Posted: 24 Apr 2017 06:09 AM PDT

ஆண்டொன்றில் மூன்று தடவைக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த தடையை விதித்துள்ளார். கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் எழுத்து மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுமக்கள் பிரதிநிதிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியை பலப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் […]

The post பிரதமர் ரணிலின் அதிரடி உத்தரவு appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™