Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


முன்னேற்றம் காணும் கனடாவின் பொருளாதாரம்

Posted: 19 Apr 2017 04:00 AM PDT

கனடாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் முன்னேற்றம் காணும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் கனேடிய மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டடுள்ள பொருளியல் வளர்சி எதிர்வுகூறல்களின் அளவிற்கு அந்த வளர்ச்சி காணப்பட மாட்டாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தியம் ஏற்கனவே எதிர்வு கூறியது போன்று கனடாவின் இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.9 சதவீதத்தினால் அதிகரிக்கப்படக்கூடும் என்பதனை அது மீளவும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் கனடாவின் […]

The post முன்னேற்றம் காணும் கனடாவின் பொருளாதாரம் appeared first on TamilStar.com.

ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் றொன் மொயீசர் மறைவு

Posted: 19 Apr 2017 03:58 AM PDT

ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக நீண்டகாலம் பதவி வகித்துவந்த றொன் மொயீசர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த நிலையில் நேற்று காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 74 வயதான அவர் நேற்று உயிழந்து விட்டதை உறுதிப்படுத்தி ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்காபரோ தொகுதிக்கான நகரசபை உறுப்பினராக இருந்துவந்த அவர், கடந்த மார்ச் மாத்தில் தாம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. றொன் மொயீசர் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்து […]

The post ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் றொன் மொயீசர் மறைவு appeared first on TamilStar.com.

ஓராண்டு காலம் இலங்கையை விட்டு பிரிய மனமில்லாத கோத்தா?

Posted: 19 Apr 2017 03:56 AM PDT

இலங்கையை விட்டு வெளியேறிச் செல்ல விரும்பாத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீனப் புலமைப் பரிசிலை நிராகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனப் புலமைப் பரிசில் பெற்றுக்கொண்டால் ஓராண்டு காலம் சீனாவில் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும். இதனால், ஓராண்டு காலம் நாட்டை விட்டு செல்ல கோத்தா விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சீனாவில் சென்று கல்வி கற்பதா இல்லையா என்பதனை இன்னும் கோத்தபாய ராஜபக்ஸ தீர்மானிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஓராண்டு காலம் இலங்கையை விட்டு பிரிய மனமில்லாத கோத்தா? appeared first on TamilStar.com.

இயேசு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : முதல்வரின் பகிரங்கமான பதில்

Posted: 19 Apr 2017 03:53 AM PDT

இயேசு கிறிஸ்துவை நான் ஒருபோதும் அவமதித்து கூறவில்லை, அந்த செவ்வியை வேண்டும் என்றே மாற்றி வடிவமைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தது. குறித்த செய்தி தொடர்பில் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் […]

The post இயேசு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : முதல்வரின் பகிரங்கமான பதில் appeared first on TamilStar.com.

மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தம்!

Posted: 19 Apr 2017 03:51 AM PDT

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்திய ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வரும் நிலையில், இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றாகவே மருதங்கேணி […]

The post மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தம்! appeared first on TamilStar.com.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Posted: 19 Apr 2017 03:48 AM PDT

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தர்,மாவை.சேனாதிராசா ஆகியோரின் உரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றம் தெரிவதைக் காணமுடிகிறது. புங்குடுதீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மாவை.சேனாதிராசா அவர்கள் அரசாங்கம் ஏமாற்றினால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்கும் எனக் கூறியுள்ளார். அட! இது நல்ல கதையாக இருக்கிறதே! அந்தத் தீர்மானம் என்னவாகவிருக்கும் என்று அறிய […]

The post தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்! appeared first on TamilStar.com.

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் – ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்!

Posted: 19 Apr 2017 03:45 AM PDT

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். "காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், குறிப்பாக இராணுவ முகாம்களுக்குள் தேடுதல் நடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர். காணாமல்போனோர் அலுவலக சட்டத்தில் எந்த விடயங்களில் தமக்கு ஆட்சேபனைகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டு 15 பக்கத்திலான […]

The post காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் – ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்! appeared first on TamilStar.com.

அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு

Posted: 19 Apr 2017 03:43 AM PDT

தமிழின விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது நினைவுகூரல் ஆண்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடைப்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், முதல் நிகழ்வாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட உணர்வாளர்களால் மலர் வணக்கம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை ப. […]

The post அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு appeared first on TamilStar.com.

குடும்பத்துடன் விசேட வழிபாட்டிற்கு சென்ற மஹிந்த ராஜபக்ஸ

Posted: 19 Apr 2017 03:37 AM PDT

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்தார். இதன் போது மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஸ, மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அவரது உறவினர்களும் சென்றிருந்தனர். விசேட வழிபாடுகளின் நிமித்தமே தலதா மாளிகைக்கு சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதனை அவரது மகன் நாமல் ராஜபக்ஸ, குடும்பத்துடன் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்ததாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post குடும்பத்துடன் விசேட வழிபாட்டிற்கு சென்ற மஹிந்த ராஜபக்ஸ appeared first on TamilStar.com.

ஜனாதிபதி செயலக பதிவுப் புத்தகத்தில் காணாமல்போன பக்கங்கள்! – பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் விசாரணை

Posted: 19 Apr 2017 03:35 AM PDT

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்த பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில், நேற்று அறிவித்தனர். 2012ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை, அப்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புக்கான பிரிவினர் கையெழுத்திடும் பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு, செலோடேப்பினால் ஒட்டப்பட்டுள்ளன என்று, சீ.ஐ.டியினரின் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. […]

The post ஜனாதிபதி செயலக பதிவுப் புத்தகத்தில் காணாமல்போன பக்கங்கள்! – பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் விசாரணை appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™