Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


10 வயது சிறுவனின் பயணத்திற்கு அனுமதி மறுத்த ஏயா கனடா

Posted: 18 Apr 2017 07:39 AM PDT

10 வயது சிறுவன் ஒருவருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்தமைக்காக எட்வேட் ஐலட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் ஏயர் கனடா நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது. இந்த குடும்பத்தினர் தமது விடுமுறை பயணத்திற்காக சார்லட்டவுனிலிருந்து கோஸ்டா றிக்காவிற்கு செல்வதற்கு நான்குபேருக்கு கடந்த ஓகஸ்ட் மாதமே அனுமதிச் சீட்டுக்களை பதிவு செய்திருந்தனர். பின்னர் மார்ச் மாத விடுமுறைக்கான அந்தப் பயணத்தை மேற்கொண்ட போது, விமானத்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவனுக்கு விமானத்தில் இடமில்லை […]

The post 10 வயது சிறுவனின் பயணத்திற்கு அனுமதி மறுத்த ஏயா கனடா appeared first on TamilStar.com.

நோர்த் யோர்கில் விபத்து: கார் சாரதியை தேடும் காவல்த்துறை

Posted: 18 Apr 2017 07:36 AM PDT

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் இன்று அதிகாலையில் இணைப்புப் பெட்டியுடன் சென்ற வாகனமும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. வெஸ்டன் வீதி மற்றும் நெடுஞ்சாலை 401 பகுதியில் இன்று அதிகாலை 1.20 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. கார் ஒன்று அந்த பகுதியில் இணைப்பு பெட்டியுடன் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்றின் பின்புறத்தி்ல் மோதியதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த காரின் சாரதி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும […]

The post நோர்த் யோர்கில் விபத்து: கார் சாரதியை தேடும் காவல்த்துறை appeared first on TamilStar.com.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட அழைப்பு

Posted: 18 Apr 2017 07:32 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி டிரான் டய் குவான்ங் அழைப்பு விடுத்துள்ளார். வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அந்நாட்டு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்திற்கும் வியட்நாம் ஜனாதிபதி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லிணக்க தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் வியட்நாம் […]

The post ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட அழைப்பு appeared first on TamilStar.com.

மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கும் சம்பந்தன் : காரணம் என்ன?

Posted: 18 Apr 2017 07:29 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பில், தற்போது பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முரண்பாடுகளை வெளியிடும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையினை நடத்தி ஆதரவு பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஐ.தே.க உடன் பேச்சுவார்த்தையினை நடத்திய கூட்டமைப்பு, கடந்த வாரம் ஜே.வி.பியுடன் […]

The post மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கும் சம்பந்தன் : காரணம் என்ன? appeared first on TamilStar.com.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மகிந்த, மைத்திரியுடன் பேச கூட்டமைப்பு முடிவு!

Posted: 18 Apr 2017 07:24 AM PDT

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியுடனும் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த சந்திப்புக்களை விரைவில் நடத்துவதற்கு கூட்டமைப்பின் உயர்பீடம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியமைப்பை உருவாக்க நாடாளுமன்றம், அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிநடத்தல் குழுவில் அனைத்தக் கட்சிகளும் பங்கேற்று புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. […]

The post புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மகிந்த, மைத்திரியுடன் பேச கூட்டமைப்பு முடிவு! appeared first on TamilStar.com.

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்

Posted: 18 Apr 2017 07:21 AM PDT

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் இயேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. குறித்த கருத்து தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ப.அன்ரன் புனிதநாயகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு […]

The post 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் appeared first on TamilStar.com.

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள விடுதலைப் புலி புலனாய்வாளர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்

Posted: 18 Apr 2017 07:18 AM PDT

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட புலனாய்வாளர்களை தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரமளவில் விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை சேர்ந்த சிரேஷ்ட புலனாய்வாளர்கள் சிலர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியிலேயே நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் நடமாடுவதாக தெரிந்தால் […]

The post இலங்கைக்குள் பிரவேசித்துள்ள விடுதலைப் புலி புலனாய்வாளர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம் appeared first on TamilStar.com.

இன்று அவசரமாக கொழும்பு திரும்புகிறார் பிரதமர் ரணில்!

Posted: 18 Apr 2017 07:16 AM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசரமாக நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வியட்நாம் பிரதமர் குயென் சுயெனின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 16ம் திகதி வியட்நாமிற்கு பயணம் மேற்கொண்டார். நாளை நள்ளிரவில் அவர் அங்கிருந்து நாடு திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தார். எனினும் மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வியட்நாம் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு நாடு திரும்ப உள்ளார்.

The post இன்று அவசரமாக கொழும்பு திரும்புகிறார் பிரதமர் ரணில்! appeared first on TamilStar.com.

மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு சம்பிக்கவின் அலட்சியமே காரணம் : மேல்மாகாண முதலமைச்சர்

Posted: 18 Apr 2017 07:13 AM PDT

மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் சம்பிக்க பொறுப்புகூற வேண்டும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குற்றம் சாட்டியுள்ளார். குப்பைமலை அனர்த்தம் தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நேற்று(17) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், குப்பைமலையில் இயற்கை உரம் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவும் நோக்கில் அப்பிரதேசத்தில் 60 […]

The post மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு சம்பிக்கவின் அலட்சியமே காரணம் : மேல்மாகாண முதலமைச்சர் appeared first on TamilStar.com.

பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை! – கோத்தா

Posted: 18 Apr 2017 07:09 AM PDT

புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை. அவருடைய சடலத்தை படையினர் அடையாளம் காணவுமில்லை. இதனாலேயே பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று இன்று கூறப்படுகிறது. ஆனால் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது "பொட்டு அம்மான் உயிரிழந்தார்" என போர்க் களத்தில் இருந்த படையினர் […]

The post பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை! – கோத்தா appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™