Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோ Wexford இல் விபத்து

Posted: 17 Apr 2017 07:09 AM PDT

ரொரன்ரோ Wexford பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணி அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் கிழக்கு லோரன்ஸ் அவனியூப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது மோசமான காயங்களுக்கு உள்ளான ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் காயமடைந்தவரின் பெயர் வயது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியாகவில்லை.

The post ரொரன்ரோ Wexford இல் விபத்து appeared first on TamilStar.com.

ஸ்காபரோவில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்

Posted: 17 Apr 2017 07:08 AM PDT

ஸ்காபரோவின் Kingston வீதி மற்றும் Galloway வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு தீச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ பரவலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரே, தீப்பரல் ஏற்பட்ட வீட்டில் இருந்து குறித்த நபர் உள்ளிட்ட மூவரை மீட்டனர். மீட்கப்பட்டபோது மோசமான எரி காயங்களுக்கு ஆளான நிலையில் காணப்பட்ட குறித்த நபர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு […]

The post ஸ்காபரோவில் தீ விபத்து: ஒருவர் படுகாயம் appeared first on TamilStar.com.

விடுதலைப்புலிகளின் நிதிகளை நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சி

Posted: 17 Apr 2017 07:06 AM PDT

புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பாரிய நிதிகளை மத்திய வங்கி மூலம் இல்லாமல் வேறு வழிகளில் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இவற்றை அடிப்படையாக கொண்டே அரசாங்கம் நாணய மாற்று கட்டுப்பாட்டு திருத்த சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய வங்கியின் நிதி தொடர்பிலான நடவடிக்கைகளில் சுயாதீனத் தன்மையை அரசாங்கமானது […]

The post விடுதலைப்புலிகளின் நிதிகளை நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சி appeared first on TamilStar.com.

இந்தியாவுக்காகவே விடுதலைப் புலிகளுடன் போரிட்டேன் : மனம் திறந்தார் மஹிந்த

Posted: 17 Apr 2017 07:03 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவே உதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 ஆண்டுகாலமாக நீடித்த யுத்தத்தை உங்களது அரசாங்கமே முடிவுக்கு கொண்டு வந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. எனினும், இந்தியாவிடம் இருந்து எந்த உதவிகளையும் கேட்கவில்லை. […]

The post இந்தியாவுக்காகவே விடுதலைப் புலிகளுடன் போரிட்டேன் : மனம் திறந்தார் மஹிந்த appeared first on TamilStar.com.

இலங்கை வரும் பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா

Posted: 17 Apr 2017 07:00 AM PDT

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் சர்மா இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரும் பிரித்தானிய அமைச்சர் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்துள்ள நிலையில் உலகம் எதிர்நோக்கும் சவால் என்ற தலைப்பில் ஆலோக் சர்மா சிறப்புரை ஒன்றை […]

The post இலங்கை வரும் பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா appeared first on TamilStar.com.

வியட்நாமுடன் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Posted: 17 Apr 2017 06:58 AM PDT

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூ மற்றும் இரு நாடுகள் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 2017 -2019 ஆண்டுகளுக்கான விவசாய அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான செயற்பாட்டு திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் வியட்நாம் விவசாய அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். கல்வி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் வியட்நாம் கல்வியமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். வியட்நாமுக்கான இலங்கையின் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க, இலங்கை சார்பில் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post வியட்நாமுடன் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து appeared first on TamilStar.com.

மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்!

Posted: 17 Apr 2017 06:55 AM PDT

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, 'கரை எழில் 2016' என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதம் அனுப்பி அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கும் […]

The post மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்! appeared first on TamilStar.com.

அப்போது சுவாமிநாதன், இப்போது சுவாமி நாயக்கவா?

Posted: 17 Apr 2017 06:53 AM PDT

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார். ஆலய தரிசனத்திற்காக தமிழகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் சிதம்பரத்திற்கு சென்றார். சிதம்பரத்தில் தரிசனம் முடித்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை தலையிட அனுமதியோம் எனக் கூறினார். சுவாமிநாதன் என்பது தூய தமிழ்ப் பெயர். தன் தந்தைக்கு பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்ததன் காரணமாக முருகப் பெருமானுக்கு சுவாமிநாதன் எனப் […]

The post அப்போது சுவாமிநாதன், இப்போது சுவாமி நாயக்கவா? appeared first on TamilStar.com.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

Posted: 17 Apr 2017 06:50 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமிற்கு இன்று முற்பகல் உலங்கு வானூர்தியில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தின ஜனாதிபதியின் யாழ் விஜயமானது, நயினா தீவில் உள்ள நாகவிகாரையில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கே என கூறப்படுகின்றது. குறித்த வழிபாடுகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின்னர் ஜனாதிபதி காரைநகருக்குப் படகில் சென்று அங்கிருந்தே கொழும்பிற்கு திரும்புவார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! appeared first on TamilStar.com.

மீதொட்டமுல்லை அனர்த்தம் – சம்பந்தன் அனுதாபம்!

Posted: 17 Apr 2017 06:48 AM PDT

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அவரது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது-இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், இப்படியான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டும் என, நான் கோரிக்கை […]

The post மீதொட்டமுல்லை அனர்த்தம் – சம்பந்தன் அனுதாபம்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™