Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ஆயுத விற்பனை – கனேடிய நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Posted: 16 Apr 2017 08:08 AM PDT

ஆயுத விற்பனையில் ஈடுபடும் கனேடிய நிறுவனங்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை லிபரல் அரசாங்கம் கொண்டு வரவுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் மூலமாக, ஆயுத விற்பனையில் ஈடுபடும் கனேடிய நிறுவனங்கள் இந்த கட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதான சட்டமூலம் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில ஆபிரிக்க நாடுகளுக்கு கனடா ஆயுத வினியோகம் செய்தமை தொடர்பிலான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அப்போது கனடாவுக்கு வெளியே அவ்வாறான வணிகம் இடம்பெற்றமையால் அந்த ஆயுத ஏற்றுமதி […]

The post ஆயுத விற்பனை – கனேடிய நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு appeared first on TamilStar.com.

கனேடிய வான்பரப்பில் ரஷ்ய இராணுவ விமானம்!

Posted: 16 Apr 2017 08:02 AM PDT

கனடா ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கனேடிய வான்பரப்பில் ரஷ்ய இராணுவ விமானங்கள் கண்காணிப்பு பறப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. தற்போது இவ்வாறான ஒரு வான் கண்காணிப்புப் பறப்பை அமெரிக்க வான் பரப்புக்களில் மேற்கொண்டுள்ள ரஷ்யா, கனடாவின் வான் பரப்பிலும் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10ஆம் திகதியில் இருந்து நேற்று வரை அமெரிக்க வான் வெளிகளில் ரஷ்யா விமானம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், […]

The post கனேடிய வான்பரப்பில் ரஷ்ய இராணுவ விமானம்! appeared first on TamilStar.com.

தமிழர்கள் சபிக்கப்பட்டவர்கள்..

Posted: 16 Apr 2017 07:57 AM PDT

சம்பவங்களின் கோர்வைகள் புரியாத விடயங்களையும் புரியவைக்கும். ஆனாலும் நாம் நடப்புகளை தொகுத்துப் பார்ப்பது என்னமோ சற்று குறைவே. ஓர் நிகழ்வின் அல்லது சம்பவத்தின் தன்மையும், தாக்கமும் இன்னுமோர் விடயத்தோடு கட்டாயம் தொடர்பு படும் என்பதனை எத்தனையோ சம்பவங்கள் எடுத்துக் காட்டும். இப்போதைய நிலையில் எது எப்படிப்போனாலும் பிரச்சினையில்லை ஆனால் தமிழர்கள் மட்டும் அடக்கப்பட, அழிக்கப்பட வேண்டும்., என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சர்வதேசமும் மிகுந்த விழிப்பாக இருப்பதாகவே தோன்றுகின்றது காரணம் சம்பவங்களின் கோர்வைகள். ஓர் அரசியல் நாடகமாக, […]

The post தமிழர்கள் சபிக்கப்பட்டவர்கள்.. appeared first on TamilStar.com.

பதவி விலகவும் தயங்கமாட்டோம்! – மாவை சேனாதிராசா

Posted: 16 Apr 2017 07:51 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றால், தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம் என்று, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில், நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லோரும் பதவி விலக்கியிருந்தோம். ஆகவே, பதவி விலகுவதென்பது எமக்குப் புதிய விடயமல்ல என்று, எமது கட்சித் தலைவர் சம்பந்தனும் […]

The post பதவி விலகவும் தயங்கமாட்டோம்! – மாவை சேனாதிராசா appeared first on TamilStar.com.

அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் : பசில் ராஜபக்ச

Posted: 16 Apr 2017 07:49 AM PDT

அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான சகல தரப்பினரும் கைக்கோர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும், சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு எதிரான மே தினக் கூட்டத்தில் கலந்து […]

The post அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் : பசில் ராஜபக்ச appeared first on TamilStar.com.

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம்! ஒரு பகுதி மத்திய வங்கிக்கா?

Posted: 16 Apr 2017 07:47 AM PDT

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து படையினரால் கைப்பற்றப்பட்ட ஒரு பில்லியன் பெறுமதியான தங்கத்தை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பில் உயர் மட்ட சந்திப்பு ஒன்று அடுத்து வரும் சில நாட்களில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.சந்திரகுமார தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த […]

The post விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம்! ஒரு பகுதி மத்திய வங்கிக்கா? appeared first on TamilStar.com.

ஜனாதிபதி உத்தரவிட்டும் காணி விடுவிப்பு நடக்கவில்லை! – சம்பந்தனிடம் வருத்தம் வெளியிட்டார் மைத்திரி

Posted: 16 Apr 2017 07:44 AM PDT

தமிழ் மக்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­தற்­கும் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கும் ஏற்ற நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்து அறி­விக்­கு­மாறு ஒரு வரு­டத்­திற்கு முன்­னரே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­­விட்­ட­ போ­தும் இது­வ­ரை­யில் ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்பதை வருத்­தத்­து­டன் அவரே ஒப்­புக்­கொண்­டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, அவரது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் சந்­தித்­துப் பேசிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். […]

The post ஜனாதிபதி உத்தரவிட்டும் காணி விடுவிப்பு நடக்கவில்லை! – சம்பந்தனிடம் வருத்தம் வெளியிட்டார் மைத்திரி appeared first on TamilStar.com.

இலங்கைக்கு வருகிறார் ஜப்பானிய சிறப்பு தூதுவர்!

Posted: 16 Apr 2017 07:42 AM PDT

இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு தூதுவர் கலாநிதி ஹிரடோ இசுமி இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளார். எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் அவரது இந்தப் பயணம் இடம்பெறளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு பிரதிநிதியாக கலாநிதி ஹிரடோ இசுமியை ஜப்பான் நியமித்துள்ளது. ஜப்பானுக்குப் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யொஷிஹிடே சுகா இந்த நியமனம் தொடர்பில் அறிவித்திருந்தார்.

The post இலங்கைக்கு வருகிறார் ஜப்பானிய சிறப்பு தூதுவர்! appeared first on TamilStar.com.

மீதொட்டமுல்ல சம்பவம்: அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

Posted: 16 Apr 2017 07:40 AM PDT

மீதொட்டமுல்ல சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது அனுதாபங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சம்பந்தன் தன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அனர்த்தம் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து […]

The post மீதொட்டமுல்ல சம்பவம்: அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள சம்பந்தன் appeared first on TamilStar.com.

இலங்கைப் படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்! – ஐ.நா பேச்சாளர்

Posted: 16 Apr 2017 07:36 AM PDT

ஐ.நா அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களில் தொடர்புபடவில்லை என்பதை ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இலங்கையிடம் இதனையே ஐ.நா எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார். ஹெய்டியில் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் […]

The post இலங்கைப் படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்! – ஐ.நா பேச்சாளர் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™