Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ரொரன்ரோ சைனா டவுனில் தடப்பேரூந்து மோதி ஒருவர் பலி

Posted: 15 Apr 2017 08:25 AM PDT

ரொரன்ரோ சைனா டவுன் பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்து ஆணையகத்திற்கு சொந்தமான தடப் பேரூந்து ஒன்றுடன் மோதுண்டதனாலேயே குறித்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Spadina Avenue மற்றும் Sullivan Street வீதிச் சந்திப்பு பகுதியில் நேற்று மாலை ஆறு மணிக்கு சற்று பின்பாக இந்த விபத்து சம்பவித்ததை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு தாம் விரைந்த போதிலும், அந்த பாதசாரியைக் காப்பற்ற முடியவில்லை என்று […]

The post ரொரன்ரோ சைனா டவுனில் தடப்பேரூந்து மோதி ஒருவர் பலி appeared first on TamilStar.com.

பிரம்டனில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Posted: 15 Apr 2017 08:20 AM PDT

பிரம்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒறென்டா வீதி மற்றும் வெஸ்ட் ட்ரைவ் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதனை பீல் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள மண்டபம் ஒன்றுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் குறித்த அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டமை அவசர மருத்துவப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். மனித கொலைகள் […]

The post பிரம்டனில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி appeared first on TamilStar.com.

ரணிலுடன் இணைய வியட்நாம் சென்றார் மனோ!

Posted: 15 Apr 2017 08:15 AM PDT

அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவருமான மனோ கணேசன், நேற்றிரவு வியட்நாம் பயணமானார். தற்போது ஜப்பான் பயணத்தில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து வியட்நாமிம் செல்லவுள்ளார். வியட்நாமில் உத்தியோகப்பூர்வ பயணத்தை, நாளை ஆரம்பிக்கும் பிரதமரின் தூதுக்குழுவில், அமைச்சர் மனோ கணேசனும் இணைந்து கொள்ளவுள்ளார். அதேபோல் வியட்நாமில் இருந்து நாடு திரும்பும் வழியில் மலேசியா சென்று, அங்கு வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும், அமைச்சர் மனோ கணேசன் கலந்துக்கொள்ளவுள்ளார். […]

The post ரணிலுடன் இணைய வியட்நாம் சென்றார் மனோ! appeared first on TamilStar.com.

திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இப்படி ஆகிவிட்டதே! பிரதமர் கவலை

Posted: 15 Apr 2017 08:13 AM PDT

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், இருப்பிடங்களை இழந்தோருக்கும், அரசாங்கம் தனது கவலையை தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், குப்பையை அகற்றும் பொறுப்பை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றும் என குறிப்பிட்டுள்ளார். மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றுவதற்கு தேவையான திட்டத்தை வகுத்து அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விடயம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இப்படி ஆகிவிட்டதே! பிரதமர் கவலை appeared first on TamilStar.com.

வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத குழு!

Posted: 15 Apr 2017 08:08 AM PDT

மானிப்பாயில் வாள்கள், பொல்லுகளுடன் சென்ற இனம்தெரியாத குழுவொன்று இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக பெண்ணின் தாயாரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய்- பொன்னாலை வீதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்தியுடன் வந்த 8 பேர் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கலவரம் செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய இளம் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளார். அவரை துரத்திச் […]

The post வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத குழு! appeared first on TamilStar.com.

நாமல் ராஜபக்ச ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

Posted: 15 Apr 2017 08:04 AM PDT

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச தாம் ஏன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிலல்லை என விளக்கம் அளித்துள்ளார். கடந்த 10ம் திகதி நாமல் ராஜபக்ச தனது 31ம் பிறந்த நாளை கொண்டாடினார். நாமல் ராஜபக்ச ஏன் திருமணம் செய்தவனை காலம் தாழ்த்துகின்றார் என்பது குறித்து இந்த நிகழ்வின் போது பேசப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ள இது நல்ல வயது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இதன்போது, “நான் திருமணம் செய்து […]

The post நாமல் ராஜபக்ச ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? appeared first on TamilStar.com.

தேர்தல்களில் இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வேண்டுமென வலியுறுத்தல்

Posted: 15 Apr 2017 08:01 AM PDT

எதிர்வரும் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் சாந்த பண்டார தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், கடந்த 1981ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கிராம சபைகள் சட்டத்தின் போது தேர்தல்களில் இளைஞர்களுக்கு 40 வீத வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன் காரணமாக ஏராளமான புதியவர்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது பெண்களுக்கு 25 […]

The post தேர்தல்களில் இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வேண்டுமென வலியுறுத்தல் appeared first on TamilStar.com.

அனுராதபுர சிறையில் அரசியல் கைதிகளுக்கு நெருக்கடி!

Posted: 15 Apr 2017 07:58 AM PDT

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மொழி ரீதியாக பல்வேறு நெருங்கடிகளை எதிர்நோக்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். விளம்பி புதுவருடத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்ததாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும் கூறினார். […]

The post அனுராதபுர சிறையில் அரசியல் கைதிகளுக்கு நெருக்கடி! appeared first on TamilStar.com.

பிரதமர் வியட்நாமிற்கு விஜயம்

Posted: 15 Apr 2017 07:55 AM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம் செய்ய உள்ளார். வியட்நாம் பிரதமர் குயேன் சுவேன் ப்யூவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் வியட்நாமிற்கு விஜயம் செய்ய உள்ளார். நாளை முதல் 19ம் திகதி வரையில் பிரதமர் மற்றும் அவரது பாரியார் வியட்நாமில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார, கைத்தொழில்துறைகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட அதிகாரிகளை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை […]

The post பிரதமர் வியட்நாமிற்கு விஜயம் appeared first on TamilStar.com.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி 55 வீதமானோர் அறிந்திருக்கவில்லை!

Posted: 15 Apr 2017 07:51 AM PDT

புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உருவாக்கம் தொடர்பில் 55 சதவீதமான மக்கள் அறிந்திருக்கவில்லை என மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ள போதிலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு உரிய முறையில் அறியப்படுத்தியுள்ளதாக அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேயநாயக்க தெரிவித்துள்ளார். உரிய தெளிவுபடுத்தல்கள் காரணமாகவே தமது குழுவுக்கு எழுத்து மூலம் மூவாயிரம் யோசனைகளும், வாய்மூலம் இரண்டாயிரத்து 216 யோசனைகளும் கிடைக்கப்பெற்றதாக அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேயநாயக்க தெரிவித்துள்ளார்.

The post புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி 55 வீதமானோர் அறிந்திருக்கவில்லை! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™