Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ஆட்கடத்தலில் ஈடுபட்ட 78பேர் கைது

Posted: 12 Apr 2017 08:52 AM PDT

தெற்கு ஒன்ராறியோவில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக 78 பேரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள், துப்பாக்கிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர்கள் மீது சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப் பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 129 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஆட்கடத்தல் தொடர்பில் 2016ஆம்ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட "புரஜெக்ட் எக்குயீநொக்ஸ்" சிறப்பு நடவடிக்கையின் மூலமே […]

The post ஆட்கடத்தலில் ஈடுபட்ட 78பேர் கைது appeared first on TamilStar.com.

மெட்ரோ வன்கூவரில் 3,500ற்கும் அதிகமானோர் வீடற்றவர்கள்

Posted: 12 Apr 2017 08:48 AM PDT

பிரிட்டிஷ் கொலம்பியா மாவட்டம் ஒன்றில் 3,500ற்கும் அதிகமானோர் வீடுகளின்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. மெட்ரோ வன்கூவர் மாவட்டத்திலேயே இத்தனை எண்ணிக்கையானவர்கள் வீடுகள் இன்றி இருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வன்கூவர் மாவட்டத்தின் இந்த (2017) ஆண்டுக்கான அறிக்கை ஒன்றில், மார்ச் மாதம் 8ஆம் திகதி வரையான நிலவரப்படி வீடுகள் அற்ற நிலையில் 3,605 பேர் இருக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டும் இவ்வாறான […]

The post மெட்ரோ வன்கூவரில் 3,500ற்கும் அதிகமானோர் வீடற்றவர்கள் appeared first on TamilStar.com.

மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை

Posted: 12 Apr 2017 08:43 AM PDT

ஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர். ராஜபக்சர்களின் ஆட்சியில் ஊடக கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டு கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கோத்தபாய ராஜபக்சவின் இரகசிய மரண படையில் செயற்பட்ட இராணுவத்தினர் இருவரை நாமல் பெரேரா அடையாளம் காட்டியுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் சந்ரா லியனஆராச்சியின் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது. மருதானை ட்ரிபோலி என்ற இராணுவ […]

The post மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை appeared first on TamilStar.com.

முதலமைச்சரைச் சந்தித்தார் யாழ். படைத் தளபதி! – காணிகள் விடுவிப்பில் கவனம் செலுத்துவதாக வாக்குறுதி

Posted: 12 Apr 2017 08:34 AM PDT

படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாக யாழ். மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து நேற்று வட மாகாண முதலமைச்சரை சந்தித்த பின்னரே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ்.கோவில் வீதியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் […]

The post முதலமைச்சரைச் சந்தித்தார் யாழ். படைத் தளபதி! – காணிகள் விடுவிப்பில் கவனம் செலுத்துவதாக வாக்குறுதி appeared first on TamilStar.com.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு கடற்படையிடமே இருக்கும்! – ரணில்

Posted: 12 Apr 2017 08:32 AM PDT

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு சீனாவுக்கு வழங்கப்பட மாட்டாது. அதன் பாதுகாப்பு மற்றும் இதர நடவடிக்கைகளை, இலங்கைக் கடற்படையினரே மேற்கொள்வர். இது, இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூறினார். ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள, 'ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் வர்த்தக அமைப்பு'இனால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்துகொண்டார். டோக்கியோவிலுள்ள குறித்த அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, […]

The post ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு கடற்படையிடமே இருக்கும்! – ரணில் appeared first on TamilStar.com.

வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்த வரி வருமானம்! ஜனாதிபதி மகிழ்ச்சி?

Posted: 12 Apr 2017 08:29 AM PDT

மதுபானம் மற்றும் சிகரட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென மூன்று வாரங்களுக்கு முன்னர் திறைசேரியினால் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதென குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தாலும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடாகவே தான் இதனைக் கருதுவதாக தெரிவித்தார். கண்டி, தெல்தெனிய மாவட்ட தள மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் எதிர்கால சந்ததியினரை […]

The post வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்த வரி வருமானம்! ஜனாதிபதி மகிழ்ச்சி? appeared first on TamilStar.com.

பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டுக் குறித்து முறையிட்டால் நடவடிக்கை! – சிறிதரன் எம்.பி.

Posted: 12 Apr 2017 08:24 AM PDT

பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்று, சமூகவலைத் தளங்களிலும் சில இணையத் தளங்களிலும் செய்தி […]

The post பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டுக் குறித்து முறையிட்டால் நடவடிக்கை! – சிறிதரன் எம்.பி. appeared first on TamilStar.com.

சிறையில் புலிகள் நிலையில் புலனாய்வுத் துறையினர்

Posted: 12 Apr 2017 08:22 AM PDT

நாட்டின் புலனாய்வுத் துறையினர் விடுதலைப்புலிகளின் நிலையை அடைந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். நேற்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்ற விமல் நாபானே பிரேமசிறி தேரரை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அவருடன் உரையாற்றும் போதே விமல் இதனைக் கூறியுள்ளார். மேலும், இப்போதைய நிலையில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இப்போது விடுதலைப்புலிகளின் நிலை ஏற்பட்டுள்ளது. நான் இருந்த சிறைக் கூண்டிலும் 6 புலனாய்வுத்துறையினர் தடுத்து […]

The post சிறையில் புலிகள் நிலையில் புலனாய்வுத் துறையினர் appeared first on TamilStar.com.

சிறுவனே தற்கொலை குண்டுதாரி என தெரியாது : புலிகள் கூறியதையே நான் செய்தேன்! முன்னாள் போராளி சாட்சியம்

Posted: 12 Apr 2017 08:16 AM PDT

நான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் சிறுவனை அழைத்துக்கொண்டு கம்பஹா வெலிவேரிய பகுதியில் உள்ள மைதானத்துக்கு அருகில் செல்லுமாறு பணிக்கப்பட்டது என ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம் வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகளின் பணிப்பின் பிரகாரமே நான் செயற்பட்டேன். எனினும், குறித்த சிறுவன் தற்கொலை குண்டுதாரி என்று எனக்கு தெரியாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் காசிரட்னம் பிரதீபன் சாட்சியமளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே […]

The post சிறுவனே தற்கொலை குண்டுதாரி என தெரியாது : புலிகள் கூறியதையே நான் செய்தேன்! முன்னாள் போராளி சாட்சியம் appeared first on TamilStar.com.

அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிய மைத்திரிக்கு நன்றி கூறுகிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ!

Posted: 12 Apr 2017 08:11 AM PDT

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய தொகுதியின் அமைப்பாளராக இருந்த ஜோன்ஸ்டன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், என்னை பதவியிலிருந்து விலக்கியமை ஆச்சரியப்படுத்தவில்லை. அதனால் வருந்தவும் இல்லை. மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்து அப்பம் சாப்பிட்டு சென்ற மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கின்றார். மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இதனை […]

The post அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிய மைத்திரிக்கு நன்றி கூறுகிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™