Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கனடாவின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடைமுறைகளை பார்வையிடும் அமெரிக்கா

Posted: 01 Apr 2017 08:23 AM PDT

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிகாரிகள் கனடாவின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடைமுறைகளை பார்வையிடவுள்ளனர். இதற்காக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த வாரம் கனடாவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. கனடாவின் தனியார் மயப்படுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதே அவர்களின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள கனேடிய போக்குவரத்து திணைக்களம், அமெரிக்க போக்குவரத்துத் துறைச் செயலாளர், போக்குவரத்து மற்றும் உட்கட்டுமானக் குழுவின் தலைவர் ஆகியோரின் தலைமையிலான அமெரிக்க […]

The post கனடாவின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடைமுறைகளை பார்வையிடும் அமெரிக்கா appeared first on TamilStar.com.

வோன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted: 01 Apr 2017 08:20 AM PDT

வோன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுஞ்சாலை 7 மற்றும் Martin Grove வீதிப் பகுதியில், றெஜீனா வீதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில், சக்கர நாற்காலி ஹொக்கி விளையாட்டு வீரர்களுக்கான நன்கொடை நிகழ்வு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதன் வாகன நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டு […]

The post வோன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி appeared first on TamilStar.com.

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் காலமானார்!

Posted: 01 Apr 2017 08:17 AM PDT

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இந்தியாவின் மொழி […]

The post தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் காலமானார்! appeared first on TamilStar.com.

தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது: – அமைச்சர் மனோ கணேசன்

Posted: 01 Apr 2017 08:16 AM PDT

அரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் […]

The post தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது: – அமைச்சர் மனோ கணேசன் appeared first on TamilStar.com.

பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்! – ஐ.நா தூதுவர் வேண்டுகோள்

Posted: 01 Apr 2017 08:10 AM PDT

பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ளாதீர்கள், அவர்களைக் கவனத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான உனா மக்கோலி கோரிக்கை விடுத்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பேண்தகு இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- பொதுவான மனிதாபிமான செயற்பாடுகளின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. […]

The post பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்! – ஐ.நா தூதுவர் வேண்டுகோள் appeared first on TamilStar.com.

கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானால் தமிழீழத்திற்கு தப்பிச் செல்வேன் : நிர்மால் ரஞ்சித் தேவசிறி

Posted: 01 Apr 2017 08:07 AM PDT

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிப்பெற்றால், தான் உருவாக போகும் தமிழீழ நாட்டுக்கு தப்பி செல்ல போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச பௌத்த வாக்குகள் மூலம் மாத்திரமே வெற்றிப்பெற வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை எனவும் அவர் கூறியுள்ளார். அப்படி நடந்தால், பௌத்தர்கள் அல்லாத மக்கள் சமூகத்தில் இருந்து ஒதுங்கி கொள்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிர்மால் […]

The post கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானால் தமிழீழத்திற்கு தப்பிச் செல்வேன் : நிர்மால் ரஞ்சித் தேவசிறி appeared first on TamilStar.com.

மகிந்த – மைத்திரி காலம் மாறியது போல போராட்டங்களும் முடிவுறும்!

Posted: 01 Apr 2017 07:52 AM PDT

காலங்கள் இறைவனால் இசைக்கப்படுகின்ற ராகங்கள் என்றார் கவியரசு கண்ணதாசன்.காலம் தான் அனைத்திற்கும் காரணம். மனித வாழ்வில் ஏற்படக்கூடிய அத்தனை ஏற்ற இறக்கங்களையும் காலமே தந்து போகிறது. மகிந்த ராஜபக்ச­ இப்போது ஜனாதிபதியில்லை. மகிந்த ராஜபக்ச­வின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன மகிந்தவுக்கு பயந்ததுண்டு.ஆனால், இப்போது மைத்திரிக்கு மகிந்த பயம் கொள்வதாக நிலைமை மாறிவிட்டது. மகிந்தவின் ஆட்சியில் விமல் வீரவன்ச துள்ளிக் குதித்தார். இன்று சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல் நலப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளாராம்.அவை அனைத்தும் காலத்தின் அசைவில் […]

The post மகிந்த – மைத்திரி காலம் மாறியது போல போராட்டங்களும் முடிவுறும்! appeared first on TamilStar.com.

தமிழீழத்துக்குத் தப்பிச் செல்வேன்! – கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

Posted: 01 Apr 2017 07:50 AM PDT

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெற்றால், உருவாகப் போகும் தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச பௌத்த வாக்குகள் மூலம் மாத்திரமே வெற்றிப்பெற வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை எனவும் அவர் கூறியுள்ளார். அப்படி நடந்தால், பௌத்தர்கள் அல்லாத மக்கள் சமூகத்தில் இருந்து ஒதுங்கி கொள்வார்கள் எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தனது முகநூல் கணக்கில் […]

The post தமிழீழத்துக்குத் தப்பிச் செல்வேன்! – கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி appeared first on TamilStar.com.

இளைஞர், யுவதிகளுக்காக பிரதமரின் நடவடிக்கை!

Posted: 01 Apr 2017 07:43 AM PDT

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மஹாவலி வலயத்தை ஆரம்பித்து நாட்டை அபிவிருத்தி செய்திருந்தார். அதேபோன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெறும் யொவுன்புரய நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். சீன பட்டுப்பாதையின் நன்மைகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ள நாட்டை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பல கட்டங்களின் கீழ் விரைவாக அபிவிருத்தி நடவடிக்கைகள் […]

The post இளைஞர், யுவதிகளுக்காக பிரதமரின் நடவடிக்கை! appeared first on TamilStar.com.

ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கவில்லை! – பாதுகாப்புச் செயலாளர்

Posted: 01 Apr 2017 07:41 AM PDT

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியாக செய்திகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளிநாட்டு இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக வேறு நாடுகளில் இருந்து திட்டங்களை தீட்டி வருவதால், குடியேறும் நபர்கள் குறித்து கவனத்தில் கொள்ளுமாறு அமெரிக்க இலங்கைக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இராஜதந்திர ரீதியில் அப்படியான […]

The post ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கவில்லை! – பாதுகாப்புச் செயலாளர் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™