Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடந்தது...அம்பலம் கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை தீவிரம்

Posted: 08 Apr 2017 06:10 AM PDT

புதுடில்லி, நாடு முழுவதும், கடந்த மூன்று நிதியாண்டுகளில், 1.37 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர் களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப் படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகள், வருமான வரி, சுங்க வரி, கலால் வரி என, பலவித வரிகளை வசூல் செய்கின்றன. ஆனால், ஏராளமானோர், உரிய முறையில் வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். இதன் மூலம், அரசுக்கு வர வேண்டிய வரு வாய் பாதிக்கப்படுவதுடன், வரி ஏய்ப்பாளர்கள் சேர்க்கும் கறுப்புப் பணம், இந்திய பொருளா தாரத்தையே ...

பா.ஜ., மீது சசி அணி பாய்வது ஏன்?

Posted: 08 Apr 2017 07:19 AM PDT

அ.தி.மு.க., சசிகலா அணிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரான சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, அவரை பதவியேற்க அழைக்காமல், கவர்னர் தாமதம் செய்தார். அதன் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சசிகலா குடும்பத்தினர் சந்தேகித்தனர். சசிகலா பதவியேற்புக்கு முன், சொத்து குவிப்பு வழக் கில், உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்ததால், அவர் சிறை சென்றார். பின், அவர் ஆதரவாளரான பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கும் படி, அ.தி.மு.க., ...

டீஸ்டா நதி பங்கீட்டிற்கு விரைவில்...தீர்வு... வங்கதேச பிரதமரிடம் மோடி உறுதி

Posted: 08 Apr 2017 10:14 AM PDT

புதுடில்லி, : ''டீஸ்டா நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பான பிரச்னைக்கு விரை வில் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளோம்,'' என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, ஹசீனாவும், பிரதமர் மோடியும் இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதம் நடத்தினர். இதில், ராணுவம், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அணுசக்தி பயன்படுத்துதல் உட்பட, 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த சந்திப்பின்போது, வங்கதேசத்தில் பல்வேறு ...

தேர்தல் அறிக்கை வெற்று காகிதம்: தலைமை நீதிபதி வருத்தம்

Posted: 08 Apr 2017 10:20 AM PDT

புதுடில்லி, :''தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை, அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, தேர்தல் தொடர்பான, பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு நடந்தது. அதில் பேசிய, தலைமை நீதிபதி கேஹர் கூறியதாவது: தேர்தலின்போது, கட்சிகள் அளிக்கும் வாக்குறுதி அறிக்கை,வெறும் காகிதமாக மாறி விட்டது, வருத்தம் அளிக்கிறது. தாங்கள் அளிக்கும் வாக்கு றுதிகளை, கட்சிகள் நிறைவேற்று வதே இல்லை. தேர்தல் அறிக்கை யில் அளிக்கும் வாக்குறுதிகளை ...

தேர்தலுக்காக பணம் கொடுத்த பட்டியல் வெளியீடு 'பகீர்!': விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை தொடர் விசாரணை

Posted: 08 Apr 2017 10:27 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர். அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ...

தனி தேர்தல் அதிகாரி டில்லி பயணம்: ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

Posted: 08 Apr 2017 10:44 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில், பணம் பட்டுவாடா நடந்தது தொடர்பாக, அறிக்கை அளிக்க, தனி தேர்தல் அதிகாரி, டில்லி சென்றுள்ளதால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்து உள்ளன.

சட்டசபை பொதுத் தேர்தலின் போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு அதிக அளவில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, புகார் எழுந்தது.பறக்கும் படை, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில், கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக, இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்தி வைக் கப்பட்டது. ...

தனியார் விமானத்திலும் பறக்கலாம் சிவசேனா எம்.பி.,க்கு தடை நீக்கம்

Posted: 08 Apr 2017 10:47 AM PDT

மும்பை விமான நிறுவன ஊழியரை அடித்ததற்காக, சிவசேனா கட்சி, எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட தடையை, நான்கு முன்னணி தனியார் விமான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு நீக்கியுள்ளது.

சமீபத்தில், 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணித்த, சிவசேனா கட்சி, எம்.பி., ரவீந்திர கெயிக்வாட், விமானத்தில் இருக்கையை மாற்றிக் கொடுத்த ஆத்திரத்தில், விமான ஊழியரை செருப்பால் அடித்தார். இதனால், அனைத்து விமான சேவை நிறுவனங்களும், கெயிக்வாட், விமானத்தில் செல்ல தடை விதித்தன.இதையடுத்து பல முறை, வேறு பெயரில் விமானத்தில் பயணிக்க, கெயிக்வாட் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இதையடுத்து, ...

தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்': அ.தி.மு.க., அணிகள் பதில்

Posted: 08 Apr 2017 10:55 AM PDT

தேர்தல் கமிஷன் அனுப்பிய, நோட்டீசுக்கு, தினகரன் மற்றும் பன்னீர் அணியினர், நேற்று பதில் அளித்தனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் பயன்படுத்த, தேர்தல் கமிஷன் தடை விதித்துள் ளது. இந்நிலையில், பன்னீர் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட மின் கம்பம் சின்னத்தை, அவர்கள் இரட்டை மின் விளக்கு மின் கம்பம் என, பிரசாரம் செய்கின்றனர். இரட்டை இலை சின்னத்தை நினைவுபடுத்து வது போல, அவர்கள் பிரசாரம் உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என, தினகரன் அணியினர்,தேர்தல்கமிஷனில், புகார் செய்தனர். தினகரன் அணியினர், ...

'மக்களை விலைக்கு வாங்க முடியாது!'

Posted: 08 Apr 2017 10:58 AM PDT

சென்னை:''பண பலத்தின் மூலம், மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின் றனர்; அந்த எண்ணம் பலிக்காது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று, ஜெ., அரசு அமைப்போம்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில், மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோர், 40வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கூட்டாக பிரசாரம் செய்தனர். அப்போது, வாசன் பேசியதாவது:மக்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு, தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையும். தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ...

பன்னீர் அணிக்கு புது 'டிவி'

Posted: 08 Apr 2017 11:33 AM PDT

ஜெயா, 'டிவி'க்கு போட்டியாக, அம்மா என்ற பெயரில், 'டிவி' துவக்கும் பணியில், பன்னீர்செல்வம் அணி மும்முமாக ஈடுபட்டு வருகிறது.

ஜெயலலிதா இருந்த போது, அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையாக, 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழும், ஜெயா, 'டிவி'யும் செயல்பட்டன. அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா, பன்னீர்செல்வம் என, இரு அணிகளாக பிரிந்துள்ளது.
ஜெயா, 'டிவி'யும், நாளிதழும், சசிகலா வசம் உள்ளன. இதையடுத்து, 'நாமும், 'டிவி' சேனல்
துவக்க வேண்டும்' என, பன்னீர்செல்வத்திடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
அதனால், முன்னாள் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு ...

காதலிக்கு ரூ.2.5 கோடியில் கார் பரிசு 'கால் சென்டர்' மோசடி தலைவன் கைது

Posted: 08 Apr 2017 12:36 PM PDT

தானே : காதலிக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஆடி' கார் பரிசளித்த, 'கால் சென்டர்' மோசடிக் கும்பல் தலைவன், மஹாராஷ்டிராவில் நேற்று( ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டான்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பல நகரங்களில், 'கால் சென்டர்கள்' அமைத்து, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரிடம், 2,000 கோடி ரூபாய் மோசடி செய்தவன், ஷாக்கி எனப்படும் சாகர் தக்கார், 24. கடந்த ஆண்டு, கால் சென்டர் மோசடி அம்பலம் ஆனது முதல், இவன் தலைமறைவானான். சாகரை, போலீசார் தேடி வந்தனர்.
கால் சென்டர் மோசடி தொடர்பாக, சாகர் நடத்தி வந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக பணியாற்றி வந்த, 70 பேரை ...

என் வீட்டில் எதுவும் இல்லை!: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Posted: 08 Apr 2017 01:37 PM PDT

சென்னை : ''என் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பணம், ஆவணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட வில்லை,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:என் வீட்டில், வருமான வரித்துறையினர் நீண்ட நேரம், சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையாக, சோதனை செய்தும், அவர்கள் நோக்கம் நிறைவேறவில்லை. எந்த பணமும், ஆவணமும் கைப்பற்றப்பட வில்லை.
என் சொந்த ஊரில், பெற்றோர் வீட்டில் சோதனை நடத்தினர்; அங்கும் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. என் கல் குவாரியில் நடத்தப்பட்ட சோதனையிலும், எதுவும் பறிமுதல் ...

ஈவ் டீசிங்கை ஊக்குவிக்கிறது இந்திய சினிமா : மேனகா காந்தி

Posted: 08 Apr 2017 02:41 PM PDT

பனாஜி: இந்திய சினிமா ஈவ் டீசிங்கை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.

கோவா மாநிலம் பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் : ‛‛ இந்திய மொழி சார் திரைப்படங்களில் எப்பொழுதும் பெண்களை ஈவ் டீசிங் செய்வதிலேயே பெரும்பாலும் காதல் ஆரம்பிக்கிறது. ஹீரோவும் அவரது நண்பர்களும் ஒரு பெண்ணை சுற்றி வருவார்கள், அவர்கள் அந்த பெண்ணை சீண்டுவதும், பின்னர் அந்த பெண் மீது காதல் கொள்வது, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™