Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில் மேம்பாட்டு ஆணையம்: 10 அம்சங்கள் என்ன?

Posted: 06 Apr 2017 03:25 AM PDT

புதுடில்லி: இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றமாக, ரயில் மேம்பாட்டு ஆணையம் என்ற சுதந்திரமான ஒரு அமைப்பை உருவாக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே வழங்கும் சேவைக்கு அதன் செலவுக்கு தகுந்தவாறு கட்டணம் நிர்ணயம் செய்வது; பயணிகளின் நலன்களை பாதுகாப்பது; போதிய வருவாய் இல்லாத பிரிவுகளை மேம்படுத்த ஆலோசனை தருவது; போட்டியை ஊக்குவித்து, சந்தை மேம்பாட்டிற்கு வழிவகுப்பது; முதலீட்டிற்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்குவது; ரயில்வேக்கு சொந்தமான வளங்களை திறமையான முறையில் கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவது மற்றும் தரத்திற்கான அளவை ...

தலாய் லாமா விவகாரத்தில் சீனா...பூச்சாண்டி!:விளைவுகளை சந்திக்க நேரிடுமாம்

Posted: 06 Apr 2017 09:29 AM PDT

புதுடில்லி:'திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு தெரிவித்துள்ள எதிர்ப்பை பொருட்படுத்தாமல், இந்தியா பிடிவாதமாக உள்ளது, எல்லையில் பதற்றத்தைஏற்படுத்தும் இந்த விவகாரத்தில், மோசமான அரசியல் செய்ய நினைத்தால், அதற்கான விளைவுகளை,அந்த நாடு எதிர்கொள்ள நேரிடும்' என, சீனா, பூச்சாண்டி காட்டியுள்ளது.

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.'புத்த மதத் தலைவராக தலாய் லாமா ...

நீதிமன்ற சிக்கலில் தப்புவது எப்படி?: தேர்தல் கமிஷன் ஆலோசனை

Posted: 06 Apr 2017 09:39 AM PDT

நீதிமன்ற பிரச்னையை எதிர்கொள்வது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை, 2016 அக்டோபரில், இரு கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டன. மனு தாக்கல் முடிந்த நிலையில், தி.மு.க., தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கால், தேர்தல் ரத்தானது. இது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 'தேர்தலை, மே, 14க்குள் நடத்தி முடிக்கா விட் டால், தேர்தல் கமிஷன் மீது நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில், தி.மு.க., தரப்பில்,தேர்தல் கமிஷன் மீது, ...

தினகரன் மீதான 'பெரா' வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

Posted: 06 Apr 2017 10:30 AM PDT

சென்னை:அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் மீதான, அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

வெளிநாட்டில் பணம் 'டிபாசிட்' விவகாரத்தில், தினகரன் மீது, அன்னிய செலாவணி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத் தில், விசாரணை யில் இருந்தன.இரண்டு வழக்குகளில் இருந்தும், தினகரனை விடுவித்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ...

ஜி.எஸ்.டி., மசோதாக்கள் பார்லி.,யில் நிறைவேறின

Posted: 06 Apr 2017 10:32 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கான, நான்கு துணை மசோதாக்கள், ராஜ்யசபாவில் நேற்று நிறை வேறின; இவற்றுக்கு, லோக்சபா ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை, ஜூலை, 1 முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி., மற்றும் வரி வருவாய் இழப்பீட்டை ஈடு செய் யும் சட்டத்துக்கான மசோதா ஆகிய நான்கு மசோதாக்கள்கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள், லோக்சபா வில், ...

பா.ஜ., நிறுவன நாள் விழாவில் மோடி உருக்கம்

Posted: 06 Apr 2017 10:34 AM PDT

புதுடில்லி:''நாட்டில் வாழும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக, பா.ஜ., தொடர்ந்து செயலாற்றும்,'' என, பா.ஜ., நிறுவன நாள் விழாவில், பிரதமர் மோடி பேசினார்.

பா.ஜ.,வின், 37ம் ஆண்டு நிறுவன நாள் விழா, டில்லியில் நேற்று நடந்தது. கட்சியின் தலைமையகத்தில் நடந்த விழாவில், முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, பிரத மர் மோடி உருக்கமாக பேசியதாவது: 'ஸ்தாபனா திவஸ்' எனப்படும், கட்சியின், 37ம் ஆண்டு துவக்க விழா வில், உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இத்தனை ஆண்டுகளாக, நாட்டு மக்களின் நலனுக் காக பாடுபட்டு வரும், பா.ஜ., தொண்டர்கள் ஒவ் ...

நாடு முழுவதும் 50 இடங்களில் வருமான வரித்துறை 'ரெய்டு'

Posted: 06 Apr 2017 10:39 AM PDT

புதுடில்லி:கறுப்பு பணம் பதுக்கல் தொடர்பாக, நாடு முழுவதும், சென்னை உட்பட, 50 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

நாட்டில் கறுப்பு பண பதுக்கலை தடுக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், கடந்த ஆண்டு நவ., 8ல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், கறுப்பு பண பதுக்கல்காரர்கள், தங்களிடம் உள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை, தாங்களாக முன்வந்து தெரிவிக்க, மத்திய அரசு வாய்ப்பு வழங்கியது. கடந்த ஆண்டு, டிசம்பரிலிருந்து, இந்தாண்டு மார்ச், 31 வரை, வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்ததகவல்களை ...

கெஜ்ரிவாலின் அதிகார துஷ்பிரயோகம்: விசாரணை கமிஷன் 'பகீர்'

Posted: 06 Apr 2017 10:59 AM PDT

புதுடில்லி:'டில்லி முதல்வராக உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அதிகார துஷ்பிரயோகம் செய்து, தனக்கு வேண்டியவர்களுக்கு பல்வேறு பதவிகளை அளித்து முறைகேடு செய்துள்ளார்' என, டில்லி அரசு நிர்வாகம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. முந்தைய துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங்குடன் மோதல் போக்குடன் இருந்தார் கெஜ்ரிவால். அரசு நிர்வாகம் தொடர்பாக யாருக்கு அதிகாரம் என்று தொடரப்பட்ட வழக்கில், 'டில்லி யூனியன் பிரதேசம், அதை நிர்வகிக்கும் ...

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடாவை தடுக்க...கிடுக்கிப்பிடி!:கூடுதல் கண்காணிப்புக்கு 70 பார்வையாளர்கள்

Posted: 06 Apr 2017 11:07 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணம் பட்டுவாடா கட்டுக்கடங்காமல் போனதால், கிடுக்கிப்பிடி போடும் விதமாக, அதிரடிக்கு பெயர் போன, விக்ரம் பத்ராவை, சிறப்பு தேர்தல் அதிகாரியாக, தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன் மூலம், பட்டுவாடா விவகாரத்தில், மவுனம் சாதித்த, லக்கானி ஓரங்கட்டப்பட்டு உள்ளார். அத்துடன், தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 70 நுண் பார்வையாளர் களும், ஆர்.கே.நகரில் வலம் வரத் துவங்கி உள்ளனர்.

சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 12ம் தேதி நடக்கிறது. அங்கு, 62 பேர் போட்டியிட் டாலும், அ.தி.மு.க., - பன்னீர் அணி, சசிகலா அணி இடையே தான் கடும் போட்டி ...

வெளிநாட்டு சிறைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை 7,615: மத்திய அரசு

Posted: 06 Apr 2017 12:14 PM PDT

புதுடில்லி: வெளிநாட்டு சிறைகளில் 7 ஆயிரத்து 615 இந்தியர்கள் அடைப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது

சிறைகளில் இந்தியர்கள்
டில்லி ராஜசபாவில் கேள்வி ஒன்றிற்கு வௌி விவகாரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் உள்ள கடுமையான தனியுரிமை சட்ட விதிமுறைகளால் அந்த நாட்டு சிறையில் உள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வௌிநாடுகளுக்கு சென்ற 7.615 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ...

பா.ஜ.,வை சமாளிக்க முடியாது - பிரகாஷ் காரத்

Posted: 06 Apr 2017 01:35 PM PDT

சென்னை : ''மத்திய பா.ஜ., அரசை, அ.தி.மு.க.,வின் இரு அணிகளாலும் சமாளிக்க முடியாது,'' என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து, பிரகாஷ் காரத் பேசியதாவது:
இது, சாதரண தேர்தல் இல்லை. தமிழக அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். இந்த தேர்தலில் தான், அ.தி.மு.க.,வின் எதிர்காலமும் உள்ளது.அ.தி.மு.க., மூன்று பிரிவுகளாக பிரிந்து, தேர்தலை சந்திக்கின்றன. ஒருவர், ரத்த சொந்தம் என்கிறார்; மற்றவர்கள், உண்மையான வாரிசு என்கின்றனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™