Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனுக்கான விசாவிலும்... சிக்கல்!:இந்தியர்கள், இந்திய நிறுவனங்களுக்கு அடி மேல் அடி

Posted: 04 Apr 2017 09:34 AM PDT

புதுடில்லி:அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும், விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால், அங்கு வேலைக்கு ஊழியர்களை அனுப்பும் இந்திய நிறுவனங்களுக்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களின் கனவிலும், அடி மேல் அடி விழுந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட நுட்பமான தொழில்களில், இந்தியர்களே அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இந்திய, ஐ.டி., நிறுவனங்களும், இந்த நாடுகளில் தங்கள் கிளைகளை துவக்கி, ...

தினகரன், பன்னீர் அணியினர் சமூக வலைதளங்களில் மோதல்

Posted: 04 Apr 2017 09:48 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கடும் போட்டி நிலவுவதால், சசிகலா அணியினருக்கும், பன்னீர் அணியினருக்கும் இடையே, சமூக வலைதளங்களில், மோதல் அதிகரித்துள்ளது.

ஆர்.கே.நகரில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, தினகரன் அணியினர் நினைத்த னர். அதற்கு மாறாக, பன்னீர் அணியினருக்கு, ஆதரவு அதிகமாக இருப்பது, அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பன்னீர் அணி நிர்வாகிகளை, கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ளனர். விழா ஒன்றில், பன்னீர் அணியைச் சேர்ந்த, முன்னாள்அமைச்சர் பாண்டியராஜன், தி.மு.க., - எம்.பி., கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். அந்த வீடியோவை எடுத்து, திரைப்பட ...

உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு தயங்குவது ஏன்?

Posted: 04 Apr 2017 09:50 AM PDT

சென்னை: ''உள்ளாட்சித் தேர்தலை நடத்தி னால், மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற பயத்தில், தேர்தலை நடத்த அரசு தயாராக இல்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தி னால், மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரி டும் என்ற பயத்தால், தேர்தலை நடத்த மாநில அரசு தயங்குகிறது. அதனால் தான், மாநிலதேர்தல் கமிஷன் மூலமாக, 'குறிப்பிட்ட தேதிக்குள், தேர்தலை நடத்த முடியாது' என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
வரவேற்கத்தக்கது :
அதற்கு நீதிமன்றமும் ...

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய ஐகோர்ட்...உத்தரவு!:சாதகமான தீர்ப்பால் வேளாண் மக்கள் சந்தோஷம்

Posted: 04 Apr 2017 09:56 AM PDT

சென்னை:'கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் அனை வரும் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் மீது, எந்த சட்ட நடவடிக்கையையும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எடுக்கக்கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் கருதி ,மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தி உள்ளது. சாதகமான இந்த தீர்ப்பால், வேளாண் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் ...

சென்னை - பெங்களூரு ரயில் மார்க்கம் மொபைல் போன் 'கவரேஜில்' 2ம் இடம்

Posted: 04 Apr 2017 09:58 AM PDT

புதுடில்லி: டில்லி - கோல்கட்டா ரயில் மார்க்கத் தில், மொபைல் போன் இணைப்பு வசதி மிகச் சிறப்பாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள் ளது. இந்த விஷயத்தில், சென்னை - பெங்களூரு இடையிலான ரயில் மார்க்கம், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

'ரயில் யாத்ரி' என்ற, போக்குவரத்து இணையதளம் நடத்திய ஆய்வு முடிவுகள் விபரம்:
88 சதவீதம் :
நாட்டிலேயே, டில்லி - கோல்கட்டா இடையி லான ரயில் மார்க்கத்தில், மொபைல் போன் இணைப்பு கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்களில், மொபைல் போன் இணைப்புகள் எளிதில் கிடைக்கின்றன. இந்த ...

பணம் கொடுக்காத கெஜ்ரிவால் : ராம்ஜெத்மலானி தாராளம்

Posted: 04 Apr 2017 10:04 AM PDT

புதுடில்லி: டில்லி முதல்வராக உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 10 கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

டில்லி கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக் கில், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில், மூத்த வழக் கறிஞர் ராம்ஜெத்மலானி, 93, ஆஜராகி வருகி றார். இந்த வழக்குக்காக, வழக்கறிஞர் கட்டண மாக, ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒவ்வொருமுறை கோர்ட்டில் ஆஜராக, 22 லட்சம் ரூபாய் என, இதுவரை, 3.8 கோடி ரூபாய்க்கு பில் அனுப்பி உள்ளார் ஜெத்மலானி. 'அரவிந்த்கெஜ்ரிவால் மீது தனிப்பட்ட முறையில் இந்த வழக்கு தொடரப் ...

முலாயம் மருமகள் பா.ஜ.,வில் ஐக்கியம்?

Posted: 04 Apr 2017 10:12 AM PDT

லக்னோ: ''உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை, மரியாதை நிமித்தமாகவே சந்தித் தேன். இதன் மூலம், நான் பா.ஜ.,வில் இணைய வுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தியே,'' என, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் மருமகள், அபர்ணா யாதவ் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி படுதோல்வி அடைந்தது. அந்தக் கட்சியின் சார்பில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்ட, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் இளைய மருமகள் ...

2.42 லட்சம் ரேஷன் கார்டுகள் முடக்கம் 'ஆதார்' பதிய முடியாமல் மக்கள் அவதி

Posted: 04 Apr 2017 10:33 AM PDT

ஆதார் எண் பதியாத, 2.42 லட்சம் ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன; அதனால், உணவு பொருட்கள் வாங்க முடியாமலும், ஆதார் பதிய முடியாமலும், அந்த கார்டுதாரர்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன. தற்போது, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், 2.42 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கூட பதிய வில்லை. இதனால், அவர்களின் கார்டுகளை, உணவுத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து, ஆதார் பதியாதவர்கள் ...

உ.பி., பள்ளிகளில் கட்டாயமாகிறது யோகா

Posted: 04 Apr 2017 10:36 AM PDT

லக்னோ:உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அனைத்து பள்ளிகளிலும், யோகா பாடத்தை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ளார். இவர், முதல்வராக பதவியேற்றது முதல், சட்டவிரோத மாட்டி றைச்சி கூடங்களுக்கு தடை, பெண்களை கிண்டல் செய்யும் இளைஞர்களை தண்டித்தல் உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உ.பி., மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:
கல்வித்துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில், முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது, உ.பி., ...

ஐ.பி.எல்., கிரிக்கெட்: மின் வாரியம் 'திக் திக்'

Posted: 04 Apr 2017 12:02 PM PDT

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியால், தினசரி மின் தேவை கூடுதலாக, 500 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், கோடை காலம் துவங்கியதால், தினசரி மின் தேவை அதிகரித்து வருகிறது. ஏப்., 2ல், 12 ஆயிரத்து, 440 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, நேற்று, 13 ஆயிரத்து, 730 மெகாவாட்டாக அதிகரித்தது. இதை பூர்த்தி செய்ய, அனல் மின் நிலையங்களில், மின் வாரியம் முழு அளவில் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று முதல், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவங்குவதால், மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்க உள்ளது.
இது குறித்து, மின் வாரிய ...

'ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது'

Posted: 04 Apr 2017 01:12 PM PDT

சென்னை: 'ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை, அனுமதிக்கப்பட்ட அவகாசத்தை தாண்டி, கால தாமதமாக புதுப்பித்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்க பொதுச் செயலர், ஜேம்ஸ் ஜெயசீலன் தாக்கல் செய்த மனு:
மோட்டார் வாகன சட்டத்தில், குறிப்பிட்ட சில விதிகளை திருத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து, மத்திய அரசு, 2016 டிச., 29ல் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பழகுனர், ஓட்டுனர் உரிமம் மற்றும் புதுப்பிப்பு கட்டணங்கள், புதிதாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™