Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தி.மு.க., - மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

Posted: 28 Apr 2017 09:20 AM PDT

தி.மு.க.,வில், சரிவர செயல்படாத மாவட்டச் செயலர்கள் நீக்கப்பட உள்ளதாக, சென்னை யில், நேற்று நடந்த கூட்டத்தில், கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், மாவட்டச் செயலர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை உறுப்பினராக, கருணாநிதி, 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவரது பிறந்த நாளுடன் சேர்த்து, அவரின் சட்டசபை வைர விழாவையும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன், 1முதல், மூன்று நாட்களுக்கு விழா ஏற்பாடுகள் செய்யப்படும். ஜூன், 3ல், ...

டில்லி போலீஸ் சென்னையில் முகாம்: கடும் பீதியில் தமிழக அமைச்சர்கள்

Posted: 28 Apr 2017 09:21 AM PDT

தினகரன் விவகாரத்திற்காக, டில்லி போலீசார், சென்னையில் முகாமிட்டிருப்பது, சில அமைச்சர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகர், தினகரன், அவரது நண்பர், மல்லிகார்ஜுனா ஆகியோரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணை :
தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை, ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. , அவர்கள் இருவரையும், டில்லி போலீசார்நேற்று முன்தினம், சென்னை அழைத்து வந்தனர். சென்னை, ...

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்றார் கம்பீர்

Posted: 28 Apr 2017 09:31 AM PDT

புதுடில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட் டுகள் தாக்குதலில் உயிர் இழந்த, 25 வீரர்களு டைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க உள்ளதாக, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில், பா.ஜ.,வை சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இங்குள்ள சுக்மா மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக் கும் பகுதிகளில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, துணை ராணுவ படையினர் மீது, சமீபத்தில், நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில்,தமிழக வீரர்கள் நான்கு பேர் உட்பட, 25 பேர் சம்பவ ...

ஊழல் மாநிலங்கள் பட்டியல்: 3வது இடத்தில் தமிழகம்

Posted: 28 Apr 2017 09:34 AM PDT

புதுடில்லி: ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டிய லில், கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக, 'நிடி ஆயோக்' ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், ஊடக ஆய்வு களுக்கான மையம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது சேவைகளைப் பெறுவதற்கு, மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இது குறித்து, நாட்டில் உள்ள, 29 மாநிலங்களில் 20ல், 3,000 நகர்ப்புற, கிராமப்புற மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியலில்,கர்நாடகா ...

தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது

Posted: 28 Apr 2017 09:48 AM PDT

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், ஹவாலா கும்பல் மூலம், பல கோடி ரூபாய் பணத்தை கைமாற்றியது தெரிய வந்து உள்ளது. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டான்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம், 50 கோடி ரூபாய், லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீசாரால், சில தினங்களுக்கு முன், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் முகாமிட்டுள்ள டில்லி போலீ சார், பெசன்ட் நகரில், மத்திய அரசு அலுவலக மான ராஜாஜி ...

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் பிளவு? டில்லி தோல்வியால் நிர்வாகிகள் ஓட்டம்

Posted: 28 Apr 2017 09:53 AM PDT

புதுடில்லி: டில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வியை தொடர்ந்து, பஞ்சாபில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் இருவர், அக்கட்சி யில் இருந்து விலகியுள்ளனர். வேறு சிலரும், தலைமைக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கி யுள்ளதால், விரைவில் பிளவுஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில், 270 இடங்களில், 181 இடங்களை கைப்பற்றி, பா.ஜ., அபார வெற்றி பெற்றது; டில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.இத்தேர்தலில், மாநிலத்தில் ஆளும் ...

அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்ந்து காமராஜ் சிக்குகிறார்; வீட்டை காலி செய்து தர ரூ.30 லட்சம் வாங்கி மோசடி

Posted: 28 Apr 2017 09:59 AM PDT

புதுடில்லி: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சிக்கியுள்ளார்.

'அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யா விட்டால் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விடுவோம்' என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. இதனால் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் பீதியில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க., வானது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக ...

கோடநாடு காவலாளி கொலை முதல்வர் பழனிசாமி நழுவல்

Posted: 28 Apr 2017 10:16 AM PDT

சேலம்: ''கோடநாடு காவலாளி கொலை வழக் கில், போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பர்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி, பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள் ளது. 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நிவாரணம் வழங்கப்பட்டது.
பின், ஆய்வு நடத்தி, 82 விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, இறந்தது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நிலம் இல்லாதவர்களை விவசாயி என, எடுத்துக் ...

முதல்வர் பழனிசாமியை கைது செய்ய பன்னீர் அணி தீர்மானம்

Posted: 28 Apr 2017 10:19 AM PDT

சேலம்: 'முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச் சர்களை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்' என, சேலத்தில், பன்னீர் அணி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சேலம், ஒருங்கிணைந்த மாவட்ட, அ.தி.மு.க., பன்னீர் அணியின் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அமைப்பு செயலர் செம்மலை தலைமை வகித்தார்.
தீர்மானங்கள் விபரம்:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 200 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும்.சசிகலா குடும்பத்தால் நியமிக்கப்பட்ட முதல்வர் ...

இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்

Posted: 28 Apr 2017 12:01 PM PDT

ஐதராபாத்: தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தி மற்றும் கொள்முதல் யார்டு உள்ளது. இங்கு மிளகாய் கொள்முதல் செய்யும் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை தர வேண்டும் என கடந்த ஆண்டு முதல் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் ரூ.4 ஆயிம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 லட்சம் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் இ. வேளாண் சந்தையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த ...

பாக்., மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாவூத்?

Posted: 28 Apr 2017 12:48 PM PDT

கராச்சி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிழலுலக தாதா:
மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை, பாக்., அரசு தொடர்ந்து ...

கோடநாடு கொலையாளிகளை காப்பாற்றிய 'கேமரா': போட்டுடைக்கும் போலீஸ்

Posted: 28 Apr 2017 03:05 PM PDT

கோவை: முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கோடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, கொள்ளை சம்பவத்தில், முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீஸ் திணறுவது ஏன், என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, 'கோடநாடு எஸ்டேட்' காவலாளி ஓம் பகதுார், 24ம் தேதி நள்ளிரவு, மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுார், 35, காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட, 10க்கும் மேற்பட்ட முகமூடி நபர்கள், எஸ்டேட் பங்களாவில் நுழைந்து ஜெ., அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். தமிழக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™