Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கைமாறும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் : 'டாஸ்மாக்' கடைகளை திறக்க புது வியூகம்

Posted: 23 Apr 2017 09:27 AM PDT

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி, நகராட்சி எடுத்து கொள்வதற்கு, உரிய மன்ற தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க, நகராட்சி நிர்வாக ஆணையர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்த, 3,120 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டு உள்ளன. புதிய கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். மது விற்பனை, பாதியாக சரிந்ததால், மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் வரும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக ...

அங்கீகாரமற்ற மனை வரன்முறை திட்டம் : முதல்வருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

Posted: 23 Apr 2017 09:33 AM PDT

அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப்படுத் தும் திட்டத்தை இறுதி செய்ய, முதல்வர் ஒப்புதல் கிடைக்காததால், இரு மாதங்களாக, அதிகாரி கள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 13 லட்சம் மனைகள், அங்கீகாரமற்றவையாக உள்ளன. இந்த மனை களை வரன்முறை செய்ய, வரைவு திட்டம் தயாரிக்கப் பட்டு, அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இது தொடர்பான கோப்புகள், முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டன. முதல்வர் நேரம் ஒதுக்கினால், அவருக்கு இத்திட்டம் குறித்து, விளக்க தயாராக ...

அ.தி.மு.க., அணிகள் இன்று பேச்சு

Posted: 23 Apr 2017 09:40 AM PDT

அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக, இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட குழுக்கள், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று பேச்சு நடத்துகின்றன.

ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நடத்துவதற்கு, பிரிந்த அணிகள் மீண்டும் இணைய முன்வந்துள்ளன. அதன்படி, முதல்வர் பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும்பேச்சு நடத்த, குழுக்கள் அமைத்துள்ளன. இரு குழுவினரும், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., . ...

தி.மு.க., போராட்டம்: ராமதாஸ் செம காட்டம்

Posted: 23 Apr 2017 09:43 AM PDT

சென்னை: 'முழு அடைப்பு போராட்டங்களை, உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், பின், எந்த முகத்தை வைத்துக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றத்திடம் கோர முடியும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:
விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக, ஏப்., 25ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவித்துள்ளது. இது,அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர, விவசாயிகளை காப்பதற்கான முயற்சி அல்ல. ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை ...

தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ்; தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு

Posted: 23 Apr 2017 10:10 AM PDT

புதுடில்லி: டில்லியில், தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி, விளை பொருட் களுக்கு உரிய விலை, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். எலிகறி சாப்பிடுவது உள்ளிட்ட வித்தியாசமான போராட்டங்களை அவர்கள் நடத்தினர். அவர்களை, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சந்தித்து பேசினர். டில்லி ...

முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி திட்ட பணிகளை... வேகப்படுத்துங்கள்! :மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 23 Apr 2017 10:35 AM PDT

புதுடில்லி: ''நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றுவதை மாநில அரசுகள் இன்னும் வேகப்படுத்த வேண்டும்,'' என, மாநில முதல்வர்களை, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

திட்டக் கமிஷனுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம், டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. பிரதமர் தலைமையிலான, மாநில முதல்வர்களை உறுப்பினர்களாக கொண்ட ஆட்சி மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:புதிய இந்தியாவை உருவாக்க, 'டீம் இந்தியா' எனப்படும், ...

வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு நீக்கம்; உ.பி., முதல்வரின் அடுத்த அதிரடி

Posted: 23 Apr 2017 10:39 AM PDT

புதுடில்லி: உ.பி.,யில், 105 அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை நீக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தர விட்டு உள்ளது. அதே நேரத்தில், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங், மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பில், எந்த மாற்றமும் செய்யப் படவில்லை.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த உடன், கடந்த ஒரு மாதமாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார்.'வி.ஐ.பி., என்ற கவுரவத்தை காட்டுவதற்காக, சிலர் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இது போன்ற ...

டில்லி போலீஸ் கிடுக்கிப்பிடியில் தினகரன்... இடியாப்பம்! விசாரணையில் அலறல்

Posted: 23 Apr 2017 10:58 AM PDT

'இரட்டை இலை' சின்னம் பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சசிகலா அக்கா மகன், தினகரனிடம், டில்லி போலீஸ் அதிகாரிகள், இரண்டாவது நாளாக, நேற்றும் விசாரணை நடத்தினர். அடுக்கடுக்கான ஆதாரங்களுடன், அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை யில், பதிலளிக்க முடியாமல், இடியாப்பம் போல், தினகரனின் நிலை காணப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வின் சின்னமான, 'இரட்டை இலை'யை, யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக, தேர்தல் ...

உட்கட்சி குழப்பத்தில் ஆளுங்கட்சி 'ஊசலாடுது' ஏழைகளின் உயிர்

Posted: 23 Apr 2017 11:12 AM PDT

மதுரை:'தொலைதுார கிராமங்களில் பணி செய்யும் அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப் பில் அதிக மதிப்பெண் வழங்க கூடாது, பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது' என தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

உச்சகட்டமாக, ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் அரசு டாக்டர்கள் ஈடுபடஉள்ளனர்.
கிராமங்களுக்கு போங்க: தொலை துார கிராமங்களில் அரசு டாக்டர்கள் பணி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2000ல் இந்திய மருத்துவ கவுன்சில் சில விதிகளை கொண்டு வந்தது. இதன்படி, பட்ட மேற்படிப்பில் சேர விரும்பினால், 'நீட்' ...

‛பிரதமரிடம் கோரிக்கைகள் வைத்தோம்': பழனிசாமி

Posted: 23 Apr 2017 11:31 AM PDT

சென்னை: நீட்தேர்வு விலக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது என டில்லியிலிருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வலியுறுத்தல்:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்ததாவது: இன்று காலை விவசாயிகளை சந்தித்து அவர்கள் கொடுத்த மனுவை பிரதமரிடம் கொடுத்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும், நீட்தேர்வு விலக்கு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற ...

விரைவில் புது கவர்னர் : வெங்கையா நாயுடு உறுதி

Posted: 23 Apr 2017 12:55 PM PDT

சென்னை : ''தமிழகத்திற்கு, விரைவில் நிரந்தர கவர்னர் நியமிக்கப்படுவார்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு, நிரந்தர கவர்னர் எப்போது?
ஏற்கனவே, தமிழகத்திற்கு கவர்னர் இருக்கிறார். நிரந்தர கவர்னர், விரைவில் நியமிக்கப்படுவார்.
மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறதா?
நேரு, இந்திரா காலத்தில் இருந்த, தாய்மொழி, ஆங்கிலம், ஹிந்தி என்ற மும்மொழி கொள்கை தான், தற்போதும் ...

அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 23 Apr 2017 01:46 PM PDT

புதுடில்லி: 'விவாகரத்து பெறும் போது, மனைவிக்கு அளிக்கப்படும் ஜீவனாம்ச தொகை, கணவன், மனைவி ஆகிய இருவரின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
கடந்த, 1995ல் திருமணமாகி, 2012ல், விவாகரத்து பெற்ற தம்பதி தொடர்பான வழக்கை, சமீபத்தில், கோல்கட்டா ஐகோர்ட் விசாரித்தது. விவாகரத்து பெற்ற கணவனின் மாதச் சம்பளம், 63,500 ரூபாயிலிருந்து, 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருந்தது. அதே சமயம், விவாகரத்து பெற்ற கணவன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மூலம், ஒரு குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.
கணவனின் சம்பளம் ...

வைகையில் 'தெர்மோகூல்' அதிகாரி தூக்கி அடிப்பு?

Posted: 23 Apr 2017 02:49 PM PDT

மதுரை: வைகை அணையில் தெர்மாகோலை மிதக்கவிட்டு நீர் ஆவியாவதை தடுக்கும் ‛அரிய' திட்டத்தை வகுத்த அதிகாரிக்கு டிரஸ்பர் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்., 21 ம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை கலெக்டர் தலைமையில் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலை மிதக்கவிட்ட கூத்து நடந்தது. இந்த ‛அரிய' திட்டத்தை வகுத்த அதிகாரி மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் சிறப்பு திட்ட கோட்டப் பிரிவிற்கு பணிமாற்றம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™