Tamil News | Online Tamil News |
- இந்தியாவின் எரிபொருள் பிரச்னைக்கு 2030க்குள்...தீர்வு!:சந்திரனிலிருந்து ஹீலியம் வாயுவை கொண்டு வர திட்டம்
- அ.தி.மு.க., அணிகளை இணைத்த தி.மு.க.,
- முக்கியத்துவம் பெறும் கொங்கு மண்டலம்!
- பிரமாண பத்திரம்: இரு அணிகளும் தீவிரம்
- தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்துக்கு மத்திய அரசு... நிபந்தனை!:வாடிக்கையாளர்களுக்கு 'செட் - டாப் பாக்ஸ்' தர 3 மாதம் கெடு
- ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு...ஆரம்பம்!: பலப்பரீட்சைக்கு எதிர்க்கட்சிகள் தீவிரம்
- இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரனிடம்... கிடுக்கிப்பிடி!:டில்லி போலீசில் ஆஜரானவரிடம் பல மணி நேரம் விசாரணை
- அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு நாளை துவக்கம் சசி குடும்பத்தை முழுமையாக நீக்க முதலில் ஆலோசனை
- முதல்வர் பழனிசாமி சிந்திக்க வேண்டிய நேரமிது!
- நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை: நிதிஷ்குமார்
- அ.தி.மு.க., அதிருப்திகளுக்கு பா.ஜ., வலை
- பா.ஜ.,வுக்கு கமல்நாத் ஓட்டம்?
- பெட்ரோல், டீசல் 'டோர் டெலிவரி' மத்திய அமைச்சர் நம்பிக்கை
| Posted: 22 Apr 2017 07:18 AM PDT புதுடில்லி:'இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சந்திரனி லிருந்து,அதிக சக்தியுடைய எரிபொருளான, 'ஹீலியம் - 3' வாயுவை கொண்டு வர, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது. 2030க்குள் இந்த திட்டம் நிறைவேறும்' என, 'இஸ்ரோ' நம்பிக்கை தெரிவித்துள்ளது. 'இஸ்ரோ' என்கிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி ஆய்வில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. சர்வதேச அளவில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு போட்டியாக விண்வெளி ஆய்வில், இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.சந்திரனுக்கு, 2008, அக்டோபரில், 'சந்திராயன் 1' விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், ... |
| அ.தி.மு.க., அணிகளை இணைத்த தி.மு.க., Posted: 22 Apr 2017 08:08 AM PDT தி.மு.க., திட்டத்தை முறியடித்து, இரட்டை இலை சின்னத்துடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவே, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், இணைய முன்வந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ரகசிய ஆய்வு இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளாக செயல்படுகிறது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா மற்றும் பன்னீர் அணியினர், இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். ஆனால், யாருக்கும் இரட்டை இலை ஒதுக்கப்படவில்லை. இரு அணிகள் இடையேயான பிரச்னை தொடர்ந்தால், தி.மு.க.,வுக்கு சாதகம் என, ... |
| முக்கியத்துவம் பெறும் கொங்கு மண்டலம்! Posted: 22 Apr 2017 08:12 AM PDT தமிழக அரசியலில், கொங்கு மண்டல மண்ணைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய முடிவுகளை எடுத்து, கோலோச்ச துவங்கியுள்ளனர். தற்காலிக முதல்வர்கள்தமிழக அரசியல் வரலாற்றில், கொங்கு மண்டல அரசியல்வாதி கள் யாரும், கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் பெற்றதில்லை. விருதுநகரைச் சேர்ந்த காமராஜர், நசரத்பேட்டை பக்தவத்சலம், காஞ்சி அண்ணாதுரை, திருவாரூர் கருணாநிதி, கேரளா எம்.ஜி.ஆர்., ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா என, யாரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் எல்லாருமே, தலைவர்களாக இருந்து, முதல்வராக பதவிக்கு வந்தவர்கள்; ... |
| பிரமாண பத்திரம்: இரு அணிகளும் தீவிரம் Posted: 22 Apr 2017 08:13 AM PDT அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், இணைவதற் கான பேச்சை துவக்க, நடவடிக்கை மேற்கொண்டாலும், கட்சி உறுப்பினர்களிடம், பிரமாண வாக்குமூலம்வாங்குவதை நிறுத்தவில்லை. அ.தி.மு.க., சசிகலா அணி, பன்னீர் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரு அணிகளும், தனித் தனியே களம் இறங்கின. இரு அணியினரும், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, மனு கொடுத்தன.அந்த மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாததால், தேர்தல் கமிஷன், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது. இடைத்தேர்தலில், சசி அணிக்கு, தொப்பி சின்னமும்,பன்னீர் ... |
| Posted: 22 Apr 2017 08:22 AM PDT 'வாடிக்கையாளர்களுக்கு, மூன்று மாதத்திற் குள், 'செட் - டாப் பாக்ஸ்' வினியோகம் செய்ய வில்லை எனில், 'டிஜிட்டல்' உரிமம் ரத்து செய்யப்படும்' என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு, மத்திய அரசு, திடீர் நிபந்தனை விதித்துள்ளது. நாடு முழுவதும், கேபிள், 'டிவி' ஒளிபரப்பை, 'செட் - டாப் பாக்ஸ்' மூலம், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தர வேண்டும் என்பது, கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. எனினும், தமிழகத்தில், 'அனலாக்' எனப்படும், 'ஒயர்' மூலம் வழங்கப் படும் சேவையை, அரசு கேபிள், 'டிவி' வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், டிஜிட்டல் சேவைக்கு மாறு வதற்காக, மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ... |
| ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு...ஆரம்பம்!: பலப்பரீட்சைக்கு எதிர்க்கட்சிகள் தீவிரம் Posted: 22 Apr 2017 10:11 AM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், ஜூலையில் நிறைவடைவதை யொட்டி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான, 'கவுன்ட் டவுண்' துவங்கி உள்ளது. இந்த தேர்தலுக்கான வியூகங்களை, பிரதான கட்சிகள் அதிரடியாக துவக்கி உள்ளன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ம் தேதியுடன் முடிகிறது. நாட்டின் உயர்ந்த பொறுப்பாக கருதப்படும், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தொடர் பாக, பிரதான அரசியல் கட்சிகள், அரசியல் வியூகங்களை வகுக்க துவங்கிவிட்டன.இந்த விஷயத்தில், மத்தியில் ஆளும், பா.ஜ., வுக்கு கடும் நெருக்கடி அளிப்பதில், எதிர்க்கட்சி கள் ... |
| Posted: 22 Apr 2017 10:50 AM PDT புதுடில்லி:'இரட்டை இலை' சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், டில்லி குற்றப்பிரிவு போலீசில், நேற்று ஆஜரானார். அவரிடம், போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு, தினகரன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவலால் பரபரப்பு உருவாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பன்னீர் அணி - சசிகலா அணி என, இரண்டாக பிரிந்துள்ளது. இரு அணியினரும், கட்சியின் சின்னமான இரட்டை இலையை பெற ... |
| அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு நாளை துவக்கம் சசி குடும்பத்தை முழுமையாக நீக்க முதலில் ஆலோசனை Posted: 22 Apr 2017 10:54 AM PDT அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சு, அக்கட்சியின் தலைமை அலுவலகத் தில், நாளை நடைபெற உள்ளது. சசிகலா குடும்பத்தை, முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, முதலில் ஆலோசிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுஉள்ள பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டு உள்ளது.சி.பி.ஐ., விசாரணை எனவே, சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்கிவிட்டு, பன்னீர் அணியுடன் இணைந்து செயல்படவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.இதற்கு, எம்.எல்.ஏ.,க் களும் ஆதரவு ... |
| முதல்வர் பழனிசாமி சிந்திக்க வேண்டிய நேரமிது! Posted: 22 Apr 2017 10:59 AM PDT எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், இரண்டாக உடைந்த அ.தி.மு.க.,வை, ஜெயலலிதா ஒன்றிணைத்தார். அதேபோல, ஜெ., மறைவுக்கு பின், பிளவுபட்ட அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கும் வாய்ப்பு, முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை, அவர் சரியாக பயன்படுத்தி, கட்சி நலனை காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த, அ.தி.மு.க., வினரிடம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெ., - ஜா., அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. ஜானகி அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு இருந்தது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு ... |
| நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை: நிதிஷ்குமார் Posted: 22 Apr 2017 11:35 AM PDT
மும்பை:தனது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மராட்டிய கிளை நடத்திய பேரணியில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடு முழுதும் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நடவடிக்கையை நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் தேவைப்படும் என்றார் . சீனாவில் போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டபின்னரே அங்கு வேகமான வளர்ச்சி ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். போதை வஸ்துக்கள் தடை நாம் சீனாவுடன் போட்டியிட வேண்டுமென்றால் போதை வஸ்துக்களை தடை செய்ய வேண்டும்.பிகாரில் ... |
| அ.தி.மு.க., அதிருப்திகளுக்கு பா.ஜ., வலை Posted: 22 Apr 2017 12:50 PM PDT
கட்சி செயல்பாடுகளால் விரக்தி அடைந்திருக்கும், அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது. ஜெ., மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி, தி.மு.க., தன் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், பா.ஜ.,வும் வளர முயன்று வருகிறது. அதனால் தான், மூன்றாக பிரிந்துள்ள, அ.தி.மு.க.,வை, மேலும் பலவீனப்படுத்த, மத்திய அரசு முயற்சிப்பதாக, தமிழக கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. கடந்த, 2016 சட்டசபை தேர்தல் முடிந்ததும், பா.ஜ., தலைமை முக்கிய முடிவெடுத்தது. பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய ... |
| Posted: 22 Apr 2017 01:42 PM PDT புதுடில்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத், பா.ஜ.,வில் இணைய போவதாக வெளியான தகவலை, அக்கட்சி மறுத்து உள்ளது. உ.பி., உட்பட, நாட்டின் பல மாநிலங்களில், சமீபத்தில் நடந்த, சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, சமீபகாலமாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த, முன்னாள் வெளியுறவுஅமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணா, ஏற்கனவே, பா.ஜ.,வில் ஐக்கியமானார். இதுபோலவே, டில்லி மாநில முன்னாள், காங்., தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, ... |
| பெட்ரோல், டீசல் 'டோர் டெலிவரி' மத்திய அமைச்சர் நம்பிக்கை Posted: 22 Apr 2017 02:38 PM PDT
புதுடில்லி:பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள், 'ப்ரீ புக்கிங்' அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு, 'டோர் டெலிவரி' செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை, மாதம் இரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்வதால், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 23,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |