Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நேர்மையான அதிகாரிகளுக்கு துணை நிற்பதாக மோடி...நம்பிக்கை! துணிச்சலுடன் சிறப்பாக கடமை ஆற்றும்படி அறிவுரை

Posted: 21 Apr 2017 10:10 AM PDT

புதுடில்லி: ''மக்கள் நலனுக்காக செயல்படும், நேர்மையான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பிரச்னை கள், நெருக்கடிகள் ஏற்படுமோ என்று கவலைப் பட வேண்டாம். தைரியமாக செயல்படுங்கள்; உங்களுக்கு பக்கபலமாக நான் இருப்பேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை அளித்துள்ளார்.

சிவில் சர்வீசஸ் தினத்தையொட்டி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சுதந்திர மாகவும், எவ்வித பயமும், நெருக்கடியும் இல்லாமல் செயல்பட வேண்டும். விதிமுறை களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
பிரச்னை ...

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி? நிதிஷ் - சோனியா சந்திப்பால் பரபரப்பு

Posted: 21 Apr 2017 10:15 AM PDT

புதுடில்லி: ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், காங்., தலைவர் சோனியாவை, நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், ஜூலை, 25 உடன் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அதற்குள் நடத்தப்பட வேண்டும். எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர்.
பெரும்பான்மை ...

ஆதாரை கட்டாயம் ஆக்கியது ஏன்? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Posted: 21 Apr 2017 10:21 AM PDT

புதுடில்லி: 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டு வாங்குவதற்கு, ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கியது ஏன்?' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

பான் கார்டுகள் மூலம் மோசடி நடப்பதை தடுக்கும் வகையில், பான் கார்டு வாங்கு வதற்கும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கும், ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கி, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள் ளது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி, ஏ.கே. சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பான் கார்டுக்கு ...

முதல்வர், பொதுச்செயலர் பதவி: அ.தி.மு.க., அணிகள் மோதல்

Posted: 21 Apr 2017 10:29 AM PDT

முதல்வர் மற்றும் பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணி களுக்கு இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவ தற்கான பேச்சு நடத்த, குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், முதல் வர் மற்றும் பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், இரு அணிகளுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டுள் ளது.
இரு அணியினரும், அப்பதவிகளை பெறுவ தில், ஆர்வம் காட்டுகின்றனர். முதல்வர் பழனிசாமி, முதல்வராக தொடர விரும்புகிறார். அவருக்கு, கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவாக உள்ளனர். பொதுச்செயலர் பதவியை பெற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சுக்கு இரு தரப்பிலும்... குழு அமைப்பு!:முன்வைத்த நிபந்தனைகளில் மாற்றமில்லை என பன்னீர் உறுதி

Posted: 21 Apr 2017 10:40 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், 'பேச்சுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக யாரும் கருத்து சொல்லக் கூடாது' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இருப்பினும், முன் வைத்த நிபந்தனைகளில் பின்வாங்காமல், பேச்சு நடத்துவது என்பதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது அணியினரும் உறுதியாக உள்ளனர்.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதன் காரணமாக, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. அதை மீட்க, இரு ...

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திர பதிவுக்கு ஐகோர்ட் மீண்டும் தடை

Posted: 21 Apr 2017 10:43 AM PDT

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை களை புதிதாகவோ, மறுபதிவு செய்யவோ, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், 2016 செப்., 9ல், தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி, நில வணிகர்கள், உரிமையாளர்கள் என, பலரும் மனுக்கள் தாக் கல் செய்தனர்.இவ்வழக்கு,தற்காலிக தலைமை நீதிபதி எச்.ஜி.ரமேஷ் அடங்கிய, முதல் பெஞ்ச் முன்,கடந்த மாதம் ...

தடை போடும் தம்பிதுரை; செந்தில் பாலாஜி பாய்ச்சல்

Posted: 21 Apr 2017 10:47 AM PDT

கரூர்: ''கரூரில் மருத்துவக்கல்லுாரி வருவ தற்கு, லோக்சபா சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரும் தடை போடுகின்றனர்,'' என, முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி, எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: கரூர் அடுத்த, வாங்கல் குப்புச்சிபாளையத்தில், மருத்துவக் கல்லுாரி அமைக்க, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட அரசாணையை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை. கடந்த, 17ல் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, மருத்துவக் கல்லுாரி ...

கூடுதலாக 2 மாத அவகாசம்; சசிகலா, பன்னீருக்கு உத்தரவு

Posted: 21 Apr 2017 10:49 AM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை அளிப்பதற்கு, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பின ருக்கு, மேலும், இரண்டு மாத அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் உரிமை பிரச்னை இருந்து வருகிறது. தங்களுக்குத்தான் சின்னத்தை வழங்க வேண்டும் என்று கோரி, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.ஏற்கனவே இரண்டு முறை, இரு தரப்பினரையும் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரித்தது.அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும், வாதங் களை ...

வசூல் வேட்டைக்கு ஒத்துவராத பதிவுத்துறை ஐ.ஜி., மாற்றம்! சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்ததன் பின்னணி

Posted: 21 Apr 2017 10:53 AM PDT

கோவை:பதிவுத்துறையில் பணம் வாங்கிக் கொண்டு பணி மாறுதல் செய்வதற்கு ஒத்துழைக்காத ஐ.ஜி., செல்வராஜ், அதிரடியாக மாற்றப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தி லுள்ள ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கி யிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழக பதிவுத்துறையில், 50 மாவட்டப் பதி வாளர்கள் (நிர்வாகம்), 50 மாவட்டப் பதிவாளர் கள் (தணிக்கை) மற்றும் 572 சார் பதிவாளர் பணியிடங்கள் உள்ளன. முன்பெல்லாம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இவர் களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்; ஆண்டு தோறும் மே மாதத்தில், பொது மாறுதல் நடந்தா லும், ஒரே பணியிடத்தில், ...

பா.ஜ.வுக்கு ஓட்டளித்தால் டெங்கு, சிக்குன் குனியா பரிசாக கிடைக்கும்: கெஜ்ரிவால்

Posted: 21 Apr 2017 11:44 AM PDT

புதுடில்லி: பா.ஜ.வுக்கு ஓட்டளித்தால் டெங்கு, சிக்குன்குனியா , நோய்கள் தான் பரிசாக கிடைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.டில்லியில் நான்கு மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 272 வார்டுகளுக்கு வரும் 23-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ., காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு:
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியின் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த பா.ஜ. ...

கோஹினூர் வைரத்தை மீட்க முடியுமா? உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 21 Apr 2017 01:15 PM PDT

புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் தற்போது உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில், 'வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி உத்தரவிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

மீட்க கோரிக்கை:
உலகப் புகழ்பெற்ற, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கோஹினுார் வைரம், தற்போது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ளது. தென்மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட, 108 காரட் எடையுள்ள இந்த வைரம், இந்திய மன்னர்கள் பலருடைய கை மாறி, தற்போது லண்டனில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல காலமாக கோரிக்கைகள் ...

அனல் வெயில் முன்னெச்சரிக்கை; தலைமை செயலர் ஆலோசனை

Posted: 21 Apr 2017 02:29 PM PDT

சென்னை: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:
* ஏப்., 21 முதல், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம். உயர் கல்வி நிறுவனங்களில், தேர்வு எழுதும் மாணவர்கள், வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
* பொது மக்களுக்கு, மருத்துவ ...

திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு

Posted: 21 Apr 2017 03:12 PM PDT

கோல்கட்டா: திரிணாமுல் காங்., கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் தலைவர்:
கோல்கட்டா நேதாஜி உள்மைதானத்தில் திரிணாமுல் காங்., கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் திரிணாமுல் காங்., கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இப்பதவியில் 6 ஆண்டுகள் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டராக இருக்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™