Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் மோடி உறுதி! பார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம்

Posted: 17 Apr 2017 10:48 AM PDT

சூரத் : ''ஏழை மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், குறைந்த விலையிலான, உயிர் காக்கும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற வகையில், புதிய சட்டம் அமல்படுத்தவும் மத்திய அரசு தயார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநிலமான, குஜராத்துக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். சூரத்தில், தொண்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, அரசர்களாலோ, தலைவர்களாலோ உருவாக்கப்பட்டதல்ல. இது, ஒரு ஜனநாயக நாடு.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கோவில்கள், ...

பிரதமர், அமைச்சர்கள் ஹிந்தியில் உரையாற்ற ஜனாதிபதி ஒப்புதல்

Posted: 17 Apr 2017 10:51 AM PDT

புதுடில்லி: அதிகாரபூர்வ மொழிகளுக்காக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் குழுவின் பரிந்துரைகளை ஏற்ற, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஹிந்தியில் உரையாற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த, 1959 முதல், அதிகாரபூர்வ மொழிகளுக்கான பார்லிமென்ட் குழு, ஒன்பது அறிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது; ஹிந்தி மொழியை பிரபலப்படுத்த, மத்திய, மாநில அளவில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 2011ல், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தலைமையில், இக்குழு, 117 பரிந்துரைகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ...

தினகரனை சிக்க வைத்த சுகேஷ் சந்தர் யார்? சென்னை போலீசார் திடுக் தகவல்

Posted: 17 Apr 2017 10:56 AM PDT

'டில்லியில் கைதான, சுகேஷ் சந்தர், சென்னையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் எனக்கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டவன்' என, போலீசார் தெரிவித்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவன் சுகேஷ் சந்தர், 2௭; எம்.பி.ஏ., படித்துள்ளதாக கூறினாலும், பிளஸ் 2 படிப்பை பாதியில் கைவிட்டவன் என, டில்லி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
விலை உயர்ந்த கைக்கடிகாரம், வெளிநாட்டு கார்கள் மீது மோகம் கொண்டவன். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இவன், 'கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் உறவினர்' என, கூறி ...

சபரிமலையில் இளம் பெண்கள்: விசாரணைக்கு கேரளா உத்தரவு

Posted: 17 Apr 2017 11:07 AM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், இளம் பெண்கள் சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, இதுபற்றி விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுவரையுள்ள பெண்கள் செல்ல தடை உள்ளது; இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
சமூக வலைதளங்களில், புகைப்படங்கள்
இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு: பன்னீர் - தம்பிதுரை வரவேற்பு

Posted: 17 Apr 2017 11:26 AM PDT

அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டி உள்ளார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்திற்கு எதிராக, அமைச்சர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வருகின்றனர். விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.சென்னையில், நேற்று பகல், ...

தினகரனுக்கு திகார்? இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.60 கோடி லஞ்சம் தர முற்பட்டார்

Posted: 17 Apr 2017 11:34 AM PDT

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர, சசிகலாவின் அக்கா மகன், தினகரன் முயற்சித்தது அம்பலமாகி உள்ளது. இடைத்தரகராக செயல்பட்டவன், 1.30 கோடி ரூபாயுடன் டில்லியில் சிக்கியதை அடுத்து, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள டில்லி போலீசார், இன்று அவரிடம் விசாரணை நடத்தியதும், கைது செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, ஓட்டுக்களை பெற முற்பட்ட தினகரனின், அடுத்த தில்லாலங்கடி தற்போது அம்பலமாகி ...

'ஸ்டாலின் தேர்தல் செலவு 1 கோடி ரூபாய்க்கும் அதிகம்'

Posted: 17 Apr 2017 11:43 AM PDT

சென்னை : சென்னை, கொளத்துார் சட்டசபை தேர்தலின் போது, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், ஸ்டாலின் செலவு செய்துள்ளார்' என, அ.தி.மு.க., வேட்பாளர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வாதாடினார்.

கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, கொளத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் ஸ்டாலின், அ.தி.மு.க., சார்பில் துரைசாமி போட்டியிட்டனர். இதில், 2,734 ஓட்டுகள் அதிகம் பெற்று, ஸ்டாலின் வெற்றி பெற்றார்.இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைசாமி, தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி வேணுகோபால் முன், விசாரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் ...

முதலில் ஆட்சி... அடுத்து கட்சி... அதிமுக அணிகள் திடீர் ஆலோசனையில் முடிவு

Posted: 17 Apr 2017 11:52 AM PDT

சென்னை: கட்சியின் நலன் கருதி அ.தி.மு.க.,வில் இரண்டு அணிகளும் இணையலாம் என செய்திகள் வெளியான நிலையில், அதற்கு முன்னோட்டமாக நேற்று (ஏப்.,17) இரவு திடீரென அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

சசிகலாவையும் தினகரனையும் ஓரம்கட்டி விட்டு, மீண்டும் பன்னீர்செல்வத்தை முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வராகவும் தேர்வு செய்ய பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
தங்கமணி வீட்டில் ஆலோசனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் தீவிர ஆலோசனை நடக்கிறது. இதில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், ...

'நீட்' தேர்வு பயிற்சி: அரசு மெத்தனம்

Posted: 17 Apr 2017 12:12 PM PDT

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்காமல், மெத்தனமாக உள்ளன.

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதில், விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மத்திய சுகாதார துறை ஒப்புதல் தரவில்லை. இந்நிலையில், தமிழக ...

சசிகலா ராஜினாமா செய்யவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted: 17 Apr 2017 12:40 PM PDT

சென்னை: 'சசிகலா ராஜினாமா செய்வதாக வந்த தகவல் பொய்' என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் நேற்று இரவு(ஏப்.,17) திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்ததாவது: சசிகலா ராஜினாமா செய்வதாக வந்த தகவல் பொய். டி.டி.வி.தினகரனுடன் ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ...

அ.தி.மு.க.,வை விட்டு சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் : மதுசூதனன்

Posted: 17 Apr 2017 01:50 PM PDT

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என மதுசூதனன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று நடந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து அ.தி.மு.க, ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மதுசூதனன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில் : ‛‛ அதிமுக வை விட்டு சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும்'' என கூறியுள்ளார்.
இரு அணிகளும் சேர்ந்து செயல்படுவதற்காக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் மதுசூதனன் அளித்துள்ள இந்த பேட்டி தினகரன் மற்றும் சசிகலா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™