Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தேதியிடா தினக்குறிப்புகள்

Posted: 17 Apr 2017 01:58 PM PDT

தேதியிடா தினக்குறிப்புகள்.

சென்னை--யு எஸ் ....விஜயம் .
மனதை கவர்ந்த விஷயங்கள் பகிர ஆசை . தினம் தினம் ஏற்படுமா ,நிச்சயமாக இல்லை.
நடக்க நடக்க ...பார்ப்போம்.

ரமணியன்

டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!

Posted: 17 Apr 2017 12:40 PM PDT

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் கைதுசெய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையைத் தேர்தல் கமிஷன் இன்று நடத்த உள்ளது. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...

கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -

Posted: 17 Apr 2017 12:17 PM PDT

லக்னோ- உத்தரபிரதேசத்தில் கங்கை கரையோரம் உள்ள தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை உத்தரவிட்டு வருகிறார். மாட்டிறைச்சி கூடங்களுக்கு தடை, ஆன்டி ரோமியோ படை, முதல் வகுப்பு முதல் ஆங்கிலம் என அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார். தற்போது அடுத்த அதிரடியாக கான்பூரில் கங்கை நதிக்கரையில் உள்ள 400க்கும் அதிகமான ...

18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை!

Posted: 17 Apr 2017 12:07 PM PDT

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நாளை வழக்கத்தை விட அதிக அளவு வெயில் இருக்கும் என்றும், அனல் காற்றும் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாளை (18 ) வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தர்மபுரி, வேலூர், நாகை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். எனவே பொதுமக்கள் மதியம் ...

ஒரு நல்ல Whatsup பகிர்வு!

Posted: 17 Apr 2017 12:06 PM PDT

ஒரு நல்ல Whatsup பகிர்வு! நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே ! கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள். ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது. வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன. வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே ...

ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Posted: 17 Apr 2017 12:04 PM PDT

புத்தகம் வாசிப்பே சுவாசமாகட்டும்! காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் பிரம்பின்றி, கற்றுக் கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் மட்டுமே! உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர், ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும், ஏப்., 23ம் தேதி. மேலும், ஸ்பெயின் நாட்டு இலக்கியவாதியான, செர்வான்டிஸ் இறந்ததும், இந்நாளில் தான்! யுனெஸ்கோவின், 28வது மாநாடு, 1995-ல் பாரிசில் நடைபெற்ற போது, அறிவை விரிவு செய்யும் விதமாகவும், பல்வேறு நாட்டின் கலாசாரத்தை ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 17 Apr 2017 09:05 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர முதல்வர் அழைப்பு

Posted: 17 Apr 2017 08:15 AM PDT

அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். பரபரபான அரசியல் சூழலில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள் சென்னை வந்தவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் ...

ஹிந்தி எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?.. குடியரசு தலைவர் அளித்த ஒப்புதல் இதுதான்

Posted: 17 Apr 2017 08:01 AM PDT

நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள் அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த ஆறு ஆண்டுகளாக ஹிந்தி பிரபலப்படுத்த 117 பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை நிராகரித்த குடியரசுத் தலைவர், ஒரு சில பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பரிந்துரைகள் : * ஹிந்தி தெரிந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இனி ஹிந்தியில்தான் உரையாற்ற வேண்டும். குடியரசுத் தலைவரும் ஹிந்தியில் தான் உரையாற்ற வேண்டும். * ஏர் இந்தியா ...

சிங்கப்பூரில் முதியோருக்கு படகுப் பயிற்சி

Posted: 17 Apr 2017 07:52 AM PDT

- சிங்கப்பூரில் 55 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் நீர் விளையாட்டுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் கழகம் 'சில்வர் வேவ்' எனப்படும் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வோர் ஆண்டும் 1,000 மூத்த குடிமக்களை மிதிப் படகு செலுத் துதல் போன்ற நீர் விளையாட்டு களில் ஈடுபடுத்த கழகம் முற்படுகிறது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மக்கள் கழகத்தின் நீர் விளையாட்டுப் பிரிவு முதியோருக்கான மிதிப் படகு பயிற்சியை நடத்த வுள்ளது. - ---------------------------- தமிழ்முரசு, ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 17 Apr 2017 06:10 AM PDT

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 17 Apr 2017 06:05 AM PDT

50 வினாடிகளில் தத்கல் ரயில் டிக்கெட்

Posted: 17 Apr 2017 05:07 AM PDT

சென்னை: தத்கல் முறையில், ரயில் டிக்கெட் முன்பதிவை, 50 வினாடிகளில் முடிக்கும் வகையில் புதிய வசதியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணைய தளம் மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். எனினும், கூடுதல் கட்டணத்துடன் ஒரு நாள் முன்னதாக, தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு நடைமுறை அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி 7 ம் தேதி, 'ரயில் கனெக்ட் ஆப்' என்ற புதிய ஆப் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தியது. ஸ்மார்ட் ...

முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -

Posted: 17 Apr 2017 05:03 AM PDT

காட்டை காசாக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளியின் சதித் திட்டங்களும், அதை முறியடிக்க முயற்சிக்கும் பூர்வகுடிகளின் போராட்டமே 'கடம்பன்'. பல தலைமுறைகள் கடந்தும் காலம் காலமாக மலையை விட்டு கீழே வராமல் கடம்பவனத்தில் மக்கள் வாழ்கின்றனர். சிமெண்ட் தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை எடுப்பதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கடம்பவனம் உள்ளிட்ட சுற்றியுள்ள மலைப் பகுதிகளை அழிக்கப் பார்க்கிறது. இதற்கு வனத்துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி ...

மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?

Posted: 17 Apr 2017 04:55 AM PDT

- பஸ் டிரைவர் தொழிலுக்குப் புதுசு போலிருக்கு..! – எப்படி சொல்றே? – கண்டக்டர் ரைட் சொன்னதும் பஸ்ஸை ரைட்ல திருப்பறாரே…!! – கே.ஜெகதீசன் – ————————————– வாழ்வில் நிலை இல்லாதது எது? – பெட்ரோல் விலை,பிரபோ…!! – அஜீத் – ———————————- – மன்னர் சொற்ப சன்மானம் கொடுத்தும், புலவர் ஏதோ சொல்லிப் புலம்பறாரே…என்னவாம்? – பாடறத விட, மன்னர் ஜோக்ஸ் எழுதினாலே நிறைய பணம் கிடைக்குமேங்கிறார்…! – பர்வின் யூனூஸ் – ——————————- – நீங்க எழுதும் கிராமத்துக் கதையில் மண்வாசனையே இல்லையே…! – அங்கே ...

தண்ணீர் மறு சுழற்சி

Posted: 17 Apr 2017 04:53 AM PDT

'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள். நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் நீரும், தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கழிப்பறை நீர் மட்டும், 'செப்டிக் டேங்க்' வாயிலாக அகற்றப்பட்டது. மற்ற வகை நீர், நிலத்தில் ...

பொய் முகம்!

Posted: 17 Apr 2017 04:50 AM PDT

அம்மாவிற்கு, தண்ணீர் மற்றும் மாத்திரையை எடுத்து வைத்தவள், ''அம்மா... எழுந்து சாப்பிடு. மாத்திரை கொடுத்திட்டு, 'டயபர்' போட்டுட்டு போகணும்... ஏற்கனவே நேரம் ஆச்சு,'' பரபரத்தாள் கவிதா. தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்த அம்மா, ''ஏண்டி.... என்னைப் போட்டு இப்படி படுத்துறே... அவசரமா சாப்பிட முடியுமா...'' என்று முனங்க, ''நம்ம ரெண்டு பேரோட தலைவிதியும் இப்படி கஷ்டப்படணும்ன்னு இருக்கு... என்ன செய்ய...'' என்றாள் வெடுக்கென! ஒன்றும் பேசாமல், சாப்பிட ஆரம்பித்தாள், அம்மா. பர்சையும், மொபைல்போனையும் மறக்காமல் ...

உஷாராகுங்கள் கணவர்களே !

Posted: 17 Apr 2017 04:47 AM PDT

குழாயடியில் இரு பெண்களின் உரையாடலை கேளுங்கள்.............. ஏண்டி உன் கணவர் எந்நேரமும் whatsapp-ல இருக்கார்! அதை என்னானு கேட்கமாட்டியா! அந்த வேலையாவது அது ஒழுங்கா செய்யுதேனு விட்டுடேன்டி! அது whatsapp பாக்கிறது நமக்கும் வசதியாதான் இருக்குடி! அப்படி என்ன வசதிடி! அது whatsapp நோண்டும்போது... 1 ) நம்ம கிட்ட டிவி ரிமோட் பிடுங்கறது இல்ல! 2) சட்னியில உப்பு இல்லனா கூட கம்முனு சாப்பிட்டு போயிடும்! 3) துவைக்காத சட்டையை கூட கண்டுக்காமல் எடுத்து போட்டுக்கும்! 4) எது சொன்னாலும் ...

படித்ததில் பிடித்தது - II :) -- இது அல்லவோ திருவிழா?

Posted: 17 Apr 2017 04:34 AM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

Posted: 17 Apr 2017 04:31 AM PDT

'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக சசிகலா அணி எங்களை அணுகினால், அவர்களுடன் பேச நாங்கள் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் - ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க, 'புரட்சித்தலைவி அம்மா அணி' எனவும், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க, 'அம்மா அணி' எனவும் செயல்படுகின்றன. - ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் இரு அணிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ...

வருண காயத்ரி ஜபித்தது மழை வர வேண்டுவோம் வாருங்கள் !

Posted: 17 Apr 2017 03:51 AM PDT

வருண காயத்ரி மந்திரம் ஜபித்தது மழை வர வேண்டுவோம் வாருங்கள்  ! இந்த வெயிலின் கொடுமையிலிருந்து உலக உயிரினங்கள் தப்பிக்க உங்களால் முடிந்த சிறு உதவி இந்த மந்திரங்களை குறைந்த படசம் தினமும் காலை மாலை 9 முறை உச்சரியுங்கள் உணர்வோடு உங்கள் ஆத்ம சக்தியை வெளிப்படுத்தி அந்த விண்ணை முட்டுங்கள். மந்திரம்... இந்திர காயத்ரி.... ஓம் தேவராஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தந்நோஹ் இந்திர ப்ரசோதயாத் வருண காயத்ரி.... ஓம் ஜலபிம்பாய வித்மஹே நீல் புருஷாய தீமஹி தன்னோ வருணப் ப்ரசோதயாத் இதை எல்லோரும் ...

மனசு தான் காரணம்!

Posted: 17 Apr 2017 03:47 AM PDT

ஞாயிற்றுக்கிழமை - 'டிவி'யில் விவாதமேடை நிகழ்ச்சியொன்றை பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தேன். மேடை பயம் இன்றி, சிறுவர், சிறுமியர் எவ்வளவு அழகாக பேசுகின்றனர். நிச்சயமாக, இந்த, 'ஜெனரேஷன்' புத்திசாலித்தனமானது தான்.காலை டிபனாக, பூரி - உருளைக்கிழங்கு மசாலாவை தட்டில் எடுத்து வந்தாள், மல்லிகா.''மிருதுளா எங்கே...'' என்றேன். ''அவ, பாட்டி கூட கடைக்கு நோட்புக் வாங்க போயிருக்கா; அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டாங்க,'' என்றாள்.அப்போது, பக்கத்து வீட்டு மாமி, ''என்ன மல்லிகா இன்னும் ரெடியாகலயா?'' என்று கேட்டபடி ...

மாற்றுவ‌ழி க‌ல்வி- பகுதி 1

Posted: 17 Apr 2017 03:27 AM PDT

மாற்றுவ‌ழி க‌ல்வினா க‌ற்பித்தலில் புது தொழில்நுட்ப‌த்தை கையாள்வ‌து. இதென்ன  நீ புதுசா ஏதொ சொல்ல‌ போறேனு நெனச்சா அதான் ஏற்க‌ன‌வே   play store-ல apps, YouTube-ல videos,  smartboard,  இதெல்லாம் இருக்கேனு நீங்க‌ நினைக்க‌ற‌து புரியுது. மாற்றுவ‌ழி க‌ல்வி முறைக‌ளை ப‌ற்றி பார்க்கும் முன் சில‌ விவ‌ர‌ங்க‌ளை பார்க்கலாம். ASER(Annual Status Of Education Report )2016 : Upto Std 3: Reading Ability :42.5 percentage Arithmetic Ability :27.5 percentage Upto Std 8: Reading Ability : 73.1 percentage Arithmetic ...

ஐ.ஐ.டி., காரக்பூரில் வாஸ்து பாடம்

Posted: 17 Apr 2017 03:05 AM PDT

கோல்கட்டா: இந்தியாவின் மிக பழமையான ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், வாஸ்து ஒரு பாடமாக கற்றுதரப்பட உள்ளது. இந்தியாவில், வாஸ்து பார்த்து கட்டடங்களை அமைப்பது மிகவும் பழமையான நடைமுறை. தற்போது கட்டட கலை வல்லுனர்கள் மூலம் அப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி., காரக்பூர், மிகவும் பழமையான கல்வி நிறுவனம். இங்கு இளம் கலை ஆர்கிடெக் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வாஸ்து பாடம் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கற்றுதரப்பட உள்ளது. முதுகலை ...

ஜெ., மரணம் : சகாயம் விசாரணை மனு ஒத்திவைப்பு

Posted: 17 Apr 2017 03:03 AM PDT

சென்னை :
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி
சகாயம் தலைமையில் விசாரணைக்கு அனுமதிக்க
வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முன்னாள்
ஐஏஎஸ் அதிகாரி பாலமுருகன் மனு தாக்கல்
செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
தலைமையிலான பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டது.

-
தினமலர்

அமெரிக்க நிறுவனம் நடத்திய சமுதாய செயல்திட்ட போட்டியில் 2-வது முறையாக தங்கப் பதக்கம்: காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 17 Apr 2017 12:45 AM PDT

- பிரமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன், அவர்களுக்கு பரிசு வழங்கிய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். | உள்படம்: ஆசிரியர் ஆனந்த் - ------------------------------------------------- - அரசுப் பள்ளியில் பயின்றால் ஆங்கிலம் படிக்க வராது என்ற தவறான கருத்து நிலவி வரும் சூழலில், பிரமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனம் டெல்லியில் ...

"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்"

Posted: 16 Apr 2017 10:30 PM PDT

"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்" கிருஷ்ணா, கிருஷ்ணா! என்று பகவான் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் இதய நோய் குணமாவதோடு புண்ணியமும் கிடைக்கும். இதய நோய் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் போது சில மாத்திரகளை நாக்கை மடித்து வைத்துக் கொல்லச் செய்வர். ஏனெனில் நாக்கு மடிவதால் இதயம் பலப்படுகிறது. நோய் குறைகிறது. கீழே உள்ள மந்திரத்தை உச்சரிக்கும் போது நாக்கு மடிந்து இதயம் பலம் பெற்று குணமடையும். ''பஜே வ்ரஜைக மண்டனம் ஸமஸ்த பாப கண்டனம் ஸ்வபக்த சித்ரஞ்ஜனம் ஸவைத நந்தநந்தனம் ஸூபிச்ச குச்ச மஸ்தகம் ...

கஷ்டங்களும் அனுக்ரஹமே!....

Posted: 16 Apr 2017 10:08 PM PDT

கஷ்டங்களும் அனுக்ரஹமே!.... திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு ஊரில் இருந்த, ஶிவன் என்னும் 80 வயஸு பக்தர், ஸ்ரீமடத்துக்கு அடிக்கடி வந்து, பெரியவாளை தர்ஶனம் செய்வார். வீர ஶைவ வகுப்பை சேர்ந்தவர்.வெறும் வாய் வார்த்தைக்கு மட்டும் வீர ஶைவர் இல்லை! பெயருக்கேற்றபடி, எப்போதும் நெற்றியிலும், உடல் பூராவும் பட்டை பட்டையாக விபூதியோடு ஶிவப்பழமாக இருப்பார்! ஆசாரமும், அனுஷ்டானமும் அப்பழுக்கு சொல்ல முடியாதபடி இருக்கும். பெரியவாளிடம் உண்மையிலேயே மிகுந்த பக்தி என்பதால், பெரியவா சொன்னவைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ...

எகிப்தியருக்கு பிடித்த வாகனம்!

Posted: 16 Apr 2017 10:01 PM PDT

- ஒரு காலத்தில், சுமைகளை தூக்க, உதவி நம் வாழ்க்கையுடன் இணைந்திருந்த கழுதைகள், இன்று, காணாமல் போனது. ஆனால், எகிப்தியருக்கு, கழுதை மீது உள்ள பிரியம் இன்றளவும் குறையவில்லை. எகிப்து நாட்டு கிராமங்களில், வீட்டுக்கு ஒரு கழுதையை வளர்ந்து வருகின்றனர். இவை, இவர்களின் வாகனமாக பயன்படுகிறது. அங்குள்ளவை, நம் ஊர் கழுதைகள் போல, நோஞ்சானாக இல்லாமல், 'கொழு கொழு'வென்று உள்ளன. - ---------------------------- — ஜோல்னாபையன். படம் இணையம்

தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!

Posted: 16 Apr 2017 10:00 PM PDT

வாருங்கள் பறவையாகலாம்!

Posted: 16 Apr 2017 10:00 PM PDT

- * இலையுதிர் கால மரங்கள் என பயணங்களை உதிர்த்து நிற்கும் மனிதர்களாகி விட்டோம்! – * கோவில் திருவிழாவென்று கூடிக்குலவ போய் வந்த கொண்டாட்டப் பயணங்கள் காணவில்லை இன்று! – * கோடை விடுமுறையென்று தேடிப்போய் உறவை வளர்த்த தித்திக்கும் பயணங்களோ இன்று தென்படவில்லை! – * விருந்து விசேஷமென்று அன்போடு அழைப்பு விடுக்கும் மகிழ்வான பயணங்களோ அருகிவிட்டன! – * கனவு வந்ததென்று காண நாடிச் சென்ற கலங்க வைக்கும் பயணங்களும் மறைந்து விட்டன! – * எங்கேயும் எப்போதும் இறகுகளை உதிர்ப்பதை போல பயணங்களை ...

தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?

Posted: 16 Apr 2017 09:48 PM PDT

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன? காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து............ ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும். 1. சித்திரை மாஸம் சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை ...

'ரசமான விவாதம்’:மஹாபெரியவா !

Posted: 16 Apr 2017 09:46 PM PDT

'ரசமான விவாதம்' : மஹாபெரியவா ! அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? "இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?" அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்" என்றார்கள். மஹான் பெரிதாகச் சிரித்தார். "குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்" என்றார். இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம். அவர் ...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 16 Apr 2017 09:08 PM PDT

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்...பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

குள்ள மனிதராக ரஜினிகாந்த்!

Posted: 16 Apr 2017 06:09 PM PDT

- அபூர்வ சகோதரர்கள் படத்தில், குள்ள மனிதராக நடித்திருந்தார் கமல். அவரை தொடர்ந்து, தற்போது, ஷங்கர் இயக்கத்தில், 2.0 படத்தில் ஐந்து விதமான, 'கெட்டப்'புகளில் நடிக்கும் ரஜினி, இரண்டு, கெட்டப்பில் குள்ள மனிதராக நடித்திருக்கிறார். ஆனால், இதற்காக எந்த, 'ரிஸ்க்'கும் அவர் எடுக்கவில்லை. அவரை, நார்மலான தோற்றத்தில் நடிக்க வைத்து, அக்காட்சிகளை, 'அனிமேஷனில்' குள்ள மனிதராக மாற்றுகிறார் இயக்குனர் ஷங்கர். – ——————————– — சினிமா பொன்னையா

தவமும், திருநீறும்!

Posted: 16 Apr 2017 06:06 PM PDT

- விபூதி என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யம் என்று பொருள்; அதனால் தான் விபூதியை, திருநீறு என்கிறோம். – விபூதியின் பெருமை குறித்து, 'மந்திரமாவது நீறு…' என, பதிகமே பாடியிருக்கிறார், திருஞான சம்பந்தர். தமிழில் உள்ள சதக நூல்கள் பலவும், திருநீற்றின் மகிமையை விரிவாக பேசுகின்றன. – ஒருசமயம், சிவபெருமானிடம், பார்வதி தேவி, 'பெருமானே… விபூதி பூசுவதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்க காரணம் என்ன?' என்று கேட்க, தேவிக்கு, சிவபெருமான் கூறிய கதை இது: – பிருகு வம்சத்தில் பிறந்த வேதியர் ஒருவர், கோடை காலத்தில், பஞ்சாக்கினி ...

சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....

Posted: 16 Apr 2017 05:56 PM PDT

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ், பொதுக்கூட்டங்களில் பேசுகையில், தெலுங்கு மொழியில் சரியாக உச்சரிக்க முடியாமல் சொதப்பி வருகிறார். அவரது பேச்சு, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது. சமீபத்தில், அம்பேத்கரின், பிறந்த நாள் விழாவில், வாழ்த்து கூறிய நரலோகேஷ், 'இறந்த நாள் விழா' எனச் சொன்னது, சமூக வலைதளத்தில், 'வைரல்' ஆக பரவியது. தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமான, 'சைக்கிள்' என்ற வார்த்தையை, 'துாக்கில் தொங்கு' என பொருள் படும் வகையில், அவர் கூறியது, சமூக வலைதளத்தில் ...

சிரியாவில் 68 குழந்தைகளை பலி வாங்கிய கார் வெடிகுண்டு!

Posted: 16 Apr 2017 05:49 PM PDT

- சிரியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளை பயங்கரவாத குழுக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு கடும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் மீட்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதிகளான ஃபுவா மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில் இந்த பேருந்துகள் நிற்கவைக்கப்பட்டிருந்தன. அப்போது, வேகமாக வந்த கார் ...

இந்த வாரம் என்ன விசேஷம்? - ஆன்மிகம்

Posted: 16 Apr 2017 05:45 PM PDT

ஏப்ரல் 17, திங்கள். திருவரங்கம் நம்பெருமாள், திருவைகுண்டம் வைகுண்டபதி தலங்களில் உற்சவாரம்பம். சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை தங்கத் தொட்டியில் சூர்ணாபிஷேகம். திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மாலை 6 மணிக்கு ருத்ரத்ரிசதீ நாமாவளி அர்ச்சனை. ஏப்ரல் 18, செவ்வாய். சமயபுரம் மாரியம்மன், உதகை மாரியம்மன், கோவை தண்டுமாரியம்மன் போன்ற தலங்களில் ரதோற்சவம். ஏப்ரல் 19, புதன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை. ஏப்ரல் 20, வியாழன். செம்பொன்னார்கோயில் ...

விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்

Posted: 16 Apr 2017 05:41 PM PDT

சென்னை : கோடைகாலத்தில் குடிநீருக்காக சாலை மறியல், முற்றுகை, போராட்டம் நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று இடுப்பிலும், தலையிலும் சுமந்து வரத் தயார். இதற்கு எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் மதுக்கடை வரக் கூடாது. அதை எங்கள் உயிரை கொடுத்தாவது தடுப்போம் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்னைகளை தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™