Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பீம் - ஆதார் ஆப் செயல்பாடு: 10 அம்சங்கள்

Posted: 15 Apr 2017 02:18 AM PDT

ஆதார் எண்ணுடன் தொடர்புடைய, கைரேகை பதிவு செய்து பணம் செலுத்தும் 'பீம் - ஆதார் ஆப்' என்ற புதிய வசதியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.இந்த ஆப் தொடர்பான, 10 முக்கிய அம்சங்கள்:1. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீம் ராவ் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதி, நாட்டின் பண பரிமாற்ற நடைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.2. இந்த வசதி, பயோமெட்ரிக் முறையில் செயல்படுவது. அதாவது, கைரேகையை பதிவு செய்து பண பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். 3. இந்த ஆப் வசதியில், தமிழ், பெங்காலி, ...

தினகரனை எதிர்க்க மந்திரிகள் துணிந்தது ஏன்?

Posted: 15 Apr 2017 07:01 AM PDT

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அமைச்சர்கள், தினகரனுக்கு மக்கள் செல் வாக்கு இல்லாததை, நேரடியாக கண்டதால், அவரை கட்சியை விட்டு ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.ஜெ., உயிரோடு இருந்தவரை, சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்கி வைத்தி ருந்தார். அவர் மறைந்ததும், அனைவரும் அவரது வீட்டில் புகுந்து கொண்டனர். கட்சி உடைந்துவிடக் கூடாது; ஆட்சி பறிபோய் விடக்கூடாது என்பதற்காக, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், பன்னீர் பக்கம் செல்லாமல், சசிகலா அணியிலேயே நின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
மாவட்ட செயலர் மற்றும் கட்சி நிர்வாகிகள், இரட்டை ...

அரசுக்கு எதிராக மக்களை திரட்ட திட்டம்! தொகுதிகளில் களமிறங்குகிறது பன்னீர் அணி

Posted: 15 Apr 2017 07:02 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதை தொடர்ந்து, பன்னீர் அணி ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், தங்கள் தொகுதி மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றித் தரும்படி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர் அணி என, இரண்டாக பிளவுபட்டது. 123 எம்.எல்.ஏ.,க்கள், சசிகலா அணியில் உள்ளனர். மீதமுள்ள, எம்.எல்.ஏ.,க் களில், 10 பேர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்; ஒருவர் நடுநிலை வகித்து வருகிறார்.இரு அணியினரும், ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலில், தனித்து களமிறங்கினர்; தனித்தனி தேர்தல் அறிக்கை ...

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

Posted: 15 Apr 2017 11:36 AM PDT

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து மற்றும் குறைத்து வருகின்றன.

இந்நிலையில்இன்று(ஏப்-15) நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 1.39 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ 1.04 விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் ...

கிழக்கு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., வியூகம்....! ஒடிசாவில் துவங்கியது தேசிய செயற்குழு கூட்டம்

Posted: 15 Apr 2017 09:36 AM PDT

புவனேஸ்வர்: நாட்டின் மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ., கிழக்கு பகுதியில் கால் பதிக்கும் எண்ணத்துடன், அதன் தேசிய செயற்குழு கூட்டத்தை, ஒடிசாவில் நடத்துகிறது.

இரண்டு நாட்கள் நடக்கும், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், மாநில தலைநகர் புவனேஸ்வரில் நேற்று துவங்கியது. இதில், கட்சித் தலைவர் அமித் ஷா,பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குஜராத் மாநில வளர்ச்சியை முன்னிறுத்தி, ...

தினகரனின் நடவடிக்கைகளால் சசி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள்... வெறுப்பு:கட்சி குலைந்து போனதால் பகிரங்க போர்க்கொடி

Posted: 15 Apr 2017 10:02 AM PDT

தினகரனின் நடவடிக்கைகளால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் வெறுப்படைய துவங்கியுள்ளனர்.

ஜெ., அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற வில்லை என்பதால், கடுப்பான பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், அரசுக்கு எதிராக வெளிப்படையாக புகார் தெரிவித்துள் ளார். சசிகலா குடும்பத்தினரால், கட்சி சீர்குலைந்து வருவதால், கோபமடைந்துள்ள அவர், பகிரங்கமாக போர்க்கொடி துாக்கி உள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் தீட்டிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அந்த திட்டங்களிலும், சசி குடும்பத்தினரின் தலையீட்டால் மாற்றம் செய்யப்படுகிறது. அதனால், ...

'தோத்தாங்குளி' கட்சிகள் 'கப்சிப்': கமிஷனுக்கு தேவை ரூ.3,150 கோடி!

Posted: 15 Apr 2017 10:06 AM PDT

உ.பி., தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி, ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்ப தாக குரல் எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில், சிதம்பரம் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவருக்கு ஆதரவாக, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திரிணமுல் காங்., கட்சிகளும் கை கோர்த்துள்ளன. காங்., தலைவி சோனியா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ஓட்டு இயந்திரங்களுக்கு எதிராக, சமீபத்தில் மனு அளித்தனர்.
மேலும், பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கில், தங்களை இணைத்து கொள்ளும்படி, காங்., ஆம் ஆத்மி, திரிணமுல் ...

அமைச்சர்கள் மீது சாதாரண வழக்கு வருமான வரித்துறை கடும் அதிருப்தி

Posted: 15 Apr 2017 10:39 AM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை பறித்து செல்ல முயன்ற அமைச்சர்கள் மீது, சாதாரண பிரிவில், போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பது, வருமான வரித்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ச.ம.க., தலைவர் சரத்குமார் வீடுகளில், 7ம் தேதி, வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். தகவலறிந்து, அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், அங்கு விரைந்தனர்.

அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த, ...

ஐவர் குழு! அ.தி.மு.க.,வில் இரு அணிகளையும் இணைக்க அமைப்பு:தினகரனிடம் பேசி ஓரங்கட்டும் முயற்சியில் தீவிரம்

Posted: 15 Apr 2017 10:48 AM PDT

கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக் கும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தினகரனை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், சசிகலா அணி, ஆட்சியை தக்க வைத்தது; ஆனாலும், குழப்பம் தொடர்கிறது. கட்சி இரண்டாக உடைந்ததில், இரட்டை இலை சின்னமும் பறிபோயுள்ளது. எந்த நேரமும் ஆட்சிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையும் நிலவுகிறது. ஒரு வேளை ஆட்சி கலைந்து, தேர்தல் வந்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...

பன்னீருக்கு மோடி ஆலோசனை

Posted: 15 Apr 2017 10:57 AM PDT

புதுடில்லி: சமீபத்தில், அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டிகளும் பிரதமரைச் சந்தித்தன. சசி தரப்பிலிருந்து தம்பிதுரையும், பன்னீர் தரப்பிலிருந்து, மைத்ரேயனும், மோடியை டில்லியில் சந்தித்தனர்.அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து, தம்பிதுரை பேசியதாக கூறப்படுகிறது.

பன்னீர் தரப்பிலிருந்து பேசும் போது, அவர்களது கோஷ்டிக்கு மத்தியஅரசு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டது.'தேர்தல் ரத்து பெரியஅடியாயிற்றே' என்ற மோடி, 'பன்னீர், சென்னையிலேயே உட்கார்ந்திருந்தால் எந்த பலனும் கிடைக்காது; ஊர் ஊராக சென்று, மக்களைசந்திக்கச் சொல்லுங்கள்' ...

‛போராட்டங்களை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டும்' : டி.ஜி.பி., அறிவுரை

Posted: 15 Apr 2017 12:39 PM PDT

'தமிழகத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

டில்லியில் போராடி வரும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 'டாஸ்மாக்' மற்றும் நெடுவாசல், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்துக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு போல, மீண்டும் ஒரு போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, கத்திபாரா மேம்பாலத்தை, சங்கிலியால் பூட்டிய போராட்டத்தை தடுக்க, போலீசார் தவறிவிட்டனர். அதேபோல், திருப்பூர் மாவட்டம், ...

‛பாகிஸ்தானிற்கு நாமே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறோம்' மலாலா

Posted: 15 Apr 2017 01:32 PM PDT

புதுடில்லி: ‛‛பாகிஸ்தானிற்கு நாமே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறோம்'' என ஐ.நா.,வின் அமைதிக்கான தூதுவரான மலாலா கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாஷல் கான் என்ற கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து ஐ.நா.,வின் அமைதிக்கான தூதுவரான மலாலா வீடியோ பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது : ‛‛ மஷால் கானின் மரணம் குறித்து கேள்விபட்டேன். இச்சம்பவம் பாகிஸ்தானிற்கு அவமானமான ஒரு சம்பவமாக நான் கருதுகிறேன். மக்கள் மதத்தின் மதிப்பையும் கலாச்சாரத்தை காக்க வேண்டும். நம் ...

மூடு விழாவை நோக்கி நகர்கிறதா டாடாவின் 'நானோ' கார்?

Posted: 15 Apr 2017 02:31 PM PDT

புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு போராட்டங்களை வென்று, ஒரு வழியாக, 2009ல் தயாரித்து வெளியிட்ட, மலிவு விலை, 'நானோ' காரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த, 2016- - 17ம் நிதியாண்டில், நானோ கார் விற்பனை, 64 சதவீதம் சரிவடைந்து, 7,589 ஆக குறைந்துள்ளது. மார்ச் மாதம், வெறும், 174 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
கடந்த எட்டு ஆண்டுகளாக, நானோ கார் விற்பனையை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் பல்வேறு சலுகைகளையும், கவர்ச்சி கரமான பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.
இருந்த போதிலும், நானோ கார் விற்பனை உயராமல், ஆண்டுக்கு ஆண்டு குறைந்து ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™