Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரமணியின் கவிதைகள்

Posted: 15 Apr 2017 10:46 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

சந்திப்பு – கவிதை

Posted: 15 Apr 2017 10:38 AM PDT

- இன்று என் காதலனை அவனுடைய மனைவியுடன் 'காற்று வெளியிடை'யில் கண்டேன். – தவிர்க்க முற்பட்டு வேறுவழியின்றி கண்கள் சந்தித்தன. அவளிடம் கல்லூரித் தோழியென்றான். – என் கழுத்திலெதையோ தேடியவள் அவர் வரலையா என்றாள். அவர் உன்னுடன் வந்திருக்கிறார் அதனால் என்னுடன் வரவில்லையெனச் சொல்லியிருக்கலாம்தான். அவள் வயிறு சற்றே மேடிட்டிருந்தது. – —————————- – தேன்மொழி சதாசிவம் குங்குமம்

வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.

Posted: 15 Apr 2017 09:58 AM PDT

நம்மிடம் உள்ள வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு சுலபமாக மாற்ற இந்த  சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் கணிணியில் உள்ள வீடியோ பைலினை டிராக் அன்ட் டிராப் முறையிலோ டிஸ்க் தேர்வு செய்தோ வீடியோ பைலினை தேர்வு செய்யவும். இதில் உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்தால் உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமொ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து ...

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Posted: 15 Apr 2017 09:05 AM PDT

- புதுடில்லி: 'வழுக்கை தலைக்கு விடிவு, உடல் பருமனை உடனே குறைக்கலாம்' உள்ளிட்ட டூபாக்கூர் விளம்பரங்களில் தோன்றும் நடிகர், நடிகையர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இந்திய விளம்பரங்களுக்கான தர நிர்ணய கவுன்சில், 'செக்' வைத்துள்ளது. - இதுபோன்ற விளம்பரங்களில் தோன்றும் முன், கவுன்சில் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை பிரபலங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது - .விளம்பர துறையில், நேர்மையான, நியாயமான, ஒழுக்கமான போட்டி மற்றும் கொள்கைகள் இருப்பதை நிலை நிறுத்த, இந்திய ...

சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 15 Apr 2017 09:02 AM PDT

புதுடில்லி: சேவை வரியை நீக்க, ஓட்டல்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது: ஓட்டல்களில் சேவை வரி விதிப்பு கட்டாயமல்ல. ஓட்டல்களில், உணவு வழங்கும் பணி சிறப்பாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கருதினால், சேவை வரி வழங்கலாம் என்று தான், இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதனால் தான், ஓட்டல்களில், 'சேவை வரி விதிப்பு கட்டாயமல்ல' என, அறிவிக்க உத்தரவிடப்பட்டது. ஓட்டல்களில் சேவை வரி என்பதை, 'டிப்ஸ்' என்று ...

அப்படியா,சேதி ! – ஜென் கதை

Posted: 15 Apr 2017 08:55 AM PDT

ஹாக்கின் ஒரு ஜென் ஞானி. அவர் குடிசைக்கு அருகில் அழகிய ஜப்பானியப் பெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். திடீரென அவள் கர்ப்பமானாள். பெற்றோர் பதறினர். குழந்தைக்குத் தகப்பன் யார் என அவள் கூற மறுத்தாள். மற்றவர் வற்புறுத்தலால் ஹாக்கின் தான் காரணமென்று கூறி விட்டாள். பெற்றோர் ஜென் ஞானியிடம் சென்று கோபப்பட்டு கத்தினார்கள். அவர் அமைதியாக, ""அப்படியா,சேதி !" என்று மட்டுமே கூறினார். குழந்தை பிறந்ததும் ஹாக்கின் அதனை எடுத்து வளர்த்து வந்தார். இதனால் அவருக்குக் கெட்டபெயர் உண்டாயிற்று. ஆனால், ...

பார்ட்டி – பத்து செகண்ட் கதைகள்

Posted: 15 Apr 2017 08:43 AM PDT

வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…

Posted: 15 Apr 2017 08:42 AM PDT

- காலம் மாறிப்போச்சுன்னு எப்படி சொல்றீங்க? – முதல்ல பேண்ட் சட்டையைக் கிழிச்சுட்டு வந்தா ஒரு மாதிரியான ஆள்னு சொல்லுவாங்க! இப்ப அதை மாடர்னு சொல்றாங்க! – தீ.அசோகன் – ——————————– – மன்னர், ஏன் போர்க்களத்துக்கு செல்லவில்லை? – போனா, திரும்பி ஓடி வர வேண்டுமே! – ஏ.மூர்த்தி – ————————————– – தலைவர் வீட்டுல இருந்த கட்சி ஆபிஸை வேறு இடதுக்கு மாத்திட்டாராமே? – வீட்டுக்காரம்மாகிட்டே அவர் பம்முறதை கட்சித்தொண்டர்கள் பார்க்கிறது அவருக்கு வீக்கா இருக்காம்! – ச.ஸ்ரீரங்கம் – ————————————

அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?

Posted: 15 Apr 2017 08:41 AM PDT


-

இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறப்பு

Posted: 15 Apr 2017 07:23 AM PDT

கவுகாத்தி: அசாம் - அருணாச்சல்லை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலமானது, பிரம்மாபுத்திரா நதியின் மீது கட்டப்படுகிறது. அசாம் தலைநகர் கவுகாத்திக்கு 540 கி.மீ., தொலைவில் உள்ள சாடியா என்ற இடத்திலிருந்து அருணாச்சல் தலைநகர் இடாநகருக்கு 300 கி.மீ., தொலைவில் உள்ள டோலா என்ற இடம் வரை இந்த பாலம் கட்டப்படுகிறது. சுமார் 9 கி.மீ., தூரம் கட்டப்படும் இந்த பாலமானது, மும்பையல் உள்ள பந்தரா - வொர்லி இடையே கட்டப்பட்டுள்ள ...

கல்வெட்டுகளில் அமைச்சர் பெயருக்கு தடை

Posted: 15 Apr 2017 07:19 AM PDT

சண்டிகர்: பஞ்சாபில் விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், அடிக்கல் மற்றும் கல்வெட்டுகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை பொறிக்க தடை விதித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். அதிரடி: பஞ்சாபில் விஐபி கலாசாரத்தை ஒழிக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வராக அம்ரீந்தர் சிங் பதவியேற்றதும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த தடைவிதித்தார். அவர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்லவும் ...

ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

Posted: 15 Apr 2017 06:29 AM PDT

03. கடவுள் வாழ்த்து ஆன்மீகச் செய்திக் கவிதைகள் 0002. திருவையாற்று ஐங்கரன் (நேரிசை வெண்பா) (பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி) சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை. ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில் மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக் காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே ஊணற்றுப் போகும் உறவு. [ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு] 15/04/2017 ***** 0003. விழுப்புரம் ஆஞ்சநேயர் (கலிவிருத்தம்) (அனுமன்: விழுப்புரம் ...

ஏரியில் கின்னஸ்

Posted: 15 Apr 2017 06:17 AM PDT


-

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Posted: 15 Apr 2017 05:22 AM PDT

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு தினகரனுக்கு நெருக்கடி:ஒட்டுமொத்தமாய் அனைவரும் பன்னீர் அணிக்கு மாற முடிவு? 'உங்களால் தான், கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்' என, தினகரனுக்கு எதிராக, அமைச்சர்கள் பகிரங்கமாக குரல் எழுப்பியுள்ளனர். 'அதை சொல்ல நீ யார்' என, தினகரன் பாய்ந்ததால், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுப்படைந்துள்ளனர். விஜயபாஸ்கரின் ...

சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!

Posted: 15 Apr 2017 02:10 AM PDT


-

-

பாரம்பரியத்தை மீட்கும் பயணம்

Posted: 15 Apr 2017 01:58 AM PDT


-


தலையைச் சீவினால், தாளில் நடப்பான் - விடுகதைகள்

Posted: 15 Apr 2017 01:48 AM PDT


-

-
நன்றி- சுட்டி மயில்
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

பாட்டைக் கேட்டுட்டு பாம்பு செத்துப்போச்சு!

Posted: 15 Apr 2017 12:51 AM PDT

- அந்தக் கச்சேரிக்கு டிக்கெட் 500 ரூபாதானே, உனக்கு எப்படி ஆயிரம் ரூபாய் செலவானது? - கச்சேரி போரடிச்சுதுன்னு பாதியில் எழுந்து போனால், இன்னொரு ஐநூறு ரூபாய் கொடுத்தால்தான் கேட்டை திறப்பேன்னு காவலாளி சொல்லிட்டான்! - --------------------------------- - பாடகர் புன்னாகவராளி ராகம் பாடும்போது மேடைக்கு வர்ற மாதிரி ஒரு நல்ல பாம்பு செட் பண்ணி வச்சிருந்தோமே, ... - ஆமா, அதுக்கென்ன? - அது பாட்டைக் கேட்டுட்டு செத்துப்போச்சு! இப்போ பாம்பு கொடுத்தவன் வந்து கேட்டால் என்ன சார் சொல்றது...! - -------------------------------- - அந்தக் ...

உறவின் எல்லை - தகழி சிவசங்கரபிள்ளை நாவல் தமிழில் மின்னூல் வடிவில் .

Posted: 15 Apr 2017 12:27 AM PDT

தகழி சிவசங்கரபிள்ளை - உறவின் எல்லை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . தமிழில் : சிவன் ஆசிரியர் பற்றி : மலையாள நாவல் இலக்கியத்தில் குறிபிடத்தக்க இடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர் அதோடு ஞான பீடம் விருது பெற்றவர் ஆலப்புழை நகருக்கு அருகில் தகழி கிராமத்தில் 1912 ம் ஆண்டு பிறந்தவர் ,இவரின் முதல் சிறுகதை கமலம் , முதல் நாவல் தியாகத்தின் பிரதிபலம் .நான் எனது வலைதளத்தில் இவரது செம்மீன் நாவல் கொடுத்துள்ளேன் அது மத்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்த நாவல் ...

தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!

Posted: 15 Apr 2017 12:27 AM PDT

'தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது' என்று தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். - கடந்த வருடம், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததன் காரணமாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் அதிர்ச்சியிலும், ...

அழகிய தவறு - இயக்குனர் மகேந்திரன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 15 Apr 2017 12:24 AM PDT

மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு ...

ஜே.ஜே சில குறிப்புக்கள் - சுந்தர ராமசாமி

Posted: 15 Apr 2017 12:24 AM PDT

தமிழில் வந்த சிறந்த நாவல்களில் ஒன்று.

mediafire.com download/45gg51h1cvru6cw/Sundara+ramasamy-J.+J+_sila+kurippugal.pdf

இட்லி உதிரிப் பூ போல இருக்கும்...!!

Posted: 15 Apr 2017 12:21 AM PDT

சசி அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

Posted: 15 Apr 2017 12:06 AM PDT

தஞ்சாவூர்: சசிகலா 2வது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி. மகாதேவன்(47) மாரடைப்பால் காலமானார். தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. - -----------------------------

பிரேக்கிங் நியூஸ் (ஒரு பக்கக் கதை )

Posted: 14 Apr 2017 11:35 PM PDT

எல்லா பரபரப்பும் அடங்கியும் பிரேக்கிங் நியூஸ் ஃ போபியா ராஜியை விட்ட பாடில்லை... பள்ளியில் இருந்து திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும் மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். "சே! உருப்படியாக ஒன்றும் இல்லை." - "என்னம்மா இப்படி பண்றியேம்மா? பசிக்குது ஏதாவது குடும்மா" என்றாள் யமுனா . - "ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி சமயக்கட்டுல ஜூஸ் பிழிஞ்சு ...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 14 Apr 2017 08:33 PM PDT

அனைவருக்கும் வணக்கம் ,
எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள்.

நன்றி.

தங்கம் வாங்கும் யோகம் யாருக்கு?

Posted: 14 Apr 2017 08:09 PM PDT

ஒரு நாட்டின் தங்க இருப்பு அந்த நாட்டின் அரசு கஜானாவில் (ரிசர்வ் வங்கியில்) எவ்வளவு இருக்கிறது என்ற அளவீட்டின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டில், தங்கம் தங்க வேண்டுமானால், என்ன வகையான ஜாதக அமைப்பு இருக்கவேண்டுமென வாஸ்து ஜோதிட நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியைக் கேட்டோம். - - தங்கம் நேற்றைக்கும், இன்றைக்கும், ஏன்? என்றைக்கும் மாறாத மதிப்புமிக்க ஒரு பொருள் உண்டென்றால், அது தங்கமாகத்தான் இருந்து மணிபாரதிவருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ...

ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா

Posted: 14 Apr 2017 06:12 PM PDT

அமராவதி, ஆந்திராவில், 100 கோடி ரூபாய் செலவில், அம்பேத்கர் நினைவு பூங்கா கட்ட, முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று அடிக்கல் நாட்டினார். ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.அமராவதியில், 20 ஏக்கர் நிலத்தில், அம்பேத்கர் நினைவு பூங்கா அமைக்க, மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக, 97.64 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அம்பேத்கர் பிறந்த தினமான நேற்று நடந்தது. முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று, அடிக்கல்லை ...

என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?

Posted: 14 Apr 2017 06:02 PM PDT-
என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல.
வேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு
தலைவர் சவால் விடராரே?

கறுப்புப் பணம் கறுப்பு கலர்ல இருக்கும்னு நினைச்சிக்கிட்டு
இருக்காரு.!!
-
---------------------------------------

வரைதல் - கவிதை

Posted: 14 Apr 2017 04:54 PM PDT

- வரைந்துவைத்த மலையை நகர்த்த முடியவில்லை என்னால் இந்தப்பறவைகள் இன்னமும் உயரப்பறப்பதைத் தடுத்துக்கொண்டிருக்கிறது இன்னொரு படத்தில் மலைகளே இல்லாமல் வெறும் பறவைகளை மட்டுமே வரைந்துவைத்தேன் என்னிடம் அவை முறையிட்டன இங்கு ஒரு மலை இருந்திருந்தால் அதனினும் உயரப் பறந்திருப்போமல்லவா என – ————————- – சின்னப்பயல் குங்குமம்

முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!

Posted: 14 Apr 2017 04:40 PM PDT

- சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த ராஜ்கிரணின் காதலும் வாழ்வுமே 'ப.பாண்டி'. ராஜ்கிரண மகன் வீட்டில் பேரக் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கிறார். காதலுக்கு உதவுவது, காரைத் தள்ளிவிடுவது, கஞ்சா வியாபாரத்தைத் தடுப்பது என உதவி செய்யப் போய் அது எல்லாம் மகன் பிரசன்னாவுக்கு தொந்தரவாகவே அமைகிறது. அந்த எரிச்சலில் ராஜ்கிரணிடம் கோப முகம் காட்டுகிறார் பிரசன்னா. இனி யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறார் ராஜ்கிரண். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது, ராஜ்கிரண் என்ன ஆகிறார் ...

முதல் பார்வை: சிவலிங்கா- பயமில்லை!

Posted: 14 Apr 2017 04:36 PM PDT

- ரயில் பயணியின் மர்ம மரணம், அது தொடர்பான சிபிசிஐடி அதிகாரியின் புலன் விசாரணையே 'சிவலிங்கா'. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் சக்தி ஒரு ஆர்டர் எடுப்பதற்காக ரயிலில் வேலூருக்கு செல்கிறார். அப்போது மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். இது தற்கொலை அல்ல கொலைதான் என்று சக்தியின் காதலி போலீஸிடம் முறையிடுகிறார். இது குறித்து விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி அதிகாரி லாரன்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. லாரன்ஸ் அந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார், எதைக் கண்டுபிடிக்கிறார், அதனால் ...

தமிழ்மொழி விழாவில் முதல்முறையாக தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் அரங்கேற்றப்பட்டுள்ள நாடகம்

Posted: 14 Apr 2017 04:25 PM PDT

சிங்கப்பூர் ஏப்ரல் 10 - - 'செங்குழல் சீவிய பத்தினித் தீ' என்ற தலைப்பில் பட்டிமன்றம், நாடகம், இசைக்காணொளிப் போட்டி என்று மூன்று விதமான அங்கங்களோடு அரங்கேறியது 'பார்வை 2017'. பார்வையாளர்கள் சுற்று ஒன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு விறுவிறுப்பாக நடைபெற்றது இவ்வாண்டின் சிறப்பு. சங்கத் தமிழ்ப் புழக்கத்தையும் தமிழ் இலக்கியங்களையும் பற்றி தொழில்நுட்பத்தின் துணையோடு இளையர்களுக்காக இளையர்களே படைத்து வரும் பார்வை நிகழ்ச் சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய ...

'பெண் சம்பாதித்தாலும் ஜீவனாம்சம் தரணும்': டில்லி கோர்ட்

Posted: 14 Apr 2017 04:16 PM PDT

புதுடில்லி : 'சம்பாதிக்கும் திறன் இருப்பதால், விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கை தொடர்ந்துள்ள பெண், பட்டதாரி. அவர் நினைத்தால், தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியும் என, கணவன் கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஒரு பெண், வேலைக்கு ...

சிற்பி நந்தகோபால் காலமானார்

Posted: 14 Apr 2017 04:11 PM PDT

- எஸ். நந்தகோபால் கடந்த 1946-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். பின், கடந்த 1965-ம் ஆண்டு நந்தகோபால், சோழமண்டல கலைஞர்களில், உறுப்பினரானார். பின் 1966-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். 1970 மற்றும் 1978-ம் ஆண்டு டெல்லி-லலித் கலா அகாடமியின் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  1978-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற, நான்காவது சர்வதேச சிற்பபோட்டியில் தங்க பதக்கத்தை வென்றார். இதையடுத்து, கடந்த, 1980-ம் ஆண்டு பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி அருங்காட்சியகத்தில்  நடைபெற்ற, ...

8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்:சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு

Posted: 14 Apr 2017 04:06 PM PDT

புதுடில்லி: புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் விசாரணை நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் அதிகரிக்கும் பொருட்டு இந்தி மொழியை கட்டாயமாக்க பள்ளிகளுக்கு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™