Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


60 ஆயிரம் பேரிடம் கறுப்பு பண விசாரணை

Posted: 14 Apr 2017 09:29 AM PDT

புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, கறுப்புப் பணத்துக்கு எதிராக, வருமான வரித் துறை எடுத்து வரும் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம், நேற்று துவங்கியது. 60 ஆயிரம் பேர் கொண்ட பட்டியலுடன் விசாரணை வேகம் எடுத்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறை வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வங்கிகளில் அதிக அளவு 'டிபாசிட்' செய்தது, புதிய சொத்துக்கள் வாங்கி யது. பெரும் கடன்களை அடைத்தது என, பல்வேறு ...

லஞ்சத்துக்கு எதிரான போரில் பங்கேற்க மோடி...அழைப்பு! டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டுகோள்

Posted: 14 Apr 2017 09:30 AM PDT

நாக்பூர்: ''டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது ஊழல், லஞ்சத்துக்கு எதிரான ஒரு துாய்மை இயக்கம் மட்டுமல்ல, இவற்றுக்கு எதிரான ஒரு போர். டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதன் மூலம், ஒவ்வொரு இந்தியரும், இந்தப் போரில் பங்கேற்க முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய, அம்பேத்கரின், 126வது பிறந்த நாளையொட்டி, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அம்பேத்கரை கவுரவப் படுத்தும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்டுள்ள, 'பீம்' என்ற, ...

'தலைவர்கள் பிறந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறையில்லை'

Posted: 14 Apr 2017 09:39 AM PDT

லக்னோ: 'தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றுக்காக, பள்ளிகளுக்கு இனி விடுமுறை அளிக்கப்பட மாட்டாது' என, உ.பி., அரசு அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அம்பேத்கரின் 126வது பிறந்த தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது. நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் ஆகியவற்றுக் காக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது, சிறிதும் தேவையற்றது.ஏனெனில், பல குழந்தை களுக்கு, ...

வங்கி கணக்கு விவரம் 20 பைசாவுக்கு விற்பனை

Posted: 14 Apr 2017 09:40 AM PDT

புதுடில்லி: ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின், வங்கி கணக்கு விபரங்கள், தலா, 20 பைசாவுக்கு விற்கப்பட்டது, போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. டில்லி, கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த, 80 வயது மூதாட்டி ஒருவர், தன் கிரெடிட் கார்டு மூலம், 1.46 லட்சம் ரூபாயை யாரோ எடுத்துள் ளதாக, போலீசில் புகார் செய்தார்.இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில், டில்லியை சேர்ந்த புரன் குப்தா என்பவனை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவனிடம், 50 ...

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு தினகரனுக்கு நெருக்கடி:ஒட்டுமொத்தமாய் அனைவரும் பன்னீர் அணிக்கு மாற முடிவு?

Posted: 14 Apr 2017 10:28 AM PDT

'உங்களால் தான், கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்' என, தினகரனுக்கு எதிராக, அமைச்சர்கள் பகிரங்கமாக குரல் எழுப்பியுள்ளனர். 'அதை சொல்ல நீ யார்' என, தினகரன் பாய்ந்ததால், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுப்படைந்துள்ளனர்.

விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பறிக்கும்படியும், அவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் பன்னீர் அணிக்கு மாறவும் தயாராகி வருவதாக தெரிகிறது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ...

'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு தடை?

Posted: 14 Apr 2017 10:43 AM PDT

புதுடில்லி: 'வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அனுபவிக்கும், 'லெட்டர் பேடு' கட்சிகளின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.

பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., தேசியவாத காங்கிரஸ் ஆகிய, ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 58 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதை தவிர, அங்கீகாரம் பெறாத 1,780 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணை யத்துக்கு ...

வருமான வரி அதிகாரிகளுக்கு மிரட்டல்; அமைச்சர்கள் மீது போலீசார் வழக்கு

Posted: 14 Apr 2017 10:46 AM PDT

சென்னை: அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய, வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டிய, மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அத்துமீறல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அமைச்சர்கள் காமராஜ், ராதா கிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், வருமான வரித்துறை அதிகாரிகளிடம், அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுபற்றி, வருமான வரித்துறை ...

அணி மாறிய பன்னீர் ஆதரவாளர்கள் பதவிக்கு 'குறி':தினகரன் தரப்புக்கு புதிய நெருக்கடி

Posted: 14 Apr 2017 10:49 AM PDT

கோவை:'ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின், கட்சிப் பதவி வழங்கப்படும்' என்ற ஆசை வார்த்தையை நம்பி, தினகரன் அணிக்கு மாறிய கட்சியினர், பதவி கேட்டு நச்சரிக்க துவங்கி யுள்ளதால், தினகரன் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் - தினகரன் இடையே போட்டி வலுத்துள்ளது. கட்சியை பலப்படுத்தவும், பன்னீர் அணியை பலமிழக்க செய்யவும், தினகரன் தரப்பு பல வகைகளில் காய் நகர்த்தி வருகிறது. முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக, அதிருப்தி யில் இருந்த 'மாஜி' எம்.எல்.ஏ.,க்களுக்கு கட்சி யில் அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது. பின், பன்னீர் பக்கம் இருந்த ...

அ.தி.மு.க.,- பா.ஜ.,வுக்கு அழைப்பு இல்லை: ஸ்டாலின்

Posted: 14 Apr 2017 10:57 AM PDT

சென்னை:''அ.தி.மு.க., அணிகள், பா.ஜ., ஆகிய கட்சிகளை தவிர, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:
விவசாயிகளின் நல்வாழ்வை அடிப்படையாக வைத்து, அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், நாளை நடைபெற உள்ளது. கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது, அனைவருக் கும் அழைப்பு விடுத்திருந்தோம். இப்போது, விவசாயி களின் நிலை இன்னும் மோசமாகி உள்ளது.அ.தி.மு.க., - பா.ஜ., தவிர மீதமுள்ள எல்லா கட்சி களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் ...

வருமான வரி வளையத்தில் 'கூவத்தூர்' எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 14 Apr 2017 12:22 PM PDT

சட்டசபையில் பலப்பரீட்சை நடப்பதற்கு முன், கூவத்துார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், வருமான வரித்துறை கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளனர்.
முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்க, சசிகலா நடவடிக்கை எடுத்த போது, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. புதிய முதல்வராக, பழனிசாமி பொறுப்பேற்றார். சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, சசிகலா தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து, ...

ஒடிசாவில் தேசிய செயற்குழுக்கூட்டம்: மோடி வருகை

Posted: 14 Apr 2017 01:05 PM PDT

புவனேஸ்வரம்: ஒடிசாவில் நடைபெறவுள்ள பா.ஜ., தேசிய செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்கு வருகை தரவுள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் சாதனை வெற்றி பெற்றது பா.ஜ. இதில் மிகவும் எதிர்பார்த்த உபி.,யில் சாதனை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ., காலூன்ற முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலத்தை குறி வைக்க திட்டமிட்டுள்ளது.அதற்கு முன்னோட்டமாக பா.ஜ. தேசிய செயற்குழுக்கூட்டம் ஒடிசாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி ...

குல்பூஷணை மீட்க நடவடிக்கை; ராஜ்நாத்சிங் உறுதி

Posted: 14 Apr 2017 02:15 PM PDT

புதுடில்லி : ''பாக்., ராணுவ கோர்ட் துாக்கு தண்டனை விதித்த, இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் யாதவை காப்பாற்ற, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்க தயங்காது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் யாதவ், பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்காக, அந்த நாட்டில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு, அந்நாட்டு ராணுவ கோர்ட் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்ற, அந்நாட்டு ராணுவ தளபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™