Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கோரிக்கையை மாநிலத்தில் கேட்டால் சரியாக இருக்குமா? விவசாயிகள் கேள்வி!

Posted: 14 Apr 2017 10:12 AM PDT

டெல்லியில் போராடும் விவாசாயிகள் வைத்திருக்கும் முக்கியமான கோரிக்கைகள் என்ன என்பதையே மறைத்து, வெறுமனே கடன் தள்ளுபடி கேட்கும் பிச்சைக்காரர்களா சித்தரிக்க மத்திய அரசும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சரி, விவசாயிகளின் கோரிக்கைகள்தான் என்ன? 1. விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்… 2. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைக்க மறுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ...

நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!

Posted: 14 Apr 2017 10:11 AM PDT

1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, வீசப்பட்டுள்ள மிகப்பெரிய குண்டு இதுவாகும். ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான 'நங்கர்ஹார்' பகுதியில் மிகப்பெரிய வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளனர். 'குண்டுகளின் அன்னை ' என விவரிக்கப்படும் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள 'MOAB' எனப்படும் சக்திவாய்ந்த குண்டை இரவு சுமார் 7.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் மேல் வீசப்பட்டுள்ளது. ஈராக் போரின் போது உருவாக்கப்பட்ட ...

கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்!

Posted: 14 Apr 2017 10:11 AM PDT

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுபோல் எப்போதும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியதில்லை. சோதனைகள் தொடர்ந்து மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்படும் நிலையில், தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் தொடங்கி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வரை ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து ஏராளமான நம்பத்தகுந்த ஆதாரங்களை திரட்டியுள்ளது. இது ஆளுங்கட்சியை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் ...

தமிழ் நேசன் அவர்களுக்கு வேண்டுகோள்

Posted: 14 Apr 2017 08:14 AM PDT

தங்கள் தளத்தினை இப்பொழுது வரை பார்க்க முடியவில்லை. மீண்டும் மீதும் தங்களுக்கு சிரமங்கள் கொடுக்காமலிருக்க, என்று பார்க்க முடியுமோ அன்று வரைக் காத்திருக்கிறேன்.

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 14 Apr 2017 08:12 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

அடுத்தவர் தண்ணீரை எப்பாடு பட்டாவது தன்னுடையதாக்கிட, ஆயிரம் வழிகளில் முயலும் இந்தக்காலத்தில், இப்படியும் ஒருவரா..??

Posted: 14 Apr 2017 04:47 AM PDT

தேடி சோறு தின்னும் போதே கூட்டாஞ்சோறின் பெருமையை சொல்லி வளர்த்த பூமி இது. இந்த கணத்தில் மட்டும் விட்டுக் கொடுத்து விடுவார்களா..? அடுத்தவர் தண்ணீரை எப்பாடு பட்டாவது தன்னுடையதாக்கிட ஆயிரம் வழிகளில் முயலும் இந்தக்காலத்தில் மகேஸ்வரன், பனங்குடி கிராமம், திருநெல்வேலி சேர்ந்தவர். தன்னுடைய கிணற்று நீரை உடன் இருக்கும் விவசாயிகளுடன் 10-15 நாளுக்கு ஒரு முறை பாசனம் எனப் பகிர எல்லோருக்கும் ஒரு வெள்ளாமை உருப்படியாகியிருக்கிறது. கொத்தமல்லி சம்பா, சீரகசம்பா, காட்டுயானம் என கலக்கியிருக்கிறார்கள். தம்முடைய ...

தங்கமகன்” மாரியப்பனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது..!! ஜனாதிபதி வழங்கினார்.

Posted: 14 Apr 2017 04:34 AM PDT

தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் இந்திய ஜனாதிபதி. டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை படைக்கிறவர்களுக்கு 'பத்ம' விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. ...

சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!

Posted: 14 Apr 2017 04:22 AM PDT

வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 4 முறை அணுகுண்டு சோதனையிலும் கடந்த ஆண்டு ஜனவரி 6–ந் தேதி அணுகுண்டை விட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையிலும் அந்த நாடு ஈடுபட்டு, உலக அரங்கை அதிர வைத்தது. கடந்த ...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 13 Apr 2017 11:07 PM PDT

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்...



பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்!

Posted: 13 Apr 2017 09:31 PM PDT

தகிக்கும் கோடை -ஷாலினி நியூட்டன் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வெயில் வாட்டி வதைக்க என்ன காரணம்? அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் அதிகரிக்குமா? வானிலை ஆய்வாளர் ரமணனிடம் கேட்டோம். ''2003ம் ஆண்டு தமிழகத்துலயே அதிகமா 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் சென்னைல பதிவாகியிருக்கு. அதற்குப் பிறகு இப்ப வரைக்கும் 45 டிகிரி வெப்பநிலை பதிவாகலை. மக்கள் தொகை பெருக்கம். நகரமயமாதல், மரங்கள் அழித்து கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே போவது... மாதிரி பல காரணங்கள் இருக்கிறதால இனி வெப்பம் ...

டி-20 போட்டியில் டோனி மிகச்சிறந்த வீரர் இல்லை: சவுரவ் கங்குலி விமர்சனம்

Posted: 13 Apr 2017 06:29 PM PDT

மும்பை - டி-20 போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மிகச்சிறந்த வீரர் இல்லை என்று சவுரவ் கங்குலி க டுமையாக விமர்சித்துள்ளார். ஒரு அரைசதம் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இது குறித்து கூறும் போது, " டோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த சாம்பியன் வீரர் என்பதில் ஐயம் இல்லை. - ஆனால், டி-20 கிரிக்கெட் போட்டியிலும் அவர் மிகச்சிறந்த வீரரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. டோனி மிகச்சிறந்த டி-20 கிரிக்கெட் வீரர் என்று என்னால் உறுதியாக ...

இயேசு நாதர் உயிர்த் தியாகம் செய்த புனித வெள்ளி

Posted: 13 Apr 2017 06:25 PM PDT

-- இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து.வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர்.யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் ...

பெண் குழந்தை தாலாட்டு - புரட்சி கவிஞர் பாரதிதாசன்

Posted: 13 Apr 2017 06:13 PM PDT

- ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே! காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே! - வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே! நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத் தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே! - வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்! அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே! - மின்னல் ஒளியே, விலைமதியா ...

மறைந்த கிராமம் – கவிதை

Posted: 13 Apr 2017 06:01 PM PDT


நீச்சல் கற்ற
படித்துறை குளம்
குதித்து மூழ்கி
விளையாடிய கிணறு
படுத்து இளைப்பாற
நிழல் தந்த மரங்கள்
உயிரோடு கலந்திருந்த
இடங்களில் இப்போது
முளைத்திருந்தன

சிறியதுமாய் பெரியதுமாய்
கான்கிரீட் வீடுகள்
மிச்சமிருந்தது
என் கிராமத்து
பெயர் மட்டுமே!

———————-
எஸ்.சரஸ்வதி
மங்கையர் மலர்

‘ஐ.என்.எஸ் சென்னை’ போர்க்கப்பல் நாளை சென்னைக்கு வருகிறது

Posted: 13 Apr 2017 05:32 PM PDT

- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல் நாளை சென்னைக்கு வருகிறது. இதை முன்னிட்டு முறைப்படியான வரவேற்புகள் காலை 9 மணிக்கு சென்னை துறைமுகத்தில் நடக்கிறது. இந்த கப்பலைப் பார்க்க பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை சென்னை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக மின் அலங்காரத்துடன் நிறுத்தி வைக்கப்படுகிறது. – 2016-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி இந்திய கடற்படையில் இந்த கப்பல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மும்பையில் ...

நல்ல நல்ல நிலம் பார்த்து …

Posted: 13 Apr 2017 05:29 PM PDT

படம் - விவசாயி - நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும் (நல்ல…) பள்ளி என்ற நிலங்களிலே கல்விதனை விதைக்கணும் பிள்ளைகளை சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும் (நல்ல…) கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதைத்து கற்பு நிலை தவறாது காதல் பயிர் வளர்த்து (2) அன்னை தந்தை ஆனவர்க்கு தம் பொறுப்பை விதைத்து பின் வரும் சந்ததியை பேணும் முறை வளர்த்து இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும் இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் ...

கேட்டதில் பிடித்த வரிகள்

Posted: 13 Apr 2017 05:28 PM PDT

– இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும் இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும் – உடுமலை நாராயணகவி – ————————— – அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள் – வாலி – ———————————- – மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று எல்லா உயிர்க்கும் நன்மையாய் இரு – -வைரமுத்து – ————————————-

மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய்

Posted: 13 Apr 2017 05:27 PM PDT

படம்: எந்திரன் பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடல்: வைரமுத்து – ————————— புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி அழியாத உடலோடு வலியாத உயிரோடு ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று எல்லா உயிருக்கும் ...

வண்ணத்துப் பூச்சிகளே… வருக… வருக..

Posted: 13 Apr 2017 05:26 PM PDT

- ஸ்ரீரங்கத்திலிருந்து மேலூர் பகுதியைக் கடந்து சென்றால் ஜில்லெனக் காற்று வீசும் காவிரி கரையோரமாகக் காணக் கிடைக்கிறது இந்தப் பூங்கா. இந்தப் பக்கம் காவிரிக்கரை, அந்தப் பக்கம் கொள்ளிடக்கரை. ஸ்ரீரங்கம் – மேலூருக்கு மேலே, முக்கொம்பு மேலணைக்குக் கீழே அணைக்கரை என்னுமிடத்தில், மேலணைக்கட்டு காப்புக்காட்டு பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வண்ணத்துப் பூச்சிப் பூங்கா. ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி, பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தியேழு ஏக்கர் பரப்பளவில், சுமார் ஓன்பது ...

பயணிகளின் கனிவான கவனத்துக்கு…

Posted: 13 Apr 2017 05:23 PM PDT

குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறீர்கள். அப்படிச் செல்வதற்கு முன்நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் சில உண்டு. நீங்கள் திரும்பி வருவதற்கு முன் உங்கள் வீட்டில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் இருக்க இவை உதவும். வீட்டு வாசற்படியில் பிரிக்கப்படாத செய்தித் தாள்கள் இருந்தால், வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அதுவே திருடர்களுக்கு ஒரு க்ளூதான். வெளியூர் செல்வதற்கு முன் திரும்பிவரும் நாள்வரை நியூஸ் பேப்பரைப் போட வேண்டும் என்பதை கடைக்காரரிடம் மறக்காமல் சொல்லிவிடுங்கள். வீட்டு ...

டூர் போறீங்களா? இதெல்லாம் மறக்காதீங்க

Posted: 13 Apr 2017 05:22 PM PDT

பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு செக் லிஸ்ட் (அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப இந்தப் பட்டியல் மாறுதல் செய்து கொள்ளலாம்) – * பயணச் சீட்டு – செல்வதற்கானது * பயணச்சீட்டு – திரும்பி வருவதற்கானது * பயணத்தின்போது கேட்டால் காட்டுவதற்கான அடையாள சான்று (ஓட்டுனர் உரிமம், பான் கார்டு என்பது போல்) * கடன் அட்டை மற்றும் ஏ.டி.எம். அட்டை. * செயின் லாக் (ரயில் பயணத்தின்போது சூட்கேஸ்களுக்கான பாதுகாப்பு) * பேனா (எழுதுவதற்கும், ரயில் மின் விசிறி சுற்றாத போது சுற்ற வைப்பதற்கும்) * பயணத் ...

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

Posted: 13 Apr 2017 05:21 PM PDT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. - இதற்குப் பதிலடி தரும்விதமாக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நிரூபிக்க மே மாதம் முதல் வாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். - இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் ஆணையம் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டை ...

அரசு வேலைக்காக 81 லட்சம் பேர் காத்திருப்பு

Posted: 13 Apr 2017 04:29 PM PDT

சென்னை:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து
காத்திருப்போரின் எண்ணிக்கை 81 லட்சமாக உள்ளது.

அரசு வேலைக்காக காத்திருப்போரின் பட்டியலை
தமிழக அரசு வெளியிட்டது. அரசு வெளியிட்ட
விவரத்தின் படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ப
திவு செய்துவிட்டு பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை
81 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்

பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்

Posted: 13 Apr 2017 04:24 PM PDT

டெல்லி: பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டாம் என்றும் தாய் அல்லது தந்தை பெயரை பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது குறித்து அவர்களே முடிவெடுக்கலாம்' என்றும் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்காக அவர் தலைமையிலான அரசு தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகையில், 'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. - ----------------------------- தினகரன்

விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Posted: 13 Apr 2017 04:22 PM PDT

புதுடெல்லி : விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்க, தமிழக அரசு சுண்டுவிரலைக் கூட அசைக்காமல் அலட்சியப் போக்குடன் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'இனியும் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது; மாநில அரசு இதுவரை என்ன தான் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மே 2 ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் ேகார்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப்போனதால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™