Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்ஸ்டாகிராமில் மோடி முன்னிலை

Posted: 13 Apr 2017 08:07 AM PDT

புதுடில்லி: புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் செயலியான, இன்ஸ்டாகிராமில், உலக அளவில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய நபர்கள் ,அரசியல் பிரமுகர்கள், 'இன்ஸ்டாகிராம்' செயலியில் கணக்கு துவங்கி, தங்களைப் பற்றிய புகைப்படங்களை பதிவேற்றம்செய்து, அதை பகிர்கின்றனர். இவர்களின் கணக்குகளை, ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்; அவற்றில், 'லைக், கமென்ட்' பதிவுசெய்கின்றனர். தலைவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடர்வோர் எண்ணிக்கை மற்றும் அவர்கள் ...

தில்லுமுல்லு செய்யுங்க பார்க்கலாம்!: தேர்தல் கமிஷன் சவால்

Posted: 13 Apr 2017 07:22 AM PDT

புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத் தில் தில்லுமுல்லு செய்து காட்ட, யார் வேண்டு மானாலும் வரலாம்' என, தேர்தல் கமிஷன் சவால் விடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கில் பா.ஜ., வெற்றி பெற்றது; காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, 'ஓட்டுப்பதிவுக்கு, மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த கூடாது; முன்பு போல், ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்' என காங்கிரஸ் கூறி வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை யில், 16 கட்சிகளின் பிரதிநிதிகள், தலைமை தேர்தல் கமிஷனரை, சந்தித்து, மனு ஒன்றையும் கொடுத்தனர்.இந்த ...

வரி செலுத்துவோர் விபரங்கள் கசிவதை தடுக்க... அதிரடி!: புதிய சாப்ட்வேர் தயாரிப்பில் வரித்துறை தீவிரம்

Posted: 13 Apr 2017 07:38 AM PDT

புதுடில்லி: வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள், எவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டி ருந்தாலும், அதை, சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, களவாடப்படுவது, தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க, புதிய சாப்ட்வேர் ஒன்றை வருமான வரித்துறை உருவாக்கி வருகிறது.

வங்கியில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் கணக்கு தொடர்பான விபரங்களை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதையும் மீறி, பலரது வங்கி கணக்கு களில் மோசடி நடப்பது தொடர்ந்து நடக்கிறது. மோசடி செய்தது யார் என, கண்டுபிடிக்க கூட முடிவதில்லை. தனி நபர்கள் என்றில்லாமல் இது போன்ற மோசடிகளால் வங்கிகளே ...

வளர்ச்சியில் ஆண்களுக்கு பெண்கள் முன்னோடி : பிரதமர் மோடி

Posted: 13 Apr 2017 08:23 AM PDT

புதுடில்லி : வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான சூழல்களை பெண்களுக்கு அமைத்து கொடுத்தால், வளர்ச்சி வீதத்தில், பெண்கள், ஆண்களை விட இருபடிகள் முன்னர் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சார்பாக டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் வழியாக, பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது, வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான சூழல்களை பெண்களுக்கு அமைத்துக்கொடுத்தால், வளர்ச்சி வீதத்தில், பெண்கள், ஆண்களை விட இருபடிகள் முன்னர் உள்ளனர். தொழில்வளர்ச்சியில், பெண்களின் ...

10 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பா.ஜ., அமோகம்!:ஆளும் டில்லியில் 'டிபாசிட்' இழந்தது ஆம் ஆத்மி

Posted: 13 Apr 2017 09:18 AM PDT

புதுடில்லி: தமிழகத்தின், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எட்டு மாநிலங்களில் உள்ள, 10 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், பா.ஜ., ஐந்து தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் உள்ள இரண்டு தொகுதிகள் உட்பட, மூன்றில் வென்று ஆறுதல் பெற்றது. டில்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள, ஆம் ஆத்மி, ரஜோரி கார்டன் தொகுதி யில் 'டிபாசிட்' இழந்தது.

டில்லி, இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில், காலியாக இருந்த, 10 ...

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Posted: 13 Apr 2017 09:41 AM PDT

புதுடில்லி: 'தமிழக விவசாயிகளின் பிரச்னை யில் எந்த நடவடிக்கையையும் எடுக்காததுடன், அதற்கான முயற்சிகள் கூட செய்யாமல், தமிழக அரசு மவுனமாக இருப்பது வேதனை அளிக்கிறது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

'வறட்சி, தண்ணீர் இல்லாத தால் பயிர்களை காப்பாற்ற முடியாமல், தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடன்களை ரத்து செய்யக் கோரியும், தமிழக விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்' என, தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில்,சுப்ரீம் ...

'பெரா' வழக்கு: தினகரனுக்கு உத்தரவு

Posted: 13 Apr 2017 10:36 AM PDT

சென்னை: 'அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், தினகரன் நேரில் ஆஜராக வேண்டும்' என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், ஒயின் தயாரிப்பு நிறுவனம், ஓட்டல்கள் துவங்க, சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்தது தொடர்பாக, தினகரன் மீது, அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப் பட்டது.அதேபோல், ஜெஜெ, 'டிவி'க்கு உபகரணங்கள் வாங்கிய வகையில், சசிகலா மீதும், அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது. சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு கள் நடந்து வருகின்றன. விசாரணை, தற்போது வேகம் எடுக்க துவங்கி உள்ளது.தினகரன் ...

ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்; அவகாசம் கோருகிறது ஆணையம்

Posted: 13 Apr 2017 10:43 AM PDT

சென்னை:உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை களை, ஜூலைக்குள் முடிக்க அவகாசம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

'உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில், இரண்டு கட்டமாக நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும். ஆனால், தேர்தல் ...

முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையே விஜயபாஸ்கர் விவகாரத்தில் வெடித்தது மோதல்

Posted: 13 Apr 2017 10:52 AM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில், முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

'அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறையில் எடுக்க வேண்டிய முடிவுகளை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்' என, தினகரன் சமீபத்தில் அறிவித்தார். இதனால், முதல்வருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டது.பெயரளவுக்கு முதல்வராக இருப்பதை, பழனிசாமி விரும்பவில்லை. தினமும் தலைமை செயலகம் வந்தாலும், எந்தப் பணியையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இடைத்தேர்தலில், தினகரன் தோற்றுவிட்டால், அவரை கட்சியை விட்டு ...

இன்று முதல்3 நாட்களுக்கு வெயில்... தகிக்கும்!: வானிலை மையம் வெட்ட வெளிச்சம்

Posted: 13 Apr 2017 11:07 AM PDT

வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இயல்பை விட, மூன்று டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும். சென்னை உள்ளிட்ட பல நகரங்கள், அக்னியின் உக்கிரத் தால் தகிக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மார்ச், 1ல் கோடை காலம் துவங்கியது. படிப்பாக அதிகரித்து, ஏப்., 1 முதல், வெயிலின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலுார், நாகை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், பகலில் கடும் வெயிலும், இரவில் கடல் காற்றும் வீசுகிறது.இந்நிலையில், வங்க ...

சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள்...ஆலோசனை!

Posted: 13 Apr 2017 11:59 AM PDT

பிளவுபட்ட, அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பழனிசாமி - பன்னீர் என, இரு தரப்பிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சசிகலாவையும், அவர் உறவினர்களையும் ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்க ஆலோசித்து வருகின்றனர்.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர்.சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள், 33 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ...

ராமநாதபுரத்தில் என்கவுன்டர்; பிரபல ரவுடி சுட்டுக்கொலை

Posted: 13 Apr 2017 12:55 PM PDT

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தொண்டியில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
ராமநாதபுரம்- தொண்டியில், பிரபல ரவுடி கோவிந்தன் என்பவன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்றான். அப்போது மடக்கிய போலீசாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவனை என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர். உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவனான கோவிந்தன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தரப்பில் ...

இ.பி.எப்., சந்தாதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் 'ஜாக்பாட்'

Posted: 13 Apr 2017 02:08 PM PDT

புதுடில்லி: இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நன்னம்பிக்கை தொகை அளிக்க, அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல், அந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளோருக்கு, பணி ஓய்வு பெறும் போது, முதிர்ச்சி தொகையுடன் கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இது குறித்து, இ.பி.எப்.ஓ., வட்டாரங்கள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு கால நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™