Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை : பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை

Posted: 12 Apr 2017 09:49 AM PDT

அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி ...

முதல்வர், 10 அமைச்சர்கள் 'டிஸ்மிஸ்': கவர்னரிடம் ஸ்டாலின் சார்பில் கடிதம்

Posted: 12 Apr 2017 09:49 AM PDT

சென்னை: 'முதல்வர் பழனிசாமி உட்பட, 10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.

தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தி.மு.க., முதன்மைச் செயலர் துரைமுருகன், ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகிய மூவரும், மும்பையில் சந்தித்தனர். அப்போது, கவர்னருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, வித்யா சாகர் ராவிடம் வழங்கினர். கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஆர்.கே. நகர் தொகுதி யில், முதல்வர் பழனிசாமி மற்றும் அவரதுஅமைச்சர்களுடன் சேர்ந்து, குறிப் பாக, ...

சுடுசொற்களை எதிர்கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியினர் அவமானம்!வெடித்து கிளம்பும் போராட்டங்களால் மந்திரிகள் பீதி

Posted: 12 Apr 2017 10:25 AM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தால், தேர்தல் நின்றதால் மக்கள் கொதித்தெழுந்து உள்ளது; குடியிருப்பு பகுதிகளில், 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு என, ஆளுங்கட்சி மீது, பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியினர் வீதியில் இறங்கினாலே, மக்களின் சுடுசொற்களை எதிர்கொள்ள முடியாமல், அவமானத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆங்காங்கே வெடித்து கிளம்பும் போராட்டங்களால், அமைச்சர்கள் பீதியடைந்து உள்ளனர். பெரும்பாலானோர், கட்சியை காப்பாற்ற, பன்னீர் அணிக்கு மாற ஆலோசனை நடத்தி வருகின்றனர்.சென்னை அருகே, கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க் களை அடைத்து ...

பெண் கன்னத்தில் 'பளார்' விட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை

Posted: 12 Apr 2017 10:30 AM PDT

சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், மதுக் கடை அமைவதை எதிர்த்து போராடிய பெண்களை தாக்கிய, போலீஸ் அதிகாரியிடம் விசாரணை மற்றும் நடவடிக்கை துவங்கி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனுார் காரணம்பேட்டை சாலையில் இருந்த, மதுக் கடையை மூடிவிட்டு, அய்யன்கோவில் சாலையில் திறக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாமளாபுரம் சாலையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தடியடி
போராட்டம் தொடரும் போதே, திட்டமிட்டப்படி மதுக்கடை திறக்கப்பட்டதால், பொதுமக்கள் போராட்டத்தை ...

ஓ.பி.சி., மசோதா நிறைவேறாததற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

Posted: 12 Apr 2017 10:34 AM PDT

புதுடில்லி: சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அமைப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாமல் போனதற்கு காரணமாக இருந்த,எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு, பிரதமர் மோடி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பா.ஜ., பொதுச் செயலர் புபேந்திர யாதவ் கூறியதாவது: ஓ.பி.சி., ஆணையம் குறித்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,க்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.அப்போது, அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதா, ராஜ்யசபாவில் ...

மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பால்...சர்ச்சை!:பா.ஜ., பிரமுகர் பேச்சுக்கு கடும் கண்டனம்

Posted: 12 Apr 2017 10:39 AM PDT

அலிகார்: ''மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை துண்டித்து எடுத்து வரும் நபருக்கு, 11 லட்சம் ரூபாய் பரிசளிக்க தயார்,'' என, பா.ஜ., இளைஞர் அணியைச் சேர்ந்த நபர் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். வட மாநிலங்களில், நேற்று முன்தினம், ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டதை அடுத்து, இங்குள்ள, பிர்பூம் மாவட்டத்தில், ஹிந்துத்வா அமைப்பைச் சேர்ந்த சிலர், 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் ...

ஏழைகளுக்கான பணம் எங்கோ செல்கிறது: சுப்ரீம் கோர்ட் வேதனை

Posted: 12 Apr 2017 10:42 AM PDT

புதுடில்லி: 'கட்டுமானத் தொழிலாளர் நலனுக்காக வசூலிக்கப்பட்டுள்ள, 26 ஆயிரம் கோடி ரூபாயில், செலவிடப்பட்ட, 5,000 கோடி ரூபாய் வேறு எதற்கோ பயன்படுத்தப்பட்டு உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

'கட்டுமானத் தொழிலாளர் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்ட, 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவில்லை' என, 2015ல் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையில், 'இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தில், 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள் ...

சரத், ராதிகாவிடம் வரித்துறை துருவி துருவி விசாரணை

Posted: 12 Apr 2017 10:47 AM PDT

நடிகை ராதிகா மற்றும் கணவர் சரத்குமாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்; பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம், ஏழு மணி நேரம், துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் குவாரி தொழிலில், பங்குதாரராக இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களிலும், 7ம் தேதி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின; மேலும், 5 கோடி ...

மதுபானக்கடை பிரச்னை 'விஸ்வரூபம்'; மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 12 Apr 2017 10:50 AM PDT

கோவை: தமிழகத்தில், 'டாஸ் மாக்' மதுபானக் கடைகளுக்கு எதிராக நடந்து வரும் போராட் டங் கள், விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; தமிழகம் முழுவதும், 3,321 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட 'டாஸ் மாக்' கடைகளை, குடியிருப்புகளுக்கு நடுவே அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து ...

'இந்தியா - பாக்., எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை': கிரண் ரிஜிஜு

Posted: 12 Apr 2017 12:22 PM PDT

புதுடில்லி: 'இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
திட்டம் இல்லை:
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரத்தில், எல்லையில், பாதுகாப்பை பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிர ரோந்து:
எல்லையில், தடுப்பு ...

'முத்தலாக்' நடைமுறை சரியா? முஸ்லிம் பெண்களிடம் கருத்து கேட்பு

Posted: 12 Apr 2017 01:38 PM PDT

லக்னோ: மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்வதுதொடர்பாக, முஸ்லிம் பெண்களிடம் கருத்துக்களை கேட்க, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு :
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். முதல்வராக பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆதித்யநாத், மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்வது தொடர்பாக, முஸ்லிம் பெண்களிடம் கருத்துக்களை கேட்பதற்காக,திட்டம் தயாரிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பெண்கள் ...

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்

Posted: 12 Apr 2017 02:38 PM PDT

புதுடில்லி: இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், அதன் வாயிலாக செலுத்த வசதி செய்யப்பட்டது. இணையதளம் வழியாக டிக்கெட் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™