Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குற்றவாளி கூண்டில் முதல்வர், அமைச்சர்கள்!

Posted: 11 Apr 2017 09:42 AM PDT

சென்னை: ''தினகரனை தலைவராக ஏற்றதால், முதல்வர் பழனிசாமி, இன்று கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தினகரனை நம்பிய அமைச்சர்கள், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர்,'' என, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:'
ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது, ஜனநாயக படுகொலை' என, தினகரன் கூறி உள்ளார். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, அவ்வாறு சொல்கிறார். வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கியதற்கான ஆவணங்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியுள்ளன.இந்த பணம் யார் கொடுத்தது; முதல்வர் கொடுத்தாரா; ...

கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள் பரிதவிப்பு

Posted: 11 Apr 2017 09:42 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனை வெற்றி பெற வைப்பதற்காக, கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், கடன் தொகையை எண்ணி கலக்கத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை வாரி இறைத்தனர்.

பெரும் தொகை :
அதற்காக, ஒவ்வொரு அமைச்சரும், குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என, தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் கோடிக்கணக்கில்
பணம் வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரமம் இன்றி, ...

ராதிகாவின் 'டிவி' அலுவலகத்தில் 'ரெய்டு'

Posted: 11 Apr 2017 09:48 AM PDT

தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சரத்குமார் பணம் பெற்றதாக நடந்து வரும் விசாரணையில், அவரது மனைவி ராதிகாவுக்கு சொந்தமான, 'ரேடான் டிவி' நிறுவனத்தில், வருமான வரித்துறையினர், நேற்று சோதனை நடத்தினர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனுக்கு ஆதரவு அளிக்க, நடிகரும், ச.ம.க., தலைவரு மான சரத்குமார், ஏழு கோடி ரூபாய் பெற்றதாக, புகார் எழுந்துள்ளது. இந்த பேரத்தை நடத்தி முடித்தவர், அமைச்சர் விஜயபாஸ்கர் என்பதால், இருவரது வீடுகளிலும், 7ம் தேதி, வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள, சரத்குமார் வீட்டில் நடந்த சோதனைக்கு பின், வருமான ...

ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல், டீசல் கிடைக்காது

Posted: 11 Apr 2017 09:52 AM PDT

புதுடில்லி: 'பெட்ரோல் பங்க்குகள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது' என, இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும், 'மன் கி பாத்' என்னும் ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களி டையே, பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றி வருகிறார். கடந்த மாதம் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வாரத்துக்கு ஒரு நாள், எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து, 'அடுத்தமாதம், 14 முதல், ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை விடப்படும்' என, ...

தினகரனை முதல்வராக்க சசிகலா தரப்பு கட்சியில்... எதிர்ப்பு!: 'கூஜா தூக்கி'களின் திட்டம் முறியடிக்க அமைச்சர்கள் தீவிரம்

Posted: 11 Apr 2017 10:25 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், பழனிசாமியை பதவியிறக்கி விட்டு, தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு இறங்கியுள்ளது. 'கூஜா துாக்கி' களின் இந்த திட்டத்தை முறியடிக்க, சசி எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், அமைச்சர் கள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறையில் அடைக்கப் பட்ட பின், கட்சியின் முழு கட்டுப்பாடும், தினகரன் கைக்கு வந்து விட்டது. சசிகலாவை ஆதரித்த அதே கும்பல், இப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவரை நிறுத்தி ...

தூக்கு தண்டனை விவகாரத்தில் பாக்.,கிற்கு மத்திய அரசு... எச்சரிக்கை!:கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஆவேசம்

Posted: 11 Apr 2017 10:37 AM PDT

புதுடில்லி: உளவு பார்த்ததாக கூறி, நம் நாட்டின் முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு, பாக்., அரசு, துாக்கு தண்டனை விதித்துள்ள விவகாரம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

'குல்பூஷண் ஜாதவுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்றினால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் பார்லி.,யில் ஒரே குரலில் எச்சரித்துள்ளன.நம் நாட்டின் முன்னாள் கடற்படை வீரரான, குல்பூஷண் ஜாதவை, உளவாளி என, பாகிஸ்தான் கைது செய்தது. அவருக்கு, துாக்கு தண்டனை விதிப்பதாக, பாகிஸ்தான் ராணுவ கோர்ட் ...

புகழ்பெற்ற தலைவர் மோடி; தே.ஜ., கூட்டணி தீர்மானம்

Posted: 11 Apr 2017 10:39 AM PDT

புதுடில்லி: 'நான்கு மாநில தேர்தல் வெற்றியை அடுத்து, சுதந்திர இந்தியாவின் புகழ் பெற்ற, மக்கள் மனதில் இடம் பெற்ற தலைவர், மோடி' என, தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பா.ஜ., மற்றும் 32 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தே.ஜ., கூட்டணி அரசின், மூன்று ஆண்டு சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்பின், கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானம்: உ.பி., உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ...

தி.மு.க., வெற்றி தள்ளிவைப்பு: ஸ்டாலின்

Posted: 11 Apr 2017 10:44 AM PDT

சென்னை:'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதால், தி.மு.க., வெற்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:-பணம் வினியோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நேர்மையான முறையில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை, தேர்தல் கமிஷனிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் கமிஷன், இடைத் தேர்தலையே நிறுத்தி விட்டது.வகுப்பில் ஒரு மாணவன் முறைகேடான வகையில், தேர்வு எழுதினால், அந்த மாணவனை வெளியே அனுப்புவது தான் முறை. அதை விடுத்து, தேர்வையே மொத்த மாக ரத்து செய்வது ...

'எங்கள் பிரச்னையை காலம் தீர்த்து வைக்கும்!'

Posted: 11 Apr 2017 10:47 AM PDT

''இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்னையை, காலம் தீர்த்து வைக்கும்,'' என, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை, அனுமதி யின்றி வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாதுஎன, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, இளையராஜா, 'நோட்டீஸ்' அனுப்பினார். இதையடுத்து, 'இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப் போவதில்லை' என, எஸ்.பி.பி.,அறிவித்தார்.
தற்போது, அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும், எஸ்.பி.பி., கூறியதாவது: நானும், இளையராஜாவும், சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே நண்பர்கள். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையை, காலம் தீர்த்து வைக்கும். ...

உணவு வீணாவதை தடுக்க அமைச்சரின் புது திட்டம்!

Posted: 11 Apr 2017 12:22 PM PDT

புதுடில்லி: உணவு பொருட்கள் வீணடிப்பதை தடுக்க, புதிய நடைமுறையை கொண்டு வருவது குறித்து, மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

உணவு வீண்:
மத்திய உணவு, நுகர்வோர் நலத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது: சமீபத்தில் ஒரு ஓட்டலுக்கு சென்றேன். பலரும் தங்களுக்கு விருப்பமான உணவை வாங்கி சாப்பிட்டனர். ஆனால், பலர் அதை முழுவதுமாக சாப்பிடாமல் வீணாக்கினர்.
நாட்டில், பசியால் பலர் வாடும் நிலையில், உணவுப் பொருட்களை வீணடிக்கலாமா? சமீபத்தில், 'மன் கி பாத்' ரேடியோ உரையில் பிரதமர் நரேந்திர ...

லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்களாலும் சிக்கல்

Posted: 11 Apr 2017 02:18 PM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் போது, சுகாதாரத் துறையில் பணி இடமாற்றம், பணி நியமனம் போன்றவற்றுக்கு, லஞ்சம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில், சில ஆவணங்கள் வெளியாகி உள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அந்த ஆவணங்களில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு மருந்துகள் வாங்கியதில், 67 லட்சம் ரூபாய்; எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அலுவலக உதவியாளர் பணி நியமனங்களுக்கு, 32 லட்சம் ரூபாய்; பணியிட மாறுதல், நியமனம் மூலம், 2.38 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ...

தினகரனுக்கு சுப்பிரமணியன் சாமி ஆசி!

Posted: 11 Apr 2017 03:59 PM PDT

ஆர்.கே. நகரில் பண வினியோக விவகாரத்தில் சிக்கியுள்ள தினகரன், தேர்தலில் போட்டியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்து விடுமோ என்ற பயம், சசிகலா ஆதரவு வட்டாரத்திற்கு ஏற்பட்டு உள்ளது. அதற்குள், தினகரனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து விட வேண்டும் என, அவசரம் காட்டுகின்றனர்.

ஆனால், அதற்கு பா.ஜ., மேலிடமும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடாமல் இருக்க வேண்டுமே... அதற்காக உதவ முன்வந்துள்ளார் சுப்பிரமணியன் சாமி. அவர், பா.ஜ.,வில் இருந்த போதிலும், சசிகலாவின் அரசியல் ஏஜன்டாக, சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார்.
அவர் வகுத்து தந்துள்ள திட்டப்படியே, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™