Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு கை கொடுத்த கே பிலிம்ஸ்

Posted:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள். அச்சம் என்பது மடமையடா படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ...

சங்கமித்ரா லேட்டஸ்ட் அப்டேட்...!

Posted:

பாகுபலி படத்தைப் போல் ஒரு படம் தயாரிக்க வேண்டும் ஆசைப்பட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், சுந்தர்.சி இயக்கத்தில் அதை செயல்படுத்த தீர்மானித்தது. சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட உள்ள அந்தப் படத்துக்கு சங்கமித்ரா என்று பெயரிடப்பட்டது.

விஜய், சூர்யா, மகேஷ்பாபு என முன்னணி ஹீரோக்களை அணுகினார்கள். ...

மூன்று மாதங்களில் நான்கு படங்கள்

Posted:

'ராஜா ராணி', 'காக்கா முட்டை', 'எங்கேயும் எப்போதும்', 'குக்கூ' 'முண்டாசுப்பட்டி' என ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள்தான். குக்கூ கமர்ஷியலாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் பாராட்டு பெற்றது. அதன் காரணமாகவோ என்னவோ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தொடர்ந்து ...

வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா

Posted:

சமுத்திரகனி இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்த 'அப்பா' கடந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த படம். தமிழில் வர்த்தக வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த படத்தை மலையாளத்திலும் ரீ-மேக் செய்து வருகிறார். 'ஆகாசமிட்டாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் ஜெயராம் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ...

விமர்சனங்ளுக்குத் தடை? ராகவா லாரன்ஸ்

Posted:

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக எந்த ஒரு படம் வெளிவந்தாலும் அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே சில ஊடகங்கள் விமர்சனங்கள் என்ற பெயரில் காட்சிக்குக் காட்சி விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான ஊடகங்களைப் பற்றிப் பேசியிருந்தால் கூடப் பரவாயில்லை. மொத்தமாக விமர்சனங்களுக்கே தடை விதிக்க ...

அண்ணன்-தம்பி கூட்டணியில் உருவாகும் நிவின்பாலி-நயன்தாரா படம்..!

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலும், தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று அவ்வப்போது அவரை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி நிவின்பாலியின் கேரியரை உயர்த்தியதிலும் இளம் இயக்குனர் வினீத் சீனிவாசனின் பங்கு ரொம்பவே அதிகம். தற்போது நடிகராக இருக்கும் வினீத்தின் தம்பி தயன் சீனிவாசனும் நடிப்பை ...

'வில்லன்' மோகன்லாலின் இன்னொரு லுக் வெளியானது...!

Posted:

பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படம் 'வில்லன்'. இந்தப்படத்தில் தமிழ் சினிமாவில் இருந்து விஷால், ஹன்ஷிகா ஆகியோர் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்கள். மோகன்லாலின் மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப்படத்தில் மோகன்லால் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ...

விநாயகனுக்கு விருது கிடைக்காதது குறித்து கீது மோகன்தாஸ் சர்ச்சை கருத்து..!

Posted:

நன்றாக நடித்தார்கள் என்பதற்காக எல்லோருக்குமேவா விருதுகளை அள்ளிக்கொடுத்து விடமுடியும். தேர்வுக்குழுவின் இறுதி முடிவின்படி சிறந்தவர் யார் என்கிற விருதை அறிவிக்கிறார்கள். இதனுள்ளே அரசியல் இருக்கிறதா இல்லையா என்கிற சர்ச்சை ஒருபக்கம் இருக்கட்டும். அக்சய் குமாருக்கு எந்த அடிப்படையில் விருது வழங்கப்பட்டது என சிலர் விவாத கேள்வி ...

மம்முட்டியின் 'புத்தன் பணம்' ஹைலைட்ஸ்..!

Posted:

கடந்த 12 தினங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படம் வெளியானது.. இது தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மம்முட்டி நடித்து ரிலீஸுக்கு தயாரான நிலையில் இருக்கும் 'புத்தன் பணம்' படத்தை வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக ஏப்-12ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.. இல்லை இந்தப்படம் வெளியாக ...

பாலிவுட்டை நம்பி நான் இல்லை -ரவீணா டாண்டன்

Posted:

ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மாத்தர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார் ரவீணா டாண்டன். கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை அஸ்தர் சயீத் இயக்கியுள்ளார். தற்போது ரவீணா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீணா கூறியதாவது... "பாலிவுட் மட்டும் நம்பி என் ...

காற்று வெளியிடை' - இப்படியும் ஒரு மீம்ஸ்

Posted:

ஒரு படம் வெளிவந்தால் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுவதை விட இப்போதெல்லாம் ஒரே ஒரு மீம்ஸ் போட்டே அந்தப் படத்தைப் பற்றி 'புரிய' வைத்து விடுகிறார்கள். அதிலும் அதில் பல சுவாரசிய தகவல்களையும் இணைத்து விடுகிறார்கள். எங்கிருந்துதான் அதற்குப் பொருத்தமான திரைப்படக் காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்கள் தேடிப் பிடிப்பார்களோ தெரியாது. ...

ரஞ்சித்துக்கு அடுத்து ராஜமௌலி ? ரஜினி புதிய 'பிளான்' ?

Posted:

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'கபாலி' படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். தனுஷ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. ...

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் வேண்டும் - சோனாக்ஷி

Posted:

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிறார் நடிகை சோனாக்ஷி. அகிரா படத்தை அடுத்து சோனாக்ஷி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛நூர்'. இதில் சோனாக்ஷி, பத்திரிகையாளராக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சுனில் சிப்பி இயக்கி உள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சோனாக்ஷியிடம், பாலிவுட்டில் எதை ...

‛பேகம் ஜான்' படத்திற்கு ஜார்கண்ட்டில் வரிவிலக்கு

Posted:

பெங்காலி மொழியில் வெளியான படம் ‛ராஜ்காகினி'. இப்படம் தற்போது பாலிவுட்டில் ‛பேகம் ஜான்' என்ற பெயரில் ரீ-மேக்காகியுள்ளது. பேகம் ஜானாக வித்யாபாலன் நடித்திருக்கிறார். அவருடன் நஸ்ருதின் ஷா, ஆஷிஷ் வித்யார்தி, இலா அருண், கவுகர் கான், சன்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலியல் தொழில் செய்யும் பெண்களை மையமாக வைத்து ...

தேசிய விருதால் மேலும் இரண்டு படங்கள் தயாரிக்கும் பிரியங்கா

Posted:

பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட பிரியங்கா சோப்ரா, மராத்தியில் வென்ட்டிலேட்டர் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பிரியங்கா. தேசிய விருது தந்த ஊக்கத்தால், இப்போது இரண்டு பெங்காலி படங்களை தயாரிக்கிறார். ஒரு படத்திற்கு ...

ஏ.ஆர்.முருகதாசைத் திட்டும் மகேஷ்பாபு ரசிகர்கள்

Posted:

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தமிழில் முதல் முறையாக அறிமுகமாகும் நேரடிப் படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். தெலுங்கிலும் உருவாகி வரும் இப்படம் கடந்த வருடம் ஜுலை மாதம் ஆரம்பமானது. சுமார் 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இப்படத்தின் தலைப்பு என்ன, மகேஷ் பாபுவின் தோற்றம் என்ன என்பது குறித்து எந்த ஒரு ...

காற்று வெளியிடை' - ஒரு 'காப்பி' படமா ?

Posted:

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'காற்று வெளியிடை'. மணிரத்னம் இயக்கிய ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு ஒரு விமர்சனம் வந்திருக்குமா என்று சொல்லுமளவிற்கு இந்தப் படத்திற்கு பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ...

யாரையும் புண்படுத்தாமல் விமர்சனம் பண்ணுங்கள் - ரஜினி

Posted:

நடிகர் விக்ரம் பிரபு தனது முதல் தயாரிப்பாக தயாரித்துள்ள படம் ‛நெருப்புடா. இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். விக்ரம்பிரபு உடன் நிக்கி கல்ராணி, வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்ஷ்மணின் உதவியாளர் அசோக் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்தில் விமரிசையாக நடந்தது. நடிகர் ...

படம் வந்தவுடன் விமர்சனம் செய்யாதீர்கள் - விஷால் வேண்டுகோள்

Posted:

இயக்குநர் லக்ஷ்மணனிடம் உதவியாளராக இருந்த அசோக் குமார் இயக்குநராக அவதரித்துள்ள படம் ‛நெருப்புடா'. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருப்பதுடன் அவரே சொந்தமாகவும் தயாரிக்கவும் செய்துள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்களின் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. அதனால் கபாலி படத்தின் ...

பாகுபலி -எம்ஜிஆரின் அடிமைப்பெண் கதையை தழுவி எடுக்கப்பட்டதா? -டைரக்டர் ராஜமவுலி பதில்

Posted:

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் நடிப்பில் ராஜமவுலி இயக்கிய பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™