Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


டாஸ்மாக்கை உடைத்து ரூ.6.5 லட்சம் கொள்ளை

Posted: 29 Apr 2017 08:23 AM PDT

சென்னை: மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரம், கோகுலபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும், வசூலான ரூ.6.5 லட்சத்தை கடை லாக்கரில் வைத்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் இந்த டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தகவலின் பேரில், கடை ஊழியர்களும் அங்கு ...

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது

Posted: 29 Apr 2017 08:20 AM PDT

வள்ளியூர்: நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே பனைவிளையைச் சேர்ந்தவர் ராஜா(42). இவர் கூடங்குளத்தில் சில பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில் கூடங்குளத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை வாகனத்தில் அழைத்து செல்லும் பணியை அருள் என்பவரின் பெயரில் ராஜா கான்ட்ராக்ட் எடுத்தார். இந்த ஒப்பந்தப் பணியில் சேரும் முன்பாக ஒவ்வொரு பணியாளரும் தங்கள் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் இல்லை என தடையில்லா சான்று வாங்க வேண்டும். இவ்வாறு சான்று வழங்குவதற்கு ...

அது ஒன் பை டூ காபி ராகமாம்…!!

Posted: 29 Apr 2017 08:10 AM PDT

உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்…!!

Posted: 29 Apr 2017 08:06 AM PDT

- - புதுமையான கச்சேரியா…என்ன? – வெளியே போகணும்னாத்தான் டிக்கெட் எடுக்கணுமாம்..! – இசக்கி – ————————— – நம்ம படத்திலேஐ வில்லன் ஏ.டி.எம் மெஷினை உடைச்சு பணத்தை கொள்ளையடிக்கிறான்…! – கொஞ்சம் நம்பற மாதிரி கதை சொல்லுங்கஃ! – ஜி.ராஜலட்சுமி – ——————————-

இந்த வார சினிமா செய்திகள்

Posted: 29 Apr 2017 08:03 AM PDT

ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். - சுஜா வரூணி - - 'மிஜா', 'கிடாரி', 'குற்றம் 23' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுஜா வரூணி. மேலும் சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இனி அவர் மேற்கொண்டு சொல்வதைக் கேட்போம். "எனக்கு வாய்ப்பு அளிப்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குநரிடம் முதலில் நான் திறந்த மனதுடன் அவர் சொல்லும் கதையைக் கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் 'நச்' சென்று ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். இதுவே எனது விருப்பம். - --------------------

தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'

Posted: 29 Apr 2017 06:59 AM PDT

- 'தொண்டன்' படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மே 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தொண்டன்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கியுள்ள படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார். ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிக்கப்பட்ட, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். ...

பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'

Posted: 29 Apr 2017 06:57 AM PDT

- புதுமுக இயக்குநர் கர்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குலேபாகவாலி' படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா இணைந்து நடித்து வருகிறார்கள். 'தேவி' படத்தைத் தொடர்ந்து 'யங் மங் சங்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா. லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்கி வருகிறார். வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'யங் மங் சங்' படத்தைத் தொடர்ந்து பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார் பிரபுதேவா. மேலும், விஷால் - கார்த்தி நடிக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தை இயக்கும் ...

மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு

Posted: 29 Apr 2017 06:50 AM PDT

- 'வேலைக்காரன்' படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா. --------------------------- மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படம் வேகமாக வளர்ந்துவருகிறது. இதில் சிவா வும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளனர். அதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு விநியோகிப்பாளர்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'கபாலி' பாணியில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளா ராம் மோகன் ராஜா. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள ...

சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்

Posted: 29 Apr 2017 06:47 AM PDT

- சீனா முதல் முறையாக சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள விமானம் தாங்கிக் கப்பலுடன் புதிய கப்பலும் சேவையில் ஈடுபடும். கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல் அறிமுகமாகியிருக்கிறது. உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் வடகிழக்கு துறைமுகமான டாலியனில் கட்டப் பட்டது என்று ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி சீன ஊடகம் குறிப்பிட்டது. படம்: ராய்ட்டர்ஸ் - நன்றி- ...

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்

Posted: 29 Apr 2017 06:43 AM PDT

- இன்று நாம் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 6வது வீடாகிய சோலைமலை முருகன் திருக்கோவில் பற்றி அறியலாம். மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் திருக்கோவில் மீது உள்ள மலையில் 3 கிலோ மீட்டர் வெகு அழகான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள திவ்யமான திருத்தலம் ஆகும். – இங்கு மட்டுமே அறுபடை வீடுகளில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கு வேலுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது. – மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வைப் பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட ...

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை

Posted: 29 Apr 2017 06:39 AM PDT

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு; எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, 'ஐயோ பாம்பு, பாம்பு' என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான். மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான். 'இந்தப் ...

ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு?

Posted: 29 Apr 2017 06:38 AM PDT

– பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார். "சுவாமி! ஒரு சந்தேகம்!" என்றார். "என்ன?" என்று கேட்டார் பரமஹம்சர். "நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள், அதே விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக்கொண்டால் என்ன?" என்று கேட்டார். அதற்குப் பரமஹம்சர் உடனே, "ஐயா! ஒரு விசயம். நீங்கள் ஒருவர் தான். ஆனால், உங்கள் அப்பாவுக்கு மகன் – மகனுக்கு அப்பா, மனைவிக்குக் கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, ...

தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?

Posted: 29 Apr 2017 06:00 AM PDT

- ``நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும். எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?' என பாவேந்தர் பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள் கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்... `ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்'' என்பதுதான். ``நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, பாசுரங்களைப் படிக்கச் சொல்கிறீர்களே?'' என்று கேட்க, ``பாசுரங்களைப் படிக்காமல், உங்களால் எப்படி தமிழ்க் கவிதைகள் எழுதிவிட முடியும்?'' என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் பாரதிதாசன். பிடித்தால் ...

உல்டா - ஒரு பக்க கதை

Posted: 29 Apr 2017 05:43 AM PDT

நிவாரணம் - ஒரு பக்க கதை

Posted: 29 Apr 2017 05:42 AM PDT

அந்தநாள் ஞாபகம் – அடிகுழாய்!

Posted: 29 Apr 2017 05:09 AM PDT

அந்தநாள் ஞாபகம் – அடிகுழாய்! - பா.வெ. அடிதோறும் அசராத அடிகுழாய் ஒன்று அனைவருக்கும் நீர் தர ஊர் பொதுவில் நிற்கும்! கயிறு ஏறிய கழுத்துடன் காலி குடங்கள் மிதிவண்டியில் மெல்ல குடிநீர் கொண்டு வரும்! பாசி பிடித்த பாறைக்கல் நடுவே பதமாய் நின்ற நீரை பறவைகள் மெல்ல பருகும்! பக்கவாட்டில் பிடியில் சிக்கி பம்பர ஆணி கூட கழன்று வரும்! கோடையிலும் குறை ஆழத்தில் நீர் சுரக்கும்! குடித்த ருசி நினைத்தாலே இனிக்கும்!

அந்தநாள் ஞாபகம் – பெட்டிக்கடை!

Posted: 29 Apr 2017 05:06 AM PDT

அந்தநாள் ஞாபகம் – பெட்டிக்கடை! - பா.வெ. பெயர் தாங்கிய பெட்டிக்கடைகள் பெயர் பலகையற்று பெயரளவில் ஒன்றிரண்டு ஊருக்குள் இருக்கும்! கற்றைக் கீற்று வேய்ந்த தட்டிக் கதவை ஒற்றை மூங்கில் நின்று தாங்கிப் பிடிக்கும்! சைக்கிள் சக்கர கம்பிகளில் சரளமாய் தொங்கும் தீனிகள் சற்றே திணறி இருக்கை அமைக்கும்! அரை அடி உயர ஆர்லிக்ஸ் பாட்டிலில் அடைக்கப்பட்ட மிட்டாய் வகைகள் அனேக வாய்களில் உமிழ்நீர் சமைக்கும்! விலாசம் பெறவும் விசாரணை செய்யவும் பெட்டிக்கடைகளே பிராதான ...

அந்தநாள் ஞாபகம் – மிதிவண்டியில் வியாபாரிகள் !

Posted: 29 Apr 2017 05:03 AM PDT

அந்தநாள் ஞாபகம் – மிதிவண்டியில் வியாபாரிகள் ! - பா.வெ. மிதிவண்டிகளில் மிதந்த காலம் அது! ஊருக்குள் புதியவராயினும் உதவி கேட்டால் மறுக்காமல் மிதிவாங்கும் மிதிவண்டியில் கூட மெல்ல ஏற்றிச் செல்லும் மனிதர்களின் மாண்பு மகத்தானது! உப்பு,கோலமாவு,ஐஸ் வண்டி, வளையல் வண்டி,எண்ணெய் வண்டி, பால்காரர், பாத்திரக்காரர் என ஊருக்குள் ஓடாய் தேயும் உழைப்பாளிகள் பலரின் ஒரே வாகனம் மிதிவண்டி! கொளுத்தும் வெயிலிலும் மிதிவண்டிப் பயணம் ... கொழுப்பில்லை; இரத்தக் கொதிப்பில்லை; சர்க்கரை ...

அந்தநாள் ஞாபகம் – காவல் தெய்வம்!

Posted: 29 Apr 2017 05:00 AM PDT

அந்தநாள் ஞாபகம் – காவல் தெய்வம்! - பா.வெ. ஊர்ப்புற எல்லையில் ஓங்கி வளர்ந்த உருவமொன்று வெள்ளைக் குதிரை மேல் வீச்சரிவாள் ஏந்தி வேட்டை நாயுடன் ஊரைக் காத்து நிற்கும்! காது வரை மீசை நீட்டி கண் இரண்டும் பெரிதாய் காட்டி கையில் கொண்ட ஈட்டி பற்றி கதையொன்று உண்மை பேசும்! நேர்த்திக் கடனாய் நெடுநாள் ஆசையாய் நேர்ந்துவிடப்பட்ட கோயில் கிடா ஒன்று ஊரெல்லாம் மேய்ந்து பலம் பெறும்! உறங்க மட்டுமே கோயில் வரும்! ஊரைக் காக்கும் காவல் தெய்வம் ஒரு குலத்தை தனியே ...

பார்த்து இரசித்தது

Posted: 29 Apr 2017 04:59 AM PDT



தந்தையிடம் ஓவியம் கற்றுக் கொண்ட சந்தேஷ்.

அந்தநாள் ஞாபகம் – டீக்கடை!

Posted: 29 Apr 2017 04:55 AM PDT

அந்தநாள் ஞாபகம் – டீக்கடை! - பா.வெ. ஊருக்குள் வரவேற்கும் முதல் நபராய் டீக்கடை நிற்கும்! கரிபடிந்த கூரைக் கொட்டகையில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் கம்பீரமாய் காலம்கடந்து நிற்கும்! நீண்ட கம்பிவழி நிரம்பும் அலைவரிசையில் நிதானமாய் காது திருகிய வானொலி இசைக்கும் கானம் வருடலாய் மனதை அசைக்கும்! கண்ணாடிப் பெட்டிக்குள் கச்சிதமாய் அடுக்கப்பட்ட சூடான வடைகளும் சுவையான பூரியும் சுண்டி இழுக்கும் சுண்டலும் சுரக்க வைக்கும் உமிழ்நீரை! பாத்திரம் கொண்டுவந்து பத்திரமாய் ...

அந்தநாள் ஞாபகம் – சிற்றூரில் பேருந்து!

Posted: 29 Apr 2017 04:53 AM PDT

அந்தநாள் ஞாபகம் – சிற்றூரில் பேருந்து! - பா.வெ. ஓயாத ஒலிகளற்ற ஒற்றைப் பேருந்து ஒலிக்கும் ஒலி ஊர்நடுவே கேட்கும் உள்ளே வந்து பார்க்கும்! கால்கடுக்க காத்திருக்கையில் கதையொன்று காற்றில் வரும்! நடப்பு பற்றி நடவு பற்றி நாட்பட்ட பேச்சு முளைக்கும்! நாலு வீட்டு சேதி நடுவே புகுந்து வளர்க்கும்! கடகடத்த கடைசி இருக்கைகளில் கைக்குட்டை போட்டு இடம் பிடிக்கும் மாந்தர்தம் வெகுளித்தனம் நம் மனதிலும் இடம் பிடிக்கும்! பள்ளம் மேடு பார்த்து பரதம் ஆடும் பேருந்தில் ஜன்னலோர ...

மழை வேண்டி விண்ணப்பம்

Posted: 29 Apr 2017 04:40 AM PDT

"நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவன் வாக்கு முன்பெல்லாம் அதின் அர்த்தத்தை கண்டு கொள்ளவில்லை நான் - இன்றோ, நீருக்காக வாடி நீருக்காக அலைந்த ...

மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு

Posted: 29 Apr 2017 01:39 AM PDT

சென்னை, ஏப்.27- பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். அப்போது, படப்பிடிப்புகள் நடைபெறாது; தியேட்டர்கள் மூடப்படும் என்றும் நடிகர் விஷால் அறிவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் கூட்டுகூட்டம் சென்னையில் நடந்தது. அதில் திரை உலக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சட்டத்துக்கு புறம்பான பதிவிறக்கம் போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மத்திய, ...

ஆறுபடை வீடுகள்

Posted: 28 Apr 2017 10:04 PM PDT

அழகர் கோவில் சோலைமலை முருகன்

Posted: 28 Apr 2017 10:03 PM PDT

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017
-

-
மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ள
ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில்
முருக பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட
தங்க ஊஞ்சல் பள்ளியறையில் அமைக்கப்பட்டு அதில்
வள்ளி தெய்வானை சமேதமாக சுப்பிரமணியசுவாமி
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
-
தினபூமி

ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை

Posted: 28 Apr 2017 09:24 PM PDT

- ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவன் கல்பித் வீர்வால், ஜேஇஇ தேர்வில் நாட்டிலேயே முதன் முறையாக 360/360 எடுத்து சாதனை புரிந்துள்ளார். நாடு முழுவதும் இருந்து இம்மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அட்டவணைப் பிரிவைச் சார்ந்த ஒரு மாணவன், இடஒதுக்கீடு எதுவும் இல்லாமல் முதல் மாணவனாகத் தேர்வாகியுள்ளார். இதையடுத்து, கல்பித் நாட்டின் முக்கிய, முன்னணிக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, டாப் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு மெரிட் முறையில் தேர்வு ...

அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த விவசாயம் !

Posted: 28 Apr 2017 09:21 PM PDT

அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த விவசாயம் ! - பா.வெ. வயல்வெளி நோக்கி வளையும் சாலைகள் ஊர் நெருங்குவதை உறுதிப்படுத்தும்! சாலையின் இருமருங்கிலும் சரியான இடைவெளிகளில் தென்னை மரங்கள் தெளிவாய் நிற்கும்! சாலையில் எதிரே சங்கீதம் ஏந்திய டிராக்டர் ஒன்றை சந்திக்க நேரிடும்! இடைக்கால இசையில் இனிமையான பாடலொன்று இதயம் தீண்டி இமைப்பொழுதில் தாண்டி செல்லும்! ஆற்றுநீர் வாய்க்கால் வழியோடி நாற்றங்கால் வரை நன்றாகவே பாய்ந்திருக்கும்! வரப்பு மடை வரை வருகை தரும் நீர் வழியெங்கும் ...

இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது

Posted: 28 Apr 2017 09:02 PM PDT

புதுடெல்லி  - இந்திய - நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்பிலான 8 உலோகங்களால் ஆன 'அஷ்டதாது' சிலையைக் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.   மேற்குவங்க மாநிலத்தில் இந்திய - நேபாள எல்லைப்பகுதி வழியாக நேபாளத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தப்படுவதாகச் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.   இதையடுத்து, ஷசாத்ரா ஷீமா பாலின்  படைப்பிரிவின் 41-வது பட்டாலியன் வீரர்களும், சிலிகுரி யின் கடத்தல் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாரும் இணைந்து ...

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்

Posted: 28 Apr 2017 08:58 PM PDT

சென்னை - வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்து உள்ளது. நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 70 நாட்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர். விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் வறட்சியால் ...

க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!

Posted: 28 Apr 2017 05:54 PM PDT

துதிக்கை ரேகை பார்க்கணுமாம்…!

Posted: 28 Apr 2017 05:49 PM PDT

- - ஒரு வருஷம் சரக்கை ஸ்டாக் வெச்சுக்கிற மாதிரி பெரிய பிரிட்ஜ் கிடைக்குமா? - எதுக்கு? - ஒரு வருஷம் நான் டாஸ்மாக் கடைக்கு போக மாட்டேன்னு சபதம் போட்டிருக்கேன்! - வி.ராரதி டேச்சு - ------------------------------------ - கர்ப்பமா இருந்த காலத்தில நான் உப்புமா அதிகம் சாப்பிட்டு இருக்க கூடாது! - ஏன் என்ன ஆச்சு? - குழந்தை 'ரவா...ரவா'னு கத்துது...! - பர்வின் யூனூஸ் - -

மிஞ்சிய ஒரு கேள்வி...

Posted: 28 Apr 2017 05:29 PM PDT

தீப இருலி -அறிவுமதி

Posted: 28 Apr 2017 05:27 PM PDT


-

என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ…

Posted: 28 Apr 2017 05:20 PM PDT

– என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ… – நேத்து கூட உங்களை அடிச்சதா சொன்னீங்கே? – தனியா இருக்கும்போதுதான் அடிப்பாளே தவிர வீட்டுக்கு யாராவது வந்திருந்தா, தொடமாடாய்யா…!! – வி.ரேவதி – ————————————- – மன்னா, நம் படைகள் வலுவிழந்து விட்டன! – உற்சாக பானம் ஏதாவது கொடுக்க வேண்டியதுதானே…! – ஏ.மூர்த்தி – ————————————-

’சேமியாவ்’னு கத்துதே...!

Posted: 28 Apr 2017 05:17 PM PDT

- – என் மனைவியை வெங்காயம் நறுக்க விடறதில்லை! – ஏன்? – குடும்ப வன்முறை சட்டத்துல புகார் கொடுத்துடுவாளோன்ற பயம்தான்! – மணி – ——————————— – தலைவர் சராசரி லட்சியவாதியா, எப்படி? – கெஸ்ட் டாக்டர் பட்டம் போதும்னு சொல்லிட்டாரே! – சாய் சத்விகா – ———————————- – எதிரி மன்னரை நம் மன்னர் புகழ்ந்து தளளுகிறாரே, ஏன்? – ரொம்ப பயமா இருந்தால், போருக்கு வரவேண்டாம்னு ஓலை அனுப்பி இருக்காராம்! – மு.மதிவாணன் – ——————————–

இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்

Posted: 28 Apr 2017 05:03 PM PDT

ஐதராபாத்: தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தி மற்றும் கொள்முதல் யார்டு உள்ளது. இங்கு மிளகாய் கொள்முதல் செய்யும் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை தர வேண்டும் என கடந்த ஆண்டு முதல் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரூ.4 ஆயிம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 லட்சம் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் ...

பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted: 28 Apr 2017 04:50 PM PDT

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் குறைக்கும் வகையில், பிஎஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்களை விற்பனை மற்றும் பதிவுசெய்யத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே சாந்தி என்பவர் பிஎஸ்-3 தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில்,' மார்ச் 29-ம் தேதியே புதிய காரை வாங்கியும், பிஎஸ்-3 வாகனம் எனக் கூறப்பட்டு பதிவு செய்ய ...

கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்

Posted: 28 Apr 2017 04:48 PM PDT

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகியவற்றுக்கு 1.5.17 முதல் 31.5.17 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடைவிடுமுறையில் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே நீதிமன்றம் செயல்படும். இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள்தான் பணிக்கு வருவார்கள். அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே கோடை விடுமுறை அமர்வுகளில் விசாரிக்கப்படும். நாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தில் இருந்து ...

திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!

Posted: 28 Apr 2017 04:44 PM PDT

- திருச்சியில் நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட கடைகளை ஊருக்குள் திறக்க முயற்சி செய்த அதிகாரிகளை பெண்கள் துடைப்பத்தைக் கொண்டு விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - திருச்சி பால்பண்ணையை அடுத்த பொன்மலை மலையடிவாரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை பார்வையிட அதிகாரிகள் வருவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™