Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி...விறுவிறு பொருளாதாரத்தில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ள வாய்ப்பு

Posted: 29 Apr 2017 06:23 AM PDT

புதுடில்லி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டில், பல துறைகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால், 2022க்குள், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி, உலகளவில், பொருளாதார வளர்ச்சியில், நான்காவது இடத்தை இந்தியா பிடிக்கும் என, சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, 2014ல் பொறுப் பேற்றது. இதன்பின், நாட்டின் வளர்ச்சி பணி களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சிக் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், ...

தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க.,'2 ஜி' தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ.,

Posted: 29 Apr 2017 06:34 AM PDT

அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதற்கடுத்த முக்கிய கட்சியான, தி.மு.க.,வின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, பா.ஜ., காத்துஇருக்கிறது.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலை யிட்டார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை அழைத்து, அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், மத்திய அரசுக்கு, ஜெயலலிதா நீண்ட நாட்களாக முட்டுக்கட்டை போட்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்ட மசோதா போன்ற சில திட்டங்களுக்கு, தமிழக அரசு தலையாட்டி யது. அப்போதே, தமிழக அரசை, மத்திய அரசு ...

சசி குடும்பத்தால் தலைக்குனிவு: கட்சி நிர்வாகிகள் கோபம்

Posted: 29 Apr 2017 06:35 AM PDT

ஜெ., இருந்த வரை, 'நான் அ.தி.மு.க.,காரன்' என, மிடுக்குடன் வலம் வந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சசிகலா குடும்பத்தால், இன்று தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஜெ., முதல்வரானார். அதன்பின் உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல், இடைத்தேர்தல்கள், லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல் என, வரிசை யாக, ஜெ., வெற்றிகளை குவித்தார்.அதிலும், லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு, 37 இடங்களை கைப் பற்றியதன் மூலம், இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க., ...

அணிகள் இணைப்பு விவகாரம் அ.தி.மு.க., தொண்டர்கள் மவுனம்

Posted: 29 Apr 2017 06:36 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக, நிர்வாகிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான கருத்து தெரிவித்து வரும் நிலையில், தொண்டர்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி, அமைதியாக உள்ளனர்.

ஜெ., இருந்த வரை, அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்போடு திகழ்ந்தது. மூத்த அமைச்சர் கள், நிர்வாகிகள், வாய் திறக்க பயந்தனர். 'டிவி' பேட்டி என்றால், தெறித்து ஓடினர். கோஷ்டி பூசல் இருந்தபோதும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல், அமைதி காத்தனர். ஆளாளுக்கு கருத்துகோஷ்டியாக செயல்படு வது, ஜெ.,க்கு தெரிந்தால், இருந்த இடம் தெரியாமல் காணா மல் போய் விடுவோம் என்பதை உணர்ந்து, மவுனியாக இருந்தனர். ஜெ.,வை ...

சசிகலா அணிக்கு அதிர்ச்சி தர ஸ்டாலின்...வியூகம்!:முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க தீவிரம்

Posted: 29 Apr 2017 08:30 AM PDT

அ.தி.மு.க., சசிகலா அணிக்கு அதிர்ச்சி தரும் வகையில், தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் புது வியூகம் வகுத்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை வளைக்கும் இந்த வியூகத்தில், ௧௫ பேர் சிக்கியுள்ளனர். இதன் மூலம், முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க, தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. எம்.எல்.ஏ.,க்கள், இரு பிரிவாக பிரிவர்; ஆட்சி கலையும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், சசிகலா அணியினரின் கவனிப்பு காரணமாக, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணிக்கு வராமல், சசி அணியில் தொடர்ந்தனர்.இதன் காரணமாக, ஆட்சி தப்பியது. தி.மு.க., வினர் ...

2019 பார்லி., தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற பா.ஜ.,: இலக்கு!:

Posted: 29 Apr 2017 09:57 AM PDT

வரும், 2019 லோக்சபா தேர்தலில், 400 இடங் களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ள, பா.ஜ., மேலிடம், அதற்குள், கட்சியை வலுப் படுத்தவும், பேச்சாற்றலும், செயல் திறனும் உடைய இளைஞர்களை அடையாளம் பார்த்து, கட்சியில் சேர்க்கவும், நாடு முழுவதும், 'மாதிரி பார்லிமென்ட்' நடத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மொத்த முள்ள, 545 தொகுதிகளில், 282 இடங்களில் வெற்றி பெற்றது; பிரதமராக, நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பின், அடுத்தடுத்து நடந்து வரும் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அசத்தல் வெற்றியை பெற்று வருகிறது; டில்லி, பீஹார் உள்ளிட்ட, ஒரு சில மாநிலங்கள் ...

கோடநாடு கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு...மாற்றப்படுமா?

Posted: 29 Apr 2017 10:47 AM PDT

கோவை:கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை; ஜெ., பங்களாவில் கொள்ளை; இவ்வழக்கில் தேடப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ.,யின் கார் டிரைவர் சேலத்தில் மர்மச்சாவு; மற்றொரு குற்றவாளி பாலக்காட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராட்டம் என, அடுத்தடுத்த திருப்பங்களால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் உயர் அதிகாரிகள்.

எனவே, மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என, பல் வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், 51, ஏப்., 23ம் தேதி அதிகாலை, இரு ...

தினகரனை போட்டு கொடுத்தது யார்?

Posted: 29 Apr 2017 11:07 AM PDT

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க,தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தபுகாரில், தினகரன் கைது செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு, கொச்சி என, பல இடங்களுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வருகிறார்.

இந்த வலையில், இவர் சிக்கியது எப்படி என்பது குறித்து, பல சுவாரசியமான தகவல்கள் டில்லியில் வலம் வருகின்றன. மன்னார்குடி கூட்டத்தில் பல கோஷ்டிகள்; அதில் சிலருக்கு, தினகரனை பார்த்தாலே பிடிக்காது. பண பரிமாற்ற விவகாரம், ஹவாலா விஷயம் என, பலவற்றையும் தெரிந்த மன்னார்குடி ஆட்கள், தமிழகபோலீசுக்கு போட்டுக் கொடுத்துள்ளனர்.தமிழக போலீசிலும் ...

ஜெ.,டிரைவர் மரணம் விபத்தா, கொலையா விசாரணையில் திரை விலகுமா

Posted: 29 Apr 2017 11:11 AM PDT

முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில், தேடப்பட்டு வந்த எஸ்டேட் டிரைவர் நேற்று, ஆத்துாரில் நடந்த விபத்தில் இறந்தார். இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ், 36. இவர், 2009ல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு கார் டிரைவராக கொடாநாடு எஸ்டேட்டில் பணி யாற்றி வந்தார்.கடந்த, 2012ல், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 2014ல், வட பழனியை ...

9 லட்சம் போலி நிறுவனங்கள்?சாட்டையை எடுக்கிறது அரசு

Posted: 29 Apr 2017 01:14 PM PDT

புதுடில்லி, கம்பெனிகள் விவகாரத் துறையில் பதிவு செய்த, ஒன்பது லட்சம் நிறுவனங்கள், ஆண்டு கணக்கு தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டில்லியில் நடந்த அமலாக்கப் பிரிவு தின விழாவில், வருவாய் துறைச் செயலர், ஹஷ்முக் ஆதியா பேசியதாவது:கம்பெனிகள் விவகாரத் துறையில் பதிவு செய்யப்பட்ட, 15 லட்சம் நிறுவனங்களில், ஒன்பது லட்சம் நிறுவனங்கள், ஆண்டு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை; இவற்றில் பெரும்பாலானவை போலி நிறுவனங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.இதுகுறித்து விசாரணையை துவக்கி உள்ளோம். இந்த நிறுவனங்களை கண்காணிக்க, பிரதமர் அலுவலகம், ...

இ.வி.எம். என்றால் ஓவ்வொரு ஓட்டும் மோடிக்கே : யோகி புது விளக்கம்

Posted: 29 Apr 2017 02:08 PM PDT

லக்னோ: EVM என்பதற்கு ‛Every Vote Modi' என வாக்காளர்கள் தேர்தலில் காட்டிவிட்டார்கள் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் விளக்கம் அளித்து பேசியுள்ளார். கோரக்பூரில் பா.ஜ. நிர்வாகிகள் மத்தியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதி்ய நாத் பேசியது, டில்லி உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. சாதனை வெற்றிபெற்றுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கோளாறு சொன்னவர்கள் இப்போது என்ன சொல்வார்கள். தேர்தல் முடிவுகள் பல முதல்வர்களை தோல்வியுற செய்துள்ளது. அதில் உ.பி.யில் அகிலேஷ், மயாவதி ஆகியோரை போன்று டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என பட்டியல் நீளுகிறது. வீழ்ந்தவர்கள் EVM ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™