Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வார இறுதியில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் மழைப்பொழிவு

Posted: 25 Mar 2017 08:40 AM PDT

ரொரன்ரோ பெரும்பாகம் இந்த வார இறுதியில் கடுமையான மழை பொழிவைப் பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த பிராந்தியத்தினுள் பயணத்தை மேற்கொள்பவர்கள் மறக்காது தங்களுடன் குடைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், நீர் வடிந்து செல்லும் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படும் என்பதால் அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாத்திரம் ஏறக்குறைய 20 மில்லிமீற்றர் வரையிலான மழை பொழிவு பதிவாகக்கூடும் […]

The post வார இறுதியில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் மழைப்பொழிவு appeared first on TamilStar.com.

மக்கள் ஆதரவை இழந்துவரும் ஒன்ராறியோ முதல்வர்

Posted: 25 Mar 2017 08:30 AM PDT

ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தமது மாகாண மக்களிடையேயான ஆதரவை இழந்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கத்தலின் வின்னுக்கு தற்பொது மக்கள் மத்தியில் 12 சதவீதமான ஆதரவே காணப்படுகின்றமை அண்மையில் "Angus Reid Institute" எனப்படும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதேவேளை கத்தலின் வின் மாநிலத்தின் முதல்வராக தற்போது மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவில் இல்லை என்று 81 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர். 7 சதவீதம் […]

The post மக்கள் ஆதரவை இழந்துவரும் ஒன்ராறியோ முதல்வர் appeared first on TamilStar.com.

பிரதமர் அடுத்த மாதம் சில முக்கிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார்

Posted: 25 Mar 2017 08:18 AM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் முதல் வாரத்தில் முக்கியமான வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ள உள்ளார். இந்தியா, சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பிரதமர் அடுத்த மாதம் ஆரம்பத்தில் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அதன் பின்னர், புத்தாண்டு காலத்தில் வியட்நாமிற்கும் அதனையடுத்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் அடுத்த மாதம் சில முக்கிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார் appeared first on TamilStar.com.

இலங்கை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் அதிகம் உள்ளன! – பிரித்தானியா

Posted: 25 Mar 2017 08:14 AM PDT

போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் பரோனஸ் அனெலி தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் […]

The post இலங்கை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் அதிகம் உள்ளன! – பிரித்தானியா appeared first on TamilStar.com.

நினைப்பது வேறு நடப்பது வேறு : நழுவிச் செல்லும் ராஜபக்சர்கள்

Posted: 25 Mar 2017 08:12 AM PDT

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் செயல் முற்றிலும் போலியானது என மக்கள் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. இதன் மூலம் பொதுமக்கள் விமலின் செயலை முற்றாக கண்டிப்பதாகவும், அவர் தொடர்ந்துள்ளது பொய்யான உண்ணாவிரத போராட்டம் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமல் தொடர்பில் பொது மக்களின் பார்வை எவ்வாறு காணப்படுகின்றது என கருத்துக் கணிப்பு ஒன்றினை குறித்த ஊடகம் மேற்கொண்டுள்ளது. அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே இந்த செய்தி கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் விமல் […]

The post நினைப்பது வேறு நடப்பது வேறு : நழுவிச் செல்லும் ராஜபக்சர்கள் appeared first on TamilStar.com.

இராணுவத்தால் கூலிப்படையை உருவாக்க முடியும்! – கோத்தாபய

Posted: 25 Mar 2017 08:08 AM PDT

எந்தவொரு இராணுவப் புலனாய்வினாலும்,இரகசிய கூலிப்படை ஒன்றை இயக்க முடியும். ஆனால் அது இராணுவத் தளபதியின் கண்காணிப்பிலேயே செயற்படுத்தப்படும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் இரகசிய கூலிப்படைகளை வைத்து தமிழர்கள் மற்றும் பலரை வெள்ளை வானில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக முன்னாள் முப்படைத் தளபதியும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்கோ அண்மையில் தெரிவித்திருந்தார். அதேபோன்று அமைச்சர் மனோ கணேசன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் மேல்மாகாணத்தில் […]

The post இராணுவத்தால் கூலிப்படையை உருவாக்க முடியும்! – கோத்தாபய appeared first on TamilStar.com.

சிறந்த நிதி அமைச்சருக்கான விருதை பெற்றுக் கொண்டார் ரவி

Posted: 25 Mar 2017 08:06 AM PDT

ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சர் விருதினை நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க நேற்றைய தினம் பெற்றுக் கொண்டார். குறித்த விருதினைப் பெற்றுக் கொள்வதற்காக ரவி கருணாநாயக்க நேற்று முன்தினம் பிரித்தானியா சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் விருதை பெற்றுக் கொண்ட போதுஎடுத்துக் கொள்ளப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பிரித்தானியாவின் த பேங்கர் சஞ்சிகை 2017ஆம்ஆண்டிற்கான ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சராக இலங்கையின் நிதி அமைச்சர் […]

The post சிறந்த நிதி அமைச்சருக்கான விருதை பெற்றுக் கொண்டார் ரவி appeared first on TamilStar.com.

நாட்டை பாதுகாத்த எந்தவொரு படையினரையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை! – என்கிறார் சந்திரிக்கா

Posted: 25 Mar 2017 08:03 AM PDT

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவத்தினரையும், குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்த போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த, நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொறுப்பாகவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, காணாமல் போனவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதற்கு பதிலையே காணாமல் […]

The post நாட்டை பாதுகாத்த எந்தவொரு படையினரையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை! – என்கிறார் சந்திரிக்கா appeared first on TamilStar.com.

பிரபாகரனை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்கா! நிராகரித்த இலங்கை, தமிழக தமிழ் தலைவர்கள்..

Posted: 25 Mar 2017 07:59 AM PDT

இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கையிலிருந்து வெளியேற்ற இலங்கை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் விரும்பவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன்னால் வெளியிடப்பட்ட புத்தகமொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளாக அமைச்சர் சம்பிக்க கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு […]

The post பிரபாகரனை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்கா! நிராகரித்த இலங்கை, தமிழக தமிழ் தலைவர்கள்.. appeared first on TamilStar.com.

புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் அவசர கோரிக்கை.

Posted: 25 Mar 2017 07:56 AM PDT

யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். யாழ் குடாவை அபிவிருத்தி செய்ய உலக வங்கி 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலுள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற உடன் முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். உலக வங்கியின் பிரதிநிதிகளிற்கும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று […]

The post புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் அவசர கோரிக்கை. appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™