Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


GO தொடரூந்து சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி

Posted: 05 Mar 2017 09:47 AM PST

நேற்று இரவு இடம்பெற்ற GO தொடரூந்து சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Barrie தொடரூந்து வழித்தடத்தில், Maple நிலையத்திற்கும் Rutherford நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்ததாக Metrolinx நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தினை அடுத்து குறித்த அந்த வழித்தடத்தின் ஊடான தொடரூந்து போக்குவரத்துகள் சில மணி நேரங்களுக்கு தடைப்பட்டிருந்த போதிலும், இன்று அதிகாலையில் இருந்து குறித்த பகுதியினூடான போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இதேவேளை […]

The post GO தொடரூந்து சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி appeared first on TamilStar.com.

“ரொரன்ரொ ஹைட்ரோ” தனியாருக்கு விற்பனை : ஜோன் ரொறி மறுப்பு

Posted: 05 Mar 2017 09:43 AM PST

"ரொரன்ரொ ஹைட்ரோ"வினை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான பேச்சுக்களில் தாம் தொடர்புபட்டுள்ளதாக வெளியான செய்தியை ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி மறுத்துள்ளார். றொய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், "ரொரன்ரொ ஹைட்ரோ"வினை தனியாருக்கு விற்பனை செய்வது குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், அந்த பேச்சுக்களில் ஜோன் ரொறியும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அத்துடன் ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டில் பகுதியளவில் தனியார் மயப்படுத்தப்பட்ட ஒன்ராறியோ மாகாண மின் வினியோகஸ்தரான "ஹைட்ரோ வண்", ரொரன்ரோ ஹைட்ரோவை […]

The post "ரொரன்ரொ ஹைட்ரோ" தனியாருக்கு விற்பனை : ஜோன் ரொறி மறுப்பு appeared first on TamilStar.com.

மஹிந்தவின் அதிரடி முடிவு! சிங்கப்பூர் வைத்தியர் சொன்னது என்ன? கொழும்பு அரசியலில் குழப்பம்

Posted: 05 Mar 2017 09:40 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக தீர்மானமிக்க முடிவினை எடுக்கவுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தல் போது ஏற்பட்ட தோல்வி மஹிந்தவின் இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. அவரினால் எந்தவொரு வலுவான அரசியல் நடவடிக்கைகையும் முன்னெடுக்க முடியவில்லை. மைத்திரி – ரணில் தலைமையிலான வலுவான கூட்டணி இதற்கு பிரதான காரணமாக உள்ளது. இந்நிலையில் அரசியல் திட்டங்கள் செயற்படுத்திக் கொள்ள முடியாமை, கூட்டு எதிர்க்கட்சி மக்கள் மத்தியில் செல்ல முடியாமை உட்பட பல விடயங்களினால் மஹிந்த மனரீதியாக […]

The post மஹிந்தவின் அதிரடி முடிவு! சிங்கப்பூர் வைத்தியர் சொன்னது என்ன? கொழும்பு அரசியலில் குழப்பம் appeared first on TamilStar.com.

ஐநாவின் புதிய அறிக்கையை நிராகரித்தார் சிறிசேன!

Posted: 05 Mar 2017 09:38 AM PST

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் புதிய அறிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, உறுதியாக நிராகரித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போரின்போது நடைபெற்ற தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பணியில் உதவ வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். முன்னதாக, அதற்கு அவர் ஒத்துக்கொண்டிருந்தார். தவறிழைத்த இராணுவப் படைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கப் போவதில்லை என்றும் இலங்கை அதிபர் கூறியிருக்கிறார். நீதி குறித்த தனது சொந்த கடப்பாடுகளை பூர்த்தி […]

The post ஐநாவின் புதிய அறிக்கையை நிராகரித்தார் சிறிசேன! appeared first on TamilStar.com.

யுத்த காலத்தையும் விட மோசமான நிலையில் அரசும் நாங்களும் உள்ளோம்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Posted: 05 Mar 2017 09:35 AM PST

யுத்த காலத்தினையும் விட மோசமான நிலையிலேயே அரசாங்கமும் நாமும் உள்ளோம் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார் வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் கிராமத்தில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், இரண்டு வரவு செலவுத்திட்டத்திலும் பாதுகாப்புக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரவு செலவுத்திட்டமே இரண்டு தடவையும் வந்துள்ளது. மாகாண சபைக்கு கூட அரைவாசியான நிதியே வழங்கப்பட்டுள்ளது. நாங்களாகவே கொண்டு வந்த அரசின் […]

The post யுத்த காலத்தையும் விட மோசமான நிலையில் அரசும் நாங்களும் உள்ளோம்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி appeared first on TamilStar.com.

பொறியில் சிக்கியுள்ள மகிந்த அரசியல் குத்துக்கரணம் அடிக்கின்றார்!

Posted: 05 Mar 2017 09:31 AM PST

அரசியல் பொறிக்குள் சிக்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போது இருவேறு அரசியலில் ஈடுபட்டு வருவதாக பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் ஆகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் வரை 8 மாதங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டே அரசாங்கத்தின் ஆட்சி நடத்தப்பட்டது என்பது […]

The post பொறியில் சிக்கியுள்ள மகிந்த அரசியல் குத்துக்கரணம் அடிக்கின்றார்! appeared first on TamilStar.com.

மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவி கொடுத்து அறைந்துள்ளது : மொஹமட் முஸ்ஸம்மில்

Posted: 05 Mar 2017 09:26 AM PST

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தை தடவி கொடுத்து அறைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார். இலங்கையை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு நன்றி தெரிவித்து மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவியும் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புறக்கோட்டையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துதல், புதிய […]

The post மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவி கொடுத்து அறைந்துள்ளது : மொஹமட் முஸ்ஸம்மில் appeared first on TamilStar.com.

வள்ளுவன் வாக்கு மகிந்தவுக்கும் பொருந்தும்!

Posted: 05 Mar 2017 09:22 AM PST

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னவாம் மன்னர்க் கொளி. நேர்மையான ஆட்சியே ஆட்சியாளர்களின் புகழ் நிலைத்திருக்க காரணமாக இருக்கின்றது. ஆட்சியாளர்கள் நேர்மையாக ஆட்சி செய்ய தவறினால் அவர்களின் புகழ் நிலைத்திருக்காது என்று வள்ளுவ பெருந்தகை கூறுகிறார். உலகில் நாடுகளை ஆட்சி செய்தவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்த போதிலும் அவர்களின் கொடுங்கோன்மையான ஆட்சி அவர்களின் புகழை நிலைக்காது செய்து விட்டது. இதற்கு சிறந்த உதாரணம் ஜேர்மனியின் ஆட்சியாளர் அடோல் ஹிட்லர். அவர் மனிதன் என்ற ரீதியில் எந்தளவு சிறந்தவராக […]

The post வள்ளுவன் வாக்கு மகிந்தவுக்கும் பொருந்தும்! appeared first on TamilStar.com.

ஐ.நாவில் இராஜதந்திர காய்நகர்த்தல்களுடன் இலங்கை…! தமிழர்களின் கோரிக்கை நீர்த்துப்போகுமா..?

Posted: 05 Mar 2017 09:18 AM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை பொறிமுறையை நீர்த்துப்போக செய்யும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இராஜதந்திர காய்நகர்த்தல்களை ஐ.நாவில் இலங்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என இம்முறை புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே, இம்முறை தீர்மானம் […]

The post ஐ.நாவில் இராஜதந்திர காய்நகர்த்தல்களுடன் இலங்கை…! தமிழர்களின் கோரிக்கை நீர்த்துப்போகுமா..? appeared first on TamilStar.com.

பணத்துக்காக எதையும் செய்பவர்களாக அரசியல்வாதிகள் மாறியுள்ளனர்! – சந்திரிகா

Posted: 05 Mar 2017 09:05 AM PST

அரசியல்வாதிகள் பணத்துக்காக எதையும் செய்யும் அளவுக்கு மாறிப்போயுள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவ ஹெரகொல்ல ஒச்சடிவத்தை முஸ்லிம் வித்தியாலத்தின் 25 வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மனிதாபிமானத்தை பொய்யாக்கிவிட்டு அரசியல் நடத்துவதால் எவ்வித நன்மையும் நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post பணத்துக்காக எதையும் செய்பவர்களாக அரசியல்வாதிகள் மாறியுள்ளனர்! – சந்திரிகா appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™