Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது! – சுமந்திரனுக்கு சுரேஸ் பதிலடி

Posted: 03 Mar 2017 07:15 AM PST

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும். அதற்கான சூழலே இல்லை என இலங்கை அரசாங்கத்தால் அழுத்தமாக சொல்லப்பட்டு வரும் நிலையில் காலநிலை நீடிப்பை வழங்கக் கூடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ‘இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் […]

The post இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது! – சுமந்திரனுக்கு சுரேஸ் பதிலடி appeared first on TamilStar.com.

ஜெனிவாவில் கால அவகாசம் கோரியுள்ளது அரசாங்கம்!

Posted: 03 Mar 2017 07:12 AM PST

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையில் ஐ.ந மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டுகால அவகாசம் கோர முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஜெனிவாவில் கால அவகாசம் கோரியுள்ளது அரசாங்கம்! appeared first on TamilStar.com.

தற்காலிகமாக மூடப்படும் கட்டுநாயக்க – நீர்கொழும்பு ரயில் வீதி

Posted: 03 Mar 2017 07:10 AM PST

கட்டுநாயக்க – நீர்கொழும்பு ரயில் நிலைய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நிலையத்திற்கு இடையில் நீண்ட ரயில் பாதை ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளமையின் காரணமாக வீதி மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய நாளை காலை 08.35 மணியில் இருந்து நாளை மறுதினம் காலை வரை அந்த பிரதேசத்தில் ரயில் பயணிக்காதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த காலப்பகுதியினுள் நீர்க்கொழும்பு – சிலாபம் மற்றும் புத்தளம் பகுதிக்கு இடையிலும், கொழும்பு கோட்டை – கட்டுநாயக்கவுக்கு […]

The post தற்காலிகமாக மூடப்படும் கட்டுநாயக்க – நீர்கொழும்பு ரயில் வீதி appeared first on TamilStar.com.

ஊடகங்களை சாடிய ஜனாதிபதி!

Posted: 03 Mar 2017 07:08 AM PST

அரசாங்கத்தின் தவறுகளை மாத்திரமே ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். கொலன்னாவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே என்ற நிலையில் ஊடகங்கள் வாய்ப்பற்ற விடயங்களை மாத்திரமே சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகும். ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நியாய விலைகளிலேயே கொடுப்பதற்கு விரும்பும், எனினும் முன்னைய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன […]

The post ஊடகங்களை சாடிய ஜனாதிபதி! appeared first on TamilStar.com.

சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியதில் எந்த கவலையும் இல்லை: மகிந்த

Posted: 03 Mar 2017 07:05 AM PST

முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமை சம்பந்தமாக தனக்கு எந்த கவலையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரியான நடைமுறைகள் ஊடாக சரத் பொன்சேகா செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வெலிகடையில் சில கைதிகளின் நலன் விசாரிப்பதற்காக சென்று விட்டு வெளியில் வந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 2010 ஆம் […]

The post சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியதில் எந்த கவலையும் இல்லை: மகிந்த appeared first on TamilStar.com.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சுதந்திரக் கட்சி இணக்கம்!

Posted: 03 Mar 2017 07:00 AM PST

நாட்டு நலனுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க தயார் என்று ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் யாப்புத் திருத்தம் என்பன தொடர்பான சு.க நிலைப்பாடு குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக ஒழிக்கக் கூடாது என்பதோடு சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாத […]

The post நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சுதந்திரக் கட்சி இணக்கம்! appeared first on TamilStar.com.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க முடியாது

Posted: 03 Mar 2017 06:57 AM PST

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் அரசாங்கம் விமல் வீரவங்ச போன்ற தேசிய தலைவர்களை சிறை வைத்து தனது அதிகாரத்தை பாதுகாக்க நினைக்குமாயின் அது தவறு என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். விமலை உடனடியாக விடுதலை செய் என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து, வீழ்விட போகும் அதிகாரத்தை தக்காத்து கொள்ள கூட்டு […]

The post அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க முடியாது appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™