Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


6 இடங்களில் கொள்ளையிட்ட மிசிசாகா பெண் கைது

Posted: 11 Mar 2017 07:56 AM PST

6 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மிசிசாகாவைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 மாதங்களில் அவர் இந்த 6 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 2016ஆம் ஆணடு ஜனவரி மாத்திற்கும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் சலவை செய்யும் நிலையம், மருந்தகம், நகைக்கடை, மற்றும் மூன்று வங்கிகள் என்பவற்றில் […]

The post 6 இடங்களில் கொள்ளையிட்ட மிசிசாகா பெண் கைது appeared first on TamilStar.com.

பெப்ரவரியில் அதிக வேலைவாய்பு: வேலையற்றோர் சதவீதம் 6.6ஆக குறைவு

Posted: 11 Mar 2017 07:54 AM PST

கனடாவில் புதிய வேலைவாய்புக்கள் காரணமாக வேலையற்றோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் 15,300 புதிய வேலை வாய்புக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,வேலையற்றோர் எண்ணிக்கையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த வேலையற்றோர் எண்ணிக்கை 6.8 சதவீத காணப்பட்ட நிலையில், தற்போது அது 0.2 சதவீதத்தினால் குறைவடைந்து, வேலையற்றோர் எண்ணிக்கை 6.6ஆக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது எட்டியுள்ள வேலையற்றோரின் 6.6 சதவீதம் என்ற இந்த எண்ணிக்கையானது, இறுதியாக கடந்த 2015ஆம் […]

The post பெப்ரவரியில் அதிக வேலைவாய்பு: வேலையற்றோர் சதவீதம் 6.6ஆக குறைவு appeared first on TamilStar.com.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரியின் நடவடிக்கை!

Posted: 11 Mar 2017 07:49 AM PST

இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக கற்கும் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை வலுவடைய செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்காக இடம்பெற்ற முகாம் ஒன்றின் இரண்டாவது நாளில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

The post நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரியின் நடவடிக்கை! appeared first on TamilStar.com.

யாழ் பல்கலையில் மீண்டும் குழப்ப நிலை…! பொலிஸார் வருகை

Posted: 11 Mar 2017 07:47 AM PST

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக பொலிஸார் அதிகமானவர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் போதே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வரவேற்பு நிகழ்வினை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேற்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி நிகழ்வு நடத்தப்பட்டமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை அதிகரிக்கவே அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக […]

The post யாழ் பல்கலையில் மீண்டும் குழப்ப நிலை…! பொலிஸார் வருகை appeared first on TamilStar.com.

இராணுவ அதிகாரிகள் தயாரித்துள்ள புலிகளின் போர் குற்ற அறிக்கை

Posted: 11 Mar 2017 05:24 AM PST

இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 6 பேர் இணைந்து விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் 310 போர் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனிவா மனித உரிமை ஆணையாளரிடம் சமர்பிக்க உள்ளனர். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் எஸ். சந்திரசிறி, லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர, அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, ரியர் அட்மிரல் எம். அமரவீர ஆகியோர் இந்த அறிக்கையை அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்து அதனை […]

The post இராணுவ அதிகாரிகள் தயாரித்துள்ள புலிகளின் போர் குற்ற அறிக்கை appeared first on TamilStar.com.

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணம்! – சுமந்திரன்

Posted: 11 Mar 2017 05:21 AM PST

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களிடையே கொழும்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற சொல்லாடல் விவாத அரங்கின் நிறைவில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளினால் மனித உரிமை பேரவையினால் நாடுகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், மனித உரிமை பேரவையை பயன்படுத்தி […]

The post தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணம்! – சுமந்திரன் appeared first on TamilStar.com.

நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்குமாறு கோரும் அமைச்சர் மனோ

Posted: 11 Mar 2017 05:18 AM PST

நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்குமாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த திட்டம் […]

The post நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்குமாறு கோரும் அமைச்சர் மனோ appeared first on TamilStar.com.

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்!

Posted: 11 Mar 2017 05:16 AM PST

தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை இவ்வாறான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நடத்தக்கூடியதான செயல் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களால் தலைநகரினதும், மக்களதும் இயல்புநிலை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். […]

The post கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்! appeared first on TamilStar.com.

பாராளுமன்ற செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுக்க விடமாட்டோம்! – விமல் வீரவன்ச எச்சரிக்கை

Posted: 11 Mar 2017 05:13 AM PST

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள 51 உறுப்பினர்களின் உரிமையை வழங்காவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அனுமதியுடன், கருத்துத் தெரிவித்தபோதே விமல் வீரவன்ச இதனைக் கூறினார். தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களையும் தனியான குழுவாக அங்கீகரிப்பதை கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: ஐக்கிய மக்கள் சுதந்திர […]

The post பாராளுமன்ற செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுக்க விடமாட்டோம்! – விமல் வீரவன்ச எச்சரிக்கை appeared first on TamilStar.com.

ஜனாதிபதி மைத்திரி ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணம்

Posted: 11 Mar 2017 05:10 AM PST

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதத்தின் இறுதி வாரமளவில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் முகமாக மேற்கொள்ளும் விஜயத்தின் போது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முக்கிய விடையங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மைத்திரிபால சிறிசேனவினை ரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமையினை தொடர்ந்து இந்த விஜயம் அமைந்துள்ளது. அத்துடன் யுத்தத்திற்கு பின்னர் ஐ.நா மனித […]

The post ஜனாதிபதி மைத்திரி ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™