Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பவன் கல்யாண் படத்தை இயக்கும் கொரட்டாலா சிவா

Posted:

தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் மைத்திரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. தற்போது கட்டமராய்டு எனும் ஆக்ஷன் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த ...

பாலகிருஷ்ணாவின் சம்பளம் ரூ 10 கோடி

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். ஆக்ஷன் ஸ்பெலிஷ்டான இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 101வது திரைப்படம் உருவாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் பூஜை ...

சினிமா தொழில் நஷ்டத்தில் இருக்கிறது - நாசர்

Posted:

சினிமா தொழில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். ஆர்.கே., நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ். சாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய ...

‛தீரன் அதிகாரம் ஒன்று', விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் - சத்யன் சூரியன்

Posted:

காஷ்மோரா படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் ‛காற்று வெளியிடை' படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ‛சதுரங்க வேட்டை' புகழ் வினோத் இயக்கத்தில் "தீரன் அதிகாரம் ஒன்று'' படத்தில் நடிக்கிறார் கார்த்தி. கார்த்தி ஜோடியாக ...

இயக்குநர் செய்யாறு ரவி மரணம்

Posted:

இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர் செய்யாறு ரவி, மாரடைப்பால் காலமானார். கார்த்தி நடித்த அரிச்சந்திரா, பிரபு நடித்த தர்மசீலன் படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி. அதன்பின்னர் படங்கள் இயக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற சீரியல்களை இயக்கினார். ...

மார்ச் 16-ல் டிரைலர், 25ல் இசை : பாகுபலி-2 பரபரப்பு ஆரம்பம்

Posted:

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலரது நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய சரித்திர திரைப்படமான ‛பாகுபலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான ‛பாகுபலி: தி கன்குலூசன்' திரைக்கு தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் வெளியீட்டின் போது பாகுபலி-2 திரைப்படம் 2017 ஏப்ரலில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ...

க்ரிஷின் அடுத்த படத்தின் நாயகன் கல்யாண் ராம்

Posted:

வருண் தேஜ் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பில் ‛கஞ்சே' எனும் திரைப்படத்தில் தனது வெற்றி முத்திரையை பதித்த இயக்குனர் க்ரிஷிற்கு அப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் பாலகிருஷ்ணாவின் சரித்திர படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா நடிப்பில் கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தை இயக்கி ...

பிரியதர்ஷனின் புதிய பதவியால் கைநழுவிய மோகன்லாலின் தேசியவிருது வாய்ப்பு..!

Posted:

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் எப்படி நெறி கட்டும் என ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு.. அது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் விஷயத்தில் உண்மை என்பது போலத்தான் ஆகிவிட்டது.. விஷயம் இதுதான், கடந்த வருடம் மோகன்லால் தனது ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ஒப்பம்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.. கண்பார்வையற்ற ...

ஷபி-பிஜுமேனன் கூட்டணியில் உருவாகும் 'ஷெர்லக் டோம்ஸ்'..!

Posted:

மலையாளத்தில் சூப்பர்ஹிட், பிளாக் பஸ்டர் என பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர் தான் இயக்குனர் ஷபி. தமிழில் விக்ரம் நடித்த 'மஜா' படத்தை இயக்கியதும் இவர்தான். கமர்ஷியல் வித் காமெடி என்கிற பார்முலாவில் வெற்றிப்பாதையில் பயணிக்கும் இவர் இதற்கு முன்பு திலீப்பை வைத்து இயக்கிய '2 கண்ட்ரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 நாட்கள் ...

விருதுபெற்ற விநாயகனை முதல் ஆளாக வாழ்த்திய மோகன்லால்..!

Posted:

ஒரு நடிகராக விநாயகன் திரையுலகில் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஓடிவிட்டன.. 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக ஒரு காலை விந்தியபடியே 'அக்கா அக்கா' என அழைத்தபடி நடித்து அனைவரையும் கவர்ந்த விநாயகன் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர்தான்.. தான் ஏற்கும் கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிப்பை ...

வசதி குறைந்த ரிசார்ட்டுகளை வாடகைக்கு விடும் குஞ்சாக்கோ போபன்.!

Posted:

மலையாள திரையுலகில் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் விளங்குபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன்.. அப்படிப்பட்டவர் ஏன் வசதி குறைந்த ரிசார்ட்டுகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.. விரிவாக படித்தால் விஷயம் தெரிந்துவிடப்போகிறது.. தற்போது ரஞ்சித் சங்கர் ...

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted:

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையின் பெண்கள் நல்லெண்ண தூதராகவும் இருக்கிறார். கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபையில் அவருடைய பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி குறித்து பிரபல நடனக் கலைஞர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு ...

படம் அல்ல, பாடம் - நிசப்தம் படத்திற்கு குவியும் பாராட்டு!

Posted:

புதுமுகம் அஜய், நாடோடிகள் புகழ் அபிநயா நடிப்பில் வெளியாகியுள்ள ‛நிசப்தம்' படம் ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகினர் மத்தியிலும் ஏகோபித்த பாராட்டை பெற்று வருகிறது. பெங்களூரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மைக்கேல் அருண். 8 வயது சிறுமியை குடிகாரன் ஒருவன் சீரழிக்கிறான். ...

85புதுமுகங்கள் நடித்த படத்திற்கு மோகன்லால் பாராட்டு..!

Posted:

பொதுவாக திரையுலகில் புதியவர்கள் யாரேனும் நல்ல படங்களை தரும்போது பிரபலமாக இருப்பவர்கள் அதை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துக்கள் சொல்வது வழக்கம் தான்.. அந்தவகையில் நம் சூப்பர்ஸ்டார் ரஜினி வருடத்திற்கு ஐந்து படங்களுக்காவது பாராட்டுக்களை வழங்கி வருகிறார்.. ஆனால் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலோ இதற்கு முற்றிலும் ...

முதல்நாளில் ரூ.12.25 கோடி வசூலித்த பத்ரிநாத்

Posted:

வருண் தவான் - ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரொமான்ட்டிக் - காமெடி படமாக உருவாகியுள்ளது. நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக இருக்கிறது. சுமார் ரூ.45 கோடி ...

மகேஷ்பாபு நடிக்கும் நேரடி தமிழ் படம்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு இரட்டை வேடத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படத்திற்கு, தெலுங்கில், சம்பவாமி என்று, தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் டைட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் முதலில், ராகுல் ப்ரீத்சிங் நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அவர் படப்பிடிப்பு தளத்திற்கு ...

லட்சுமிமேனனுக்கு சிபாரிசு செய்த நடிகர்!

Posted:

கும்கி படத்தில் அறிமுகமான, லட்சுமிமேனனுக்கு, விஜயசேதுபதியுடன் நடித்த, றெக்க படத்திற்கு பின், தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால், கேரளாவில் முகாமிட்டு, படிப்பை தொடர்ந்தவருக்கு, தற்போது, தான் நடிக்கும், கருப்பன் என்ற படத்தில் நடிக்க, சிபாரிசு செய்திருக்கிறார், விஜயசேதுபதி. றெக்க படத்தில், லட்சுமிமேனன் கொடுத்த அசத்தலான, ...

பாத்திமா பீவியான கவுதமி!

Posted:

பல ஆண்டுகளுக்கு பின், மலையாளத்தில், விஸ்வாசபூர்வம் மன்சூர் என்ற படத்தில் நடிக்கிறார், கவுதமி. அப்பட நாயகன், ரோஷன் மேத்யூவுக்கு, அம்மாவாக, பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண் வேடத்தில் இன்றைய, மாடர்ன் அம்மாவாக நடிக்கிறார்; இவ்வேடத்துக்கு, சற்று பூசினாற் போன்று, எடை போட்டுள்ளார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இராது!

ஐசியு.,வில் ஐஸ்வர்யாவின் தந்தை

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். அமிதாப் பச்சன் வீட்டு மருமகளான பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். குழந்தை பிறப்பால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் 2015-ம் ஆண்டு ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்தாண்டு ‛சரப்ஜித்', ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படங்கள் வெளியாகின. ...

விரைவில் இயக்குநராகிறார் வருண் தவான்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவரது நடிப்பில் நேற்று ‛பத்ரிநாத் கி துல்ஹனியா' என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே, வருணுக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™