Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


எல்லை தாண்டிவரும் அகதிகள்: நேரில் பார்வையிடச் செல்லும் மத்திய அமைச்சர்

Posted: 04 Mar 2017 08:38 AM PST

அண்மைய வாரங்களில் சட்டவிரோதமான முறையில் எல்லையைக் கடந்து கனடாவினுள் நுளையும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு அமெரிக்காவில் இருந்து எல்லைப் பகுதி ஊடாக கனடாவினுள் சட்டவிரோதமான முறையில் நுளையும் நிலவரத்தினை கனேடிய மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale இன்று நேரில் சென்று பார்வையிடவுள்ளார். இதற்காக அவர் பெருமளவு அகதிகள் கனடாவினுள் நுளையும் பகுதிகளுள் ஒன்றான மனிரோபாவின் எமர்சன் பகுதிக்கு இன்று காலை செல்கின்றார். மனிரோபாவின் எமர்சன்னுக்கான […]

The post எல்லை தாண்டிவரும் அகதிகள்: நேரில் பார்வையிடச் செல்லும் மத்திய அமைச்சர் appeared first on TamilStar.com.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து இரண்டு நாட்களின் பின் சாரதி மீட்பு

Posted: 04 Mar 2017 08:35 AM PST

விபத்துக்குள்ளான கனரக வாகனம் ஒன்றில் இருந்து அதன் சாரதி சுமார் இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 28ஆம் திகதி இணைப்புப் பெட்டியுடன் கூடிய கனரக வாகனம் ஒன்றைச் செலுத்திச் சென்ற போது, அந்த வாகனம் பிரிட்டிஸ் கொலம்பியாப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையை விட்டு 200 ஆழமான ஆற்றுப் பள்ளப் பகுதியில் கவிழ்ந்துள்ளது. வன்கூவரின் கிழக்குப் பதியில் இருந்து சுமார் 150 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள […]

The post விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து இரண்டு நாட்களின் பின் சாரதி மீட்பு appeared first on TamilStar.com.

அண்ணனுக்கு தூதுவிட்ட தம்பி! மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட மஹிந்த

Posted: 04 Mar 2017 08:30 AM PST

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வியத் மக அமைப்பின் முதலாவது மாநாட்டை இன்றைய தினம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கோத்தபாயவின் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்கு தமித விக்ரமசிங்க மற்றும் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன அண்மையில் மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மஹிந்த மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட மஹிந்த, சமகால […]

The post அண்ணனுக்கு தூதுவிட்ட தம்பி! மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட மஹிந்த appeared first on TamilStar.com.

அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவது போல படையினரை தண்டிக்க முடியாது

Posted: 04 Mar 2017 08:27 AM PST

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையானவாறு படையினர் மீது குற்றப்பத்திரிகை முன்வைக்க தாம் நடவடிக்கை எடுக்க மாட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ். பலாலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளளார். படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற யோசனையை தாம் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாண ஆளுநர் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'ஜனாதிபதியிடம் தெரிவிக்க' என்ற திட்டத்தின் பிராந்திய காரியாலயத்தையும் ஜனாதிபதி […]

The post அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவது போல படையினரை தண்டிக்க முடியாது appeared first on TamilStar.com.

மனோ கணேசனை பற்றி பேசி பிரபலம் தேடும் வழக்கத்தை வடமாகாண சபை உறுப்பினர் கைவிட வேண்டும்!

Posted: 04 Mar 2017 08:23 AM PST

எங்கள் தலைவர் மனோ கணேசன் பற்றி எதையாவது வாயில் வந்ததை பேசி ஊடக பிரபலம் தேடும் வழக்கத்தை வடமாகாணசபையின் மயூரன் என்ற உறுப்பினர் கைவிட வேண்டும். தனது அறிவை வளர்த்துக்கொண்டு, சொல்லொணா துன்பங்களில் துவண்ட நிலையில் வாழும் வன்னி மாவட்ட மக்களின் துன்பங்களை துடைக்க தனக்கு கிடைத்துள்ள இந்த வடமாகாண சபை நியமனத்தை பயன்படுத்த வேண்டும் என மேல்மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதன் கூறியுள்ளார். இது தொடர்பில் சண். குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது, அமைச்சர் மனோ கணேசன் […]

The post மனோ கணேசனை பற்றி பேசி பிரபலம் தேடும் வழக்கத்தை வடமாகாண சபை உறுப்பினர் கைவிட வேண்டும்! appeared first on TamilStar.com.

விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியர்! பிரபாகரனின் தோழன் அண்டன் பாலசிங்கத்தின் பிறந்த நாள்

Posted: 04 Mar 2017 08:19 AM PST

இலங்கையின் வரலாற்றில் எத்தனையோ நபர்கள் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் இலங்கை மக்கள் ஞாபகம் வைத்திருப்பதில்லை. ஆனாலும் இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களால் மறக்க முடியாத நபராக வரலாறு படைத்த மனிதனின் பிறந்த நாள் இன்று! அவர்தான் அண்டன் பாலசிங்கம். இலங்கை வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? புலிகளின் செயற்பாடுகளுக்கு அண்டன் பாலசிங்கம் ஆற்றிய பணிகள் எத்தகையது என்பது தொடர்பில் அறியாதவர்களும் அறிந்து கொள்வதற்கான முக்கிய பதிவு இது!

The post விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியர்! பிரபாகரனின் தோழன் அண்டன் பாலசிங்கத்தின் பிறந்த நாள் appeared first on TamilStar.com.

முன்னைய ஆட்சியில் போராட்டம் நடத்தியிருந்தால் வெள்ளைவான் கடத்தியிருக்கும்! – ஜனாதிபதி

Posted: 04 Mar 2017 08:11 AM PST

இப்போது எல்லோராலும் எல்லா விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். முன்னைய ஆட்சிக் காலத்தில் இப்படி ஆர்ப்பாட்டம் நடத்த இயலுமா? வெள்ளை வான் வந்து கடத்தியிருக்கும் என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். ஐனாதிபதிக்கு சொல்லுங்கள் அலுவலகத்தை இன்றைய தினம் காலை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பட்டதாரிகள், ஆர்ப்பாட்டம் செய்வதாக மாவை சேனாதிராஜா கூறினார். இப்படி போரா ட்டம் செய்வதைக் காட்டிலும் என்னோடு […]

The post முன்னைய ஆட்சியில் போராட்டம் நடத்தியிருந்தால் வெள்ளைவான் கடத்தியிருக்கும்! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

கோரிக்கைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி : ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

Posted: 04 Mar 2017 08:09 AM PST

தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, முல்லைத்தீவு மாவட்டக் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர் சிலருடன் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை தங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் சந்திப்புக்கு நன்றி தெரிவிப்பதற்காக இதனை எழுதுகின்றேன். உடன் […]

The post கோரிக்கைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி : ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் appeared first on TamilStar.com.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் தவறிழைக்கும் அரசாங்கம்!

Posted: 04 Mar 2017 08:06 AM PST

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கமானது இணை […]

The post வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் தவறிழைக்கும் அரசாங்கம்! appeared first on TamilStar.com.

காலஅவகாசம் வழங்குவது நீதிக்காக ஏங்கும் மக்களை ஏமாற்றும்! – செல்வம் அடைக்கலநாதன்

Posted: 04 Mar 2017 07:38 AM PST

நல்லிணக்க பொறுப்புகூறலுக்கு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீதிக்காக ஏங்கும் தேசிய இனத்திற்கு சாதகமாக அமையாது என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு கால அவகாசம் வழங்கப்பட கூடாது என தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பல்வேறு வழிகளிலும் […]

The post காலஅவகாசம் வழங்குவது நீதிக்காக ஏங்கும் மக்களை ஏமாற்றும்! – செல்வம் அடைக்கலநாதன் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™