Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இரட்டிப்பு வரி வசூலிப்பு : மன்னிப்பு கோரிய ரொரன்ரோ நகர நிர்வாகம்

Posted: 02 Mar 2017 08:26 AM PST

சொத்து வரி வசூலிப்பில் ஏற்பட்ட தவறுக்காக ரொரன்ரோ நகர நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ள அதேவேளை, மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து சொத்து வரித்தொகை கழிக்கப்பட்டிருந்தால், அவற்றை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கணிப்பீட்டு பொறிமுறையில் ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக சுமார் 44,000 பேருக்கான சொத்து வரி நேற்று இரண்டு தடவைகள் அறவிடப்பட்டுள்ளதாக ரொரன்ரோ நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் முதலாம் நாள் வரி செலுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மற்றும் இரண்டு […]

The post இரட்டிப்பு வரி வசூலிப்பு : மன்னிப்பு கோரிய ரொரன்ரோ நகர நிர்வாகம் appeared first on TamilStar.com.

அல்பேர்டடாவுக்கு லிபரல் அரசாங்கத்தின் உதவிகள் அதிகரிப்பு – பிரதமர்

Posted: 02 Mar 2017 08:21 AM PST

கனடாவில் நாடாளுமன்ற உறு்பபினர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் ஏப்பிரல் 3ஆம் திகதி நடைபெறவுள்ள 5 இடைத் தேர்தல்களில், கல்கரி இரண்டு இடைத் தேர்தலைச் சந்திக்கின்றது. இந்த நிலையி்ல் கல்கரியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் அங்கு பயணம் மேறகொண்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போதே அல்பேர்ட்டாவுககு லிபரல் அரசாங்கம் பல்வேறு வகையிலும் உதவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தினால் வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த அல்பேர்ட்டா […]

The post அல்பேர்டடாவுக்கு லிபரல் அரசாங்கத்தின் உதவிகள் அதிகரிப்பு – பிரதமர் appeared first on TamilStar.com.

பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் ஒன்ராறியோ

Posted: 02 Mar 2017 08:18 AM PST

பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயற்திட்டத்தை ஒன்ராறியோ அரசாங்கம் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக உதவித் திட்டங்கள், பழங்குடியின ஆண்களுக்கான விழிப்பூட்டல் திட்டங்கள் உட்பட, பழங்குடியின பெண்களைப் பாதுகாக்கும் வகையிலான நீண்டகாலத் திட்டங்களை ஒன்ராறியோ அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்காக 100 மில்லியன் டொலர்களையும் ஒன்ராறியோ அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகள் ஆகும் நிலையில், அது குறித்த முன்னேற்ற அறிக்கை ஒன்றை ஒன்ராறியோ மாநில […]

The post பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் ஒன்ராறியோ appeared first on TamilStar.com.

வட மாகாணத்துக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக் கோருகிறார் அத்துரலியே ரதன தேரர்!

Posted: 02 Mar 2017 08:14 AM PST

வடக்கு மாகாணத்துக்கு காணி ,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய பேரவையின் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்ற நிலையில், இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களுக்கு காணியும் பொலிஸ் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கமென குறிப்பிட்ட ரதன தேரர், காணி மற்றும் பொலிஸ் […]

The post வட மாகாணத்துக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக் கோருகிறார் அத்துரலியே ரதன தேரர்! appeared first on TamilStar.com.

கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர்

Posted: 02 Mar 2017 08:04 AM PST

இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளை சுட்டிக்காட்டி தனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அழிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நல்லாட்சி என கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களை மீள் அனுப்புகிறது எனவும் ஆனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக சித்திரவதைகள் தொடர்கின்றது எனவும் ஆதாரத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரின் வினாக்களுக்கு பதில் இன்றி தடுமாறிய இலங்கை வெளிவிவகார […]

The post கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் appeared first on TamilStar.com.

குமரப்பா , புலேந்திரன் மரணம் – முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்கள்!

Posted: 02 Mar 2017 08:00 AM PST

இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றிய முன்னாள் இந்திய இராணுவ வீரரும், இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், 'மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி' என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே – பிற நாடுகளில் – இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட 'காக்டஸ்' […]

The post குமரப்பா , புலேந்திரன் மரணம் – முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்கள்! appeared first on TamilStar.com.

பிணை முறிப்பத்திர ஏல விற்பனையின் போது அர்ஜூன் மகேந்திரன் செய்த வேலை

Posted: 02 Mar 2017 07:56 AM PST

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர ஏல விற்பனை நடைபெற்ற நேரத்தில் மத்திய வங்கியின் அன்றைய ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் அரச கடன் திணைக்களத்தின் அலுவலகத்திற்கு வந்ததாக அது சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இன்று தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆளுநராக பணியாற்றிய எவரும் பிணை முறிப்பத்திரம் வெளியிடப்படும் போது அரச கடன் திணைக்கள அலுவலகத்திற்கு வந்ததில்லை என ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த மத்திய வங்கியின் புள்ளிவிபர திணைக்கள மேலதிக அத்தியட்சகர் […]

The post பிணை முறிப்பத்திர ஏல விற்பனையின் போது அர்ஜூன் மகேந்திரன் செய்த வேலை appeared first on TamilStar.com.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்போவது யார்..? அமெரிக்க பிரித்தானிய பிரதிநிதிகளிடையே விசேட சந்திப்பு

Posted: 02 Mar 2017 07:53 AM PST

அமெரிக்க மற்றும் பிரித்தானியா பிரதிநிதிகளுக்கு இடையில் உயர்மட்ட விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே மற்றும் பிரித்தானியாவின், ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது இலங்கை உள்ளிட்ட பூகோள மனித உரிமைகளை கையாள்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக பூகோள மனித உரிமைகள் விடயங்களில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது […]

The post இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்போவது யார்..? அமெரிக்க பிரித்தானிய பிரதிநிதிகளிடையே விசேட சந்திப்பு appeared first on TamilStar.com.

45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்!

Posted: 02 Mar 2017 07:48 AM PST

இலங்கையின் 45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப், ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஓய்வு பெற்றதையடுத்தே, புதிய நீதியரசராக இன்றையதினம் இவர், பிதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 2007 – 2011 வரையான காலப்பகுதியில் அரச சொலிஸிஸ்ர் ஜென்ரலாகக் கடமையாற்றிய இவர், பலதடைவைகள் பதில் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்! appeared first on TamilStar.com.

நாட்டில் மூடநம்பிக்கை அதிகரித்துள்ளது : ஜனாதிபதி

Posted: 02 Mar 2017 07:45 AM PST

சுதந்திரமான ஜனநாயக சமூகத்தில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த முடியும் என்பதுடன் விமர்சனங்களையும் முன்வைக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக சுதந்திரத்தை உச்சமாக பயன்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். நாடு என்ற வகையில் நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும் என்ற போதிலும் […]

The post நாட்டில் மூடநம்பிக்கை அதிகரித்துள்ளது : ஜனாதிபதி appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™