Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம்

Posted: 21 Mar 2017 12:34 PM PDT

கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் அனாவசியமான செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறது. இதற்காக தேசிய பாதுகாப்புத் திணைக்களத்தில் இடம்பெறும் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறான உத்தரவு திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அனாவசிய போக்குவரத்துகள் மற்றும் நடப்பில் இல்லாத இராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சிகள் என்பவற்றை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு செலவீனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்காகவும், ஏனைய அத்தியாவசிய திட்டங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. […]

The post செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் appeared first on TamilStar.com.

ஒன்ராறியோ மின்கட்டணக் குறைப்பு : லிபரல் கட்சியை விமர்சிக்கும் ஏனைய கட்சிகள்

Posted: 21 Mar 2017 07:58 AM PDT

ஒன்ராறியோவில் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண அதிகாரிப்பானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண குறைப்பு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ள லிபரல் அரசாங்கம், தற்போது தமது மின்கட்டண குறைப்பு தொடர்பிலான விளம்பரங்களை வானொலிகள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையிலேயே ஒன்ராறியோ அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கையை முற்போக்கு பழமைவாதக் கட்சி, புதிய சனநாயகக் கட்சி என்பன விமர்சித்துள்ளன. மின்சாரக் கட்டணக் குறைப்புத் திட்டம் தொடர்பில் ஒன்ராறியோ லிபரல் அரசாங்கம் வெளியிட்டுள்ள […]

The post ஒன்ராறியோ மின்கட்டணக் குறைப்பு : லிபரல் கட்சியை விமர்சிக்கும் ஏனைய கட்சிகள் appeared first on TamilStar.com.

பகிரங்க விவாதம் நடத்த உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

Posted: 21 Mar 2017 07:53 AM PDT

இலங்கைத்தீவில் நீதி, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான ஒரு வரைவுத் தீர்மான முன்மொழிதலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த முன்மொழிதலுக்கு அந்நாடுகளின் ஆதரவும், கவனமாக பார்ப்பதற்குமாக ஒரு மடலும் உடன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஜெனீவாவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா பிரதிநிதி சுகிந்தன் முருகையா இதற்கான தீர்மான முன்மொழிவுடன் கூடிய மடலை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். […]

The post பகிரங்க விவாதம் நடத்த உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை appeared first on TamilStar.com.

போர்க்குற்ற நீதிமன்றத்துக்கோ சர்வதேச நீதிபதிகளுக்கோ இடமில்லை : பிரதமர் திட்டவட்டம்

Posted: 21 Mar 2017 07:50 AM PDT

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் இலங்கையில் உருவாக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை இணைந்து கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்கள் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் ரோம் பிரகடனத்தின் அடிப்படையில் தண்டிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் சர்வதேச நீதவான்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த […]

The post போர்க்குற்ற நீதிமன்றத்துக்கோ சர்வதேச நீதிபதிகளுக்கோ இடமில்லை : பிரதமர் திட்டவட்டம் appeared first on TamilStar.com.

குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா!

Posted: 21 Mar 2017 07:48 AM PDT

தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்r தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளர்களையும் அரசியல் விமசர்களையும் கோத்தபாய ராஜபக்ஷ மரணப் படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக இரகசிய சிறப்பு படை பிரிவு ஒன்றை இயக்கியதாகவும் குறித்த இரகசிய பிரிவானது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாகவும் முன்னாள் […]

The post குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா! appeared first on TamilStar.com.

மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு என்ன செய்யவில்லை! பசில் கேள்வி

Posted: 21 Mar 2017 07:45 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு செய்யாதது என்ன என்று தான் கேள்வி எழுப்புவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "புரட்சியின் ஆரம்பத்திற்கு நாங்களும் தயார்" என்ற தொனிப் பொருளில் மொறட்டுவை ஜனசெத கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரை வெற்றி கொண்டது மாத்திரமல்லாது துறைமுகம், விமான நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தார். […]

The post மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு என்ன செய்யவில்லை! பசில் கேள்வி appeared first on TamilStar.com.

ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருந்தால் ஜெனிவா தீர்மானத்தின் 6 ஆவது பிரிவை நீக்க வேண்டும்! – பீரிஸ்

Posted: 21 Mar 2017 07:43 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான யோசனையின் ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மனித உரிமைகள் ஆணையாளரால் நாளை இலங்கை தொடர்பிலான விடயங்கள் ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவு வௌ்ளிக்கிழமை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2015இல் இலங்கை தொடர்பில் […]

The post ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருந்தால் ஜெனிவா தீர்மானத்தின் 6 ஆவது பிரிவை நீக்க வேண்டும்! – பீரிஸ் appeared first on TamilStar.com.

சிறிய தரப்பே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கின்றது – அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted: 21 Mar 2017 07:41 AM PDT

புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும், அதற்கான சர்வஜன வாக்கெடுப்பையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய தரப்பினரே எதிர்ப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் நாட்டை கட்டியெழுப்பும் சக்திகள் சர்வஜன வாக்கெடுப்பையும், புதிய அரசியமைப்புச் சட்டத்திற்கும் இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்பான மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சமஷ்டி நாடு ஒன்றை கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகார பரவலாக்கலுக்கு […]

The post சிறிய தரப்பே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கின்றது – அமைச்சர் ராஜித சேனாரத்ன appeared first on TamilStar.com.

விதுரன் வில் முறிப்பதை விட தருமர் பக்கம் வருவதே நல்லது

Posted: 21 Mar 2017 07:37 AM PDT

வில்லுக்கு விஜயன் என்பதெல்லாம் பின்னாளில் ஏற்பட்டது. உண்மையில் வில்லுக்கு விதுரன் என்றே கூறப்பட்டு வந்தது. கெளரவர் தலைவன் துரியோதனனின் வசைச் சொல் தாங்க முடியாமல் விதுரன் தன் வில்லை சபை நடுவே முறித்தெறிகிறான். இனிமேல் யான் போர்க்களத்தில் வில்லெடேன் என்ற சபதத்துடன் விதுரன் தன் வில்லை முறித்ததனால் வில்லுக்கு விதுரன் என்ற பெயர் அருகிற்று. பரவாயில்லை கெளரவர் சேனைகளின் அதர்மம் கண்டே விதுரன் வில் முறித்தான். இதனால் குருஷேத்திரப் போரில் துரியோதனனின் பக்கம் விதுரன் நின்று விற்போர் […]

The post விதுரன் வில் முறிப்பதை விட தருமர் பக்கம் வருவதே நல்லது appeared first on TamilStar.com.

முக்கிய அமைச்சுக்களைக் குறிவைக்கும் பேராசை இல்லை! – என்கிறார் சரத் பொன்சேகா

Posted: 21 Mar 2017 07:34 AM PDT

முக்கிய அமைச்சுப் பதவிகளை இலக்கு வைக்கும் எவ்வித பேராசையும் தமக்குக் கிடையாது என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்." தற்பொது வகித்து வரும் பதவியை வகிக்கவே நான் விரும்புகின்றேன். மிகவும் சிரமப்பட்டு புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சில் தொடர்ந்தும் கடமையாற்றவே விரும்புகின்றேன், முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் எனக்கு எவ்வித பேராசையும் கிடையாது என […]

The post முக்கிய அமைச்சுக்களைக் குறிவைக்கும் பேராசை இல்லை! – என்கிறார் சரத் பொன்சேகா appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™