Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய ரொரன்ரோ நகரபிதா

Posted: 19 Mar 2017 09:33 AM PDT

ரொரன்ரோ நகரபிதா தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடக்கில் இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்கால் பகுதி மண்ணில் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். வர்த்தக நோக்கங்களின் அடிப்படையில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கான தமது 10 நாள் வர்த்தக பயணத்தை ரொரன்ரோ நகரபிதா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த 15ஆம் நாள் ஆரம்பித்திருந்த இந்த வர்த்தகப் பயணத்தின் முதல் கட்டமாக இந்தியா சென்றிருந்த அவர்கள், அங்கு புது டெல்லி, ஹைதரபாத், மும்பாய் ஆகிய நகரங்களுக்கு சென்று பல்வேறு சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர். […]

The post முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய ரொரன்ரோ நகரபிதா appeared first on TamilStar.com.

ஈஸ்ட் யோர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் பலி

Posted: 19 Mar 2017 09:30 AM PDT

ஈஸ்ட் யோர்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஒன்பது மணியளவில் விக்ரோறியாப் பார்க் அவனியூ மற்றும் Dawes வீதிப் பகுதிக்கு தெற்கே, Meighen Avenueவில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் கிடைத்து காவல்த்துறையினர் அந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் மோசமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

The post ஈஸ்ட் யோர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் பலி appeared first on TamilStar.com.

இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமாகாது! – நவநீதம்பிள்ளை

Posted: 19 Mar 2017 09:25 AM PDT

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மீள் உருவாக்கம் போன்ற இலக்குகளை அடைவது சாத்தியமாகாது என்று ஐ.நா மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கிடைக்கும் வகையிலான பொறுப்புக்கூறல் […]

The post இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமாகாது! – நவநீதம்பிள்ளை appeared first on TamilStar.com.

வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Posted: 19 Mar 2017 09:23 AM PDT

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தவறானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பியகம மல்வானை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும் அப்படியான நிலைமை இல்லை. மகிந்த ராஜபக்ச ஒன்று தன்னிடம் இருந்து இல்லாமல் போயுள்ளதால் ஆங்காங்கே ஒவ்வொரு கதைகளை கூறி வருகிறார். வடக்கின் அரசியல் […]

The post வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் appeared first on TamilStar.com.

துதிபாடும் அரசியலுக்கு இடமில்லை! ஜனாதிபதி

Posted: 19 Mar 2017 09:09 AM PDT

மன்னர்களுக்கு முன்னால் துதிபாடும் அரசியல் சம்பிரதாயத்திற்கு எதிர்காலத்தில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சரியான நோக்கமும், கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாமல் அரசியல் அமைப்பாக முன்னோக்கி செல்ல எவருக்கும் முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சாஸ்த்ராலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அனுபவம், அறிவு மற்றும் புரிந்துணர்வோடு செயற்படும் அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த இவ்வாறான அரசியல் […]

The post துதிபாடும் அரசியலுக்கு இடமில்லை! ஜனாதிபதி appeared first on TamilStar.com.

பொதுஜன பெரமுன கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு..!.

Posted: 19 Mar 2017 08:37 AM PDT

பொதுஜன பெரமுன கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கு,புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஏப்ரல் 2ம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தொடர்ந்து ஏழு நாட்களில் மாத்திரமே அங்கத்தவர்கள் இணைந்துக் கொள்ளலாம் என்றும் பசில் கூறியுள்ளார். தெஹிவளையில் பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பொதுஜன பெரமுன கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு..!. appeared first on TamilStar.com.

இரண்டு வருடங்களுக்கு காலஅவகாசம் வழங்குவது சரியான முடிவல்ல! – விக்னேஸ்வரன்

Posted: 19 Mar 2017 08:21 AM PDT

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை 28 நாளாக தொடர விட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்ததை தருகிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். "எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம். முதலில் இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை என்பது எனது கேள்வி. அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் பொது மக்களின் உண்மையான கஸ்டங்களை ஓரளவுக்காகவது தெரிந்து வைத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். […]

The post இரண்டு வருடங்களுக்கு காலஅவகாசம் வழங்குவது சரியான முடிவல்ல! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நாவே நடவடிக்கை எடுக்க வேண்டும்! – இரா.சம்பந்தன்

Posted: 19 Mar 2017 08:02 AM PDT

ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நாவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை அமைக்க மாட்டோம் என்று அமைச்சர்களான மங்கள சமரவீரவும், லக்ஷ்மன் கிரியெல்லவும் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கம் சொல்வதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் […]

The post பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நாவே நடவடிக்கை எடுக்க வேண்டும்! – இரா.சம்பந்தன் appeared first on TamilStar.com.

கால அவகாசம் கிடைப்பதை அடுத்து அரசு கதைப்பதை பார்த்தீர்களா?

Posted: 19 Mar 2017 07:54 AM PDT

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு நாட்டில் இன, மத, மொழி பேதங்களைக் களைகின்ற நோக்கம் எதுவும் அவசியமில்லை. நல்லாட்சி என்று கூறிக்கொண்டாலும் நல்லாட்சியும் முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே நடந்து கொள்கின்றதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகளை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லை என்பதே உண்மை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் பேரினவாதிகள் ஆத்திரமடைவர்.காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டால் படையினர் […]

The post கால அவகாசம் கிடைப்பதை அடுத்து அரசு கதைப்பதை பார்த்தீர்களா? appeared first on TamilStar.com.

வடக்கு அரசியல் தலைவர்கள் கூறும் எதுவும் நாட்டில் நடக்காது! – ருவான் விஜேவர்த்தன

Posted: 19 Mar 2017 07:45 AM PDT

வடக்கின் அரசியல் தலைவர்கள் கூறும் விடயங்கள் நாட்டில் நடக்காது. வெளிநாட்டு நீதிபதிகள் எமக்கு அவசியமில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மல்வானை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும் அப்படியான நிலைமை இல்லை. மகிந்த ராஜபக்ச ஒன்று தன்னிடம் இருந்து இல்லாமல் போயுள்ளதால் ஆங்காங்கே ஒவ்வொரு கதைகளை கூறி வருகிறார். […]

The post வடக்கு அரசியல் தலைவர்கள் கூறும் எதுவும் நாட்டில் நடக்காது! – ருவான் விஜேவர்த்தன appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™