Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கனடாவில் போலி கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட வந்த தமிழ் பெண் கைது

Posted: 18 Mar 2017 04:33 PM PDT

கடனாவில் போலி கடன் அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் Ajax பகுதியில் உள்ள 25 வயதான நிரூபா ஜெகதீஸ்வரன் என்ற பெண்ணை டொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். டொராண்டோ இடைத்தங்கல் ஆணையத்தில் டோக்கன்களைப் ( TTC tokens) பெற்றுக்கொள்வதற்காக, போலி கடன் அட்டைகளை குறித்த பெண் பயன்படுத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post கனடாவில் போலி கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட வந்த தமிழ் பெண் கைது appeared first on TamilStar.com.

கத்திக் குத்துக் காயங்களுடன் ரொரன்ரோ வீதியில் ஓடிய நபர்

Posted: 18 Mar 2017 07:47 AM PDT

பல்வேறு கத்திக்குத்துக் காயங்களுடன் வீதியில் தப்பியோடிச் சென்று மயங்கிச் சரிந்த நபர் ஒருவர் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, இரவு 11.20 அளவில் Gerrard Streetற்கு தெற்கே Yonge Streetஇல் அமைந்துள்ள மக்டொனால்ட் உணவகம் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்திற்காக சுமார் ஆறு ஆண்கள் இந்த நபரைத் தாக்கியுள்ளதாக காவல்த்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களால் பல இடங்களில் கத்திக் குத்துக்கு […]

The post கத்திக் குத்துக் காயங்களுடன் ரொரன்ரோ வீதியில் ஓடிய நபர் appeared first on TamilStar.com.

மொன்றியல் வான்வெளியில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து

Posted: 18 Mar 2017 07:45 AM PDT

மொன்றியல் நகரில் இரண்டு சிறிய விமானங்கள் வணிக நிலையப்பகுதி ஒன்றின் வான் பரப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ஒரு விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய விமானி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களிலும் தலா ஒவ்வொரு விமானி மாததிரமே இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை இந்த விபத்தை நேரில் பார்த்த இரண்டு நபர்களும் ஏக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர். விமானங்களில் […]

The post மொன்றியல் வான்வெளியில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து appeared first on TamilStar.com.

இலங்கையில் சேகு வேரா நட்ட மரம் – வெட்ட முயற்சித்தவர்கள் கைது

Posted: 18 Mar 2017 07:42 AM PDT

சுமார் 62 வருடங்களுக்கு முன்னர் சேகு வேராவினால் நடப்பட்டதாக கூறப்படும் மெஹொகனி மரம் உட்பட பெறுமதியான மரங்களை இரகசியமான முறையில் வெட்ட திட்டமிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் யஹாலகெலேவத்தை பிரதேசத்தில் மரங்களை வெட்ட திட்டமிட்டிருந்துடன் சில மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சேகு வேராவினால் நடப்பட்ட மரத்திற்கு அருகில் உள்ள பெறுமதியான மரங்கள் சிலவற்றை சந்தேக நபர்கள் வெட்டி வீழ்த்தியுள்ளனர். […]

The post இலங்கையில் சேகு வேரா நட்ட மரம் – வெட்ட முயற்சித்தவர்கள் கைது appeared first on TamilStar.com.

23ஆவது நாளாக தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!

Posted: 18 Mar 2017 07:36 AM PDT

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 23ஆவது நாளாகவும் தொடர்கின்றது.கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை குறித்த மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இப்போராட்டத்திற்கு இளைஞர், யுவதிகளும் ஆதரவினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

The post 23ஆவது நாளாக தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்! appeared first on TamilStar.com.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், நல்லாட்சிக்கும் மஹிந்த அரசாங்கத்தின் அனுபவமே கிடைக்கும் – சுமந்திரன் எம்.பி

Posted: 18 Mar 2017 07:31 AM PDT

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளைபோல் நிறைவேற்றாமல் விட இயலாது. அவ்வாறு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போனால் மஹிந்த அரசாங்கம் பெற்ற கசப்பான அனுபவத்தினை இந்த அரசாங்கமும் பெறும். அவ்வாறான நிலைக்கு செல்லாமல் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் கூறியுள்ளார். இன்றைய தினம் யாழ்.வந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவா அமர்வு நிலைமைகள் குறித்தும், இலங்கைக்கு 2 வருட கால […]

The post வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், நல்லாட்சிக்கும் மஹிந்த அரசாங்கத்தின் அனுபவமே கிடைக்கும் – சுமந்திரன் எம்.பி appeared first on TamilStar.com.

தமிழர்களின் அரசியல் இணையத்தளம் வழியாக உலக முழுவதும் பரவுகிறது – பிரதமர் பெருமிதம்

Posted: 18 Mar 2017 07:27 AM PDT

இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தவறான நிலைப்பாட்டுக்கு வந்து நாடு பிரிக்கப்பட போவதாகவோ கூற வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முக்கிய இடத்திற்குள் வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஊடகவியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பில் அஞ்சல் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு […]

The post தமிழர்களின் அரசியல் இணையத்தளம் வழியாக உலக முழுவதும் பரவுகிறது – பிரதமர் பெருமிதம் appeared first on TamilStar.com.

கைது செய்யப்படுவாரா மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன? – சிங்கள ஊடக செய்தியால் பரப்பரப்பு

Posted: 18 Mar 2017 07:23 AM PDT

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் எழுதிய "நந்திகடலுக்கான பாதை" என்ற புத்தகத்தின் அடிப்படையாக வைத்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் எழுதிய அந்த புத்தகத்தின் ஊடாக பல இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி அவரை கைது செய்யவுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.நந்திக்கடலுக்கான பாதை என்ற புத்தகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.அந்தப் புத்தகத்தின் ஊடாக இராணுவத்தினர் மேற்கொண்ட […]

The post கைது செய்யப்படுவாரா மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன? – சிங்கள ஊடக செய்தியால் பரப்பரப்பு appeared first on TamilStar.com.

ஐ.தே.கட்சியின் செயலாளராக அகில விராஜ் – துணை தலைவர் சரத் பொன்சேகா

Posted: 18 Mar 2017 07:20 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியில் புதிதாக மூன்று துணை தலைவர் பதவிகளை உருவாக்குவது குறித்து அந்த கட்சியின் செயற்குழுவில் பேசப்பட்டுள்ளது. இந்த துணை தலைவர் பதவிகளில் ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரை நியமிப்பது என ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடை அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளதாக […]

The post ஐ.தே.கட்சியின் செயலாளராக அகில விராஜ் – துணை தலைவர் சரத் பொன்சேகா appeared first on TamilStar.com.

விமல் வீரவன்ச மீதுகொலை முயற்சி

Posted: 18 Mar 2017 07:15 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பஸ் மீது, பாதாள உலக குழுவினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளலாம் என தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமலுடன் இன்னும் ஒருவரை அழைத்துச் சென்றால், அவர் மீது படும் துப்பாக்கிச் […]

The post விமல் வீரவன்ச மீதுகொலை முயற்சி appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™