Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


யாஹூ இணைய ஊடுருவல் : கனேடியர் கைது

Posted: 16 Mar 2017 07:28 AM PDT

இணைய மோசடிகளுள் மிகவும் பாரதூரமானதாக கருதப்படும் யாஹூ இணைய ஊடுருவல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் மீது குற்றஞ்சாட்டபட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவராக கனேடியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கரீம் பராட்டோவ் எனப்படும் அந்த 22 வயதுக் கனேடியர் தெற்கு ஒன்ராறியோவில் வசித்து வந்த நிலையில் ஹமில்ட்டனில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஒன்ராறியோவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட […]

The post யாஹூ இணைய ஊடுருவல் : கனேடியர் கைது appeared first on TamilStar.com.

ஒன்ராறியோ அரசாங்கத்தின் மின்கட்டண குறைப்பு திட்டம் என்ன? – NDP

Posted: 16 Mar 2017 07:25 AM PDT

ஒன்ராறியோ மாநில அரசாங்கத்தின் மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பான திட்டத்தினை வெளியிடுமாறு புதிய ஜனநாயக கட்சி கோரியுள்ளது. மின்சாரக்கட்டண அதிகரிப்புத் தொடர்பில் ஒன்ராறியோ மக்கள் அதிருப்தி கொண்டிருக்கும் நிலையில், கட்டணக் குறைப்புத் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக மாநிலத்தின் லிபரல் அரசாங்கம் கூறி வருகின்றது. இந்த மாத ஆரம்பத்தில் முதல்வர் கத்தலின் வின் விடுத்திருந்த அறிவிப்பொன்றில், எதிர்வரும் கோடை காலத்திலிருந்து சராசரியாக 25 சதவீத மின்சாரக் கட்டணக் குறைப்பினை ஒன்ராறியோ மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். […]

The post ஒன்ராறியோ அரசாங்கத்தின் மின்கட்டண குறைப்பு திட்டம் என்ன? – NDP appeared first on TamilStar.com.

மஹிந்தவிடம் இன்று விசாரணை- கைது செய்யப்படுவாரா?

Posted: 16 Mar 2017 07:17 AM PDT

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆஜராகவுள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து இன்று மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையினால் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சார […]

The post மஹிந்தவிடம் இன்று விசாரணை- கைது செய்யப்படுவாரா? appeared first on TamilStar.com.

பந்துல கோரிய 300 மில்லியனுக்கு 2 பில்லியன் கோரும் நிதியமைச்சர்

Posted: 16 Mar 2017 07:12 AM PDT

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் இரண்டு பில்லியன் இழப்பீட்டை கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். 300 மில்லியன் கோரி பந்துல குணவர்தன, நிதியமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக நிதியமைச்சர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு எதிரில் பொய்யான தகவல்களை வழங்க வேண்டாம் என பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை சம்பந்தமாக அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இழப்பீடு […]

The post பந்துல கோரிய 300 மில்லியனுக்கு 2 பில்லியன் கோரும் நிதியமைச்சர் appeared first on TamilStar.com.

ஒரு துளி இரத்தம் சிந்தினாலும் சிறை செல்ல நேரிடும்! – கவுணாவத்தை ஆலய நிர்வாகத்துக்கு நீதிபதி எச்சரிக்கை

Posted: 16 Mar 2017 07:09 AM PDT

கவுணாவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலிக்கு விதிக்கப்பட்ட தடையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிபதி கவுணாவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆலயத்தில் மிருக பலியிடுதல் தடை நீடிக்கப்படுகின்றது. தடையை மீறி ஆலய சூழலில் மிருகத்தின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் , நிர்வாக சபையினர் , ஆலய பூசகர் […]

The post ஒரு துளி இரத்தம் சிந்தினாலும் சிறை செல்ல நேரிடும்! – கவுணாவத்தை ஆலய நிர்வாகத்துக்கு நீதிபதி எச்சரிக்கை appeared first on TamilStar.com.

பதவியால் எதிர்ப்பு இனத்தால் ஒற்றுமை

Posted: 16 Mar 2017 07:05 AM PDT

மகிந்த தரப்பும் மைத்திரி – ரணில் தரப்பும் பதவிப் போட்டிகளில் எதிர்ப்பு நிலை கொண்டுள்ளனரே தவிர, இனத்தால் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் நன்கு உணர வேண்டும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றிருந்தால் என் அத்தியாயம் முடிந்து போயிருக்கும் என்ற பொருள்பட கூறியிருந்தார். அதே மைத்திரிபால சிறிசேன சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதில் மிகவும் தீவிரமாக இருந்தார் […]

The post பதவியால் எதிர்ப்பு இனத்தால் ஒற்றுமை appeared first on TamilStar.com.

வட மாகாணசபையின் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நாளை கையளிப்பு!

Posted: 16 Mar 2017 07:03 AM PDT

ஜெனிவா தீர்மானம் தொடர்பாக வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேரடியாக கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்தும் யாழ். ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றப்பட்ட […]

The post வட மாகாணசபையின் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நாளை கையளிப்பு! appeared first on TamilStar.com.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பே இல்லை!: மங்கள சமரவீர!

Posted: 16 Mar 2017 07:00 AM PDT

நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேவெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை நீதித்துறை பொறிமுறை தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை நியமிக்குமாறுமுல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுவருகின்றது. ஆனால்,சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம்அறிவித்து வருகின்றது. இதேவேளை, 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு […]

The post வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பே இல்லை!: மங்கள சமரவீர! appeared first on TamilStar.com.

மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் பதவி நீக்கம் நல்லாட்சி அரசுக்கு அபகீர்த்தி! – ஆனந்தசங்கரி

Posted: 16 Mar 2017 06:58 AM PDT

மட்டக்களப்பில் சட்டத்தரணியாக கடமையாற்றிய ராமநாதன் கண்ணன் யாழ். நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டமை கண்டனத்திற்குரியது என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நியமனம் சரியான சிபாரிசுகளுடன் தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தான் நம்புவதாகவும் இப்படியான ஒரு நியமனத்தை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய முடியும்? எ குறித்த பதவி நீக்கமானது, தேசிய […]

The post மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் பதவி நீக்கம் நல்லாட்சி அரசுக்கு அபகீர்த்தி! – ஆனந்தசங்கரி appeared first on TamilStar.com.

நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல அனுமதி

Posted: 16 Mar 2017 06:56 AM PDT

ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் ஒழுங்கு செய்துள்ள கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை சட்டத்தரணிகள் அணியில் நாமல் ராஜபக்ச இடம்பெற்றுள்ளார். இதனால், அந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டொஸ்கி, நாமல் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை தளர்த்தி அனுமதியை வழங்கியுள்ளார். ஆசிய சட்டத்தரணிகள் […]

The post நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல அனுமதி appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™