Tamil Star |
- ரொரன்ரோவில் கூகைக்கட்டு நோய் தாக்கம் அதிகரிப்பு
- ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்….!
- யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய வாள்வெட்டுக் குழு: எங்களுக்கு ஆவா குழுவை தெரியும் என மிரட்டல்
- தெற்காசியாவை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்! இலங்கை தப்பித்துக் கொள்ளுமா?
- களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பொலிஸ் அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும்
- சமகால அரசாங்கத்தின் நடவடிக்கையால் மோட்டார் வாகன பதிவில் வீழ்ச்சி!
- ஐக்கிய நாடுகள் செயலாளர் விரைவில் இலங்கைக்கு விஜயம்
- அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது
- காணாமல்போனோர் அலுவலக சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி!
- பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்திய கோத்தபாய: கம்மன்பில புகழாரம்
| ரொரன்ரோவில் கூகைக்கட்டு நோய் தாக்கம் அதிகரிப்பு Posted: 01 Mar 2017 09:10 AM PST ரொரன்ரோ நகரில் இந்த ஆண்டின் இதுவரையான காவல்பகுதியில் 18பேர் கூகைக்கட்டு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இநத தகவலை நேற்று வெளியிட்டுள்ள ரொரன்ரோ சுகாதார திணைக்களம், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 18 வயதிலிருந்து 35 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார திணைக்கள அதிகாரிகள், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்த நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டு வந்த நிலையில், அண்மைய […] The post ரொரன்ரோவில் கூகைக்கட்டு நோய் தாக்கம் அதிகரிப்பு appeared first on TamilStar.com. |
| Posted: 01 Mar 2017 08:57 AM PST "ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்" மக்கள் குறைகேள் அலுவலகத்தினை சனிக்கிழமை 4ம் திகதி ஜனாதிபதி யாழில் திறந்து வைக்கவுள்ளார். முதன்முதலாக வடமாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே வடமாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 04 ம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக மக்களுக்கு தீர்வுகளை […] The post ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்….! appeared first on TamilStar.com. |
| யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய வாள்வெட்டுக் குழு: எங்களுக்கு ஆவா குழுவை தெரியும் என மிரட்டல் Posted: 01 Mar 2017 08:52 AM PST யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை வாள்வெட்டுக்குழு ஒன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இன்றைய தினம் இராமநாதன் வீதியில் இருந்து பல்கலைக்கழக நுழைவாசலுக்கு வந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் சிறு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு, அவர்களுக்கிடையில் சச்சரவும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், தனக்குத் தெரிந்த வாள்வெட்டுக் குழுவினரை அழைத்துள்ளார். குறித்த மாணவன் மதுபோதையில் இருந்ததாகவும், இந்நிலையில் தனது சாகாக்கள் நால்வரை அழைத்துக்கொண்டு யாழ்.பல்கலைகழகத்தின் முகப்புக்கு வந்துள்ளார். […] The post யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய வாள்வெட்டுக் குழு: எங்களுக்கு ஆவா குழுவை தெரியும் என மிரட்டல் appeared first on TamilStar.com. |
| தெற்காசியாவை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்! இலங்கை தப்பித்துக் கொள்ளுமா? Posted: 01 Mar 2017 08:42 AM PST உலகளாவிய ரீதியில் "காலநிலை மாற்றம்" எனும் சொற்பதம் தொடர்பாக அண்மைக்காலங்களில், அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையில் காலநிலை மாற்றம் என்றால் என்ன? மிக எளிமையாகக் கூற வேண்டுமாயின் பருவநிலையில் ஏற்படும் மாற்றம் காலநிலை மாற்றம். தற்போது இலங்கையில் மட்டும் அல்ல உலகில் எல்லா இடங்களிளும் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகும். மனிதர்களால் வெளியான அசுத்தமான வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை […] The post தெற்காசியாவை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்! இலங்கை தப்பித்துக் கொள்ளுமா? appeared first on TamilStar.com. |
| களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பொலிஸ் அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் Posted: 01 Mar 2017 08:27 AM PST களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாரிகள் பொறுப்பாக செயற்படாத காரணத்தினால்தான் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது இனந்தெரியாத […] The post களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பொலிஸ் அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் appeared first on TamilStar.com. |
| சமகால அரசாங்கத்தின் நடவடிக்கையால் மோட்டார் வாகன பதிவில் வீழ்ச்சி! Posted: 01 Mar 2017 08:22 AM PST கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 11 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆயிரத்து 487 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் இந்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆயிரத்து 101 மோட்டார் வாகனங்கள் மாத்திரமே புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. […] The post சமகால அரசாங்கத்தின் நடவடிக்கையால் மோட்டார் வாகன பதிவில் வீழ்ச்சி! appeared first on TamilStar.com. |
| ஐக்கிய நாடுகள் செயலாளர் விரைவில் இலங்கைக்கு விஜயம் Posted: 01 Mar 2017 08:14 AM PST ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்ரனியோ குரெட்டஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்த கூட்ட தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தலையிலா குழுவினர் ஜெனிவா சென்றுள்ளனர். இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் அன்ரனியோ குரெட்டஸ் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று […] The post ஐக்கிய நாடுகள் செயலாளர் விரைவில் இலங்கைக்கு விஜயம் appeared first on TamilStar.com. |
| அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது Posted: 01 Mar 2017 08:02 AM PST எந்தவொரு நாட்டிலும் அரசாங்கத்தால் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது. என மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என். குணலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இலகுவில் தொழில் பெற்றுகொள்ளக் கூடிய உயர்கல்வியை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். […] The post அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது appeared first on TamilStar.com. |
| காணாமல்போனோர் அலுவலக சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி! Posted: 01 Mar 2017 07:54 AM PST காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். The post காணாமல்போனோர் அலுவலக சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி! appeared first on TamilStar.com. |
| பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்திய கோத்தபாய: கம்மன்பில புகழாரம் Posted: 01 Mar 2017 07:50 AM PST பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ போன்ற தைரியமான தலைவர்களால், பாதாளக் குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. இருப்பினும், கடந்த இரண்டு வருடங்களாக பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் மேலோங்கி உள்ளதாகவும் […] The post பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்திய கோத்தபாய: கம்மன்பில புகழாரம் appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |