Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பி.எஸ் - 4 வாகனங்கள் மட்டும் விற்பனை: 10 அம்சங்கள்

Posted: 30 Mar 2017 03:32 AM PDT

புதுடில்லி: நாட்டில் இனிமேல், வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், புகைகக்காத பி.எஸ் - 4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ்., என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகை மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில், 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பி.எஸ் - 3 தொழில்நுட்பம், 2005ல் டில்லி, சென்னை உட்பட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் நாடு முழுவதும், 2010ல் விஸ்தரிக்கப்படது. பி.எஸ் - 4 தொழில்நுட்பம் 2016 முதல், 13 நகரங்களில் அமலுக்கு வந்தது. வரும், ஏப்ரல், 1 முதல் நாடு ...

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நிலை... பரிதாபம்!:விளம்பர அரசியல்வாதிகளால் தொடரும் குழப்பம்

Posted: 30 Mar 2017 09:32 AM PDT

டில்லியில், தமிழக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்து உள்ள நிலையில், அரசியல்வாதிகள் ஆளாளுக்கு வந்து பார்வையிட்டு, புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்து விட்டு, விளம்பரம் தேடிச் செல்கின்றனர்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தமிழக விவசாயிகள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். துவக்கத்தில் சாதாரண மாகவே இது ஆரம்பித்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்களுடன் பேசிய தும், ஒரு சில தினங்களில் முடிவதாகவும் இருந்தது.ஆனால், விவசாயிகளுக்கு, உணவு உள்ளிட்ட வசதிகளை, டில்லி வாழ் தமிழர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், சில ...

தேர்தலை சுதந்திரமாக நடத்த ஆணையம் முடிவு

Posted: 30 Mar 2017 10:10 AM PDT

சென்னை: தேர்தலை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது உறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர் உமேஷ்சின்ஹா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதிரி ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்படும். ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்படும். கேமரா மற்றும் ஜிபிஎஸ் மூலம் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர்.256வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் 2 ஐ.ஏ.எஸ்.2 ...

தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தினகரன்... குமுறல்!:13 அமைச்சர்கள் தனக்கு எதிராக வேலை செய்வதாக குற்றச்சாட்டு:

Posted: 30 Mar 2017 10:33 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன், தன் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.

தன் வெற்றியை விரும்பாத, 13 அமைச்சர்கள், தனக்கு எதிராக வேலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், 80 ஆயிரம் ஓட்டுகள் பெறுவார் என, வெளியான சர்வே முடிவால், ஒட்டுமொத்த சசி தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தில், தொண்டர் களின் வெள்ளத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நீந்தி செல்லும் அளவுக்கு கூட்டம் கூடுகிறது. தினகரனுக்கு ...

பழைய மனை விற்பனை பதிவுக்கு மீண்டும் தடை : பதிவுத்துறை உத்தரவால் அதிர்ச்சி

Posted: 30 Mar 2017 09:36 AM PDT

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்ய விதிக்கப்பட்டி ருந்த தடையை, உயர் நீதிமன்றம் தளர்த்தியும், அதை அமல்படுத்துவதை பதிவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இது, பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு, 2016 செப்., 9ல் தடை விதித்தது.
முடக்கம் :
இதனால் வீடுகள்,மனைகள் விற்பனை தொழில் முற்றிலும் முடங்கியது. தடையை நீக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், ...

இரவு பணிக்கு தடை விதிக்க பெண்கள் எதிர்ப்பு

Posted: 30 Mar 2017 09:53 AM PDT

பெங்களூரு: 'பெண்களை இரவு பணியில் அமர்த்த தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்' என, கர்நாடக சட்டசபை கமிட்டி பரிந்துரைத்துள்ளதற்கு, பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கர்நாடகாவில், காங்கிரசை சேர்ந்த சித்த ராமையா முதல்வராக உள்ளார். தலைநகர் பெங்களூரில் ஏராளமான, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந் துள்ளன.இதில், 15 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்ற னர்; அவர்களில், ஐந்து லட்சம் பேர் பெண்கள். இந்நிலையில், பெண்களுக்கு இரவு பணி வழங்குவதற்கு தடைவிதிக்கவலியுறுத்தி,
கர்நாடக, எம்.எல்.ஏ.,க்கள்அடங்கிய சட்டசபை கமிட்டி ...

ஜெயலலிதா சொத்து வழக்கு அடுத்த மாதம் 5ல் விசாரணை

Posted: 30 Mar 2017 10:06 AM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நீக்கியதை எதிர்த்து, கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, அடுத்த மாதம், 5 முதல் விசாரிக்கப் படவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்.,14ல் தீர்ப்பு அளித்தது. அப்போது, ஜெயலலிதா மரணமடைந்ததால், அவரை இவ்வழக்கில் இருந்து நீக்குவதாகவும், மற்ற குற்றவாளிகளான அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி ...

ஆர்.கே.நகரில் நடமாடும் எம்.எல்.ஏ., அலுவலகம்; அ.தி.மு.க., - பன்னீர் அணி அதிரடி வாக்குறுதி

Posted: 30 Mar 2017 10:47 AM PDT

சென்னை:'ஆர்.கே.நகர் தொகுதி யில், மதுசூதனன் வெற்றி பெற்றதும், நடமாடும், எம்.எல்.ஏ., அலுவலகம் அமைக்கப்படும்' என, பன்னீர் அணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., - பன்னீர் அணி சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். நேற்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தேர்தல் அறிக்கை வெளியிட்டார். முதல் பிரதியை, மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* நாட்டிலேயே முதன்முறையாக, ஆர்.கே.நகர் தொகுதியில், நடமாடும், எம்.எல்.ஏ., அலுவலகம் அமைக்கப்படும். இதில், மூன்று ...

தமிழகத்தில் லாரிகள் 'ஸ்டிரைக்' துவங்கியது: சரக்குகள் தேக்கத்தால் விலை உயரும் அபாயம்

Posted: 30 Mar 2017 10:53 AM PDT

லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகளு டன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேற்று நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்த தால், லாரிகள், 'ஸ்டிரைக்' நீடிக்கிறது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலர் தனராஜ், சேலம் மாவட்ட தலைவர் சென்னகேசவன் ஆகியோர், நேற்று கூறியதாவது:
அமைச்சர் மறுப்பு
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன், நேற்று பேச்சு நடத்தினோம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த் தப்பட்டுள்ள கட்டணங்களை குறைக்க வும், ...

'ஏசி' காரில் பவனி வந்து தீபா பிரசாரம்! இறங்கி வந்து ஓட்டு கேட்க மக்கள் வலியுறுத்தல்

Posted: 30 Mar 2017 10:56 AM PDT

சென்னை:'ஏசி' காரின் முன் இருக்கையில் அமர்ந்து, பிரசாரம் செய்த தீபாவை, இறங்கி வந்து ஓட்டு கேட்கும்படி, பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில், ஜெ., அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். அமர்ந்தபடி ஓட்டு கேட்டார்நேற்று, தண்டையார்பேட்டை, வைத் தியநாதன் மேம்பாலம் சந்திப்பு, காமராஜர் நகர், நேரு நகர், நாவலர் நகர் பகுதிகளில், ஓட்டு சேகரித்தார்.வைத்தியநாதன் மேம்பால சந்திப்பில், காலை, 9:00 மணிக்கு, பிரசாரத்தை துவக்கிய தீபா, காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி ஓட்டு கேட் டார். ஜெயலலிதா, ...

பார்லி.,க்கு வராத சச்சின் பதவி விலகட்டும்: சமாஜ்வாதி எம்.பி.,

Posted: 30 Mar 2017 12:07 PM PDT

புதுடில்லி: ‛ராஜ்யசபா நியமன எம்.பி.,யான சச்சின் டெண்டுல்கர் பார்லி.,க்கு வருவதில்லை; அவருக்கு விருப்பமில்லை என்றால் பதவி விலகட்டும்' என சமாஜ்வாதி எம்.பி., தெரிவித்தார்.
விவாதம்:
ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால் பேசியதாவது: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா போன்ற நியமன உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதே இல்லை. இவ்வாறு தொடர்ந்து வராமல் இருப்பது, அவர்களுக்கு, இதில் விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு விருப்பமில்லாவிட்டால், பதவியை ராஜினாமா ...

ஜோதிடர்களின் கருத்து கணிப்பு; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Posted: 30 Mar 2017 01:28 PM PDT

புதுடில்லி: 'தேர்தலின்போது, கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட சமயத்தில், ஜோதிடர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடக் கூடாது' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
உ.பி., உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போது, முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நாளில் இருந்து, இறுதிகட்ட தேர்தல் நடந்த நாள் வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது.
ஆனால், சில, 'டிவி' சேனல்களில் ஜோதிடர்களை வைத்து, எந்த கட்சி வெற்றி பெறும் என, கணிப்புகள் வெளியிடப்பட்டன. இது குறித்து, ...

‛தினகரன் அணி மிரட்டலை சமாளிக்க வழக்கறிஞர் குழு'

Posted: 30 Mar 2017 03:15 PM PDT

''தினகரன் அணியினர் மிரட்டலை சமாளிக்கவும், அவர்கள் செய்யும் முறைகேடுகளை தடுக்கவும், வார்டு தோறும், 10 வழக்கறிஞர்கள் இடம் பெற்ற குழு அமைத்துள்ளோம்,'' என, பன்னீர் அணியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினமும் மாலை, 4:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, பிரசாரம் செய்து வருகிறார். மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக, பல வியூகத்தை வகுத்துள்ளோம். ஏப்., 3ல், தொகுதி முழுவதும், சைக்கிள் பயணம்; பிரசார இறுதி நாளில், தொகுதி முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™