Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கறுப்பு பணத்துக்கு எதிராக போர்! : மக்களுக்கு மோடி அழைப்பு

Posted: 26 Mar 2017 09:52 AM PDT

புதுடில்லி: ''கறுப்புப் பணத்துக்கு எதிரான, தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு, மக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்; அன்றாட தேவைக்கு, குறைந்தளவு ரொக்கத்தை பயன்படுத்த வேண்டும்; மின்னணுவியல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

'மன் கீ பாத்' எனப்படும், மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி,ஒவ்வொரு மாதமும்,ஞாயிற்றுகிழமை, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்; நேற்று, அவர் பேசியதாவது: கறுப்புபணத்துக்கு எதிரான போராட்டத்தை, மக்கள் அடுத்த கட்டத்துக்கு ...

ரேஷன் பிரச்னையால் மக்கள் கொதிப்பு : ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் தவிப்பு

Posted: 26 Mar 2017 10:08 AM PDT

ரேஷனில் பொருட்கள் கிடைக்காத விரக்தியில் உள்ள பொதுமக்கள், ஆர்.கே.நகரில், ஓட்டு கேட்க செல்லும் அமைச்சர்களை முற்றுகை யிட்டு வருகின்றனர்.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், முழு அளவில் வழங்கப் படவில்லை. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அடுத்த மாதம், 12-ல், இடைத்தேர்தல் நடக்கிறது. ஆட்சி, பணம், அடியாட்கள் பலத்தை பயன்படுத்தி, சசிகலா அணியைச் சேர்ந்த, தினகரன் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார். இதற்காக, அமைச்சர்கள் அனைவரும், தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், ரேஷனில் ...

மொபைல் போன் 'சிம் கார்டு' பெற ஆதார் எண்...கட்டாயம்!:பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு அதிரடி

Posted: 26 Mar 2017 10:33 AM PDT

புதுடில்லி:மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வரும் அனைவரை பற்றிய தகவல்களையும், ஆதார் எண் அடிப்படையில் சரிபார்க்கும்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள் ளது. இதனால், மொபைல் போன் சிம் கார்டு வாங்குவதற்கு, இனி, ஆதார் எண் கட்டாய மாகிறது. மேலும், ஏற்கனவே, சிம் கார்டு வாங்கியவர்களிடமும், ஆதார் எண் பெறும் நடவடிக்கையும் துவங்க உள்ளது.

நாடு முழுவதும், நுாறு கோடி பேருக்கும் அதிகமானோர், மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும், அடையாள அட்டை, இருப்பிட சான்று அளித்து, சிம் கார்டு பெற்று, மொபைல் போன் சேவைகளை ...

'பிறரை அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது'

Posted: 26 Mar 2017 10:36 AM PDT

'இந்த நாட்டின் மக்களாகிய நாம், யாரையும் அவமானப்படுத்தக் கூடாது; யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; பிறரை அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஓம்கார்ஜித் சிங் அலுவாலியா என்பவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, ஜாதிப் பெயரை சொல்லி மிகக் கேவலமாக திட்டியதாக கூறப்படுகிறது. அலுவாலியாவும், அவருடன் வந்த இருவரும், அடாவடியாக நடந்து கொண்டதற்கு, அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை கீழே தள்ளிய அலுவாலியா, 'நாங்கள் போடும் மிச்சத்தை ...

விஷால் - ஜெட்லி சந்திப்பில் நடந்தது என்ன? விவசாயிகளைப் பற்றி பேசவேயில்லையாம்!

Posted: 26 Mar 2017 10:43 AM PDT

கடந்த சில நாட்களாக, டில்லியில், பார்லிமென்டிற்கு அருகே உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். தமிழக அரசியல்வாதிகளும் டில்லி வந்து, போராட்டக்காரர்களை சந்தித்து வருகின்றனர். நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர், திடீரென, நேற்று முன்தினம் டில்லி வந்து விவசாயிகளைச் சந்தித்தனர். முன்னதாக, 'மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்து விவசாயிகள் நிலைமையை எடுத்துக் கூறுவோம்' என, டில்லியில் உள்ள தமிழ் ...

ஒரு விளக்கு எம்.ஜி.ஆர்., மற்றொன்று ஜெயலலிதா இரட்டை மின்கம்ப சின்னத்திற்கு பன்னீர் விளக்கம்

Posted: 26 Mar 2017 10:50 AM PDT

சென்னை:''ஆர்.கே.நகர் தொகுதியில், மது சூதனன் வெற்றி பெறுவது உறுதி,'' என, முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். இரட்டை மின்கம்பம் சின்னம் குறித்தும், புது விளக்கம் அளித்தார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கான, தலைமை தேர்தல் அலுவலகம், தண்டையார் பேட்டை கோதண்டராமர் தெருவில் அமைக் கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற,முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம்பேசியதாவது: இரட்டை இலை சின்னத்திற்கு பதி லாக, இரட்டை மின் விளக்கு கிடைத்ததால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த தேர் தலை பொறுத்த ...

கணவர் பெயரை தீபா மறந்தது ஏன்? மாதவன் பேட்ரிக் சமாளிப்பு

Posted: 26 Mar 2017 10:53 AM PDT

திண்டுக்கல்:''பதற்றம் காரணமாக, வேட்புமனுவில் என் பெயரை குறிப்பிட தீபா மறந்து விட்டார்,'' என, அவரது கணவர் மாதவன் பேட்ரிக் கூறினார்.

திண்டுக்கல், முள்ளிப்பாடியில், புதிய கட்சி துவங்குவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், மாதவன் பேட்ரிக் பங்கேற்றார்.கூட்டத்தில், தீபா படத்தை பயன்படுத்திய மாதவன் பேட்ரிக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையை சேர்ந்தவர்கள், கறுப்புக் கொடி காட்டி னர். போலீசாரின் சமரசத்திற்கு பின் கலைந்து சென்றனர்.
பின், மாதவன் பேட்ரிக் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., தன் கட்சியின் சார்பில், முதலில் ...

'ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை'

Posted: 26 Mar 2017 10:56 AM PDT

புதுடில்லி:'இந்தியாவில் பயன்படுத்தப்படும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், உலகிலேயே, மிகச் சிறந்தவை; பாதுகாப் பானவை, தில்லுமுல்லு செய்ய முடியாதவை' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங் களில், சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில், பா.ஜ., வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிகளை பெற்றது. உ.பி.,யில் மூன்று முறை முதல்வர் பதவி வகித்த, மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி, சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.'பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கு, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ...

ஆர்.கே.நகரில் கள்ள ஓட்டுகள் போட தினகரன் தரப்பு... சூழ்ச்சி!:கோவிலில் பெண்களுக்கு பணம் தர முயன்றதால் பரபரப்பு:

Posted: 26 Mar 2017 11:08 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றி,கள்ள ஓட்டுகள் போட தினகரன் தரப்பு சூழ்ச்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன் காரணமாகவே, அதிக சுயேச்சைகள் களமிறங்கி, 127 வேட்பு மனுக்கள் தாக்கலானதாக கூறப்படுகிறது. அத்துடன், வாக்காளர்களுக்கு விதவிதமான முறையில், பணம் கொடுக்கும் வேலைகளிலும், அவரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோவிலுக்குள், பெண்களுக்கு பணம் கொடுக்க முற்பட்ட போது, தி.மு.க., வினர் முற்றுகையிட்டதால், அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர்.முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிசம்பர், 5ல் மறைந்ததை அடுத்து, அவர் ...

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

Posted: 26 Mar 2017 11:52 AM PDT

புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். அப்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை, 2017, மார்ச் 31 வரை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஆனால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமே, செல்லாத ரூபாய் நோட்டுகளை, மார்ச் 31 வரை, வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என, பின், அறிவிக்கப்பட்டது. ...

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?

Posted: 26 Mar 2017 12:56 PM PDT

ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித உத்திகளை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்தின் உச்ச கட்டத்தில், கடைசி அஸ்திரமாக, முதல்வர் பழனிசாமி அமைச்சரவையின் ஊழல் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகளில், மாவட்ட வாரியாக பினாமிகள் பெயரில், அமைச்சர்கள் ...

'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'

Posted: 26 Mar 2017 02:12 PM PDT

முசாபர்நகர் : உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத், சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார்.
இந்த மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாநில அமைச்சர் சுரேஷ் ராணாவை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது;
அதில் பங்கேற்று பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் சைனி கூறியதாவது: பசுக்களை அனைவரும், தாயாக மதிக்க வேண்டும். பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் ...

கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா

Posted: 26 Mar 2017 03:58 PM PDT

திருப்பதி: கொசுக்கள் வளர்த்தால், அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திரவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன் அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.
புதிய நடவடிக்கை :
இந்நிலையில், கொசுக்கள் குறித்து ஆய்வு நடத்திய, அம்மாநில அதிகாரிகள் குழு, அவற்றை ஒழிக்க புதிய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கொசுக்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™