Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எஸ்பிபி., சர்ச்சை: இளையராஜா செய்தது சரியே!

Posted: 21 Mar 2017 04:28 AM PDT

இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் சரியா... தவறா...? என்ற விவாதம் போய் கொண்டிருக்கும் வேளையில், தனது காப்புரிமையை நிலைநாட்ட இளையராஜா செய்தது சட்டப்படி சரியே. சட்டத்தை மதிக்கும் எஸ்.பி.பி.,யும் இதை நிச்சயம் புரிந்து கொண்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ்த் திரையிசை உலகில் இப்படி ஒரு மோதல் ஏற்படும் என்று ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தங்களது நட்பைப் பற்றி பல மேடைகளில் இளையராஜாவும், எஸ்பிபியும் வெளிப்படுத்தியவர்கள். அவர் இவரைப் பற்றிப் புகழ, இவர் அவரைப் பற்றிப் புகழ என பல இசை ...

ஜெ., சமாதியில் பட்ஜெட்: கவர்னரிடம் தி.மு.க., புகார்; ஸ்டாலின் கண்டனம்

Posted: 21 Mar 2017 08:53 AM PDT

சென்னை:''ஜெ., நினைவிடத்திற்கு, பட்ஜெட்டை எடுத்து சென்றது மரபு மீறிய செயல். இது குறித்து, கவர்னரிடம் புகார் செய்துள்ளோம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - உதயசூரியன்: தி.மு.க., தலைவர் கருணாநிதி, பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பல புதிய திட்டங்களை அறிவித்தார். அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது, கைப்பையில் பட்ஜெட்டை எடுத்து வருவர். (அதைத் தொடர்ந்து, அவர் கூறியது, சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது) கருணாநிதி, முதல்வராக இருந்த போது, 70 கோடி ரூபாய் பற்றாக்குறை ...

மாநில ஆட்சி கவிழ்ப்பில் சாதனைபுரிந்த காங்கிரசுக்கு பாஜ கூட்டணியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை

Posted: 21 Mar 2017 09:25 AM PDT

-மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு-கோவா, மணிப்பூரில் பாஜ தலைமையிலான கூட்டணியை ஆட்சி அமைக்க, அழைப்பு விடுத்த அந்த மாநிலங்களின் கவர்னர்களின் செயலுக்கு எதிராக, காங்கிரஸ் எழுப்பும் கூக்குரலை நியாயப்படுத்த முடியாது. சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அதிக இடங்களை பெற்ற மிகப்பெரிய கட்சி அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்று யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது என்று காலம் காலமாய் பின்பற்றப்பட்ட மரபைத்தான் இந்த 2 மாநில கவர்னர்களும் கடைப்பிடித்துள்ளனர்.

காங்கிரஸ் கூக்குரல் ...

ஆர்.கே.நகரில் தினகரன் பெறப்போகும் மொத்த ஓட்டு வெறும்... 30,000!:உளவுத் துறை அறிக்கையால் சசி அணியினர் உற்சாகமிழப்பு:

Posted: 21 Mar 2017 10:09 AM PDT

'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுக்கு, வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் தான் கிடைக்கும்' என, உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதால், சசிகலா அணியினர் உற்சாகம் இழந்துள்ளனர்.

அதனால், இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில், போட்டியில் இருந்து விலக, தினகரன் முடிவு செய்திருப்பதாக, சசி ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல், ஏப்., 12ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில் தினகரன், பன்னீர்செல்வம் அணி சார்பில், மதுசூதனன் மற்றும் ஜெ., அண்ணன் மகள் ...

இரட்டை இலை யாருக்கு? டில்லியில் இன்று பஞ்சாயத்து

Posted: 21 Mar 2017 10:13 AM PDT

கட்சியும், சின்னமும் யார் கைக்கு கிடைக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த, அ.தி.மு.க.,வுமே திகிலுடன் காத்திருக்கும் நிலையில், அது குறித்து முக்கிய முடிவை எடுப்பதற்கு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., என, இருதரப்புக்கான பஞ்சாயத்தை, தேர்தல் கமிஷன் இன்று கூட்டியுள்ளது.

இந்த விஷயத்தில், இன்று இரவோ அல்லது நாளையோ முடிவு அறிவிக்கப்படலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அ.தி.மு.க., இரு அணிக ளாக பிளவுபட்டு உள்ளது; இருதரப்புக்குமே, உள்ளுக்குள் பெரும் அச்சம் நிலவுகிறது.மற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத அளவு, ...

தினகரன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என கோரி வழக்கு

Posted: 21 Mar 2017 10:18 AM PDT

சென்னை:அன்னிய செலாவணி சட்டம், சுங்க சட்டத்தின் கீழ், அபராதம் விதிக்கப்பட்டவர் களின் வேட்புமனுக்களை ஏற்க, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜோசப் தாக்கல் செய்த மனு:தகுதியிழப்புஎம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான தகுதியிழப்பு குறித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுங்க சட்டம், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், இரண்டு விதமான விசாரணைகள் நடக்கும். நீதிமன்றம் ...

அயோத்தி பிரச்னையில் பேச்சு மூலம் தீர்வு காண ஆலோசனை!:மத்தியஸ்தம் செய்யவும் சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது

Posted: 21 Mar 2017 10:23 AM PDT

புதுடில்லி:'அயோத்தி பிரச்னையில், சம்பந்தப் பட்டவர்கள் கோர்ட்டுக்கு வெளியே பேச்சு நடத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இதில் தேவைப்பட்டால், மத்தியஸ்தம் செய்யவும் தயாராக உள்ளோம்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

உ.பி., மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமர் கோவில் - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குகளை விசாரித்த, அலகாபாத் ஐகோர்ட், நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என, 2010 செப்., 30ல் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன. 'சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்ட அனுமதி ...

ராகுலை கிண்டலடித்த ம.பி., இளைஞர்

Posted: 21 Mar 2017 10:25 AM PDT

புதுடில்லி:காங்., துணைத் தலைவர் ராகுல் முன்னின்று சந்தித்து வரும் பல தேர்தல்களில், காங்., கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

சமீபத்தில், உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த சட்ட சபைத் தேர்தல்களில், பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்களிலும், அந்த கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதனால், காங்., கட்சியை கிண்டலடித்து, ஏராளமானோர்,சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.இந்த நிலையில், ம.பி.,யை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர்,விஷால் திவான்,கின்னஸ் புத்தக நிறுவனத்தில்,வினோதமான விண்ணப்பத்தை முன் ...

அ.தி.மு.க.,வில் கும்மாங்குத்து: வளர்மதி - நிர்மலா லடாய்

Posted: 21 Mar 2017 10:27 AM PDT

அ.தி.மு.க., சசிகலா அணியில் இருந்த பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, நேற்று பன்னீர் அணிக்கு மாறினார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர். சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, நிர்மலா, 'பன்னீர்செல்வம், நமக்கு எதிரி அல்ல; அவரை நம்மோடு சேர்த்தால், நன்றாக இருக்கும்; பிரச்னை தீர்ந்து விடும்' எனக் கூறி உள்ளார். அதை கேட்ட சி.ஆர்.சரஸ்வதி, 'பன்னீர்செல்வத்தை எதிரி இல்லை என்று, எப்படி கூறலாம்?' என, சத்தம் ...

பார்லிமென்டிற்கு 'மட்டம்' போடாதீங்க!:பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை

Posted: 21 Mar 2017 10:37 AM PDT

புதுடில்லி:பா.ஜ., - எம்.பி.,க்கள், பார்லி மென்டுக்கு வராமல், 'மட்டம்' போடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி, ''பா.ஜ.,வைச் சேர்ந்த எந்த உறுப்பினரை யும், எந்த நேரத்திலும் அழைப்பேன்; பார்லி., நிகழ்ச்சிகளில், அவர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்,'' என, வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் நேற்று, பா.ஜ., பார்லிமென்ட் கட்சி கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கூறியதாவது:பார்லி., நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது, பா.ஜ.,வைச் சேர்ந்த அனைத்து, எம்.பி.,க்களின் அடிப்படை கடமை. பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,க்களை, எந்த நேரத்திலும் அழைப் பேன். பார்லி., ...

செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்

Posted: 21 Mar 2017 11:01 AM PDT

புதுடில்லி: உலகளவில், செலவு குறைவாக ஆகும் நகரங்கள் பட்டியலில், ஆறாவது இடத்தை சென்னை பிடித்துள்ளது.

ஆய்வு:
வாழ்க்கை நடத்துவதற்கு செலவு குறைவாக ஆகும் நகரங்கள் மற்றும் அதிகமாக செலவு ஆகும் நகரங்கள் பற்றிய, சர்வதேச அளவிலான ஒரு ஆய்வை, பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில், மிகவும் குறைவாக செலவாகும் நகரங்களில், முதலிடத்தை கஜகஸ்தானின் அல்மாட்டி நகரம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நைஜீரியாவின் லாகோஸ் நகரம் ...

மோடி இலங்கை செல்லும் முன் படகுகளை திருப்பித் தர நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 21 Mar 2017 01:29 PM PDT

''வரும் மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். அதற்கு முன், இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை, நேற்று டில்லியில், தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்கு பின், நிருபர்களிடம் மத்திய இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படுமென்றும், அவரது குடும்பத்திற்கு உரிய ...

‛சசிகலா பொதுச் செயலர் தேர்வு செல்லாது' என தேர்தல் கமிஷன் அறிவிக்கும்: கே.சி.பழனிச்சாமி

Posted: 21 Mar 2017 02:54 PM PDT

சசிகலா அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே செல்லாது என்று, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., கே.சி.பழனிச்சாமி கொடுத்த மனுவை, தேர்தல் கமிஷன் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மனு மீதான விசாரணைக்கு, இன்று காலை டில்லி, தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு வருமாறு, தேர்தல் கமிஷன், பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இதையடுத்து, அ.தி.மு.க.,வின் சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க, நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை என்று, கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.
இது குறித்து, தினமலர் இணைய தளத்துக்கு அவர் அளித்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™