Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உ.பி., முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வுக்கு 10 காரணங்கள்

Posted: 18 Mar 2017 06:45 AM PDT

லக்னோ: உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கான காரணங்கள்

1. 45 வயதான யோகி ஆதித்யாநாத் கோரக்பூர் தொகுதியில் 1998 முதல் தொடர்ந்து 5 முறை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2.இவர் சிறந்த பார்லிமென்டேரியன் என பெயர் பெற்றவர்.
2. கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் 2014 முதல் யோகி ஆதித்யாநாத் , தலைமை பீடாதிபதியாக இருந்து வருகிறார்.
3. இந்து யுவா வாஹினி என்ற சமூக, கலாச்சார அமைப்பின் நிறுவனராக இருந்து வருகிறார்.
4.மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தி வந்தார்.
5.தேர்தல் ...

நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நல கூட்டணி... உடைந்தது!: மார்க்சிஸ்ட் கம்யூ., அடத்தால் உடைந்ததாக அறிவிப்பு

Posted: 18 Mar 2017 08:55 AM PDT

நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நலக் கூட்டணி உடைந்தது. ஓராண்டே ஒன்றாக இருந்த நிலையில், பல விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டமாரானது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது என, அடம் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி, தனித்து வேட்பாளரை அறிவித்ததால், இந்த நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின; ஒருங்கிணைப் பாளராக, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ செயல் பட்டார்.இக்கூட்டணியில், ...

இரட்டை இலை எங்களுக்குத்தான்: ஓ.பி.எஸ்., நம்பிக்கை

Posted: 18 Mar 2017 10:22 AM PDT

பெரியகுளம்:"அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி நடக்கும் எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் நிச்சயம் கிடைக்கும். ஆர்.கே.நகரில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி," என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவர் கூறியதாவது:
பொதுச்செயலாளரான ஜெ.,க்கு பிறகு, கட்சி யின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளா ளராகிய நான் உட்பட தலைமை நிர்வாகி களுக்கு மட்டுமே அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கை யில் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழு, லோக்சபா ...

கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன

Posted: 18 Mar 2017 10:25 AM PDT

பண விவகாரம் காரணமாகவே, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவக்கினார். அதற்கு துணையாக இருந்த, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், திடீரென புதிய கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார். இது, தீபா ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.அதுபற்றி, தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது: பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தார். அதன்பின் பன்னீர்செல்வத்தை, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், ...

உ.பி., முதல்வராக ஆதித்யநாத் தேர்வு ; 2 துணை முதல்வர்களுடன் இன்று பதவியேற்பு

Posted: 18 Mar 2017 10:28 AM PDT

லக்னோ:உ.பி., மாநில முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத், இன்று பதவியேற்கிறார். லக்னோவில் நேற்று நடந்த, உ.பி., மாநில, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத் தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக, அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கேஷவ் பிரசாத் மவுர்யா, தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர்.

உ.பி., சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 403 இடங்களில், பா.ஜ., 312 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., கூட்டணிக்கு, 325 இடங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், லக்னோவில் நடந்தது.பா.ஜ., மேலிட ...

கோடையில் கொட்ட போகும் பண மழை! சசிகலா கும்பல் ஜரூர்: அதிகாரிகள் கலக்கம்

Posted: 18 Mar 2017 10:32 AM PDT

தமிழகத்தில், இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், பணத்தை மட்டும் நம்பி, சசிகலா அணியினர் களமிறங்குவது, தேர்தல் அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல் என, எதுவாக இருந்தாலும், அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கமாகி விட்டது.
அதிகரிக்கும்
அதிலும், இடைத்தேர்தல் என்றால், ஆளுங் கட்சியாக இருப்போர், பணத்தை வாரி இறைத்து விடுவர். இதன் காரணமாக, பொதுத் தேர்தல் களை விட, இடைத்தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதம் ...

தமிழகத்துக்கு அமித் ஷா குறி

Posted: 18 Mar 2017 10:36 AM PDT

எல்லா மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சியை செயலிழக்க செய்யும் வகையில், அதிரடி அரசியல் திட்டத்தை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வகுத்துள்ளார்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில், எந்த மாநிலத்திலும், காங்கிரஸ், ஆட்சியில் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க, அமித் ஷா, பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான, ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, கேரளா மற்றும் அசாமில், காங்., 2016ல் ஆட்சியை இழந்தது. சில மாநிலங்களில் மட்டும், அக்கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் ...

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்...வாய்ப்பு?: சசி, பன்னீர் அணிகள் ஆவணங்கள் குவிப்பால் ஆணையம் தவிப்பு

Posted: 18 Mar 2017 11:05 AM PDT

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என, ஓ.பி.எஸ்., மற்றும் சசி கோஷ்டியினர், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர். இருதரப்பிலும், ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், முடிவு எடுக்க முடியாமல், ஆணையம் தவிக்கிறது. இதனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப் படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா, ஓ.பி.எஸ்., தலைமையில், இரு அணிகளாக, அ.தி.மு.க., பிரிந்தது. இரு அணியினருமே, கட்சிக்கு உரிமை கொண்டாடி, டில்லியில் உள்ள, தலைமை தேர்தல் ஆணையத்தில் முறை யிட்டு உள்ளனர். இருதரப்பினருமே, இது சம்பந்தமாக, கட்டு கட்டாக ...

ஆட்சி, அதிகாரத்துக்காக அரசியல் செய்யக்கூடாது!: தினகரனுக்கு முதல்வர் பழனிசாமி 'குட்டு'

Posted: 18 Mar 2017 11:10 AM PDT

கோவை:''ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்என்பதற்காக, அரசியல் நடத்துவது மக்கள் விரோத செயலாகும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார். தினகரனின் முதல்வர் பதவி கனவை கண்டிக்கும் வகையில், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்கள் துவக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோவை, 'கொடிசியா' வளாகத் தில் நேற்று நடந்தது.நான்கு மாவட்டங்களிலும், 1,313 கோடியே, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 8,031 திட்டப் பணிகளை துவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:கடந்த, 2015ல், அ.தி.மு.க., அரசு நடத்திய உலக ...

பிரதமரின் சமூக ஊடக கணக்கு பராமரிப்புக்கு செலவே இல்லை

Posted: 18 Mar 2017 12:23 PM PDT

புதுடில்லி: 'பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளின் பராமரிப்புக்கு எந்த செலவும் செய்யப்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரும், டில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளை பராமரிக்க செலவிடப்படும் தொகை குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில்:
கடந்த 2014, மே மாதம், பிரதமர் மோடியின் பெயரில் துவங்கப்பட்ட, ...

இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்

Posted: 18 Mar 2017 01:27 PM PDT

மும்பை: உலகிலேயே குண்டான பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சிகிச்சையில் 150 கிலோ எடை குறைந்துள்ளது.

எகிப்து நாட்டைசேர்ந்த பெண் இமான் அகமது இவர் தான் உலகிலேயே குண்டான பெணாக கருதப்படுபவர், இவர் தன் உடல் எடையை குறைக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த பிப்., 11ம் தேதி சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 500 கிலோ எடை இருந்தார். .
சமீபத்தில் அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான சிறப்பு அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் சுமார் 150 கிலோ எடை ...

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை

Posted: 18 Mar 2017 02:27 PM PDT

சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.
10 லட்சம்
இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் ...

மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

Posted: 18 Mar 2017 03:29 PM PDT

பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்கவும், மத்திய அரசு நிதி வழங்குகிறது.இதற்காக, ஆண்டுதோறும், பல கட்டங்களாக நிதி ஒதுக்கப்படும். அதில், நான்கு ஆண்டுகளில் மட்டும், தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய, 2,750 கோடி ரூபாயை, தமிழக அரசு இழந்துள்ளது.
இதுகுறித்து, பட்ஜெட் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில், 1,476 கோடி ரூபாய், அனைவருக்கும் இடைநிலை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™