Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கறுப்பு பணம் 'டிபாசிட்' செய்த பெட்ரோல் பங்க்குகளில் சோதனை

Posted: 17 Mar 2017 08:18 AM PDT

புதுடில்லி, :தங்களுடைய அன்றாட விற்ப னையை விட அதிக மாக, செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்த பெட்ரோல் பங்க்குகள், சமையல் காஸ் ஏஜென்சிகளில், வருமானவரி துறை சோதனை நடத்தி வருகிறது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி, 2016, நவ., 8ல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, பழைய, செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, பெட்ரோல் வாங்க வும், சமையல் காஸ் வாங்கவும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.அதன்படி, 2016, டிச. 2ம் தேதி பெட்ரோல் பங்க்கு களிலும், டிசம்பர் இறுதிவரை சமையல் காஸ் வாங்கவும் செல்லாத நோட்டுகளை பயன்படுத்த வாய்ப்பு ...

தேர்தல் செலவு ரூ.5,500 கோடி; உ.பி.,யில் கட்சிகள் தாராளம்

Posted: 17 Mar 2017 08:20 AM PDT

புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலில், அனைத்து அரசியல் கட்சிகளும், ஒட்டுமொத்த மாக, 5,500 கோடி ரூபாய் செலவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான, உ.பி.,யில், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பா.ஜ., 312இடங்களில் வெற்றி பெற்றது; கூட்டணி கட்சிகள், 12 இடங்களை பிடித்தன. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி, 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; அதன் கூட்டணி கட்சியான, காங்., ஏழு இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ், 19 இடங்களை பிடித்தது. இந்நிலையில், இந்த தேர்த லில், அனைத்து அரசியல் ...

தீபா கணவர் மாதவன் காமெடி பேட்டி

Posted: 17 Mar 2017 09:31 AM PDT

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்று தனியாக பேரவைத் துவங்கி இருக்க, அவரது கணவர் மாதவன், திடீரென, கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

இன்று மாலை, சென்னை, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து வணங்கிய பின், அவர், விரைவில் தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்திருப்பது, அரசியலில் காமெடியாகப் பார்க்கப்படுகிறது.
அவர் அளித்த பேட்டி:
தீபாவும் நானும் ஒரே வீட்டில்தான் வாழ்கிறோம். அங்கேயேதான் வாழ்வோம். அவர், தீபா பேரவை என்ற தனி அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்புக்கும் ...

உத்தரகண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு; இன்று பதவியேற்கிறது பா.ஜ., அரசு

Posted: 17 Mar 2017 09:32 AM PDT

புதுடில்லி,: மிகப்பெரிய வெற்றியை பெற்ற, உத்தரகண்ட் முதல்வராக, பா.ஜ.,வின் மூத்த தலைவரான, திரிவேந்திர சிங் ராவத், 57, இன்று பதவியேற்கிறார்.

உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நேற்று அறிவிக்கப்பட்டது. அவர், இன்று பதவியேற்க உள்ளார்.மொத்தம், 70 தொகுதி களை கொண்ட உத்தர கண்டில், பா.ஜ., 57 தொகுதி களில் வென்று, அபார வெற்றி பெற்றது. இதுவரை, ஆளுங்கட்சி யாக இருந்த காங்கிரசுக்கு, 11 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.முதல்வராக இருந்த ஹரீஷ்ராவத், தான் போட்டியிட்ட இரு தொகுதி களிலும் ...

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் கோஷ்டி பணம் பட்டுவாடா!:முதற்கட்டமாக 3,000 ரூபாய்; ரூ.2,000த்துக்கு டோக்கன்

Posted: 17 Mar 2017 10:11 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், பணம் பட்டுவாடாவை,தினகரன் கோஷ்டி இப்போதே துவங்கி விட்டது. முதற்கட்டமாக, 3,000 ரூபாய்; அடுத்த கட்டத்துக்கு, 2,000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

பட்டுவாடா செய்தவர்களை, பன்னீர் அணியினர் விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பியோடினர். மனு தாக்கல் துவங்கிய மறுநாளே, பட்டுவாடா துவங்கியது, தொகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலா அணி சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் களம் இறங்கி உள்ளார். அவருக்கு எதிராக, பன்னீர் அணி சார்பில், அ.தி.மு.க., அவைத் தலைவரும், ...

ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு

Posted: 17 Mar 2017 10:19 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா அக்காள் மகன் தினகரனை தோற்கடிக்கும் முனைப்பு டன், பன்னீர்செல்வம் அணியினர், ஓட்டுச் சாவடிக்கு, 14 பேர் என, 'பூத் கமிட்டி' அமைத்து, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர்.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணியினரும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களம் இறங்குகின்றனர்.சசிகலா அணி சார்பில், தினகரன்; பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இருவரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க ...

உத்தரகாண்ட் பா.ஜ.,முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்படுவதற்கு 10 முக்கிய காரணங்கள்

Posted: 17 Mar 2017 10:33 AM PDT

உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது.

'ஹாட்ரிக்' வெற்றி பெற்றவர்
உத்தரகண்டின், எட்டாவது முதல்வராக, பா.ஜ., சார்பில் திரிவேந்திர சிங் ராவத், 57, இன்று பதவியேற்கிறார்.இவர், 1960ல் பிறந்தார்; எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றுள்ளார். 1983 முதல், 2002 வரை, உத்தரகண்ட் மண்டல, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அமைப்பு செயலராக பணியாற்றினார். உத்தரகண்ட் உருவான பின், 2002ல் நடந்த முதல் சட்டசபை தேர்தலில், டொய்வாலா தொகுதி யில் இருந்து, எம்.எல்.ஏ., ஆனார். 2007ல், இதே ...

தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி':அன்னிய செலாவணி மோசடி வழக்கு

Posted: 17 Mar 2017 10:37 AM PDT

சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜரான தினகரனின் கோரிக்கையை, மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரான, சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதம் அடிப்படையில், சென்னையில், பெயரளவில் செயல்பட்டு வந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் பயன்படுத்தினர். அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதி களை ஏற்படுத்துவதற்கான கருவிகளை ...

'ஜெயலலிதா மகன்' என வாலிபர் திடீர் வழக்கு: ஆவணங்களை சரிபார்க்க போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted: 17 Mar 2017 11:40 AM PDT

சென்னை:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு பிறந்த என்னை தத்து கொடுத்து விட்டனர்; சசிகலாவின் ஆட்களால் ஆபத்து உள்ளது; எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ண மூர்த்தி என்ற வாலிபர், மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரான அவரிடம், ''ஆவணங் கள் எல்லாம் போலியாக தெரிகின்றன; இப்போதே சிறைக்கு அனுப்ப முடியும்; இருந்தாலும், இந்த ஆவணங்களை சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, போலீஸ் ஆணைய ருக்கு உத்தரவிடுகிறேன்,'' என, நீதிபதி மகாதேவன் கூறினார்.ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, ஜெ.கிருஷ்ணமூர்த்தி ...

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 7 பேருக்கு 'நோட்டீஸ்'?

Posted: 17 Mar 2017 12:19 PM PDT

சென்னை: சட்டசபை உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபையில், பிப்., 18ல், முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். அப்போது, தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றிவேல், சபாநாயகரிடம் புகார் மனு கொடுத்தார். புகார் மனுவை, சபை உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பினார்.
அந்த மனு அடிப்படையில் விளக்கம் கேட்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், ...

உ.பி. முதல்வராக மனோஜ்சின்காவுக்கு வாய்ப்பு

Posted: 17 Mar 2017 02:18 PM PDT

லக்னோ: உத்தரபிரதேச முதல்வராக மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்கா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல் களில், உ.பி.,யில், பா.ஜ., மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பா.ஜ., 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இந்நிலையில்உத்தர பிரதேச, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று( 18-ம் தேதி) மாலை நடக்க உள்ளது. இதில் மத்திய இணை அமைச்சர் மனோஜ்சின்கா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மூத்த ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™