Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மஹா பெரியவா - சாப்பாடு எங்கே? தங்குவது எங்கே?

Posted: 17 Mar 2017 11:09 AM PDT

மஹா பெரியவா -  சாப்பாடு எங்கே? தங்குவது எங்கே? (முழுமையாக இல்லாவிட்டாலும் , தொய்வு இருக்காது ) என்னுடைய கல்லூரிக் கட்டணமும் கைச்செலவுக்கு வேண்டிய பணமும் இவ்வாறாக ஏற்பாடு செய்யப்பட்டபின், என்னுடைய சாப்பாட்டுக்கும் தங்குவதற்கு இடத்துக்கும் பெரியவா என்ன ஏற்பாடு செய்யப் போகிறார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். பெரியவாளுக்கு மூன்று வழிகள்தான் இருக்கிறது என்று நான் நினைத்தேன். ஒன்று, அவர் என் அம்மாவை மறுபடியும் சிதம்பரத்திலேயே குடித்தனம் போடச் சொல்லலாம்; இரண்டு, என்னை என் அக்காவின் வீட்டிலேயே தொடர்ந்து ...

வந்தேமாதரம் – ஒரு பக்க கதை

Posted: 17 Mar 2017 10:45 AM PDT

என் சமையல் குறிப்புக்கு பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)

Posted: 17 Mar 2017 10:40 AM PDT

என்னுடைய போட்டோவும் சமையல் குறிப்பும் Big basket இல் வந்துள்ளது........பரிசு 10 KG பிபி ராயல் கோதுமை மாவு இது screen shot .......அதனுடைய லிங்க் இதோ : https://www.bigbasket.com/flavors/recipes/1114/kachodi/ அன்புடன் , கிருஷ்ணம்மா

" சோறா? அல்லது வேறா ? "

Posted: 17 Mar 2017 08:09 AM PDT

சில சமயங்களில் சில வாசகங்கள் பிரபலம் அடைகின்றன . மக்கள் அவற்றை ரசித்து அனுபவிப்பார்கள் . " செய் அல்லது செத்து மடி " என்ற காந்திஜியின் வாசகமும் , " ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் " என்ற காமராஜரின் வாசகமும் , " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் வாசகமும் இவ்வாறு பிரபலம் அடைந்தவைதான் . தற்போது " சோறா?  அல்லது வேறா ? " என்ற வாசகம் பிரபலம் அடைந்துள்ளது . இதுகுறித்து ஒரு கவிதை . துரியோதனன் என்னும் தீமைக்கு இறுதிவரையில் துணை நின்றான் கர்ணன் . அவன் தட்டிலே இருந்தது ...

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்

Posted: 17 Mar 2017 02:39 AM PDT

- ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. - ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். - இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம். - செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள். - - அதில் ஒருவரை மனிதனாக கூட ...

மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு

Posted: 17 Mar 2017 02:18 AM PDT

''தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால், 2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,'' என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் படிப்படியாக, 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கலால் வரி, 500 கோடி ரூபாய் உட்பட, 2,100 கோடி ரூபாய், வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு, மூன்று ஆண்டுகளாக வரி விதிக்காததால், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. ...

நீதிமன்றம் என்ன பாவ பூமியா? - போலீஸ் ஆணையருக்கு நீதிபதி கண்டனம்

Posted: 16 Mar 2017 08:44 PM PDT

வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருப்பதற்கு இந்த நீதிமன்றம் என்ன பாவ பூமியா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி என்.கிருபாகரன், அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜ ராகாத சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை ...

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பிடித்த முஸ்லீம் சிறுமி

Posted: 16 Mar 2017 08:31 PM PDT

 -- கேந்திபாரா: ஒடிசாவில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்புவிக்கும் போட்டியில், 6 வயது முஸ்லீம் சிறுமி முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். முஸ்லீம் மாணவி: ஒடிசா மாநிலம் கேந்திபாரா மாவட்டத்தில் பகவத் கீதை ஸ்லோகம் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், 46 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சோபானியா சீக்ஷசர்மா உறைவிட பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும், பிர்தவுஸ்(6) என்ற முஸ்லீம் மாணவி, முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 16 Mar 2017 08:08 PM PDTPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™