Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


2019 லோக்சபா தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.,வியூகம்! இளைஞர்கள், மாணவர்களை கவர திட்டம்

Posted: 16 Mar 2017 08:46 AM PDT

புதுடில்லி:ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 'வரும், 2019 லோக்சபா தேர்தலிலும், மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறும் வகையில், இளைஞர்களை கவர வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, பள்ளி மாணவர்களிடம் இருந்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

உ.பி., உட்பட, ஐந்து மாநில தேர்தல்களில், மத்தியில் ஆளும், பா.ஜ., மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், கட்சி யின் பார்லி., குழு கூட்டம், நேற்று நடந்தது. கட்சி தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அப்போது, ...

'ஆதார்' அட்டை திட்டம்; பிரதமர் மோடிக்கு பாராட்டு

Posted: 16 Mar 2017 09:06 AM PDT

புதுடில்லி, : பொதுமக்களுக்கு, நாடு முழுவதும் செல்லத்தக்க அடையாள சான்றாக, 'ஆதார்' அட்டை வழங்கும் திட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, உலக வங்கி பாராட்டி உள்ளது.

ஆதார் அட்டை திட்டம், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டாலும், மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்ற பின்தான், ஆதார் அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இந்த ஆதார் அட்டையை, அடையாள சான்றாக பயன்படுத்தி, நாட்டின் எந்தப் பகுதியிலும், வங்கிக் கணக்கு துவங்குதல்,அரசு மானியம், விவசாயி களுக்கான மானியம், கல்வி உதவித்தொகை, சமையல் எரிவாயு ...

ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Posted: 16 Mar 2017 09:34 AM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் களமிறக்கப்பட்டு உள்ளார்.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இரு அணியினரும், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகரில் களம் இறங்குகின்றனர்.அத்துடன், ஜெ., அண்ணன் மகள் தீபா, தனியாக களம் இறங்குகிறார். தி.மு.க., - தே.மு.தி.க., , ஆகிய கட்சிகளும் வேட் பாளர்களை அறிவித் துள்ளன. இந்நிலையில், ஆர்.கே.நகரில், நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கியது. அ.தி.மு.க., தொண்டர்களும், பொதுமக்களும் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை அறியும் ...

தமிழக பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள்

Posted: 16 Mar 2017 09:56 AM PDT

தமிழக பட்ஜெட், 2017 - 2018 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் முக்கிய கோட்பாடுகளை அதிகம் எதிர்க்கபோவதில்லை என்பதை சூசகமாக காட்டுகிறது.

'வரியில்லாத பட்ஜெட்' என்பதற்கு காரணமாக, நிதியமைச்சர் ஜெயக்குமார், தன் நீண்ட உரை யில், 'மத்திய அரசின், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் வரப்போகிறது' என, குறிப்பிட்டிருப்பது, அதன் அடையாளமாகும்.
வீட்டுவசதி நிதியம் உருவாக்க திட்டம்
* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வாயிலாக, 3,707 கோடி ரூபாய் செலவில், 22 ஆயிரத்து, 178 வீடுகள் கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, 808 ...

முறைகேடின்றி நம்பிக்கையை நிரூபித்தது பரீக்கர் அரசு: கூவத்தூர் பாணி அடைப்பெல்லாம் கோவாவில் இல்லை

Posted: 16 Mar 2017 10:06 AM PDT

பனாஜி:கோவா சட்டசபையில், மொத்தமுள்ள, 40 இடங்களில், 13 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், கூவத்துார் பாணியில் அடைத்து வைக்காமல், மனோகர் பரீக்கர் தலைமையி லான, பா.ஜ., அரசு நடத்திய நம்பிக்கை ஓட்டெடுப்பில், எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக ஓட்டளித்தனர்.

அதன்படி, பெரும்பான்மைக்கு தேவையான, 22 பேரின் ஆதரவுடன், பரீக்கர் அரசு வெற்றி பெற்று, மற்ற மாநிலங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், கோவாவில், மொத்தமுள்ள, 40 இடங்களில், பா.ஜ., 13 மற்றும் காங்., 17 இடங்களில் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், சுயேச்சைகள், 10 இடங்களில் ...

ரூ.41,965 கோடி கடன் வாங்க அரசு முடிவு! அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

Posted: 16 Mar 2017 10:15 AM PDT

''வரும் நிதியாண்டில், 41 ஆயிரத்து, 965 கோடி ரூபாய் வரை, கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள் ளது,'' என, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர், 2017 - 18ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1.59 லட்சம் கோடி ரூபாய்; மொத்த வருவாய் செலவினம் 1.75 லட்சம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வருவாய் பற்றாக்குறை, ரூ.15 ஆயிரத்து, 930 கோடியாக இருக்கும்.'உதய்' திட்டத்தில், வட்டித் தொகை செலுத்து தல், வீட்டு நுகர்வோருக்கு, 100 யூனிட் வரை, இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், ...

பாடப்புத்தகமானது பட்ஜெட் உரை; பள்ளி வகுப்பறையானது சட்டசபை

Posted: 16 Mar 2017 10:24 AM PDT

வகுப்பறையில் பாடப்புத்தகம் படிப்பது போல், சட்டசபையில், பட்ஜெட் உரையை வேகமாக வாசித்தார், அமைச்சர் ஜெயக்குமார்.

முதன் முறையாக, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார், தன் முதல் பட்ஜெட் உரையை, நேற்று வாசித்தார். அவர், சட்டசபைக்கு, காலை, 10:21 மணிக்கு வந்தார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி வரவேற்றனர். தன் இருக்கையில் அமர்ந்ததும், சக அமைச்சர்கள் கை கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.காலை, 10:32 மணிக்கு, ஜெ., சசிகலா, தினகரன் ஆகியோரை புகழ்ந்து விட்டு, பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கினார். முதலில், மெதுவாகபடித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது. ...

பழனிசாமி அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே!

Posted: 16 Mar 2017 10:25 AM PDT

தமிழக அரசின் பட்ஜெட், விவசாயிகளை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து, தஞ்சாவூர் மாவட்ட காவிரி பாசன பாதுகாப்பு விவசாய சங்கத்தின் செயலர், சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை, 1,150 கோடி ரூபாய் வரை உள்ளது; அது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. பருவமழையின் போது, வீணாகும் மழை நீரை சேமிக்கும் வகையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான அறிவிப்பு இல்லை.காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலர், காவிரி தனபாலன்:புதிய ...

ரேஷனில் உளுத்தம் பருப்பு 'கட்': போராட்டம் வெடிக்கும் அபாயம்

Posted: 16 Mar 2017 10:32 AM PDT

ரேஷன் கடைகளில், இனி உளுத்தம் பருப்பு சப்ளை இருக்காது என்பதால், மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தில், தலா, ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, 30 ரூபாய்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப் பட்டது. அவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியாரிடம் வாங்கி, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது. ரேஷனில் வழங்க, மாதந்தோறும், 13 ஆயிரத்து, 500 டன் துவரம் பருப்பு; 7,000 டன் உளுத்தம் பருப்பு தேவை. தற்போது, துவரம் பருப்புக்கு பதில், கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது. அரசியல் ...

மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு

Posted: 16 Mar 2017 12:04 PM PDT

''தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால், 2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,'' என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் படிப்படியாக, 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கலால் வரி, 500 கோடி ரூபாய் உட்பட, 2,100 கோடி ரூபாய், வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு, மூன்று ஆண்டுகளாக வரி விதிக்காததால், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.
அதை ஈடுகட்டுவதற்காக, பெட்ரோலிய பொருட்களுக்கு வரி கூட்டப்பட்டது. ...

டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

Posted: 16 Mar 2017 01:21 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறுவதற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளைச்சேர்ந்த மக்கள் தடை விதித்து டிரம்ப் உத்தரவிற்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்கா வருவதற்கு அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும், மக்களுக்கு 90 நாட்களுக்கு தடையும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
பயங்கரவாதிகள் நுழைவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் பாரபட்சமான உத்தரவு என்று பலர் விமர்சித்தனர்.டிரம்பின் ...

ஜாகிர் நாயக் அமைப்பிற்கு தடை உறுதி செய்தது டில்லி ஐகோர்ட்

Posted: 16 Mar 2017 02:06 PM PDT

புதுடில்லி : 'சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு தடை விதித்த, மத்திய அரசின் உத்தரவு சரியானதே' என, டில்லி ஐகோர்ட், நேற்று உத்தரவு பிறப்பித்தது.
மதபோதகர், ஜாகிர் நாயக், ஐ.ஆர்.எப்., எனப்படும், இஸ்லாமிக் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார். அவரது போதனைகள் பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது அமைப்புக்கு, மத்திய அரசு தடை விதித்தது.
வெளிநாடு சென்ற அவர், கைதாக கூடும் என்ற அச்சம் காரணமாக, நாடு திரும்பவில்லை. ஜாகிர் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™