Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தல் வெற்றியால் பா.ஜ., பலம் அதிகரிப்பு : புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வது எளிது

Posted: 12 Mar 2017 09:08 AM PDT

லக்னோ: தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜூலையில் ஓய்வு பெறும்போது, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், பா.ஜ.,வை மேலும் பலப்படுத்தும் வகையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, 543 உறுப்பினர் பலம் உடைய, லோக்சபாவில், 281 உறுப்பினர்கள் உள்ளனர். ஜூலை, 25ல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில், தனக்கு
விருப்பமானவரை,பா.ஜ., தேர்வு செய்ய, ராஜ்ய சபாவிலும், 29 மாநிலங்களின் சட்டசபைகளிலும், ...

அடுத்த இலக்கு மேற்கு வங்கம்; பா.ஜ., முடிவால் மம்தா கலக்கம்

Posted: 12 Mar 2017 09:27 AM PDT

கோல்கட்டா: உ.பி., சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., அடுத்தகட்டமாக, மேற்கு வங்கத்தை குறி வைத்துள்ளதால், அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி கலக்கமடைந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதான எதிர்க் கட்சியாக உள்ளது. இருப்பினும், மூன்றாம் இடத்தில் உள்ள, பா.ஜ., தன் செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், மம்தா, பா.ஜ.,வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ...

புஸ்வாணமானார் 'கிங் மேக்கர்' கிஷோர் : உ.பி.,யில் 'அவுட்' ஆனது காங்., வியூகம்

Posted: 12 Mar 2017 09:29 AM PDT

புதுடில்லி: பெரிதும் புகழப்பட்ட, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் அதிரடி, உ.பி., சட்டசபை தேர்தலில் பலிக்கவில்லை; அவரது செயல் திட்டங்கள், காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் வல்லவர் என பெயர் பெற்றவர்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்; பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் ...

தி.மு.க.,வுக்கு மக்கள் நல கூட்டணி ஆதரவு? : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு வியூகம்

Posted: 12 Mar 2017 09:34 AM PDT

'சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில், தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்' என, ஸ்டாலின் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதால், தி.மு.க., கூட்டணியில், மக்கள் நலக் கூட்டணி இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர்.கே. நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சசிகலா அணியில், 15ம் தேதி, வேட்பாளர் தேர்வு நடக்கி றது; பன்னீர்செல்வம் அணியினரும், வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்ற னர். தி.மு.க., வில், வேட்பாளருக்கான நேர்காணல் இன்று நடக்கிறது. விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி யின் வட சென்னை ...

பா.ஜ., வெற்றியால் தமிழக அரசு கலக்கம் : 'நீட்' மசோதாவுக்கு கூடுதல் அழுத்தம் தருமா?

Posted: 12 Mar 2017 09:38 AM PDT

உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு, தமிழக அரசு கூடுதல் அழுத்தம் தர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளதால், ஜூனில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், மாநில கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களின் ஓட்டுகள் தேவை. எனவே, மத்திய அரசை, தங்கள் கோரிக்கைகளுக்கு பணிய வைக்கலாம்' என, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, தற்போதைய தமிழக அரசு கணக்கு ...

சமாஜ்வாதியில் மீண்டும் துவங்கியது... மல்லுக்கட்டு!:தோல்வியால் அகிலேஷுக்கு நெருக்கடி

Posted: 12 Mar 2017 09:57 AM PDT

லக்னோ:உ.பி., சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியான சமாஜ்வாதி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்த கட்சி தலைவர் களிடையே கடும் மோதல் நிலவுகிறது. 'அகிலேஷ் யாதவ், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என, அதிருப்தியாளர் கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

உத்தர பிரதேச மாநில, சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 403 இடங்களில், பா.ஜ., 312 இடங்களை கைப்பற்றி, பெரும் வெற்றி பெற்றது; கூட்டணி கட்சிகள், 12 இடங்களில் வென்றன. ஆளுங்கட்சியான சமாஜ்வாதி, 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; அதன் கூட்டணி கட்சியான காங்., ஏழு தொகுதிகளை பிடித்தது. பகுஜன் சமாஜ், 19 இடங்களில் வெற்றி பெற்றது. ...

முதல்வர் பங்கேற்கும் விழா அழைப்பிதழ் மந்திரிகள், மாநில நிர்வாகிகள் புறக்கணிப்பு

Posted: 12 Mar 2017 10:48 AM PDT

சேலம்:சேலத்தில் நாளை நடக்கும், முதல்வர் பங்கேற்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா அழைப்பிதழில் மட்டுமின்றி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்துள்ளதால், தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
சேலத்தில், 7ம் தேதி முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உட்பட பலர் பங்கேற்றனர்.நாளை, அ.தி.மு.க., சார்பில் நடக்கும் ஜெயலலிதா பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், மாநில நிர்வாகி கள், ...

2022க்குள் புதிய இந்தியா உருவாகும்: வெற்றி விழாவில் மோடி சபதம்

Posted: 12 Mar 2017 10:59 AM PDT

புதுடில்லி:உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, டில்லியில், பா.ஜ., தலைமையகத்தில் நேற்று நடந்த வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, ''வரும், 2022க்குள், தேசத்தை உருவாக்கிய தந்தையர் பெருமைப் படும் வகையில், புதிய இந்தியாவை கட்டமைப் போம்,'' என, மோடி உறுதியளித்தார்.

உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மகத்தான வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமையகத்தில், நேற்று, வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது.
நிறைவேற்றுவோம்
இதில், ...

திருப்பம்!...கோவாவிலும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,: பரீக்கர் முதல்வராக குட்டி கட்சிகள் ஆதரவு: கவர்னரை சந்தித்து உரிமையும் கோரினார்: மணிப்பூரிலும் காங்.,கை முறியடிக்க வியூகம்

Posted: 12 Mar 2017 11:03 AM PDT

பனாஜி:கோவா மாநிலத்தில், திடீர் திருப்பமாக, பா.ஜ., ஆட்சி அமைக்க, சிறிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ராணுவ அமைச்சர், மனோகர் பரீக்கர், பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் கோவா முதல்வராக பொறுப்பேற்கிறார்; கவர்னரை சந்தித்து அவர் உரிமை கோரினார். மணிப்பூரிலும், காங்., முயற்சியை முறியடித்து, ஆட்சியமைக்க, பா.ஜ., தயாராகி வருகிறது.

கோவாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, லஷ்மிகாந்த் பர்சேகர் தலைமையிலான ஆட்சி உள்ளது. 40 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 13 இடங்களில் மட்டுமே வென்றது. காங்., 17 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி ...

மெட்ரோ ரயிலில் திருக்குறள் நீக்கம்; ஜொலிக்குது குளிர்பான விளம்பரங்கள்

Posted: 12 Mar 2017 12:27 PM PDT

சென்னை: மெட்ரோ ரயில்களில் இடம் பெற்றிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு, தனியார் விளம்பரங்கள் ஜொலிக்கின்றன.

திருக்குறள்:
சென்னை விமான நிலையம் - சின்னமலை; கோயம்பேடு - சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயிலில், விளம்பரங்கள் வைக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. பெட்டிகளின் உட்பகுதியில், விளம்பரம் வைக்க, எந்த அளவில் இடம் ஒதுக்கப்படும் என்பதை தெரிவிக்க, சில பெட்டிகளில், திருக்குறள் அச்சிடப்பட்ட, 'போஸ்டர்' ஒட்டப்பட்டிருந்தது.
நீக்கம்:
தனியார் ...

ஹெலிகாப்டரில் ஏறும்போது கீழே விழுந்தார் ஜெட்லி

Posted: 12 Mar 2017 01:16 PM PDT

ஹரித்வார்: மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, உத்தகரண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டரில் ஏறும்போது, கால் இடறி, கீழே விழுந்தார்.
கீழே விழுந்தார்:
உத்தரகண்ட் மாநிலத்தில், யோகா குரு பாபா ராம்தேவ், மூலிகை செடிகளால் ஆன, பூங்காவை அமைத்துள்ளார். இதை பார்வையிடுவதற்காக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று(மார்ச் 12), ஹரித்வார் சென்றிருந்தார். அது தொடர்பான நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன்பின், டில்லி திரும்புவதற்காக, ஹெலிகாப்டரில் ஏறினார்.
அப்போது, கால் இடறி, கீழே விழுந்தார். ...

கோவாவில் ஆட்சி அமைக்க பரீக்கருக்கு கவர்னர் அழைப்பு

Posted: 12 Mar 2017 01:34 PM PDT

பனாஜி: கோவாவில் ஆட்சி அமைக்க பரீக்கருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்; 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் கோவா கவர்னர் உத்தரவிட்டார்.
காங்., அதிகம்:
40 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 13 இடங்களில் மட்டுமே வென்றது. காங்., 17 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைக்க, 21 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், வெற்றி பெற்ற குட்டி கடசிகள் மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., நேற்று(மார்ச் 12) உரிமை கோரியது. மனோகர் பரீக்கர், கோவா கவர்னர், மிர்துளா சின்ஹாவை சந்தித்து, உரிமை ...

கோவாவில் பா.ஜ., பின்னடைவுக்கான காரணங்கள்

Posted: 12 Mar 2017 02:10 PM PDT

பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ., அடைந்த பின்னடைவிற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ., எதிர்கட்சியான காங்., காட்டிலும் குறைந்த அளவிலான இடங்களையே பெற முடிந்தது. எந்த கட்சிக்கும் அம்மாநிலத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் தான் ஆட்சியமைப்பது யார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையி்ல சிறிய கட்சிகள் பா.ஜ., வை ஆதரித்துள்ளது. இதனால்பா.ஜ., கட்சி காங்., கட்சியை விட குறைந்த எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருந்தாலும் ...

பஞ்சாப் முதல்வராகிறார் அமரீந்தர்; போதையை ஒழிக்கப் போவதாக சபதம்

Posted: 12 Mar 2017 03:30 PM PDT

பாட்டியாலா: பஞ்சாபின் புதிய முதல்வராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அமரீந்தர் சிங், வரும், 16ல், பதவியேற்கவுள்ளார். ''பஞ்சாபில், பெருகி வரும் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும்,'' என, அமரீந்தர் சிங் கூறினார்.
கவர்னருடன் சந்திப்பு :
பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி, அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்., தலைவர் அமரீந்தர் சிங், நேற்று(மார்ச் 12), சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர், வி.பி.சிங் பட்னோரை சந்தித்து பேசினார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™