Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட

Posted: 12 Mar 2017 09:28 AM PDT

 கணிணியில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு ஏற்ப பிற மொழி சொற்களை அறிந்துகொள்ள இந்த சா ப்ட்வேர் பயன்படுகின்றது. மொத்தம் 72 வகை மொழிகளை இது ஆதரிக்கின்றது. முக்கியமாக தமிழ்மொழியில் சுலபமாக மொழிபெயர்க்க உதவுகின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவறிக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  உங்களுக்கு தெரியாத மொழி இருப்பின் அது எந்த மொழி என அறிந்துகொள்ள இதனுள் உள்ள கட்டத்தில் வார்த்தையை தட்டச்சு செய்தோ -காப்பி பேஸ்ட்டே செய்யவும்.பின்னர் ...

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !

Posted: 12 Mar 2017 08:51 AM PDT

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! -அண்ணாமலை சுகுமாரன் மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் மாசிமகம் விழாவாகக்கொண்டாடப்பெறுவதும் ,இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமியை கும்பிடுவதும் , தீர்த்தவாரி நடைபெறுவதுஅனைவரும் அறிந்ததே . ஆயின் ஒரு ...

அவளுக்காய்...

Posted: 12 Mar 2017 07:09 AM PDT

தெள்ளத்தெளிகண்ணாலும் அதன் சீறிய ஒளியாலும் மெல்லத்தானிங்கு இருக்கிறேன் என்று கண்ணிமையால் காட்சிபரப்புவாள் இடப்புறம் வகிடெடுப்பாள் வாய்மூடி கண்சிரிப்பாள் வராத வார்த்தைகளையெல்லாம் வரவேற்க எனையும்சேர்த்தழைப்பாள் குங்குமம் கொஞ்சம்கோதி நடுநெற்றியில் புள்ளிவைப்பாள் புள்ளிகளின் நாட்களை ஒன்றாக்கி புதுக்கோலம் வரைந்துவைப்பாள் மூக்குத்தி நுனி மூக்கினோரம் தென்றல் ஆடவைப்பாள் கம்மல்களும் அழகுதானென்று தென்றலையே சொல்லவைத்தாள் இன்று, மீன்களின் மொழி ராகமானது _ விண் மீன்களில் நிலவு ராத்திரி தேடுது

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Posted: 12 Mar 2017 03:29 AM PDT

'பத்தினி தெய்வம்' என, தன்னை இழிவாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு, 'உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம் என, நிரூபித்து விட்டீர்கள்' என்று, பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார். அ.தி.மு.க.,வில் சசிகலா அணி ஆதரவாளரும், தலைமை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தன் முகநுால் பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் முதல்வர் பன்னீரின் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்ப்பது அல்லது ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது. அதுவும் முடியாவிட்டால், தேர்தலுக்கு ...

எனக்கு பிடித்த ஒரு ஆங்கில பழைய காதல் பாடல் கவிதை வரிகளுடன்

Posted: 12 Mar 2017 03:10 AM PDT

எனக்கு பிடித்த ஒரு ஆங்கில பழைய பாடல் கவிதை வரிகள் உடன்This posting includes an audio/video/photo media file: Download Now

அரைநிர்வாணத் தமிழன்.

Posted: 12 Mar 2017 03:05 AM PDT

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம். செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லொறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத பொலிஸ் தோளில் இறுக்கமாக கை ...

வாடிவாசல் போராட்டக் காட்சிகள் சென்னை வேளச்சேரியில் (2017ஜனவரி) !

Posted: 11 Mar 2017 09:41 PM PST

வாடிவாசல் போராட்டக் காட்சிகள் சென்னை வேளச்சேரியில் (2017ஜனவரி)  !

வேலன்:-மேஜிக் டெக்ஸ்டாப்

Posted: 11 Mar 2017 09:26 PM PST

குழந்தைகளுக்கு என்றே தனியாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் இது.இதன் இணையதளம் சென்று உங்களுக்கான சாப்ட்வேர்  பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேஜிக் விண்டோ ஓப்பன் ஆகும்.   அக்கடாமி என்கின்ற விண்டோ ஓப்பன் செய்கையில் நமக்கு எண்கள்.நிறங்கள்.உருவங்கள்.எழுத்துக்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பயிற்சியையும் ;நாம் மேற்கொள்ளலாம்.  இதிலுள்ள இசிபெயிண்ட்கிளிக் ...

புதுக்கவிதை

Posted: 11 Mar 2017 09:25 PM PST

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ...

தேசிய மூத்தோர் தடகள போட்டி

Posted: 11 Mar 2017 09:24 PM PST

- சென்னை : தேசிய மூத்தோர் தடகள போட்டி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 83 வயது முதியவர்… 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசே‌ஷன் 3 தங்கம் வென்றார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை பதித்தார். சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய மூத்தோர் தடகள போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். – ———————————————- தினபூமி

வாழ்க்கை வாழ்வதற்கே!

Posted: 11 Mar 2017 09:16 PM PST

- அவசரமாய் வாழ்ந்து இறந்து போவதற்கு வாழ்க்கை என்ன ஓட்ட பந்தயமா... - பரபரப்பை கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மனம் நிறைய பேச காத்திருக்கிறது உறவுகள்! - இன்னொரு பிறப்பில் அவ்வளவு நம்பிக்கையா இந்த வாழ்க்கையை விரயம் செய்கிறீர்... - கசப்பும் சுவை தான் ருசித்து பாருங்கள் தோல்வியும் சுகம் தான் ரசிக்க பழகுங்கள்! - நீங்கள் தான் பிரம்மா... சொர்க்கமா, நரகமா எதை உருவாக்க போகிறீர்கள்? - ------------------------ - செல்வ மதி, வந்தவாசி. -வாரமலர்

‘வற்ற விடலாமா ஜீவநதியை’ குறும்படம் – வீடியோ

Posted: 11 Mar 2017 09:15 PM PST

வற்றவிடலாமா ஜீவநதியை' என்ற தலைப்பில்,
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி
மாணவர் அபிஷ் விக்னேஷ் உருவாக்கியுள்ள
3 நிமிட விழிப்புணர்வு குறும்படம்,
தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க
வைத்திருக்கிறது.
-

மழையால் மனிதநேயம்

Posted: 11 Mar 2017 09:12 PM PST

நடுச்சாம நேரத்தில நெத்திப்பொட்டோரத்தில சொட்டுனு விழுந்திருச்சி மழைத்தூரல் ஒன்னு துட்டுள்ள சொந்தமெல்லாம் தூரப்போய் நின்னப்போ என் வீட்டு ஓட்டைக்கூரை வழி எட்டிப் பார்த்த சொந்தமே நீ வந்த நேரம் என் தூக்கம் போனது ரொம்ப தூரம் கார வீட்டுக் கருப்பாயி காசுக்கு சொந்தக்காரி யாரையும் அண்டாமக் கொண்டாமா அடங்காம திரிஞ்சவ வெள்ளம்னு வந்தப்போ வீதியில நின்னாளே பட்டக் கடனக் கேட்கும் போது பாதி சொல்லால மனசக் கொன்னுடுவா மனசு காயம்பட்ட சனமெல்லாம் கருப்பாயிக்கு கண்ணீரத் தொடச்சிவிட்டு காட்டாத்து வெள்ளத்தில ...

'நான் வங்கி கணக்கை மூடிவிட்டேன்; நீங்க...?

Posted: 11 Mar 2017 09:11 PM PST

- வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும், பாரத ஸ்டேட் வங்கியை விமர்சித்து, சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., என்ற, ஸ்டேட் வங்கி, தங்கள் வங்கியில், 5,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதை கேட்டு, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர், வங்கி கணக்கை முடிக்க முடிவெடுத்துள்ளனர். ...

பிள்ளைத் தமிழ்

Posted: 11 Mar 2017 09:01 PM PST

தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் "பிள்ளைக்கவி" என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ...

பாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை:

Posted: 11 Mar 2017 08:57 PM PST

பாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை:  கடும் முயற்சிக்கு பின் நிறைவேறிய பறக்கும் கனவு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சி யால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர். பழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார். வானில் ...

எங்கே செல்கிறோம் நாம்?

Posted: 11 Mar 2017 08:55 PM PST

முன்பு செய்திகள் என்பது செய்திகளை மட்டுமே சுமந்து வந்தன...

ஆனால் இன்று ஒவ்வொரு செய்தியும் மறைமுகமாக யாரோ ஒருவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சுமந்தே வருகின்றன.
ஊடகங்கள் இந்த நிலைக்கு வந்த காரணம் என்ன?
செய்தித்தாள்களும் சரி,முகநூல்,கட்செவி அஞ்சல்,தொலைக்காட்சிகள் என எவற்றிலும் செய்திகள் யாரோ ஒருவருக்காக திரிக்கப்பட்டு  நம் மீது திணிக்கப்படுகின்றன என்பதே என் எண்ணம்...
உங்கள் எண்ண ஓட்டத்தை பகிரவும்.

ஏம்மா...புருஷனோட தலை வீங்குற மாதிரியா அடிப்பே...?

Posted: 11 Mar 2017 07:26 PM PSTPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™