Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சசிகலா குடும்பத்தினர் மீது முதல்வர் பழனிசாமி...அதிருப்தி அ.தி.மு.க., ஆட்சி மன்ற குழுவில் இடம் அளிக்க மறுப்பு தினகரன் ஆதிக்கம் செலுத்துவதால் மந்திரிகளும் விரக்தி

Posted: 11 Mar 2017 05:26 AM PST

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போல், முதல்வர் பழனிசாமி தனித்து செயல்பட விரும்புவதால், அவருக்கும், சசிகலா குடும்பத் தினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ., மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முதல்வராக, சசிகலா முடிவு செய்தார். அதன்படி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். அவர், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.
தவிடுபொடியானது
அவருக்கு கட்சியினர் ...

போயஸ் கார்டனில் ஜெ.,க்கு நடந்தது என்ன?

Posted: 11 Mar 2017 05:32 AM PST

தமிழக சுகாதார துறை மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் அதிகரித்துள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, தமிழக அரசின் சுகாதார துறை, அப்பல்லோ மருத்துவமனை, டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சார்பில், சமீபத்தில், அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்த அறிக்கைகளால், மேலும் சந்தேகங்கள், மர்மங்கள் அதிகரித்துள்ளன.அதுபற்றிய விபரம்:* அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, சுயநினைவு குறைந்து, மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ...

குஜராத் 'கழுதை' வென்ற கதை!

Posted: 11 Mar 2017 09:07 AM PST

இன்னும் இரண்டாடுகளில் வர இருக்கும், லோக்சபா தேர்தலின், 'செமி பைனல் தேர்தல்' என வர்ணிக்கப்பட்ட உத்தரபிரதேசத்தில், இதுவரை அம்மாநில தேர்தல் வரலாறு வரையாத வெற்றியை பெற்றிருக்கிறது மோடியின் பா.ஜ.,!

உத்தரகண்ட் போன்று தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் கடந்த முறை சமாஜ்வாடி பெற்ற 224 தொகுதிகள் தான், அங்கு ஒரு தனிக்கட்சி பெற்ற அதிகபட்ச தொகுதிகள். ஆனால், இம்முறை பா.ஜ., நான்கில் மூன்று பங்கு (300 பிளஸ்) தொகுதிகளை பெற்றுள்ளது.இந்தியாவில் அதிக லோக்சபா உறுப்பினர்களையும், சட்டசபை உறுப்பினர்களையும் கொண்டது உத்தரபிரதேசம். கடந்த ...

சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை அங்கீகரிப்பதில்... சிக்கல் ஆணையத்துக்கு வந்து சேரவில்லை 'ஆங்கில வானகரம்' ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் 'அரோகரா?'

Posted: 11 Mar 2017 09:21 AM PST

வானகரம் பொதுக்குழு கூட்ட தீர்மான நகல் ரூபத்தில், இன்னொரு சோதனை மேகம், சசிகலா அணிக்கு எதிராக சூழத் துவங்கியுள்ள தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இந்த அணி சார்பில் போட்டியிடும் நபருக்கு, இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின், சென்னை வானகரத்தில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத, ஜெ.,வின் தோழியான சசிகலா, தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
கோரிக்கை
இதற்கு எதிர்ப்புத் ...

பா.ஜ., வெற்றிக்கு 10 காரணங்கள்

Posted: 11 Mar 2017 09:29 AM PST

உத்தரபிரதேசத்தில், 2002ல் ஆட்சியை இழந்த, பா.ஜ., 15 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கான 10 காரணங்கள்:

மோடி தலைமை
கடந்த, 2016 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானார் மோடி. அன்று முதல் பல்வேறு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., ஆட்சியை பிடித்து வருகிறது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் மோடி, உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு, லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உ.பி., மக்களிடம் மோடி மீது தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. அது தேர்தலில் பிரதிபலித்து வெற்றியை தேடித்தந்துள்ளது. ...

முன்கூட்டியே கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை

Posted: 11 Mar 2017 09:30 AM PST

சட்டசபை தேர்தல்களில், மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, டில்லியிலுள்ள பா.ஜ., அலுவலகத்தில், முன்கூட்டியே, ஹோலி பண்டிகையை, அக்கட்சித் தொண்டர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியதும், காலை முதலே, டில்லியில், பா.ஜ., தொண்டர் கள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடத் துவங்கினர்.
போக்குவரத்து நெரிசல்
டில்லி அசோகா சாலையில் உள்ள அந்த அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள அத்தனை சாலைகளிலும், போக்கு வரத்து நெரிசல் துவங்கியது. இதையொட்டி, போக்குவரத்து போலீசார் பெருமளவில்குவிக்கப்பட்டனர்.அலுவலக வளாகத்திற்குள், ...

மக்கள் முற்றுகை: மந்திரிகள் பரிதவிப்பு

Posted: 11 Mar 2017 09:32 AM PST

முதல்வர் பழனிசாமி தலைமையில், புதிய அரசு பதவியேற்றதற்கு பின், அரசு விழாக் களில், அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு, கெரோ செய்யும் நிகழ்வுகள், ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், நேற்றும் இரண்டு இடங்களில், மக்கள் முற்றுகையால் அமைச்சர்கள் பரிதவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த இருவரையும், சத்திய மங்கலம் நகராட்சி, 23வது வார்டைச் சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர், வாசலில் வழிமறித்த னர். 'நாங்கள், 40 ...

பா.ஜ.,வின் வனவாசத்தை முடித்த மோடி, அமித் ஷா கூட்டணி

Posted: 11 Mar 2017 09:40 AM PST

'நாட்டின் மிகப் பெரிய மாநிலமான, உத்தர பிரதேசத்தில், 14 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஆட்சி அமைக்கும் விதத்தில், பா.ஜ., உருவானதுக்கு முக்கிய காரணம் - மோடி, மோடி மட்டுமே' என, பா.ஜ.,வினர் பெருமையுடன் கூறி கொள்கின்றனர்.

அது உண்மை என்றாலும், பல்வேறு காரணங்களும் ஒருங்கே சேர்ந்ததால் தான், பா.ஜ., இந்த அளவுக்கு வெற்றியை பெற முடிந்தது.மாநில கட்சிகளான, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள; ஜாதி அரசியல் நிறைந்துள்ள, உத்தர பிரதேசத்தில், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, பா.ஜ., இமாலய சாதனை படைத்துள்ளது. 'பிரதமர் நரேந்திர மோடி அரசு ...

மோடி மாயாஜாலம்!:உ.பி., உத்தரகண்ட் தேர்தலில் பா.ஜ., வரலாறு காணாத வெற்றி குடும்ப சண்டையால் வீழ்ந்தது அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி

Posted: 11 Mar 2017 10:00 AM PST

புதுடில்லி:ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்ட சபை தேர்தலில், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில், பா.ஜ., வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது.

குடும்பச் சண்டையால் சிக்கலில் இருந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வீழ்ந்தது. பஞ்சாபில், 10 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. கோவா மற்றும் மணிப்பூரில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்ட சபைகளுக்கு, பிப்., 4 முதல், மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் ...

நடராஜனுக்கு சம்பந்தம் இல்லை தினகரன் திட்டவட்டம்

Posted: 11 Mar 2017 10:38 AM PST

சென்னை: குடும்ப அரசியல் செய்வேன் என்று, தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் நடராஜனும், திவாகரனும் பேசியது, அவர்களது சொந்தக் கருத்து. அதற்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என, அ.தி.மு.க., துணைப்பொதுச் செயலர் தினகரன் கூறினார்.

அவர் கூறியதாவது:
இருபது வருடங்களுக்கு முன்பே, போயஸ் தோட்டத்திலிருந்து, நடராஜன் வெளியேற்றப்பட்டு விட்டார். அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டார். அதன் பின், எந்த காலத்திலும் அவரை கட்சியில் சேர்க்கவும் இல்லை. அதனால், அவருக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் ...

'செல்லாத நோட்டுகளை இனி மாற்ற முடியாது'

Posted: 11 Mar 2017 11:39 AM PST

'செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், மார்ச், 31 வரை பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, 2017, மார்ச், 31 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஆனால், வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. பிரதமர் தனது வாக்குறுதியை மீறியுள்ளார். பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் ...

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Posted: 11 Mar 2017 12:41 PM PST

'பத்தினி தெய்வம்' என, தன்னை இழிவாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு, 'உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம் என,
நிரூபித்து விட்டீர்கள்' என்று, பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் சசிகலா அணி ஆதரவாளரும், தலைமை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தன் முகநுால் பதிவில் கூறியுள்ளதாவது:முன்னாள் முதல்வர் பன்னீரின் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்ப்பது அல்லது ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது. அதுவும் முடியாவிட்டால், தேர்தலுக்கு வழிகாணுவது. இந்த சதி திட்டத்துக்கு சப்பைக்கட்டு கட்ட, ...

'பரத நாட்டியம் அல்ல; பரிதாப நாட்டியம்': வலைதளங்களில் கிண்டல்

Posted: 11 Mar 2017 01:36 PM PST

ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார்.
பரிதாப நாட்டியம்
கவிஞர் வைரமுத்துவின் தாலாட்டு பாடலுக்கு, புதுமையான முறையில், ஐஸ்வர்யா நடத்திய பரத நாட்டியம், சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. 'ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் அல்ல; பரிதாப நாட்டியம்' என, பலர் கிண்டலடித்துள்ளனர். அதே வேளையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டவர்கள் பாராட்டி உள்ளனர். ...

'நான் வங்கி கணக்கை மூடிவிட்டேன்; நீங்க...?'

Posted: 11 Mar 2017 02:34 PM PST

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும், பாரத ஸ்டேட் வங்கியை விமர்சித்து, சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

நாட்டிலேயே பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., என்ற, ஸ்டேட் வங்கி, தங்கள் வங்கியில், 5,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதை கேட்டு, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர், வங்கி கணக்கை முடிக்க முடிவெடுத்துள்ளனர்.
நான் வங்கி கணக்கை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™